Thursday 30 June 2022

காலம் மாறும்.

 காலம் மாறும்.

எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை. ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.
உயர்ந்த இலட்சியங்களை அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை.
நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்.. நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை.
காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான் புத்திசாலித்தனம்.
நீங்கள் மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசுங்கள். அதற்காக கொட்டித் தீர்த்து விடாதீர்.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விஷயங்களை அமைதியாகச் செய்யுங்கள். வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டுப் பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உங்களை நீங்கள் அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனியுங்கள்.
மற்றவர்களை நீங்கள் அறிய வேண்டுமாயின், உங்களை நீங்கள் கவனியுங்கள்.
துன்பங்கள் என்பது மனித வாழ்வில் சில நேரங்களில் சந்திக்கக் கூடியது. இப்படி நேர்ந்து விட்டதே என்று துவண்டு போகாமல், அதைச் சமாளிக்கும் மனத் தைரியத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த முடியாத செயலாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை.
நம் வாழ்வில் ஏதாகிலும் நெருக்கடி நிலையைச் சந்திக்கும் போது நிதானமாக யோசித்தால் கண்டிப்பாக அதற்குத் தீர்வு புலப்படும்.
என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ.? என்று அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் துன்பம் என்னும் சூழலில் சிக்கித் தவிப்பவர்களாய் நாம் ஆகி விடுவோம்.
ஆகவே எந்த நெருக்கடி வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல்பட்டால் நம்மால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வாழிய பல்லாண்டு


 

Wednesday 29 June 2022

அறிவின் வெளிச்சம்.

 அறிவின் வெளிச்சம்.

நிம்மதி எங்கே இருக்கிறது.
ஒரு மனிதன்
எந்தக் குறையும் இல்லை அவனுக்கு
ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.
படுத்தால் தூக்கம் வரவில்லை.
சிரமப்பட்டான்
அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்
பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு
அங்கே ஒரு பெரியவர் இருக்கார்
போய்ப் பாருங்கள்!"
ஆசிரமத்துக்குப் போனான்
பெரியவரைப் பார்த்தான்
ஐயா
மனசுலே நிம்மதி இல்லே
படுத்தா தூங்க முடியலே!
அவர் நிமிர்ந்து பார்த்தார்
தம்பி
உன் நிலைமை எனக்குப் புரியுது
இப்படி வந்து உட்கார்!
பிறகு அவர் சொன்னார்:
உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது..
தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!
அது எப்படிங்க?
சொல்றேன்
அது மட்டுமல்ல
மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!
ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!
புரிய வைக்கிறேன்.
அதற்கு முன் ஆசிரமத்தில்
விருந்து சாப்பிடு.
வயிறு நிறையச் சாப்பிட்டான்.
பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,
இதில் படுத்துக்கொள் என்றார்.
படுத்துக் கொண்டான்
பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.
கதை இதுதான்
ரயில் புறப்படப் போகிறது.
அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை
ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.
ரயில் புறப்பட்டது
தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை.
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?
இறக்கி வையேன்.
அவன் சொல்கிறான்:
வேணாங்க!
ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!
என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'
பெரியவர் கதையை முடித்தார்.
படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்*
ஏன் சிரிக்கிறே?
பைத்தியக்காரனா இருக்கானே.
ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?
அது அவனுக்கு தெரிய வில்லையே
யார் அவன்? இயல்பாக கேட்டான்
நீதான்!
என்ன சொல்றீங்க?
பெரியவர் சொன்னார்
வாழ்க்கை என்பதும் ஒரு ரயில்
பயணம் மாதிரிதான்.
பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்
நிம்மதியாக வாழமுடியாது.
தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!
அவனுக்கு தனது குறை மெல்லப்
புரிய ஆரம்பித்தது...
சுகமாக தூக்கம் வந்தது.
தூங்க ஆரம்பித்து விட்டான்.
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
எழுந்திரு" என்றார்
எழுந்தான்
அந்தத் தலையணையைத் தூக்கு! என்றார்
தூக்கினான்.
அடுத்த கணம்ஆ"வென்று அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது
ஐயா! என்ன இது?
உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு
அப்படி இருந்தும்
நீ நிம்மதியாய்
தூங்கி இருக்கிறாய்.
அது
அது எனக்குத் தெரியாது
பாம்பு படுக்கை பக்கத்தில் இருந்த ரகசியம்
உன் மனசுக்குத் தெரியாது.
அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்
அவன் புறப்பட்டான்
நன்றி பெரியவரே.
நான் போய் வருகிறேன்
நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா
புரிந்து கொண்டேன்
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது
அறிவின் வெளிச்சத்தால்
அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
-கவியரசு கண்ணதாசன்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 28 June 2022

கவனத்தில் கொள்வோம்.

 கவனத்தில் கொள்வோம்.

வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்.
முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்.
குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!
மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!
அடிமையாகும் அளவிற்கு அன்பைச் செலுத்தாதீர்கள்!
சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!
அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!
பழிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்!
மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!
கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்.
நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு.. நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு.
நேரங்கள் நேர்மையானவை. அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை.
ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 27 June 2022

மாநகர் மதுரையில் பிஎஸ்ஆர்எம் எண்டர்பிரைசஸ் திறப்பு விழா.

 மாநகர் மதுரையில் பிஎஸ்ஆர்எம் எண்டர்பிரைசஸ் திறப்பு விழா.

மதுரை மாட்டுத்தாவணி - புதூர் 120 அடி சாலையில் இன்று காலை நமது அருமைச் சகோதரர், நாநயா அமைப்பு 1987 இல் தொடங்கிய காலம் தொட்டு நம்முடன் பயணப்படும் நண்பர், காரைக்குடியில் பெரும் நிதி மேலாண்மை நிறுவனம் நடத்தும் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிஎஸ்ஆர்எம். ராமசாமி அவர்களின் மூத்த மகன்
ராம. அண்ணாமலை மற்றும் அவரது மாமனார் ஆவினிப்பட்டி
எம். லெட்சுமணன் இருவரும் இணைந்து தொடங்கியுள்ள
தி பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோர் எனும் உலகத்தரமான மெத்தைகள், தலையணை, பெட்ஷீட், மோடா உள்ளிட்டவற்றின் பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய நிறுவனம் மேன்மை பெற்றிட வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ.
அருகில் காரைக்குடி
க. அழ. ராம. அழகப்பன், சொக்கலிங்கம் புதூர்
தெ. சுப்பிரமணியன் (சிங்கப்பூர்), தொழிலதிபர் கண்டரமாணிக்கம்
கேஆர். தியாகராஜன், மற்றும் அவர்கள் குடும்பத்தினர், அவரது இளைய மகன் ராம. ராமசாமி உள்ளனர்.
வளரட்டும் புதிய நிறுவனம்.






பள்ளத்தூர் நகர சிவன் கோவில் ஆனி 9ஆம் (தேர் திருவிழாவை) முன்னிட்டு, பள்ளத்தூர் நகரத்தார் இளைஞர் வளர்ச்சி குழுவினர்கள் வழங்கும் மாபெரும் பட்டிமன்றம்


 

மதுரைமணி 25.06.2022 பக்கம் 3


 

வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம்.

 வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம்.

சில மணித்துளிகள்தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதை காவனமின்றி விட்டுவிடக்கூடாது. மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்...
மணித்துளிகள்தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளை பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்.
சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும்போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும மெத்தனமாகப் பேசும்போதும் கேட்பவர்கள் எரிச்சல் அடைவார்கள்.
சில நேரங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன...? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரடியாகக் கேட்டுவிடுவார்கள். தமது தேவையை ஒரு வரியிலோ ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் என்ன சாதிக்கப் போகிறார்...? அத்தோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது.
நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப்படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிகட்ட பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது.
தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்...
நேரத்தின் பெறுமதியை பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
🔹 தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டில் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 வாராந்திர நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 தொடருந்தைத் தவறவிட்ட பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி என்னவென்று புரியும்...!
🔹 விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்ன என்று புரியும்...!
🏀 ஓட்டப் பந்தயத்தில் தோல்வி அடைந்தவர்களை கேட்டுப் பாருங்கள், ஒரு வினாடியின் அருமையை.
குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள்.
இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய்விடும்.
இத்தோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம் இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது.
வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாக பயன்படுத்துவதுதான். இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்து இருக்கிறது என்று நமக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வோம்...? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து விரைந்து செய்து முடிப்போம் அல்லவா...?!, ஆனால்!, உண்மை என்னவென்றால்நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை,ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு மணித் துளியிலும் காத்து இருக்கிறது.
ஒவ்வொரு விநாடியிலும் காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், சமுதாயத்திற்கு நன்மை தரும் வகையில் கழிப்பது கடமையாகும். வேலையைச் சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்ய வேண்டும்.
இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.
இன்று!, உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உள்ளத்தில் ஒன்றும்,

 உள்ளத்தில் ஒன்றும்,

உதட்டில் ஒன்றுமாக, இருப்பவர்களின் உறவை
நாட வேண்டாம்.
இடம் பொருள் ஏவல் அறிந்து, பிறருக்குப் பயன்படுமாறு பேசுங்கள். எலும்பே இல்லாத நாக்கினால் பல இதயங்கள் நொருக்கப்படுகின்றன.
பேச நேரமில்லை என்பவரை நம்பி உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். அவர் பேச நினைக்கும் நபர் நீங்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கோபப்படும் இடங்களில் மனிதர்களைத்
தவறவிடுகிறோம். கோபப்படாத இடங்களில் மனதால் உயர்கிறோம்.

தெரிந்ததும் தெரியாததும்.

 தெரிந்ததும் தெரியாததும்.

நம்மவர்களுக்கு தெரியாததைச் சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா?, தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை.
தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அழகிற் கேடாம், இழிவாம், அவமானமாம், மானக்கேடாம்...!
ஆனால்!, இப்படி இல்லவே இல்லை.எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யைப் பல்லாண்டுகளாகக் கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர்.
அறியாமை வெட்கப்பட வேண்டியதல்ல; அதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது.
பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
வாழ்க்கை என்பது அனுபவங்களானது. ஒவ்வொரு மணித்துளிகளும் நாம் கற்றுக் கொள்ளவும், வருவதை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கையாகும்.
ஆகவே!, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், எல்லாவற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால்!, அப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அவசியமுமில்லை. அப்படி இருக்கவும் முடியாது.
நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம். தெரியாததை தெரியாது என்போம். இது தவறொன்றும் இல்லை. அவமானமில்லை.
நம்மால் செய்ய முடிகின்ற செயலை முடியும் என்போம். முடியாததை என்னால் இயலாது என்போம்.
அப்படி ஒப்புக்கொள்வது என்பது மோசமான தன்மை அல்ல, நேர்மையான பண்பாகும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்


 

இன்று பிற்பகல் திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் தரிசனம். காலை முதல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் அருணாசலேஸ்வரர் திருக்கோவில். - மனிதத்தேனீ

 




மணிவிழாத் தம்பதியர் வாழியவே. இன்று மதியம் விருந்து சிவனடியார்களுக்கு வழங்கி ஆசி பெற்ற சித. சிதம்பரம் - உமா.

 



திருவண்ணாமலையில் நாளை காலை நடைபெறும் எனது இளைய சகலை, சாம்ப் ஸ்டூடியோ மற்றும் செட்டிநாடு கிச்சன் உரிமையாளர் கோட்டையூர் சித. சிதம்பரம் - உமா மணிவிழா. இன்று வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்த மேனாள் நகராட்சி சேர்மன், திமுக மூத்த தலைவர் ஸ்ரீதர், அவரது திருமகன், மக்கள் மருத்துவர் பிரவீன் , மணியகாரர் செந்தில், ஜேசி சர்வதேச பயிற்சியாளர் கதிரேசன், கோட்டையூர் ராம. வீரப்பன் மற்றும் சிதம்பரம் குடும்பத்தினருடன் மனிதத்தேனீ. வாழிய மணிவிழாத் தம்பதியர்.



 

மாநகர் மதுரையில் இன்று காலை தொடங்கியது வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி.

 மாநகர் மதுரையில் இன்று காலை தொடங்கியது வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி.

இன்று காலை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகச் சிறப்பாக வெள்ளாளர் முதலியார் தொழில் வர்த்தக கண்காட்சி அதன் தலைவர் விஷால் டி மார்ட் மற்றும் அதன் குழுமங்களின் சேர்மன், அருமை இளவல்
ஆர். இளங்கோவன்
தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டில் தொடங்கியது.
இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராளமான மதுரையில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்றுள்ளன.
பல்லாயிரம் பார்வையாளர்கள் முதல் நாளே வருகை தந்தது கூடுதல் சிறப்பு.
இன்று காலை நாம் சென்ற போது அனைத்து நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் வரவேற்று நிறுவனங்களின் சிறப்பினை எடுத்துரைத்தனர்.
அம்மா செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் அண்ணன் முத்துராமலிங்கம், கலைஞர் தொலைக்காட்சி மூத்த செய்தியாளர், ஊடகத்துறையில் கடுகளவும் களங்கமின்றிப் பயணிக்கும் நேர்மையாளர் எம் . சுவாமிநாதன், மடீட்சியா மேனாள் செயற்குழு உறுப்பினர், பாண்டியன் ஊறுகாய் கந்தசாமி, சைபால் சண்முகசுந்தரம், யுவர்ஸ் பப்ளிசிட்டி முருகன், கே கே நகர் கற்பக விநாயகர் திருக்கோயில் பொருளாளர் என். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பண்பாட்டின் மேன்மையை கண்டு மகிழ்ந்த தருணம் - மனிதத்தேனீ















Saturday 25 June 2022

மாலை முரசு 25.06.2022 பக்கம் 4


 

மதுரையில் செட்டிநாடு வர்த்தகக் கண்காட்சி தொடங்கியது.

 மதுரையில் செட்டிநாடு வர்த்தகக் கண்காட்சி தொடங்கியது.

நாணயமும் நா நயமும் நிறைந்த நகரத்தார் சமூகத்தின் தொழில் வணிகத் திருவிழா இன்று காலை மடீட்சியா ஏசி அரங்கில் தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இன்றே பத்தாயிரம் பேர் வருகைதந்து பேராதரவு நல்கி வருகின்றனர்.
நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் அன்புச் சகோதரர் ராமநாதன் தலைமையிலான குழுவினர் நேர்த்தியான முறையில் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
105 அரங்கிற்கும் சென்ற போது அனைவரும் வரவேற்று தங்கள் நிறுவனத்தின் சிறப்பினை எடுத்துச் சொன்னது நெகிழ்வாக இருந்தது.
கிளாசிக் புட்ஸ் எஸ். ஆதப்பன், லெட்சுமி செராமிக் மேலாளர் பழனியப்பன், பால்வி வீரப்பன், தம்பி கேட்டலிஸ்ட் ராம்குமார் சிங்காரம், மகளிர் சங்கத்தின் முன்னோடிகள், இன்னோவேடிவ் அண்ணாமலை, ஏவிஎம் சந்துரு, ஏஎல். பெரியகருப்பன், ஆர்கிடெக்ட் லெட்சுமணன், அரவிந்த் ஸ்நாக்ஸ் திண்ணப்பன், குறிச்சி சபா. மணிகண்டன், கே ஆர். ஞானசம்பந்தன், வி. சீனிவாசன், ஐயப்பன், அண்ணன் சாத்தப்பன், தொண்டர் சொக்கலிங்கம்,ராஜா முத்தையா மன்றத்தின் மேலாளர் பழனியப்பன், ரோட்டரி மேனாள் ஆளுநர் சைபால் சண்முகசுந்தரம், யுவர்ஸ் பப்ளிசிட்டி முருகன் உள்ளிட்ட பெருமக்கள் சந்தித்து கண்காட்சியைப் பார்வையிட்டு புதிய மேலாண்மைக் களம் கண்ட மகிழ்வான தருணம் இன்று.
வாழிய தொழில், வணிகம் நிறுவனங்கள். - மனிதத்தேனீ