Tuesday 30 April 2019

ஜவகர்லால் நேரு நினைவு தினம்


வெற்றி சரித்திரம் தொடரட்டும் - மனிதத்தேனீ


வெற்றிக்கு துணை நிற்போம் - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


எங்கள் மாநகா் மதுரையில் மழை மகிழ்ச்சி மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இப்படியும் ஒரு கலெக்டர்..
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்காநகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிக்குறவர்களின் குழந்தைகள் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் முதன் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாயத்தில் இருந்து 10-ம் வகுப்பு பொது தேர்வை 2 மாணவிகள் எழுத இருந்தனர்.
இதனை அறிந்த நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அவர்கள் இருவரையும் பாராட்டும் விதமாக நரிக்குறவர் காலனிக்கு நேரில் சென்று, தேர்வு எழுத இருந்த மோகன் என்பவருடைய மகள் பார்வதி, கமால் மகள் மாதவி ஆகிய இரு மாணவிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கினார்.
நரிக்குறவர் சமுதாய காலனி மக்களிடம் சுமார் 2 மணி நேரம் கலெக்டர் ஷில்பா அப்போது உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உங்கள் சமுதாய குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அவர்கள் படித்து என்னைப் போல் உயர் பதவிக்கு வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து நரிக்குறவர் காலனியில் உடனடியாக அங்கன்வாடி அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். மேலும் வீடு இல்லாத நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அவர் வழங்கினார்.
பின்னர் பார்வதி, மாதவி ஆகிய மாணவிகளையும் கலெக்டர் ஷில்பா தனது அரசு காரில் ஏற்றி வலம் வந்து ஊக்கப்படுத்தினார். இதனால் இரு மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நரிக்குறவ மாணவிகளை கலெக்டர் தனது காரில் ஏற்றி வலம் வந்தது அனைவரையும் அப்பொழுது வியப்பில் ஆழ்த்தியது.
அந்த இரு மாணவிகளில் ஒருவரான மாதவி 198 மதிப்பெண் எடுத்து இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த கலெக்டர் தன் மகளை அரசு பால்வாடியில்தான் சேர்த்துள்ளார்.
குடிநீர் தொட்டிகள் சுத்தம் சரியாக செய்துள்ளார்களா என்று சிறிய படிகள் வழியாக மேலே ஏறி நேரிடையாக பார்வையிடுவார்.
கலெக்டர் என்ற எந்த ஈகோவும் இன்றி,மத்தியதர குடும்ப பெண்கள் போல் உடை உடுத்தி,தன் சட்டத்திற்கு உட்பட்டு தேடி தேடி உதவி செய்யும் குணாதிசயம் கொண்டவர்.
நன்றி ராஜப்பா தஞ்சை


Monday 29 April 2019

சி.பா.ஆதித்தனார் நினைவு தினக் கூட்டம்


பாசுரங்களின் பாவலர், நற்றமிழ் நாவலருக்கு புகழஞ்சலிக் கூட்டம்..


வெற்றிக்கு துணை நிற்போம் - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எதுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
இது தங்கச்சி.
மறக்காம போன உடனே
மஞ்ச பையை தொறந்து பாரு
நான் சேத்து வச்ச காச உன் செலவுக்கு வச்சிருக்கேன்....
இது தம்பி.
மறக்காம போன உடனே
உன் பொறந்த நாளைக்கு புது சட்டை வாங்கிகப்பா...
நான் தையல் தச்ச காச
உனக்காக வச்சிருக்கேன்....
இது அக்கா.
அன்று...
இதை எல்லாவற்றையும்
மறக்காமல் செய்துவிட்டோம்...
இன்று....
இதை சொன்ன எல்லோரையும்
மறந்து விட்டோம்.......சதீஷ் பாண்டியன்...sp
நன்றி கோனாபட்டு சுப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்


மதுரைமணி 28.04.2019 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களுக்குத் தெரியுமா?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
🍹 வீட்டிற்கு விருந்தினர் வந்ததும், சொம்பு நிறைய தண்ணீர் கொடுக்கும் வழக்கம் நம் முன்னோரிடம் உண்டு.
அது ஏன் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
🍹 தண்ணீர் மனிதர்களின் மனநிலையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது. முதலில் பயண களைப்பை போக்கிவிடும்.
இரண்டாவதாக தண்ணீர் அருந்துபவரின் மனநிலையை சாந்தப்படுத்தும். கோபதாபத்துடனோ, வெறுப்புணர்ச்சியுடனோ வருபவர்கள் தண்ணீர் அருந்தினால் சாந்தமாகிப் போவார்கள். பதற்றத்துடன் வருபவர்கள் மனநிலையில் தளர்வு கண்டு இயல்பு நிலை யை அடைவார்கள்.
🍹 யாராவது சண்டைக்கு வந்தால் கூட 'மொதல்ல தண்ணி குடிப்பா, அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்று அக்கம் பக்கம் இருப்ப வர் கள் சமாதானம் செய்வார் கள். தண்ணீர் குடிப்பதால் சண்டையிடும் நோக்கத்துடன் வந்தாலும் அவர்களின் ஆத்திரம் வெகுவாய் குறைந்து விடும் என்பதே இதற்கு காரணம்.
🍹 இதற்காகவே விருந்தினர் களுக்கு தண்ணீர் கொடுக்கும் பழக்கம் உருவானது.விருந்தின ரின் மனநிலை எதுவாக இருந்தா லும், அது கேடுமிக்க தாக இருந்தாலும் தமது குடும்பத்தை தாக்காமல் காத்துவிடக்கூடியது. இந்தத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. ஓடிப்போய் ஒரு குளிர்பானம் கொடுப்பது கௌரவமாக கருதப் படுவது கசப்பான உண்மை.
நடப்பு சிந்தனை...!!
🌷 சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது...
🌷 உங்களை நேசிக்கும் இடங்க ளில் உண்மை அன்புடன் இருங்கள்...
🌷 உங்களை போற்றும் இடங்க ளில் கவனமாக இருங்கள்...
🌷 உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்...
🌷 உங்களை தவிர்க்கும் இடங்க ளில் தலை காட்டாமல் இருங்கள்...
🌷 உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்...
🌷 உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்...
🌷 உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்...
🌷 உங்களை தூற்றுவோரும் வாழ்த்தும் படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்...

தந்தை மகனுக்காற்றும்


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*⃣வாழ்க்கையை உள்ளவாறு ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று முதல் எல்லோருடனும் இனிமையாக பழகுவோம் என்ற முடிவோடு ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். குறையில்லாதவர் யார்? தவறு செய்யாதவர்கள் யார்? என்ற எண்ணத்தில் அனுசரித்து சென்றால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
*⃣குறை காண்பதை தவிர்க்கவும். குற்றம் காண்பின் சுற்றம் இல்லை. அடிக்கடி குறை காண்பவர்களுக்கு, நாளும் பொழுதும் எதிரிகள் அதிகரித்துக் கொண்டே போவார்கள்.
*⃣பொய்யை உரக்கச் சொல்லவும், உண்மையை மெதுவாகச் சொல்லவும், பழகிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*⃣புதிய நண்பர்கள் கிடைத்தவுடன், பழைய நண்பர்களிடம் கடமைக்குத் தான் பேசுவார்கள்.
*⃣காத்திருப்பின் வேதனையை அதிகப் படியாக உணர வைப்பது மருத்துவமனைகளே.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

துன்பத்திலும் நகைச்சுவை


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை.................
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: #எச்சை_போராளீஸ்
பிய்ந்த காலணியோடு ஓடினார் கோமதிமாரிமுத்து
அப்புடின்னு மீடியாவுல போடுறான்
எம்மூட்டு பிள்ளைக்கு ஷூ வாங்கி கொடுக்க வக்கில்ல இதுக்கு பேரு டிஜிட்டல் இந்தியாவா?ன்னு ஒரு குரூப் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துது
உண்மை என்னன்னு தேடுனா..
பல சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்றதால்
ஸ்போட்ஸ் கோட்டாவில்
வருமானவரி அலுவலகத்தில் வேலை கொடுத்துள்ளது மத்திய அரசு.
பெங்களூரு அரசு குடியிருப்புல வீடும் குடுத்துருக்காங்களாம்.
வாரம் 1 நாள்தான் வேலை ,5 நாள் பெங்களூரு தடகள அகாடமியில் பயிற்சி.
இதெல்லாம் மறைச்சி
தமிழச்சிடா..புறக்கணிக்கிறாண்டா..
தினமலர் சின்னதா செய்தி போட்டுட்டான்டா..
அப்புடின்னு பிரிவினை விஷ(ம)த்தை விதைக்கிறானுகளே என்னடான்னு பார்த்தால்..
பிரஸ்மீட்டுல
கனிமொழிக்கு நெருக்கமான
பாதிரி ஜெகத் கஸ்பர் உட்கார்ந்திருக்காரு
அதனாலதான்
கனிமொழி பாராட்டுனாக..
ஸ்டாலின் பாராட்டுனாக ன்னு அந்தப் பொண்ணு கோமதி (சொல்லிக் குடுத்ததை) சொல்லுது.
கொசுரு :-
காலணிகளை அவர் அவர் பாத வடிவமைப்பு மற்றும் உந்தி தள்ளும் தன்மையோடு வலது இடது கால் கலர் வித்தியாசத்தில் தயாரகிறது உலக பணக்கார புட்பால் ஆட்டகாரர்கள் பலர் வெவ்வேறு நிறத்தை தான் பயன்படுத்துகிறர்
ஆதலால்..உணர்ச்சி வசத்தை அடக்கவும்..😂
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: கோமதி மேல் உள்ள உங்களுடைய அக்கறை அன்பு புரிகிறது. அதே வேலையில் சில உண்மைகளையும் அறியுங்கள். NIKE எனும் காலணி தயாரிப்பு நிறுவனம் ஓட்டப்பந்தயத்திறகாக "matumbos" எனும் வகை காலணிகளை தயாரித்து வருகிறது. அதில் "Limited edition" வகை matumbos இரு வேறு நிறங்களில் தயாரித்து அளிக்கிறது. கோமதி அணிந்ததும் அதே வகை காலணிகள் தான். அவர் பயிற்சி நேரங்களில் கிழிந்த நிலையில் இருந்த காலணிகளை பயன்படுத்திவந்ததும் உண்மையே. பன்னாட்டு போட்டிகளில் பங்கு பெற வேண்டுமானால் பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், இது அறிவார்ந்த சமூகம் அறியும். ஆகவே வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். Matumbos வகை காலணிகள்,
கோமதி அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை வாய்ப்பு முன் தான் பட்ட கடினமான சூழ்நிலையை விவரித்தார். தவறான செய்திகளை தராதீர்கள். அவருடைய சாதனையை கொச்சை படுத்தாதீர்கள்.
[4/27, 6:33 PM] Manithatheni Chockalingam: நன்றி : மானசீகன்
கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை. முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே மடமடவென குடிப்பதைப் போல் அத்தனை சுலமானது அது . அவர்களுக்கான ஒரே ஒரு பிரச்சினை , வாய்ப்பு கிடைப்பது மட்டும்தான் . அது மட்டும் கிடைத்து விட்டால் தங்கத்தையும் , வெள்ளியையும் தட்டிப் பறித்து வந்து, நாம் தப்பாகப் பாடிக் கொண்டிருக்கும் தேசிய கீதத்தின் காலடியில் சமர்ப்பித்து விடுவார்கள் .
கோமதிகள் போட்டிகளுக்காக ஓட ஆரம்பித்தவர்களல்ல...
அவர்களை,
பசி துரத்துகிறது
ஊட்டச்சத்துக் குறைபாடு துரத்துகிறது
தந்தையின் இயலாமை துரத்துகிறது
தாயின் பயம் துரத்துகிறது
ஆசிரியர்களின் கேலி துரத்துகிறது
ஊராரின் அவநம்பிக்கை துரத்துகிறது
சாதி துரத்துகிறது
ஆண்திமிர் துரத்துகிறது
சமூகத்தின் பாரபட்சம் துரத்துகிறது
ஊடகங்களின் புறக்கணிப்பு துரத்துகிறது
பயிற்சியாளர்களின் அலட்சியம் துரத்துகிறது
தேர்வுக் குழுவின் அரசியல் துரத்துகிறது
வெள்ளை நிறத்தைத் தரமுடியாத மரபணு துரத்துகிறது
நம்பிக்கை அளிக்க முடியாத எதிர்காலம் துரத்துகிறது.
கோமதிகள் ஓடுகிறார்கள்....விழுந்து விடக் கூடாது என்பதற்காக ஓடுகிறார்கள்...நின்று விட்டால் அழுது விடுவோம் என்பதற்காக ஓடுகிறார்கள்....ஓடுவதைத் தவிர வேறு வழியே இல்லாததால் ஓடுகிறார்கள்....ஓட்டம் நின்று விட்டால் மூச்சும் நின்று விடுமோ என்கிற பயத்தில் ஓடுகிறார்கள்...தான் சந்திந்த அவமதிப்புகளை , புறக்கணிப்புகளை மைதானமாக விரித்து அவற்றைக் கால்களால் மிதிக்கிற கற்பனையில் ஓடுகிறார்கள்...ஓடி முடித்த பின் பருகக் கிடைக்கும் பழச்சாறிலோ , நீரிலோ துளியளவு கருணை இருந்து விடாதா ? என்கிற எதிர்பார்ப்பில் ஓடுகிறார்கள் .
எல்லைக் கோட்டைத் தொட்ட போது தமிழகமும், இந்தியாவும், உலகமும் என்ன நினைத்ததோ ? கோமதி இப்படித்தான் நினைத்திருப்பாள் . ' இனி எதற்கும் பயந்து ஓட வேண்டியதில்லை .'
கோமதிக்குக் கிடைத்திருப்பது தங்கம் அல்ல; இனி ஒருபோதும் தகர்க்கவே முடியாத தன்னம்பிக்கை.
நம் வீடுகளில், தெருக்களில், பள்ளிகளில் இருக்கும் கோமதிகளுக்கு அதை நம்மாலும் தரமுடியும்.
அதுதான் இந்தக் கோமதிக்கான நிஜமான கைதட்டல்.
வாழ்த்துகள்!

வெற்றியாளர்கள் சந்திப்பு


Saturday 27 April 2019

மாலைமுரசு 27.04.2019 பக்கம் 5


மக்கள்குரல் 27.04.2019 பக்கம் 6


தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் நினைவு தினக் கூட்டம் News & Photos




மதுரை நகரத்தார் சங்கத்தின் இணைச்செயலாளர் பணியாற்றிட முனைப்புடன் உள்ள துடிப்பான இளைஞர், கடும் உழைப்பாளி தேவகோட்டை ஒய். கார்த்திகேயன் இன்று காலை மனிதத்தேனீ திருநகர் இல்லத்தில் சந்தித்த தருணம். அருகில் வி என் சிடி நிறுவனங்களின் நம்பிக்கை நட்சத்திரம் எம். மலையலிங்கம் உள்ளார். வெற்றித் திருமகனுக்கு வாழ்த்துகள்.


ஒரு சிற்பி தான் கண்டதையும், தனது கற்பனையையும் சிற்பமாக செதுக்குகிறான்..

ஒரு சிற்பி தான் கண்டதையும், தனது கற்பனையையும் சிற்பமாக செதுக்குகிறான்..
தான் செதுக்கும் சிற்பங்கள் உயிரோட்டமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நாட்களை அதற்காகவே செலவிடுகிறான். கல்லையே கலைவண்ணமாக்கி அதை உயிரோவியமாக மாற்றிவிடுகிறான்.
அத்தகைய சிற்ப கலையில் நம் முன்னோர் மிகச்சிறந்து விளங்கினர். கோவில்களில் பொக்கிஷங்களாக காட்சி தரும் சிற்பங்கள் இன்றைக்கும் தமிழனின் கலைத்திறனை பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தில் சிற்பங்கள் இருக்கும் கோவில்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை கண்டு வியப்படைகிறார்கள். ஒவ்வொரு சிற்பத்துக்கும் பின்னணியில் இருக்கும் கதைகளை அவர்களுக்கு வழிகாட்டிகள் விளக்கி கூறுகிறார்கள். அந்த சிற்பங்களை வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துகிறார்கள். ஆனால், சொந்த மண்ணில் இருப்பதாலோ என்னவோ நம்மில் பலருக்கும் அதன் மகிமை தெரிவதில்லை. நவீன காலத்தில் கோவிலுக்கு செல்வோர் ஏனோ சிற்பங்களை ரசிக்க மறக்கிறார்கள். ரசிப்பதற்கு மாறாக, கலைநயமிக்க கற்சிலைகளில் காதல் ஜோடிகளோ, வேறு சிலரோ கண்டதை கிறுக்கி வைத்து, சிற்பியின் கலையை கொலை செய்வது தீராத வேதனையை தருகிறது.
சிற்பங்களை ரசிக்க பழகினால் பழங்கால நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் நம் கண்முன் நிழலாடும் என்பதில் சந்தேகமில்லை. சிற்பங்களில் நம் முன்னோர் இன்னும் உயிர்ப்போடு வாழ்கிறார்கள். மனித நாகரிகம் மற்றும் அதன் வளர்ச்சி நிலைகளையும் வெளிப்படுத்தும் சான்றுகளில் சிற்பகலைக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால், பல அரிய வகை சிற்பங்கள் படை எடுப்பால் அழிந்து போய்விட்டன. எஞ்சி இருப்பவற்றை காப்பாற்ற சிற்பங்களின் மகிமையை நாம் உணர்வது அவசியம்.
நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை சிற்பமாக பல ஊர் கோவில்களில்..
நன்றி ராஜப்பா தஞ்சை



மூன்று மந்திரங்கள்


மனிதத்தேனீயின் தேன்துளி


வெற்றிக் கூட்டணி, பாராட்டுக்கள்.

வெற்றிக் கூட்டணி, பாராட்டுக்கள்.
மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பணியாற்றிட களம் காணும் வெற்றிக் கூட்டணி துபாய் லெட்சுமணன், சிட்டி டைரி எஸ் வி சிதம்பரம் குழுவினர் நேற்று காரைக்குடியில் தேவகோட்டை பழ. சந்திரன் அவர்களுடன் ஓர் இனிய சந்திப்பு.

Friday 26 April 2019

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது..

4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது..
இன்றைய பல மதங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகில் பல நாடுகளில் இந்து மதம் போன்று பல கடவுள்களை வணங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்து மதம் போன்றே பூஜை முறைகளும் இங்கு நடந்துள்ளன. இப்படி ஒரு கோவில் எகிப்து நாட்டில் இருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அந்த கோவிலின் பெயர் கர்னக் கோவில். எகிப்து நாட்டில் உள்ள லக்சர் நகரத்துக்கு அருகே நைல் நதி ஓரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. பழங்கால கோவில்களில் கம்போடியாவில் உள்ள ஆங்கோர்வாட் கோவில்தான் உலகிலேயே பெரியதாகும்.
இதில் 2-வது பெரிய கோவிலாக கர்னக் கோவில் உள்ளது. இந்த கோவில் மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1.50 கிலோ மீட்டர் நீளம், 0.8 கிலோ மீட்டர் அகலத்தில் மிக பிரமாண்டமாக இருக்கிறது. பண்டைய எகிப்தியர்கள் ஆமுன், முட், கோன்சு ஆகிய தெய்வங்களை வழிபட்டுள்ளனர். இதில் ஆமுன், முட் கணவன்- மனைவி சாமிகள் ஆவர். கோன்சு சந்திர கடவுள் ஆவார்.
இவர்களுக்காக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. அதில் ஆமுன், முட், கோன்சு ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோவிலாக கட்டி உள்ளனர்.
பிற்காலத்தில் சூரிய கடவுளான ஏடனுக்கு தனிக்கோவில் ஒன்றும் அதே வளாகத்தில் கட்டப்பட்டது. இதனால் ஓரே வளாகத்தில் 4 பிரமாண்ட கோவில்கள் இருக்கின்றன. இதில். ஆமுன் கோவில்தான் மற்ற கோவிலை விட பெரிய கோவிலாக உள்ளது. அந்த கோவில் மட்டுமே 61 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.
இது தவிர 21 சிறு கோவில்களும் அதே வளாகத்தில் உள்ளன.
இடையில் ஏற்பட்ட பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள், எதிரி நாடுகள் படையெடுப்பு போன்ற காரணங்களால் கோவிலின் பல பகுதிகள் சேதம் அடைந்து இருந்தாலும், பெரும்பாலான வளாகம் அதே கம்பீரத்துடன் உள்ளது.
தற்போது இந்த கோவிலில் வழிபாடு எதும் இல்லை. திறந்தவெளி அருங்காட்சியகமாக கோவில் மாற்றப்பட்டு உள்ளது. இன்றைக்கு எகிப்து நாட்டை சுற்றி பார்க்கவரும் சுற்றுலா பயணிகளில் முக்கிய சுற்றுலா பட்டியலிலும் கர்னக் கோவில் இடம் பெறுகிறது. எகிப்தில் உள்ள கீசா பிரமீடை அடுத்து அதிக சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தான் வருகின்றனர். கர்னக் கோவிலில் 56 ஆயிரம் சதுர அடி பிரமாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. உலகில் உள்ள பழங்கால அரங்கங்களில் இதுதான் மிக பெரியதாகும்.
இந்த மண்டபத்தை 134 கல்தூண்களை அமைத்து அதில் நிறுவி உள்ளனர். இந்த தூண்களில் 122 தூண்கள் தலா 10 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற 12 தூண்கள் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் ஒவ்வொன்றும் 21 மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த தூண் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது. 70 டன் எடை உள்ளது.
இவ்வளவு எடை கொண்ட தூணை எப்படித்தான் பொருத்தினார்களோ? என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது.தூண்களின் மேல் பகுதியில், வேறு தூண்களை அமைத்து ஒன்றோடு ஒன்று பொருத்தி உள்ளனர். இந்த தூண்களை வளைவாக வடிவமைத்து இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு கச்சிதமான வளைவு தூண்களை செதுக்கினார்கள் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தூண்களின் தாங்கு திறனையும் துல்லியமாக கணக்கிட்டு அமைத்து இருப்பது அந்த காலத்திலேயே எகிப்து கட்டிட கலை வல்லுனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இதே போல் மேலும் 16 அரங்கங்களும் கோவில் வளாகத்தில் உள்ளன. மேலும் இந்த கோவிலில் 97 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஆன ராட்சத தூண் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணின் எடை 323 டன்.
இவ்வளவு பெரிய தூணை 161 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். எந்த நவீன தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு அதிக எடை கொண்ட தூணை எப்படி இங்கு கொண்டுவந்து சேர்த்தார்களோ தெரிய வில்லை. இதே எடை கொண்ட மேலும் 4 தூண்களும் முந்தைய காலத்தில் அங்கு இருந்துள்ளன.
கி.பி.338-ம் ஆண்டில் ரோம் மன்னன் கான்ஸ்டாடின் இந்த பகுதியை கைப்பற்றினான். அவன் இதில் ஒரு தூணை ரோம் நகருக்கு கொண்டுவர தனது படைக்கு உத்தரவிட்டான். எனவே அந்த தூணை பெயர்த்து எடுத்து கொண்டு சென்றனர். இவ்வளவு பெரிய தூணை எடுத்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். பெரும் சிரமத்துக்கு பிறகு ஆலெக்சாண்டிரியா நகரம் வரையே அந்த தூணை அவர்களால் கொண்டு செல்ல முடிந்தது.
பின்னர் மீண்டும் கடும் முயற்சி செய்து ரோம் நகருக்கு எடுத்து சென்றனர். ஆனால், இதற்கு 26 வருடங்கள் ஆகி இருந்தன. தற்போது கோவில் வளாகத்தில் ஒரு தூண் மட்டுமே உள்ளது. மற்ற 2 தூண்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கறுப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட 600 சாமி சிலைகள் கோவிலில் உள்ளன. இவை தவிர 4500 சிலைகள் கோவில் வளாகம் முழுவதும் உள்ளன. கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
10.5 மீட்டர் உயரம் கொண்ட சாமியின் சிலை ஒன்றும் பிரமாண்டமாக இருக்கிறது. கோவில் வளாகத்திலேயே பெரிய ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஏரியை சுற்றி பூந்தோட்டங்கள் இருந்தன. மேலும் கோவில் பூசாரிகள் குடியிருப்புகளும் இந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தன. வளாகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தகோவில் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஏனென்றால், இந்த கோவில் சில ஆண்டுகளில் கட்டப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக தொடர்ந்து கட்டப்பட்டது.
கோவில் அமைந்துள்ள பகுதி முன்பு தேபஸ் என்று அழைக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரமாகவும் இருந்தது. இதை ஆண்டு வந்த 1-ம் செனுஸ்ட்ரட் என்ற மன்னன் கி.மு.1950-ம் ஆண்டு வாக்கில் கோவிலை கட்ட தொடங்கினான். அவனுக்கு பிறகு வந்த 30 மன்னர்கள் கோவிலை தொடர்ந்து விரிவாக்கம் செய்து கட்டினார்கள். 1-ம் துத்மோசிஸ், 1-ம் சேத்தி, 2-ம் ராம்சஸ் ஆகிய மன்னர்கள் கோவில் கட்டுமான பணிகளில் அதிக அக்கறை எடுத்து மேலும் பல கட்டிடங்களை கட்டினார்கள்.
ஒருவர் கட்டிய கட்டிடத்தை மற்றவர் இடித்து விட்டு கட்டிய சம்பவம் அடிக்கடி நடந்தன. ஹேட்சபஸ்ட் என்ற பெண் அரசி கட்டிய பெரும்பாலான கட்டிடங்களை அதற்கு பிறகு வந்த மன்னர் இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டினார். இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக அமுன் இருந்து வந்த நிலையில், அகன்ட்டான் என்ற மன்னன் சூரிய கடவுளான ஏடனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவருக்கு பிரமாண்ட கோவிலை கட்டினான்.
ஆனால், அவனுக்கு பிறகு வந்த மன்னர் அந்த கோவிலில் பெரும் பகுதியை இடித்து விட்டு மீண்டும் அமுன் கடவுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். கி.மு 360-ம் ஆண்டு வாக்கில் ஆட்சியில் இருந்த எகிப்து மன்னன் 1-ம் நெக்டனவோ காலம் வரை தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருந்தன. அதன் பிறகு கிரேக்கத்தை சேர்ந்த தாலமி வம்சத்தினர் அந்த பகுதியை கைப்பற்றி கொண்டனர். அதன் பிறகுதான் கோவில் கட்டுமான பணிகள் நின்றன.
அதாவது கோவில் கட்டுமான பணிகள் 1600 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்தன.
உலகில் வேறு எந்த கட்டிடமும் இவ்வளவு நீண்ட காலமாக கட்டப்பட்டது இல்லை.
கி.பி 323-ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இந்த பகுதியை கைப்பற்றினார்கள். அதற்கு முன்புவரை இங்கு வழிபாடு நடந்து வந்தது. கிறிஸ்தவர்கள் கைப்பற்றிய பிறகு வழிபாடுகளுக்கு தடை விதித்து விட்டனர். அவர்கள் இதே வளாகத்தில் 4 கிறிஸ்தவ கோவிலை கட்டினார்கள். அந்த கோவில்களில் கிறிஸ்தவ வழிபாடுகள் நடந்தன.
இடையில் பல மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றிய போதெல்லாம் கட்டிடத்தின் பல பகுதிகளை இடித்து தள்ளி விட்டனர்.
ஆனாலும் கூட மீதம் இருக்கும் கட்டிடங்களும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலே இருக்கின்றன. கர்னக் கோவில் அந்த பகுதி மக்களின் புனித தலமாகவும் இருந்துள்ளது. கோவிலுக்கு மக்கள் புனித யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் 27 நாட்கள் தொடர் திருவிழா நடைபெறும். அப்போது நம் ஊர் கோவில்களில் நடப்பது போன்று திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடந்து உள்ளன. திருவிழாவின் போது சாமிக்கு 11 ஆயிரம் ஜாடி உணவுகள், 385 ஜாடி மது ஆகியவற்றை வைத்து வழிபட்டுள்ளனர். ஆடுகளை பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
கோவிலில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். கோவிலுக்கு என்று 7 லட்சம் ஏக்கர் விவசாய நிலம், 4 லட்சத்து 21 ஆயிரம் ஆடு, மாடுகள் இருந்துள்ளன.
நன்றி ராஜப்பா தஞ்சை








நாளை காலை நடைபெறும் கூட்டம்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"காமராசருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும்..
'கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா' என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார்.
அனேகமாக காமராசருக்கு 'நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு' என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.
அய்யாவின் உதவியாளர் வைரவன், தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராசருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும்.
எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராசருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார்.
ஒரு நாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு அய்யாவின் இல்லத்திற்க்கு போனேன்.
அய்யா காமராசர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார்.
நான் போய் நின்றதும், 'என்ன?' என்று ஒற்றை சொல்லில் கேட்டார்.
'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்' என்றேன்.
தன் உதவியாளர் வைரவனிடம், 'வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார்.
திரும்பும்போது வைரவன், காமராசரிடம், 'சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’ என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான் காமராசர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை.
'எங்கெ படிக்கிறே?' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
'பச்சையப்பன் கல்லூரியில்’ என்று சொன்னேன்.
'காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’ என்றார்.
நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார்.
'நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னார்.
அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம்.
மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர்.
அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது.
அந்த காரும்கூட காமராசர் அய்யா கொடுத்ததுதான்."
- காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து .

மனிதத்தேனீயின் தேன்துளி


தங்கம் வென்ற தங்கைகளை கவனத்தில் கொண்டு செயல்படும் தமிழக அரசு. இதற்கு நிரந்தர அரசாணை அம்மா கொண்டு வந்தார். அரசை விமர்சனம் செய்பவர்கள் விகடன் உள்ளிட்டோர் முழுவதும் பாருங்கள் - மனிதத்தேனீ