Monday 28 February 2022

04.02.2022 அன்று வயிரவன்பட்டியில் மனிதத்தேனீயின் முன்னுரையும் தீர்ப்புரை...

04.02.2022 அன்று நகர வயிரவன்பட்டியில் மனிதத்தேனீ நடுவராகப் பங்கேற்ற பட்ட...

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வழியில் சிறப்பானவர்தான்.

 ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வழியில் சிறப்பானவர்தான்.

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ!, தாழ்ந்தவர் என்றோ!, மதிப்பு மிக்கவர் என்றோ!, அறிவானவர் என்றோ!, அழகானவர் என்றோ! உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்...
இந்த பூமியில் ஒவ்வொரு மனிதர்களுமே சிறப்புக்குரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே...!
வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வியர்வை சிந்த நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் - பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு...
உண்மையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை. சில வாய்ப்புகள் தான் யார் இந்தப் பொழுதில் அவசியமானவர் என்பதைப் புரிய வைக்கிறது...
அந்தப் புரிதலை உணர்ந்து கொள்பவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்வர். மனிதநேயம் மிக்கவர்களால் மக்களை திருப்தி படுத்தும் சேவையை வழங்கமுடியும். அவர்களே மரணித்தாலும் மனிதர்கள் மனங்களில் இடம்பிடிப்பர்...
ஆம் நண்பர்களே
மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.
சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். நிகரான மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது

 இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிட்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
*விளாடிமிர் புடின். ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.*.....
- ஹிலாரி கிளின்டன் தனது "Hard Choices" என்ற புத்தகத்தில் இருந்து...
படித்ததில் பிடித்தது

யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

 யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்த தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்...
நமது மழலைச் செல்வங்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை...
வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி...
ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டு இருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது...
எனவே!, மகிழ்ச்சியாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு நெகிழிப் பொதியில் போட்டு, அதை ஒரு துணிப் பொதியில் முத்திரை வைத்து பத்திரப் படுத்திக் கொண்டார்...
தனக்கு வந்த ஆகூழ்தனை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார்...
ஆனால்! அதனை வெளியில் எடுக்க மாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார்...
பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார்...
பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலை...
எல்லாம் அந்த துளையிட்ட நாணயத்தின் மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன...
ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியை அழைத்து, நீண்ட நாளைக்குப் பிறகு என்னுடைய இந்த ஆகூழ் நிறைந்த நாணயத்தை இன்று வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர்...
உடனே மனைவி, இப்போது அதனைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாக கூறினார்.
இல்லை!, இல்லை! பார்த்தே ஆகவேண்டும்! என்று சொல்லி, சட்டைப் பையில் கையை விட்டு பொதியைத் திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர்...
அவருக்கு ஒரே வியப்பு!. அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார். அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவு இல்லாமல் நான்தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று சாரளத்திற்கு (ஜன்னலுக்கு) வெளியே உதறினேன்.
அது தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் கொடுத்த நாணயம் அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக, வேறு ஒரு நாணயத்தை அதே போன்று பொதியில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள்...
இது எப்போது நடந்தது...? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி...
இதைக் கொஞ்சம் ஆலோசித்துப் பாருங்கள். அந்த மனிதருக்கு ஆகூழைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிதான்.
ஆம் நண்பர்களே
நம்முடைய வளர்ச்சியை தீர்மானிப்பது தன்னம்பிக்கை. நம்மை சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், அலட்சியப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம் திறனைக் குறைத்து மதிப்பிடலாம், நமக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாராட்டு, அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கலாம். ஆனால்!, நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, மன உறுதி, சுயமரியாதையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது.
எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால்!, அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிலும் எளிதாக வெற்றி பெறலாம்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் தீயிற்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எழுத்தாளர் சுஜாதா நினைவைப் போற்றுவோம்


 

Saturday 26 February 2022

கொடுப்பதும் பெறுவதும்.

 கொடுப்பதும் பெறுவதும்.

பூமியில் வாழும் மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...
ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு, கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...
ஆனால்!, மனிதனை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்தே அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை...
படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை...
தலைமுறைக்கு பெண்ணின் உதவி தேவை...
இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம்...
ஆனால்!, தற்போதைய காலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலைக் கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்...? - என்று வீணே வழக்குரைக்கின்றான்...
அப்படி கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ...!
ஒருவர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது, அழகிய பெண் ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் கரிக்கோல் மற்றும் மைக்கோல் வாங்கிச் சென்றிருக்கிறார்...(கரிக்கோல் - பென்சில், மைக்கோல் - பேனா)
நண்பர் வந்தவரிடம் "இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா...?” என்று கேட்டிருக்கிறார்...
”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் வந்தவர்...
“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா...?
இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் வந்தவரின் நண்பர்...
மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்.
இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு வழங்கிச் சென்றது.
மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்...
ஆம் நண்பர்களே
இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்த நாம் , மனித்தன்மை பெற்று வாழ வேண்டும் . எல்லா உயிர் இனங்களைக் காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்குத்தான் இருக்கிறது.
மனிதனாக பிறந்த நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்து விட்டுச் செல்ல வேண்டும்.
வந்தோம் , பிறந்தோம் , வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல் வாழ்வு வாழ வழி வகைகள் செய்யவேண்டும், நாம் இன்று எதிர்கொள்ளும் அல்லல்கள் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் தூய பூமியாக விட்டுச் செல்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மாநகர் மதுரையின் புதிய மேயராக எங்கள் திருநகர் இந்திரா காந்தி அவர்கள் வரவேண்டும் என முழு முயற்சி.

 மாநகர் மதுரையின் புதிய மேயராக எங்கள் திருநகர் இந்திரா காந்தி அவர்கள் வரவேண்டும் என முழு முயற்சி.

வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய நகர் மதுரை திருநகர்.
இதன் சாலைக் கட்டமைப்பு, நேர்த்தியான நகரமைப்பு, பெரிய அளவிலான அண்ணா பூங்கா. அருகில் மதுரைக் கோட்ஸ் ஊழியர்களுக்கு முன்னுரிமையுடன் உருவான பாண்டியன் நகர், ஹார்விபட்டி என அனைத்து சமூக மக்களும் ஒன்றுபட்டு வாழும் பகுதியில் உள்ள புதிய 95 ஆவது வார்டு உறுப்பினராக தி மு க சார்பில் தேர்வானவர் பன்முகத் திறன் கொண்ட இந்திரா காந்தி அவர்கள்.
இவர் சட்ட நுணுக்கங்களை கற்றறிந்தவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் மூன்றாண்டு காலம் இருந்தவர், திருநகர் பேரூராட்சி சேர்மனாக சிறப்பாகப் பணியாற்றியவர், மைய அரசுப் பணியில் இருந்தவர், பணி நிறைவுக்குப் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிவரும் பேராற்றல் மிக்க பெண்மணி.
இவர்களது கணவர்
எல்.கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக அரசுப் போக்குவரத்து கழக மேனாள் பொது மேலாளர், மற்றும் ஜெயிண்ட்ஸ் அமைப்பு, மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மதுரையின் புதிய மேயராக இவரைத் தேர்வு செய்ய வேண்டும் என தலைமையிடம் முயற்சி செய்து வரும் நிலையில் இன்று திருநகர் பேரூராட்சி, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் கால் நூற்றாண்டுகள் தலைவராகப் பணியாற்றிய கே. ராமன் செட்டியார் அவர்களின் மகன் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், பாண்டியன் நகர் அருள்மிகு கல்யாண விநாயகர் கோவில் நிர்வாகி, மதுரை ஹைடெக் அராய் நிறுவன மக்கள் தொடர்பாளர், எக்ஸனோரா அமைப்பின் முன்னோடி வ. சண்முகசுந்தரம், திருநகர் அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் மேனாள் தக்கார், திருநகர் மக்கள் மன்றச் செயலாளர், பொறியாளர்
வீ. கிருஷ்ணமூர்த்தி, தி மு க முன்னோடி எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பொதுநல அமைப்பினர் தங்களின் பேரார்வத்தை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தனது அனுபவத்தை மதுரை மேயர் பணியில் செயல்படுத்த வேண்டும் என்று நூல்களைப் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்த தருணம்.
அருகில் அலமேலு சொக்கலிங்கம் திருநகர் ராஜ்குமார் உள்ளனா் .
வாழிய மக்கள் பணி.


மகிமைமிக்க சிவராத்திரி...* 01.03.2022

 மகிமைமிக்க சிவராத்திரி...*

01.03.2022
சிவன் என்றாலே அன்பு. அதனால் பெரியோர்கள் அன்பே சிவம் என்கின்றனர். சிவனுடைய கதைகளை தேடிப் பயணப்பட்ட போது, அவரின் அடியார்கள் பலரின் கதைகள் தான் கிடைத்தன. அதில் சிவனின் அடியவர்களின் ஏகப்பட்ட திருவிளையாடல்கள் நிரம்பியுள்ளது. சித்தர்கள், சிவனடியார்கள், நாயன்மார்கள் என எல்லோரின் கதைகளிலும் அன்பே மேலோங்கி கானப்படுகின்றது.அந்த சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரியின் மகிமைகளை பல கதைகள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சிவராத்திரியைப் பற்றியும், அன்று செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும் இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.
*🌷 சிவராத்திரி வகைகள்:*
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை நாட்களின் போது வரும் சதுர்த்தசி நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி.
தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பக்ஷ சிவராத்திரி.
திங்கட்கிழமைகளில் *(சோமவாரம்)* பகல், இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் அமாவசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
ஆண்டுதோறும் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவதுதான் மகா சிவராத்திரி.
*🌷 சிவராத்திரியன்று வழிபடுவது எப்படி?*
சிவராத்திரியன்று தேவாரம், திருமுறைகள், சிவபுராணம் ஆகியவற்றை படிப்பது நலம். ருத்ரம், சமகம் போன்றவற்ரை ஜபித்தாலோ அல்லது வீட்டில் டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்பதாலோ மன அமைதியோடு வீட்டிலும் அமைதி நிலவும்.
பில்வாஷ்டகம், லிங்காஷ்டகம், வேத பாராயணம், சிவனடியார்களின் வரலாறு, தேவாரம், பெரியபுராணம், சித்தர்களின் கதைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை படிப்பதாலோ, இல்லை கேட்பதாலோ எண்ணற்ற பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
இதைச் செய்ய இயலாதவர்கள் சிவநாமத்தை உச்சரித்து கோவிலுக்கு சென்று ஒரு கால பூஜையை தரிசிக்கலாம். ஏழை, எழியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிறது பெரியபுராணம். அதிலும் ஒருவருடைய பசியை போக்குபவனுக்கு பரமனின் அருள் கிடைப்பதாகவும் கூறுகிறது.
சிவம் என்றால் சுபம். சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன். சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி.
*🌺 சிவராத்திரி அபிஷேக ஆராதனைகள்*
*முதல் ஜாமத்தில்-*
பஞ்சகவ்ய அவிஷேகம், சந்தனம், வில்வம், தாமரைப்பூ அலங்காரம், அர்ச்சனை. பச்சைப் பயறு பொங்கல் நிவேதனம். ருக்வேத பாராயணம்.
*இரண்டாம் ஜாமத்தில்-*
சர்க்கரை, பால், தயிர், நெய், கலந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரைப்பூ அர்ச்சனை, நிவேதனமாக பாயசம், யஜுர்வேத பாராயணம்.
*மூன்றாம் ஜாமத்தில்-*
தேன் அபிசேகம், பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ அர்ச்சனை, எள் சாதம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
*நான்காம் ஜாமத்தில்-*
கருப் பஞ்சாறு அபிசேகம், நந்தியாவட்டைமலர் மலர், அல்லி, நீலோற்பவ மலர் அலங்காரம் அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம், அதர்வண வேத பாராயணம்.

Friday 25 February 2022

உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.

உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.
ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழைச் சிறுவன்.
பசி அவனை வாட்டியது. அவனிடம் கையில் 10 பைசா கூட இல்லை. அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடகக் கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.
டேய் தம்பி, இங்கு கட்டி வைக்கும் குதிரைகள் அனைத்தும் களவாடப்படுகிறது.
நான் உள்ளே சென்று நாடகம் பார்த்து விட்டு வரும் வரை நீ என் குதிரையைப் பார்த்துக் கொள்கிறாயா ? நான் உனக்குப் பணம் தருகிறேன் என்று அவர் கூறினார்.
அவனும் வேகமாகத் தன் தலையை அசைத்தான். நாடகம் பார்த்து விட்டு வெளியில் வந்த பணக்காரருக்கு ஒரே ஆச்சர்யம். அந்தக் குதிரை அவருடையது தானா? என்ற ஐயப்பாடு அவருக்கு வந்து விட்டது.
அந்த அளவிற்கு குதிரையை சுத்தப்படுத்தி வைத்து இருந்தான் அந்தச் சிறுவன். பேசியதை விட அவனுக்கு 5 மடங்கு அதிகப் பணம் கொடுத்தார் அந்தப் பணக்காரர்.
மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் சிலர் வந்து அவனிடம் குதிரையை விட, அவனும் அதைப் பாதுகாத்து, சுத்தப்படுத்தி வருவாயை ஈட்டினான்.
இது ஒரு நல்ல தொழிலாக இருக்கிறதே என்று நினைத்த அவன் அந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்ய, ஒரு கட்டத்தில் குதிரை லாயமே அமைத்து, வேலைக்கு ஆட்கள் எல்லாம் போட்டு தன் பணியைத் தொடர ஆரம்பித்தான்.
நாடகத்திலும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அவன், நாடகங்களை கவனிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் அவன் மிகப் பெரிய இலக்கிய மேதை ஆகி விட்டான்.
அந்தச் சிறுவன் தான் உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்.
ஆம் நண்பர்களே

எந்தத் தொழிலையும் நேர்மையாகச் செய்து, தனக்குப் பிடித்த துறையில் உண்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 

சர்தார் வேதரத்தினம் பிள்ளை பிறந்த நாள்


 

கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி

 ‘கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி...

Vikatan
Government And Politics
Election
Published:Today at 5 AM Updated:Today at 5 AM
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க-வில், ‘வார்டுக்கு 60 லட்சம் வரை இறக்கலாம்’ என்று முடிவு செய்திருந்தன.
“கோட்டையைப் பிடித்தாலும் கோவையைப் பிடிக்க முடியவில்லையே...” என்ற ஆதங்கம் குறையாமலிருக்கிறது தி.மு.க. மறுபக்கம், கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றிய அ.தி.மு.க., தன் இடத்தைத் தக்கவைப்பதற்காக எந்த விலை கொடுக்கவும் தயார் நிலையிலிருக்கிறது. இந்த இரு கழகங்களுக்கும் இடையிலான போட்டியால், `களேபர’ களமாகியிருக்கிறது கோவை. ஐபிஎல் டீம் ஏலத்தில் கோடிகள் புரளுவதைப்போல, கோவை மாவட்டத்திலுள்ள வார்டுகளில் இரண்டு கழகங்களும் ஏலம் எடுக்காத குறையாகப் பணத்தை வாரி இறைத்திருக்கின்றன. ‘கோவையைப் பிடிப்பது யார்?’ என்கிற ரேஸில், ‘கோவை ஃபார்முலா’ என்கிற மெகா உத்தியை இரு கழகங்களும் உருவாக்கியிருப்பதுதான், உள்ளாட்சித் தேர்தலைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது!
களமிறங்கிய கரூர் டீம்... வீதி வீதியாகப் பரிசுப்பொருள்கள்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களின்போது, சில்வர் குடம், ஹாட் பாக்ஸ், வேட்டி-சேலை, பாத்திரங்கள் எனப் பரிசுப் பொருள்களை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி கொடுப்பது வாடிக்கையான விஷயம். இது ஒருவகையில் தொண்டர்களிடமும் வாக்காளர்களிடமும் அக்கட்சி மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது. இதே பரிசுப் பொருள் ரூட்டை, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க கையில் எடுத்ததுதான் அ.தி.மு.க கூடாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. கோவை மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு, உள்ளூர் உடன்பிறப்புகளின் மனக்குமுறல்களையும் மீறி, டாஸ்மாக் பார் உட்பட அனைத்து வருவாய்களையும் கரூர் வழியில் இணைத்தார். அதற்குக் காரணம் புரியாத பலரும், ‘இதற்குத்தானா?’ என இப்போது விடை தெரிந்து வாய்பிளக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பரிசுகளும் கரன்சிகளும் இறங்கிக்கொண்டேயிருந்தன. வேலுமணியின் ஃபார்முலாவான பரிசுப்பொருள் ரூட்டைவைத்தே கோவை அரசியலைச் சூடாக்கிவிட்டார் செந்தில் பாலாஜி.
நம்மிடம் பேசிய கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர், “கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றிலுள்ள வார்டுகளை நிர்வகிக்க, கரூரிலிருந்து சுமார் 1,500 பேரைக் களமிறக்கினார் செந்தில் பாலாஜி. பூத் கமிட்டி, பிரசாரக்குழு, பட்டுவாடா என தி.மு.க அமைத்த அனைத்து டீம்களிலும் கரூர்க்காரர்கள் இணைக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க-வில், ‘வார்டுக்கு 60 லட்சம் வரை இறக்கலாம்’ என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், கரூர் டீம் களத்தில் இறங்கியதால், வார்டுக்கு ஒரு கோடி என எகிறியது. முதலில் ஹாட் பாக்ஸ் விநியோகத்தை இரண்டு கழகங்களும் தொடங்கின. தேர்தல் பறக்கும் படையால், பிடிக்கப்பட்ட ஹாட் பாக்ஸுகளே மூன்று லாரிகள் பிடிக்கும் என்றால், ‘எத்தனை ஹாட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டு, டெலிவரி செய்யப்பட்டிருக்கும்?’ என்கிற கணக்கு கிறுகிறுக்க வைக்கிறது.
தேர்தல் நெருக்கத்தில், பெண்கள் வாக்கைக் கவர, வெள்ளிக் கொலுசுகளை இறக்கியது தி.மு.க டீம். சுமார் 300 கிலோ கொலுசுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த அதிரடியால் ஆடிப்போன அ.தி.மு.க-வினரும் பல இடங்களில் கொலுசுகளைக் கொடுத்தனர். ‘அவர்கள் கொடுக்கும் கொலுசு தரமில்லாதது’ எனத் தரம் குறித்த சர்ச்சை வேறு ஓடியது. கோவை வீதிகளெங்கும் கொலுசுச் சத்தம்தான்.
ஒரு ஓட்டுக்கு 40,000 ரூபாய்... ஸ்டார் வார்டான வடவள்ளி!
பெரும்பாலான வார்டுகளில் ஒரு ஓட்டுக்கு தலா 1,000 ரூபாயும், செல்வாக்கான நபர்கள் போட்டியிடும் வார்டுகளில் 5,000 ரூபாய் வரையிலும் இரண்டு கழகங்களிலிருந்தும் இறக்கினார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ‘ஆதரவு’ பெற்றவர் சந்திரசேகர். இவரின் மனைவி சர்மிளா, வடவள்ளி 38-வது வார்டில் போட்டியிட்டார். தி.மு.க-வில் பகுதிப் பொறுப்பாளர் சண்முகசுந்தரத்தின் மனைவி அமிர்தவல்லி களம் காண்கிறார். இரண்டு வேட்பாளர்களும் உறவினர்கள். மேலும், இருவருமே அந்தந்தக் கட்சியின் மேயர் ரேஸிலும் இருக்கிறார்கள். இதனால், அவர்களின் வெற்றி கௌரவப் பிரச்னையாகிவிட்டது.
இந்த வார்டில் தி.மு.க தரப்பில் 2,000 ரூபாய், ஹாட் பாக்ஸ், கொலுசு, ஆங்காங்கே வேட்டி சேலைகள் முதலில் இறக்கப்பட்டன. அதற்குப் போட்டியாக, அ.தி.மு.க தரப்பில் 3,000 ரூபாய் பணமும், கொலுசுக்குப் போட்டியாக 10 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டன. டென்ஷனான தி.மு.க தரப்பு, மேற்கொண்டு 2,000 ரூபாயை ஒவ்வொரு ஓட்டுக்கும் இறக்கியது. பதிலடியாக, அ.தி.மு.க-வும் கூடுதலாக 2,000 ரூபாய் கொடுத்தது. இப்படி இருவரும் சேர்ந்து ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் வரை கொடுத்தனர். அப்படியிருந்தும் போட்டி ஓயவில்லை.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், தி.மு.க தரப்பில் 10,000 ரூபாய்க்கான ‘QR CODE’ உடனான டோக்கன் வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே, 20,000 ரூபாய் மதிப்பிலான டோக்கனைக் கொடுத்து, போட்டியை உச்சத்துக்குக் கொண்டுபோனது அ.தி.மு.க தரப்பு. இப்படி, 38-வது வார்டில் மட்டுமே ஒரு வாக்காளருக்குச் சுமார் 40,000 ரூபாய் வரை இறக்கப்பட்டிருக்கிறது. நான்கு வாக்காளர்களைக் கொண்ட குடும்பங்களெல்லாம், 1.60 லட்சம் ரூபாய் வரை தேத்திவிட்டன. ஓட்டுப் போட்டுவிட்டு, வார இறுதி நாள்கள் என்பதால் பணம் கிடைத்த உற்சாகத்தில் குடும்பங்கள் பலவும் ஊட்டி, கேரளா என ட்ரிப் சென்றுவிட்டனர். சிலர் கடன்களைக் கட்டிவிட்டனர். 38-வது வார்டில் மட்டுமே சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் இரண்டு கழகங்களும் பணத்தை வாரி இறைத்திருக்கின்றன.
ஏ.டி.எம் ரூட்... மளிகை டு ரீசார்ஜ்!
பணத்தைக் கையில் வைத்துச் சுற்றுவது ஆபத்து என்பதால், கரூர் டீமைச் சேர்ந்த தி.மு.க-வினர், ஏராளமான ஏ.டி.எம் கார்டுகளுடன் பவனி வந்தார்கள். அந்தந்தப் பகுதியிலுள்ள ஏ.டி.எம் மையத்திலிருந்துதான் பணத்தை எடுத்தனர். கைகளில் நோட், ஹாட் பாக்ஸ் மூட்டை, கொலுசு கவர், பணத்துக்குத் தனிப்பை என ஸ்கூட்டரில் வந்த கரூர் பார்ட்டிகள், கூரியர் டெலிவரி செய்வதைப்போல வெளிப்படையாகத்தான் பட்டுவாடா செய்தனர். அ.தி.மு.க-வும் இதே பாணி பட்டுவாடாவை நடத்தியதால், பெரிதாகப் பிரச்னையாகவில்லை. சில இடங்களில் பா.ஜ.க மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தப் பரிசு மழை, பணப் பட்டுவாடா குற்றச்சாட்டுகள் மாநகராட்சியின் 38-வது வார்டோடு முடிந்துவிடவில்லை. 97-வது வார்டில், தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா போட்டியிட்டார். நிவேதாவும் மேயர் ரேஸிலிருப்பதால், அங்கும் பரிசுப்பொருள்கள் இறக்கப்பட்டன. ஹாட் பாக்ஸ், கொலுசு, வேட்டி- சேலை, இட்லி குக்கர், மூக்குத்தி என்று விதவிதமான பரிசுகளை இறக்கியது தி.மு.க தரப்பு. அந்த வார்டில், பிரசாரத்துக்கு வரும் தி.மு.க-வினருக்காக தினசரி 5,000 பேருக்குச் சமையல் செய்யப்பட்டது. இவற்றோடு, ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் ரொக்கமும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
கோவை புறநகர்ப் பகுதிகளில், டிசைன் டிசைனாகப் பட்டுவாடா நடந்தது. பொள்ளாச்சியிலுள்ள பல வார்டுகளில் இரண்டு மாதத்துக்கான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளனர் சில தி.மு.க வேட்பாளர்கள். ‘எங்களை வெற்றிபெறவைத்தால், ஆறு மாதங்களுக்கு மொபைல், கேபிள், டி.டி.ஹெச் கட்டணம் ரீசார்ஜ் செய்து தரப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளனர். ஒருசில இடங்களில் சில்வர் தட்டில் பழங்கள், ஸ்வீட்ஸ் வைத்துக் கொடுத்து, ‘என்னைத் தேர்தல்ல ஜெயிக்கவெச்சா... உங்களுக்கு எல்.இ.டி டி.வி கிடைக்கும்’ என்று அ.தி.மு.க வேட்பாளர்கள் சத்தியம் செய்ததால், வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். வாக்குப்பதிவு நடந்த சமயத்தில்கூட, இந்தப் பட்டுவாடா நிறுத்தப்படவில்லை. வடவள்ளி வாக்குப்பதிவு மையத்துக்கு அருகிலேயே ஓட்டுப் போட்டவுடன், ‘ஸ்பாட் பேமென்ட்’ வழங்கியிருக்கிறது இரு கழகங்களும்” என்றனர்.
‘கோவை ஃபார்முலா’ - ரூ.750 கோடி... கேலிக்கூத்தான தேர்தல்!
கோவையை கெளரவப் பிரச்னையாகவே இரு கழகங்களும் எடுத்துக்கொண்டதால்தான், பணம் தண்ணீராக வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “கோவை மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். கடந்தகால வாக்குப்பதிவு அடிப்படையில், இரண்டு கட்சிகளும் இணைந்து சுமார் 18 லட்சம் பேருக்கு இந்தத் தேர்தலில் பணம், பரிசுப்பொருள்களை வழங்கியுள்ளன.
வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய்க்குக் குறையாமல் இரண்டு கட்சிகளும் பணப் பட்டுவாடா செய்துள்ளன. வடவள்ளியில் வழங்கப்பட்ட தொகை இந்தக் கணக்கில் வராது. இதன்படி கணக்கிட்டாலே, 18 லட்சம் வாக்குகளுக்காக ஒரு கட்சி 180 கோடி செலவு செய்திருக்கிறது. இரண்டு கட்சிகளையும் சேர்த்தால், 360 கோடி ரூபாய் செலவு கணக்காகிறது. பல வார்டுகளில் போட்டி கடுமையாக இருந்ததால், அதிகபட்சம் 5,000 ரூபாய் வரைகூடக் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தொகையையும் கணக்கிட்டால், பணப் பட்டுவாடாவுக்கு மட்டுமே இரண்டு கழகங்களும் சேர்ந்து 500 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளன. இது தவிர ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுப்பொருள்கள், பிரசாரம், கூட்டச் செலவுகள் என அனைத்தையும் கணக்கிட்டால் கோவை மாவட்ட பட்ஜெட் மட்டுமே 750 கோடியைத் தாண்டிவிடுகிறது” என்று அதிரவைத்தார்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் நான்கு முறை மாற்றப்பட்டுவிட்டார். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, கோவைக்குச் சிறப்புத் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டார். இத்தனை குஸ்திகளையும் மீறி வெற்றிபெற முடியாவிட்டால், பரஸ்பரம் கட்சிகளிலிருந்து வெற்றிபெற்றவர்களைக் குதிரைப் பேரம் செய்து இழுக்க, இரண்டு கழகங்களுமே திட்டமிட்டுள்ளன. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அதற்கான புராஜெக்ட் ரேட் பல கோடிகளைத் தாண்டிவிடும் என்கிறார்கள் விவரமறிந்த சீனியர் கட்சிக்காரர்கள்.
2009-ம் ஆண்டு திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்கிற வித்தையை அறிமுகப்படுத்தினார் மு.க.அழகிரி. இந்த வித்தையால் தொகுதியை தி.மு.க வசப்படுத்தியது. தொடர்ந்து, கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் அழகிரிக்கு வழங்கப்பட்டது. அதே பாணியிலான, ‘கோவை ஃபார்முலா’ வித்தையைத் தற்போது இரு கழகங்களும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. 2,000 ரூபாய் என்றிருந்த ஒரு வாக்கின் ‘விலை’யை தற்போது 40,000 வரை உயர்த்தி ‘சரித்திர சாதனை’யைப் புரிந்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கின்றன இரு கழகங்கள்!
இந்தப் பணப் பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ‘கோவை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டவை’ என்றும் கூறியிருக்கிறது.
‘பணமும், அதிகாரமும், பொய்யான வாக்குறுதிகளும்தான் அரசியல்’ என நிறுவ முயலும் இரு கழகங்களின் உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை!

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Thursday 24 February 2022

புத்திசாலித்தனம்.

 புத்திசாலித்தனம்.

நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்.
மேலே உள்ளது எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதே. நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது
அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் பல பேர், அவர்களில் வால்ட் டிஸ்னியும் ஒருவர். அவரின் வாழ்வில் நடந்த திருப்பு முனை பற்றிக் காண்போம்.
வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்."ஆஸ்வால்ட் "என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார், நன்கு சம்பாதித்தார்.ஆனால் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து விட்டனர்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் பணிபுரிந்த ஓவியர்கள் அனிமேஷன் நிபுணர்கள் இப்போது அவர்கள் பக்கம்.
இதனால் மனம் நொந்து வெகுநேரம் புலம்பிய வால்ட் டிஸ்னி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் "நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம் ... அவர்கள் என் படைப்பை பறித்து விடலாம், ஆனால் என் கற்பனைகளை எதுவும் செய்ய முடியாது. ஆஸ்வால்ட் பதிலாக அதைப் போலவே வேறொரு இன்னொரு வெற்றிகரமான கதாபத்திரத்தை உருவாக்குவேன்"என்று உறுதியாக நினைத்தார்.
புதிய அனிமேஷன் கதாபாத்திரங்களை நினைத்து கடைசியாக அவரின் செல்லப் பிராணி ஒரு எலி "மார்டிமெர் " அதை மனதில் நினைத்து அதை வரைந்து அதற்கு மனிதரைப் போல் பான்ட்,சட்டை எல்லாம் போட்டு அசத்தலாக வரைந்தார்.
அதை தன் மனைவியிடம்(லில்லியன்) காண்பித்ததும் அவர் வாவ் என்று துள்ளிக் குதித்தார். கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்டார் லில்லியன் "மார்டிமெர்" என்று சொன்னார் வால்ட் டிஸ்னி.
அதற்கு லில்லியன் "பெயர் நீளமா உள்ளது வேற பேர் வைப்போம்"னு சொன்னார்."சரி ஒரு நல்ல பேர நீயே சொல்லு"னு சொன்னார் டிஸ்னி. அதற்கு அவர் மக்கள் மனசுல எப்பொதும் நிக்கணும் அதனால் "மிக்கி " னு ஒரு பேரச் சொன்னங்க அந்த மிக்கிதான் இப்ப உலகத்தையே கலக்கிய "மிக்கி மௌஸ்" கதாபத்திரம்.
சந்தர்ப்ப சூழ்நிலையோ பெரிய பிரச்சனையோ வரும்போது தான் நமக்குள்ள இருக்குற அலாதியான பல திறமைகள வெளிபடுத்துது. நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஆளுமையின் அடையாளம்


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை எண்பதாம் ஆண்டில் தடம் பதிக்கும் அருமை அண்ணன், ஆன்மிக அறப்பணிகள் செய்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர், நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டி, பழகுவதற்கு இனியவர் நேமத்தான்பட்டி
எஸ்வி. சிதம்பரம் அவர்கள்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
இவர்களது இல்லத்தரசியார் வசந்தா சிதம்பரம் அவர்கள் மேனாள் பேரூராட்சி தலைவர் என்பது கூடுதல் சிறப்பு.
வாழிய நற்குடும்பம்.
வாழிய தம்பதியர் - மனிதத்தேனீ


Wednesday 23 February 2022

பொறுமை என்னும் மருந்து.

 பொறுமை என்னும் மருந்து.

இந்த அவசரமான உலகினிலே யாவும் மிகவும் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். கடவுளிடம் நமது துன்பங்களைச் சொல்லி, பிரார்த்திக்கும் பொழுதும், கடவுள் நமது வேண்டுதலைக் கேட்டு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பொறுமை என்பது மருந்துக்கும் கூடக் கிடையாது.
ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி. என்னைப்போல, ஒரு நாள் இருவரும் காட்டுக்கு பனங்காய் பொறுக்கச் சென்றனர். இருவரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்பட்டு பனங்காய் பொறுக்கி, அவற்றை இரு பகுதிகளாகப் பிரித்தனர். அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் பனங்காய்களைப் பெட்டியில் வைத்து அதை தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயினர்.
சிறிது தூரம் நடந்து
சென்றவுடனேயே, பனங்காய்ப்பெட்டி, பாரமாக இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டே நடந்தார் அண்ணன். ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந்தது, ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளிதாக நடந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியிடம், உனக்கு பனக்காய்ப்பெட்டி பாரமாக இல்லையா? என்று கேட்டார். அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பாரமாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அப்படியா! அந்த மூலிகை இலை என்ன வென்று சொன்னால் நானும் எனது சுமையில் வைத்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன். அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் "பொறுமை" என்றார் தம்பி.
அந்தத் தம்பி சொன்னது போல‌. வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடையூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று பொறுமையுடன் நடந்தால் வாழ்வில் வெற்றியை அடையலாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வைத்தியநாத அய்யர் நினைவைப் போற்றுவோம்


 

Tuesday 22 February 2022

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர், சிறந்த உழைப்பாளி, ஆன்மிக இலக்கிய ஆர்வலர், தமிழ் உணர்வாளர் அண்ணன்
பி. பன்னீர்செல்வம் அவர்கள்.
தனது 70 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செனாய் நகரில் உள்ள தாணுமலையான் அறக்கட்டளையின் மதுரை மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் திருமதி ரோஜா அவர்களுடன் பங்கேற்று இன்று காலை உணவு வழங்கினார்.
விழாவில் மனிதத்தேனீ, தியாக தீபம் அ. பாலு, கனகமகால் ரெ. கார்த்திகேயன், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், இல்ல மேலாளர் முருகப்பன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.








மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 73 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், பாங்க் ஆப் மதுரையில் உயர் நிலை அலுவலராகப் பணியாற்றிய பண்பாளர், பணி நிறைவுக்குப் பிறகு பல்வேறு தளங்களில் ஆதரவற்றோர் மற்றும் பயனாளிகளுக்கு நாள்தோறும் பேருதவி புரியும் மனிதநேயர், நேர்வழி நின்று தான் பிறந்த குடும்பத்திற்கும் ஊருக்கும் சிறப்புச் சேர்த்திடும் பேருள்ளம், இரண்டு வாட்சாப் குழுவின் அட்மின் எனப் பன்முகப் பேராற்றல் மிக்க
தேவகோட்டை ஏ என் எஸ் என அன்புடன் அழைக்கப்படும்
அண. சோமசுந்தரம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ