Tuesday 26 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மன நிறைவான வாழ்க்கை..!!*
நமக்கு தேவையானவற்றை அடைய அலையாய் அலைகிறோம்.. கடுமையாக உழைக்கின்றோம்..
அங்கே,இங்கே என்று ஓடுகின்றோம்..
ஆனால் நம்மிடம் இருப்பதை எல்லாம் அனுபவிக்க மறந்து போகின்றோம். இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க முயலுகின்றோம்..
நம் உழைப்பின் பயனையே அனுபவிக்காமல் விட்டு விடுகின்றோம்...
இயற்கை ஏராளமான வாய்ப்புகளை நமக்கு தந்து உள்ளது.. நாம் தான் அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றோம்.
நமக்கு வருங்காலம் பற்றிய கவலை தேவை தான்.. உழைப்பும், முயற்சியும் தேவை தான்..
அதைவிட நம்மிடம் என்ன இருக்கின்றதோ, அதை வைத்து மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்,.
கடலில் ஒரு முறையாவது நீண்ட பயனம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர்,
தான் நெடுநாள் உழைத்து, சேமித்த பணத்தைக் கொண்டு கடல் பயணத்துக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினார்..
பத்து நாட்கள் உணவுக்கு என்ன செய்வது என்கிற கவலை அவருக்கு வந்தது.. ஆகவே நிறைய ரொட்டிகளை வாங்கினார்..
மற்றவர்கள் எல்லாம் கப்பலில் உள்ள உணவகம் சென்று உண்டு மகிழ்ந்தார்கள்.. ஆனால் இவர் மட்டும் கப்பலின் மேல்தளத்திற்கு சென்று இயற்கையை ரசித்தபடியே ரொட்டி சாப்பிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. ரொட்டிகளும் காய்ந்து கொண்டே இருந்தது..
கடைசி நாள் இவரிடம் நெருங்கிப் பழகிய ஒருவர் இவரிடம்,'' ஏன் நீங்கள் உணவகத்திற்கே வருவது இல்லை? என்று கேட்டார்..
இவர் தன் நிலைமையை சொன்னார். அதைக் கேட்ட நண்பர் சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தார்.. பின்பு சொன்னார்.
நண்பரே, உங்கள் பயணச்சீட்டை நன்றாக பாருங்கள்.. நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த பணம், பத்து நாள் உணவுக்கும் சேர்த்துத் தான் என்பது தெரியவில்லையா?
உங்களுக்கு என்றார்..
ஆம்.,நண்பர்களே..,
*வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்...*
*உங்களிடம் இருப்பதைக் கொண்டு சிறப்பாகவும், மன நிறைவுடனும் வாழ்வதற்கு பழகிக் கொள்வோம்.

No comments:

Post a Comment