Saturday 23 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*''உழைப்பு-விடாமுயற்சி மட்டும் போதாது..''*
நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் நியாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பது தான் உண்மையான நிலை..
வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையாயினும் அதற்கு வளைந்து கொடுங்கள்;முறித்து விடாதீர்கள்.
உங்களின் திறமைகளைக் தட்டியெழுப்பி அவற்றை மேலே கொண்டு வருவதற்குப் பாருங்கள்.அயர்ந்து விடாதீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக் கோளை ஏற்படுத்தி அதற்கேற்ப துடுப்பினை சலிக்காது இயக்கி வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கோடு கப்பலை பெரும் புயலின் வழியே நகர்த்துங்கள்.
குறிக்கோளினை அடையும் போது தோல்விகள் குறுக்கிட்டால், நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக எண்ணாதீர்கள்.
உங்களிடம் முயன்று பார்க்கும் துணிவு துளிர் விட்டிருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் கடந்தகால அனுபவங்கள் தான் உங்கள் வழிகாட்டிகள், அவற்றைப் பின்பற்றி புத்திசாலித்தனமாக, விவேகமாக முன்னேறுங்கள்.
ஒரு ஜென் துறவி தன்னுடைய பழைய நண்பனைப் பார்க்கச் சென்றார். அந்த நண்பன் ஒரு விவசாயி.
துறவியைப் பார்த்த அந்த நண்பன் இவரைப் பார்த்து,
"நீ எப்படி இருக்கின்றாய்..? என்று கேட்டான்.அதற்கு அந்த துறவி," நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்குக் கேட்டார்.
அதற்கு அவன். பரவாயில்லை, ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்.நாம் கடினமாக உழைத்தால் தான் ஒன்றை அடைய முடியும்..
அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக திட்டமிட்டு உழைக்கவில்லை என்று தான் பொருள்" என்று சொன்னான்.
*ஆம்.,நண்பர்களே..*
.
ஒரு வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதாலேயே அவர் சிறந்த உழைப்பாளி என்பவராகி விட மாட்டார்.
குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே செய்வது தான் புத்திசாலித்தனம்.
கடினமாக உழைத்தால் மட்டும் போதாது.
விரைவாக முடித்து விட்டு, ஓய்வாகவும் இருக்கத் தெரிய வேண்டும்.

No comments:

Post a Comment