Thursday 31 August 2023

கேட்பவரும் பேசுபவரும் . .

 கேட்பவரும் பேசுபவரும் . .

உலகம் பல்வேறு பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒளியும் இருளும் கலந்தது, இன்பமும் துன்பமும் கலந்தது, மேடும் பள்ளமும் நிறைந்தது.
இதுபோன்றே பேசும்
சொற்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு.
எப்போதும் ஒருவர் பேசும் சொற்கள் நன்மை விளைவிக்க வேண்டும். அதேவேளை பேசும் சொற்கள் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். இனிமை பயக்கும் நல்ல சொற்களையே எல்லோரிடத்திலும் பேச வேண்டும்.
கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும்.
இன்சொல்லானது கேட்பவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
உறவுகளை வலுப்படுத்துகின்றது.
நன்நடத்தையை அதிகரிக்கச் செய்கின்றது.
மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தித் தருகின்றது.
இன்சொல் பேசும் பண்புநலத்தின் சிறப்பை விளக்கவென்றே
*“இனியவை கூறல்”* என்றொரு தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
*“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்*
*செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”*
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
*“இனிய உளவாக இன்னாத கூறல்* *கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”*
இனிமையான சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது என்பது ஒரு மரத்தில் உண்பதற்கு நல்ல கனிகள் இருக்கும் போது அதனை உண்ணாமல் அந்த மரத்திலுள்ள காய்களை உண்பதற்குச் சமனானது என்கின்றார் வள்ளுவர்.
*“அகன் அமர்ந்து ஈதலின் நன்றே* *முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்”*
யாருக்கும் நீங்கள் பொருளை வாரித் தந்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டாம்.
அதை விட உயர்ந்தது,
இனிமையாக அவர்களிடம் நான்கு வார்த்தை பேசுவதுதான் என்று தீர்ப்புச் சொல்கிறது வள்ளுவம்.
*“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்*
*இன்சொ லினதே அறம்”*
முகம் மகிழ்ந்து உள்ளத்தில் இருந்து இனிமையான சொற்களைப் பேசுதலே சிறந்த அறமாகும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
*எனவே எப்போதும் அன்பாக
இனிய சொற்களைப் பேச வேண்டும். இதுவே கேட்பவருக்கு மட்டுமன்றி பேசுபவர்களுக்கும் நன்மையைத் தரும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 30 August 2023

அப்பல்லோ பழனிவேல்ராஜன் இல்ல விழா. இன்று காலை மதுரை ரிசர்வ் லைன் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மண்டபத்தில் நடைபெற்ற மதுரை அப்பல்லோ மருத்துவ மனை பி ஆர் ஓ மற்றும் மிகச் சிறந்த பண்பாளர், கடமையைக் கருத்தாகச் செய்திடும் அன்பு இளவல் எம்.பழனிவேல்ராஜன் - பி. மகேஸ்வரி தம்பதியர் அன்பு மகள் அட்சயாஸ்ரீ பூப்புனித நீராட்டு விழாவில் மனிதத்தேனீ மற்றும் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பணி நிறைவு சண்முகசுந்தரம், வேளாண்மைத் துறை பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெரியசாமி உள்ளனர். வளரட்டும் தலைமுறை வாழியவே.






 

புண்ணியம் சிறந்த புண்ணியம் . .

 புண்ணியம் சிறந்த புண்ணியம் . .

*முன்னேற்றத்தின்
எதிரி சோம்பல்*
*உழைப்பின் நண்பன்
சுறுசுறுப்பு.*
*நம் நம்பிக்கையின் திறவுகோல்.*
*தைரியம்.*
*தவறு செய்தால்.*
*தலை குனிந்து மன்னிப்பு கேட்போம் .*
*இல்லை எனில்.*
*தலை நிமிர்ந்து நடப்போம்.*
*உற்சாகமுள்ளவனை
எதிர்ப்புகள் தடை செய்வதில்லை.*
*மாறாக, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.*
*கெடுத்து ரசிப்பதோ பாவம்.*
*கொடுத்து மகிழ்வதே புண்ணியம்.*
*நிறைய விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்வதை விட, குறைந்த விஷயங்களை
சரியாகப் புரிந்து கொள்வதே சிறந்தது.*
*நல்லவர்களை நாம் தேடத் தேவையில்லை.
நாம் நல்லவராக இருந்தால் போதும், நம்மைத் தேடி நல்லவர்கள் மட்டுமே வருவார்கள்.*
*பிரச்சனைகளைத் தீர்க்க பழகிக் கொள்ளுங்கள்.
கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.*
*வாழ்க்கையில் சந்தோசமும், அமைதியும் வேண்டுமெனில்*
*செய்யும் செயலை விட*
*பேசும் வார்த்தையில் கவனம் தேவை*
*எதற்கும் எப்போதும்
தயாராக இருங்கள்.*
*சில நேரங்களில் நீங்கள் யூகிக்க முடியாத பல விஷயங்கள்
உங்களுக்கு எதிராய்த் திரும்பும்.*
*கடந்து போகக் கற்றுக் கொள்ளுங்கள்*
*மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக்கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது.*
*உங்கள் எண்ணங்கள் எப்படியோ, அப்படித்தான் வாழ்கையும் அமையும்.*
*எனவே, எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்ததையே எண்ண முயற்சி செய்யுங்கள்.*
*நல்லதைச் சிந்தித்தல்,
பேசுதல்,
கேட்டல்
ஆகியன மட்டும் போதாது.*
*அந்த நல்லவை அனைத்தும் உங்களது ஒவ்வொரு காரியத்திலும் மிளிர வேண்டும்.*
*அப்படிப் பிரகாசித்தால் தான் வெற்றிக்கொடியை எட்டிப்பிடிக்க முடியும்.*
*எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழ்வது தான் அற்புதமான வாழ்வு.*
*பலருக்கு உதவி செய்வது புண்ணியம். யாருக்கும் மனதால் கூட கெடுதல் நினைக்காமல் இருப்பது சிறந்த புண்ணியம்.*
*கடவுளிடம் கேட்க வேண்டியதை கேளுங்கள்*
*ஆனால்
அவர் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள
தயாராய் இருங்கள்.*
*சொன்ன சொல்லையும் எரிந்த கல்லையும் திரும்ப அழைக்க முடியாது, ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரை சிந்திக்க வைக்கும்.*
*தவறு செய்பவர்களை
காப்பாற்றுவது கடவுள் இல்லை.*
*"பணம் தான்"*
*பாராட்டுப் பெற
முயற்சி
செய்யாதீர்கள்.*
*திறமையை
வெளிப்படுத்த
முயற்சி செய்யுங்கள்.*
*பாராட்டு
தானாகவே உங்கள்
காலடியில் விழும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

என்.எஸ்.கிருஷ்ணன் நினைவைப் போற்றுவோம்


 

வாழிய பல்லாண்டு


 

Tuesday 29 August 2023

*ஓணம் பண்டிகை...* *29.08.2023*

 *ஓணம் பண்டிகை...*

*29.08.2023*
*எலியாக பிறந்து சக்கரவர்த்தியாக உயர்ந்த* *மகாபலியின் கதை* ...
உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. மகாபலியின் தியாகம் அந்த பரந்தாமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் ஒருநாள் மக்களை காண மகாபலிக்கு அனுமதி அளித்தார். ஓணம் பண்டிகை நாளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு தங்களை காண வரும் சக்கரவர்த்தி மகாபலியை வரவேற்கின்றனர்!
ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் திருவிழா ஓணம் பண்டிகை.
*எலி செய்த காரியம்:*
சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரித்தது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.
*வாரி வழங்கும்* *வள்ளல் மகாபலி:*
மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் மகா விஷ்ணுவிடம் கூறினார்.
*வாமன அவதாரம்* *எடுத்த மகாவிஷ்ணு:*
மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். மகாவிஷ்ணு. மகாபலியிடம் சென்று தானம் கேட்டார் வாமனன். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார். வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும் என்று மகாபலியை எச்சரித்தார்!
*பகவானுக்கு தானம்* :
மகாபலி மகிழ்ச்சியடைந்தார். என்னுடைய நல்லாட்சியை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சியுடன் தயாரானார் மகாபலி. மகாபலியிடம் வந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார்.
*சுக்கிரன் செய்த* *செயல்:*
குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு என்றார் வாமனன். இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார் தடுத்தார். மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார் சுக்கிரன்.
மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. உடனே வாமனன் தனது கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார் மகாபலி.
*தலையை கொடுத்த* *வாமனன்:*
குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று வாமனன் கேட்க, இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைகுனிந்தார் மகாபலி. உடனே அவரது தலையில் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பினார் வாமனன். கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார்.
*மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகை* :
மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. என் நாட்டு மக்களை நான் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.
விருந்துகளை தயார் செய்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
*திருவோணம்:*
அஸ்வினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இரு நட்சத்திரங்களுக்குத்தான் 'திரு' என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம். மார்கழியில் இந்த நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
*பெருமாள் தரிசனம்:*
ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் திருநாள் வாமன அவதார தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் ஐந்தாவது அவதாரமாகும். பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் திருவோணம் நட்சத்திர நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.

அளவோடு இருக்கட்டும் . .

 அளவோடு இருக்கட்டும் . .

உங்களில் நிறைய பேர் ஒருக்காலத்தில் இப்படியிருந்திருப்பீர்கள்.
காசு, பணமெல்லாம் முக்கியம் இல்லைன்னு எல்லோருக்கும் தாராளமாகச் செலவு பண்ணியிருப்போம்.
நம்மை மதிக்காதவர்களுக்கெல்லாம் ஓவராக மரியாதை குடுத்து பேசியிருப்போம்.
சில தேவையே இல்லாத உறவுகளெல்லாம் முக்கியமென்று நினைத்திருப்போம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி முதுகுக்கு பின்னாடி பேசியதை நினைத்து வருத்தப்பட்டிருப்போம்.
மற்றவர்கள் நம்மை தப்பா நினைச்சிடுவாங்களோன்னு ஏதாவது செய்யணும்னா கூடப் பார்த்துப் பார்த்து செய்திருப்போம்.
இப்படி நிறைய விஷயங்கள் நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இருக்கும்.
*இப்போ இருக்கும் ஒன்று அப்போதே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பது தான் "பக்குவம்".*
ஆனால் இந்த பக்குவத்துக்கு இருக்குற ஒரு சிறப்பம்சமே, அது அடிப்பட்டால், மிதிப்பட்டால் தான் கிடைக்குமே, அது ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்.
பக்குவப்படாத நேரங்களில் பெரிதாக எதுவுமே இழக்கவில்லையென்றாலும் நிம்மதி, சந்தோஷத்தையெல்லாம் இழந்திருப்போம்.
சந்தோஷமாக இருக்க மற்றவர்கள் தேவையில்லைங்குற புரிதல் காலப்போக்கில் தான் கிடைக்கும். நம்ம நமக்கு இருக்கும் பிரச்சனைகள் என்று நினைப்பது நமக்கு மற்றவர்கள் உருவாக்கி விட்டதாகவே இருக்கும்.
முக்கால்வாசி நேரம் சொந்த பந்தங்களின் கேள்விக்காகவோ இல்லை அவர்களுக்கு முன்பு பெருமைக்காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவோ தான் போராடியிருப்போம். ஆனால் இதனால் என்ன பயன் இருக்கு, அந்தப் பக்குவம் எந்த வயதில் உங்களுக்கு வந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை குறைத்து விட்டால் உங்கள் பிரச்சனைகளும் தானாகவே குறைந்து விடும். மற்றவர்களிடம் அளவோடு மட்டுமே வைத்து கொண்டால் நிம்மதியாகயிருக்கலாம் என்னும் ஞானம் பக்குவப்பட்ட பிறகே வரும்.
இனியாவது நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும் இடத்தை நோக்கியே பயணப்படுவோம்.
All reactions:
Iyyappan Thiyagarajan, Chandra Sekar and 7 others

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 28 August 2023

*வீடோ,நாடோ

 *வீடோ,நாடோ

அனைத்திலும் ஒற்றுமை
என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும்
சீரழிந்து விடும்.*
*இதனை,‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’ என்ற பழமொழி எடுத்து உரைக்கின்றது.*
*ஒன்று பட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம்.
இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.*
*கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.
நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.*
*அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமாக இருந்தார் .
ஒற்றுமையாக இருங்கள் என்று அவர் எவ்வளவு அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.*
*ஒரு நாள் அவருக்கு உடல் நலம்
சரி இல்லாமல் போகவே, அவர்களுக்குப் பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை நடத்தினார்.*
*அவர் நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை எடுத்து வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள்.*
*மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார்.*
*பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் கட்டியக் கம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.*
*பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.*
*ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்கள் நாலு பேரும் நான்கு கம்புகளைப் போலத் தான்.*
ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
*எவ்வளவு சின்னப் பொருளானாலும், அவை ஒன்று சேரும் போது எந்தச் செயலையும் முடிப்பது எளிது..*
*அதைப் போலவே பல பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்ய முடியாதது எதுவுமில்லை.*
*ஒன்றுபட்டு வாழ்வோம். *
*வாழ்வில் உயர்ந்து நிற்போம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இன்பம் துன்பம் . .

 இன்பம் துன்பம் . .

மனிதனின் வாழ்வில்
நல்லவைகளைச் சீர்தூக்கிப் பாத்து கெட்டவைகளைப் புறத்தில் தள்ளி வாழமுடியாமல் போனதன் காரணம் என்ன.
நல்ல விஷயங்கள்
கெட்ட விஷயங்கள்
என்று ஒன்றும் கிடையாது.
நாம் எடுத்துக்கொள்ளும் விதம் தான் அப்படி நல்லதாகப் பார்த்தால் நல்லது கெட்டதாகப் பார்த்தால் கெட்டது என்று பல சிந்தனையாளர்கள் கூறுகின்ற இந்த கூற்று உண்மைதானா.
மனதிலும் உடலிலும் வலி ஏற்படுத்தும் விஷயங்கள் கெட்டவை என்றும் அதே மனம் உடல் சந்தோஷப்பட்டால் அது நல்லது என்றும் எடுத்துக்கொள்ளலாமா.
இன்பம் என்பதும், துன்பம் என்பதும் நமது வாழ்க்கை முறைகளை மட்டுமே வைத்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியாமல் வேறு ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அதன் படியேதான் நம் வாழ்க்கை செல்வது போலத் தெரிகிறது அப்படித்தானே.
மனிதனின் பிறப்பில் முதல் வினாடியே இவனது இன்ப துன்பங்கள் வரையறுக்கப்பட்டு பிறக்கிறான்.
அப்படியானால் கண் மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் நல்லது கெட்டது என்று பாகுபாடு பாராமல் மனிதன் காரியங்கள் செய்யலாமா. செய்யமுடிகிறதா இல்லையே.
தவறைச் செய்யும் ஒவ்வொரு மனிதனும் இது தவறு என்று தெரிந்து செய்வதும்
நல்லது செய்யும் போது இது நல்லது என்று தெரிந்து செய்வதும் இயற்கையான உண்மை.
தவறோ சரியோ அதைப் பலமுறை செய்யும்போது அது பழகிப் போய்விடுவதும் இயற்கையே.
படைத்தவன் இருக்கான்
பார்த்துக் கொள்வான்
பயணத்தைத் தொடர்ந்து விடு
என்ற கவிஞனின் வார்த்தையைப் போல முக மலர்ச்சியோடும்,
நம்பிக்கையுடனும் எழுந்து
புதிய நாளைத் துவங்குவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்

 சிவபெருமான்

பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
ஆவணி மூலம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவர். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
இறைவனே வேலை பார்த்து சம்பளம் வாங்கிய நாள் என்பதால் உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள் அன்றைய தினம் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ஆவணிமூல வழிபாட்டில் கலந்து கொண்டால் மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
இந்த ஆவணி மூலத்தில் சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வெள்ளிக் கூடையில், மண்வெட்டி வைத்து சிவபெருமான் புட்டு சுமந்து வருவது போல நகரத்தார்கள் சிறப்பாக விழாக் கொண்டாடி வருகிறார்கள். இதே போல எண்ணற்ற சிவாலயங்களிலும் புட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகின்றது. அதில் இறைவன் தலையில் சுமந்த புட்டு உணவை மக்களுக்கு வழங்குவர். மூல நட்சத்திரத்தில் சிவனை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.
பிட்டுக்கு மண் சுமந்த கதை
முன்னைய காலத்தில் பாண்டிய நாட்டை அரிமர்தனபாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடையவன். இவன் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்து வந்தான். இவ்வாறு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது, சிவபெருமான் இவனது ஆட்சியில் திருவிளையாடல் ஒன்றைப் புரிவதற்கு விரும்பினார்.
இத் திருவிளையாடலின் விளைவாக பாண்டி நாட்டிலே பெருமழை பெய்தது. அதனால் வைகை ஆறானது பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரைகள் உடைத்துச் செல்லும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. மக்கள் எல்லோரும் பயந்து தங்கள் அரசனின் அரண்மனைக்கு ஓடினார்கள். தங்கள் அவல நிலையை மன்னனிடம் முறையிட்டனர்.
அரசனும் மக்களே பயப்பட வேண்டாம், ஆற்றின் கரை உடையாமலும், வெள்ளம் பெருகாமலும் இருக்க அணைகட்டுவோம் என்று மக்களுக்கு உறுதி அளித்தான். எனவே ஆற்றுக்கு அணைகட்ட எல்லோரும் வாருங்கள்என்று குடி மக்களை அழைத்தான்.எல்லோரும் அளந்து விட்டபடி உங்கள் பகுதியில் அணையைக்கட்டுங்கள் என்று மக்களுக்கு உத்தரவிட்டான். அவனது உத்தரவிற்கமைய அனைவரும் தமது வேலைகளை ஆரம்பித்தனர்.
அதே வேளை இங்கு செம்மனச் செல்வி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார். ‘வந்தி”என்று அழைக்கப் படும் இவர், பிட்டு விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை யைநடாத்தி வந்தார். இவருக்கு உற்றார் உறவினர் கிடையாது. இவர் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்ட வர். தினமும் தான் அவிக்கும் பிட்டின் முதற்பங்கை சிவபெருமா னுக்குப் படைத்து விட்டே பிட்டு விற்பதைத் தொடங்குவார். வைகை ஆற்றங்கரையின் ஒரு பகுதியை அடைக்கும் பொறுப்பு அவருக்கும் கொடுக்கப்பட்டது. அவர் மனம் கலங்கி நின்றார். யாருமற்ற அவர் சிவபெருமானிடம் முறையிட்டார்.
‘ஐயனே இந்த அனாதைக் கிழவிக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. கரையை நான் கட்டுவதென்றால், என் உடம்பில் பலமும் இல்லை, ஆள் வைத்துச் செய்வதற்கு கையிலே காசும் இல்லை. என்னுடைய பங்கை கட்டாவிட்டால் முழுக்கரை யுமே உடைத்துவிடும் இதனால் அரசனின் தண்டனைக்கும் ஆளாவேன். நீதான் எனக்கு கருணை காட்டவேண்டும் என்று சிவனிடம் வேண்டினார் . அநாதரவாய் நின்ற அந்தக் கிழவிக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் ஒரு கூலியாளாக உருவம் கொண்டார். செம்மனச் செல்வியின் அருகே வந்தார்.
பாட்டி நான் உனக்காக அணைகட்டு கிறேன். அதற்குக் கூலியாக்ன தருவாய்? என்று கூலியாளாக வந்த சிவபெருமான் கேட்கிறார். அதற்குப் பாட்டி என உனக்குக் கூலியாகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லையே என்றார். உடனே கூலியாள் யோசித்து விட்டு எனக்குப் பசிக்கிறது கூலியாகப் பிட்டுத் தருவாயா? என்றார். உடனே பாட்டியும், ஆம், ஆம் நான் உனக்குக் கூலியாகப் பிட்டுத் தருகிறேன், நீ என்னுடைய பங்கின் அணையைக் கட்டுவாயா? என்றார். கூலியாளாக வந்த சிவபெருமானும் அணை யைக் கட்டுவதற்கு மண்ணை வெட்டினார். கூடையில் மண்ணை எடுத்துத் தலையில் வைத்துச் சென்று கொட்டினார். அடிக்கடி பாட்டியிடம் பிட்டையும் வாங்கிச் சாப்பிட்டார். ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு” அல்லவா. எனவே இப்பழமொழிக் கு அமைய பிட்டைச் சாப்பிட்ட கூலியாளுக்கு மயக்கம் வந்து விட்டது. கூடையை தலையின் கீழ் வைத்து ஆற்றங்கரையில் நன்றாக உறங்கினார்.
மாலை வேளை மந்திரி கரையை பார்வையிட்டுக்கொண்டு வந்தான். செம்மனச்செல்வியின் பங்கு மட்டுமே அடைபடாமல் இருந்ததை யும், அதனால் முழுக்கரையுமே உடையும் அபாயம் ஏற்பட்டு இருந் ததை யும் கண்டு கடுங்கோபம் கொண்டான். இந்தப் பகுதியை அடைக்கும் கூலிக்காரன் எங்கே? ‘என்று கோபத்தோடு கேட்டான். சற்றுத் தூரத்திலே, மரநிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அந்த தெய்வீக இளைஞனைச் சுட்டிக்காட்டினார்கள் சேவகர்கள்.
அவனது அழகு சொட்டும் முகத்தை யும், கம்பீரமான தோற்றத்தையும் கண்டு அவனைத் தண்டிக்கப் பயந்து அரசனிடம் சென்று முறையிட்டனர்.
செய்தி கேட்டு கோபத்துடன் அங்கு வந்த அரசன் கூலியாள் வேலை செய்யாமல் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை பிரம்பால் அடித்தான். அடி விழுந்த உடனே கூலியாளாக வந்த சிவபெருமான் மறைந்து விடுகிறார். அரசன் அடித்த அடி அங்கிருந்த எல்லோரது முதுகிலும் பட்டு வலித்தது. அப்போது தான் வந்தது கூலியாள் அல்ல சிவபெருமான் என்பதனை மன்னன் அறிந்து கொண்டான். மக்கள் எல்லோரும் அதிசயித்து நின்றனர்.
இச்செயல் சிவபெருமானின் திருவிளையாடலே என அனை வரும் உணர்ந்தனர். தன்னை தஞ்சம் என்று அடைந்தவரை தாமதிக்காமல் வந்து அருளவும், உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதை விளக்கவுமே, இத் திருவிளையாடல் இறை வனால் நடாத்தப்பட்டதாகும்.
இதனை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகி றது. வேறெங்கும் இல்லாத வகை யில் இங்கு திருவிழாவைக் காண வரும் அடியார்களுக்குப் பிரசாத மாக பிட்டு வழங்கப்படுகிறது.
‘கடவுளை நம்பியோர் கைவிடப்படார்.”
‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை”
நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்

Saturday 26 August 2023

சிறப்பான வாழ்க்கை . .

 சிறப்பான வாழ்க்கை . .

அறம் என்பது எல்லாருக்கும் சிறப்பினைத் தரும். அறத்தைச் செய்பவனும் சிறப்புப் பெறுகிறான். அறத்தைப் பெறுபவனும் சிறப்புப் பெறுகிறான். அறமும் சிறப்புப் பெறுகிறது. அறத்தால் விளைந்த பொருள்களும் சிறப்புப் பெறுகின்றன. அறம் நிலைத்த வாழ்க்கையைப் பெறுகிறது. அதுவே சிறப்பு.
அறம் என்பது செல்வத்தையும் தரும். ஒருவன் தனக்கு வரும் பொருளை எல்லாம் அறத்திற்கே கொடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனின் செல்வம் கரையுமா என்றால் கரைந்து போகாது என்கிறார் வள்ளுவர். அறம் செய்யச் செய்ய அறமும் வளரும். அறத்தைச் செய்வதற்கான பொருள் வருவாயும் அதிகரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையான புகழைத் தருவது அறம். ஓரிடத்தில் நிற்காத செல்லவத்தை
நிற்க வைப்பது அறம்.
பெருக வைப்பது அறம்.
எனவே அறங்களைச் செய்வது போன்ற ஆக்கமான செயல் வேறெதுவும் உலகத்தில் இல்லை. அறத்தைச் செய்யத் தொடங்குவது கடினம். அதனை ஒவ்வொரு நாளும் செய்வது என்பது இன்னும் கடினம். அதனைத் தொடர்வது என்பது இன்னும் இன்னும் கடினம்.
அறவாழ்க்கை என்பது தூய்மையான வாழ்க்கை. சிறப்பான வாழ்க்கை. செல்வம் மிகுந்த வாழ்க்கை. ஆக்கம் மிகுந்த வாழ்க்கை. உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத
நல்ல வாழ்க்கை அறவாழ்க்கை.
அறம் என்பது வேறு.
தருமம் என்பது வேறு.
தருமம் என்பது பலன் கருதாமல்
தாழ்ந்த ஒருவருக்கு உயர்ந்த ஒருவன் செய்யும் கொடை.
ஆனால் அறம் என்பது தர்மத்தைவிட வேறானது. அறம் என்பது கடமை. நியாயம். சத்தியம். நேர்மை இவற்றைக் கொண்டு அவரவர் கடமையைச் செய்வது.
அறமே சிறந்தது. அதுவே சிறப்பான ஆக்கத்தைத் தருவது.
அதனை மறவாமல்
எந்நாளும் செய்ய வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

திரு.வி.க. பிறந்த நாள்


 

Friday 25 August 2023

நிதானம் நிம்மதி . .

 நிதானம் நிம்மதி . .

இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.
எல்லாம் அவசரம் என்று
அவசர மயமாகி விட்டதை
நாளும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அர்ஜன்ட் (Urgent) என்கிற வார்த்தையை அதிகமாக நாளும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம். பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.
இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவதில்லை. மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டியுள்ளது.
*அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,*
*அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் ஆலோசிப்பதில்லை.*
அதிகமாக அவசரப்படுவதால்
சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலகச் செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப் போய்விடுகிறது.
ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பின் விளைவுகளை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது.
அப்படியானால் எல்லாம்
அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.
*நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களைச் சந்திக்காமல் நிதானமாகச் செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.*
*அவசரத்தின் தடுமாற்றத்தால்
தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கிருபானந்த வாரியார் பிறந்த நாள்


 

பாராட்டி மகிழ்வோம். அபுதாபியில் நேற்று நடைபெற்ற 29 ஆவது சர்வதேச செஸ் போட்டியில் சென்னையில் வசிக்கும் காரைக்குடி வீஆர். அரவிந்த் சிதம்பரம் மூன்றாவது இடம் பெற்று நமது பாரத நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்துள்ளார். இவர் பல்வேறு சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் ஏராளமான வெற்றிகளைக் குவித்தவர். வாழிய பேராற்றல் வாழியவே - மனிதத்தேனீ