Friday 29 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கோரானோ எழுப்பி விட்ட
சௌராஷ்ட்ரா சமூக எழுச்சி...!
அன்புடையீர், வாழிய நலம்.
உலகம் முழுவதும், கடந்த 60 நாட்களில்
ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண
பேரிடர் சூழலில், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்
போட்டுள்ள சூழ்நிலை இன்று...
பரந்து விரிந்துள்ள இப்புவியெங்கும்
வாழும் நம் சௌராஷ்ட்ரா சமூகத்தார்
தங்கள் மனதில் இயல்பிலேயே
ஈரநெஞ்சம் படைத்தவர்கள்,
ஈகைகுணம் நிறைந்தவர்கள்
என்பதை இப்பேரிடர் காலத்தில்
தங்கள் சேவை மூலம் செயல் வடிவில்
நிரூபித்து வருகிறார்கள்...
ஆம், இப்பேரிடர் காலத்தில்
தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிப்பவர்களின் தேவையறிந்து,
அவர்களை ஆறுதல்படுத்தும்
விதமாக, தமிழ்நாடு
முழுவதும் 72 ஊர்களில் உள்ள
சௌராஷ்ட்ரா சமூக ஸ்தாபனங்கள்,
சௌராஷ்ட்ரா பெருமக்களின்
குடும்பத்தினரை நேரில் சந்தித்து,
அவர்களுக்கு அத்தியாவசமாக தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பலசரக்கு, முகக்கவசம், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் என்று
வளரும் தலைமுறையும்,
வளர்ந்த தலைமுறையும்
சமூக ஸ்தாபனங்களுடன்
கைகோர்த்து இணைந்து நின்று மக்களுக்கு நிவாரணம் வழங்கி,
களப் பணி ஆற்றியது
அளப்பரிய பணியாகும்...
மறுபுறம், மாதக்கணக்கில்
வகைவகையான
உணவுகளை சமைத்து
"பகல் நேரத்தில்' மட்டும் அல்ல,
"இரவிலும்" அன்னதானம் வழங்கும் பணி இன்றும் சில பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
தமிழ்நாட்டில்
தன்னெழுச்சியாக நடைபெற்ற
"ஜல்லிக்கட்டு'
போராட்டம் போல,
அனைத்து ஊர் சபைகளும்,
சமூக ஸ்தாபனங்களும்,
சமூகப் பிரமுகர்களும்,
"கோரானோ கோபித்துக்
கொண்டாலும் பரவாயில்லை"
என்று தன்னெழுச்சியாக தங்கள் உயிருக்குக் கூட கவலைப்படாமல்,
தன் சக மனிதனின் வயிற்றுக்கு
சோறிட வீதியில் இறங்கி,
சேவை செய்த இவர்கள் தான்
நம் சமூகத்தின் இன்றைய
காவலர்கள். நம் சமுகம் என்றும் நன்றியுடன் அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும்...!
அன்பும், கருணையும்
என்கின்ற ஈரப்பசை
அவர்கள் நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகின்றது...!
இதுதான் நம் சமூகம்...!
இது தான் நமக்கு
சொந்தமான கலாச்சாரம்...!
சௌராஷ்ட்ரா சமூகக் கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு வழக்கம் உண்டு.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும்
பெருமாளை வணங்கி, நாலு வீட்டில்
"பிட்ஷை" வாங்கி, தங்கள் வீட்டில் சமைத்து, அடியவர்களை அழைத்து,
இறைவன் பெயரில் அன்னதானம் நடத்துவார்கள்.
அதேபோல் இன்று, இந்த பேரிடர் காலத்தில், தங்கள் தொழில், வியாபாரம், வருமானம் பாதித்த வேளையிலும்,
நாலு பேருக்கு உதவ, தங்கள் கைப்பொருளை தானமாக வழங்கி,
அந்த உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்கிய பண்பாட்டைக் கண்டு
இன்று உலகம் வியக்கிறது...!
கோரானோ வைரஸுக்கு
"ஜீன் மாறிக்கொண்டே இருக்கிறது"
என்று மருத்துவ உலகம்
சொல்லிக்கொண்டு இருக்கிறது.
அதேநேரத்தில்
சௌராஷ்ட்ரா சமூகமே இன்று திரண்டு நின்று, தன் சக மனிதனின் பசியை போக்க, தன்னலமற்ற சேவையின் மூலம் பல வகைகளில் உதவிகள் பல புரிந்து, தங்களுடைய இயல்பில், தங்கள்
சமூகக் கலாச்சார பாரம்பரியம் ,
பண்பாடு என்பது தங்கள் உதிரத்தில்
கலந்த ஒன்று, தங்கள்
"ஜீன் மாறாமல் அப்படியே இருக்கிறது"
என்பதை இந்த மானிட உலகம் சொல்லும் வகையில் சௌராஷ்ட்ரா சமூகம் பெயர் வாங்கி விட்டது....!
இப்பேரிடர் காலத்தில், தங்களையும்
இந்த சமுதாயம் கவனிக்காத என்று தவித்த "திருநங்கையர்களையும்" தங்கள் சக மனிதர்களாக கருதி, அவர்களுக்கும் நம் சமூகத்தாரல் அத்தியாவசிய பொருட்கள்
பரிவோடு வழக்கப்பட்டது.
ஓர் இளைஞர் குழுவால், திருப்பரங்குன்றத்தில்
பறவையினங்களுக்கும்,
விலங்குகளுக்கும் அவர்களுக்கான
உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த சேவைகள் எல்லாம்
இறைவனுக்கு செய்யும்
சேவையாகக் கருதி செய்தனர்...
இப்படி, இது பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. எழுதுகிறேன்...
உயிருக்கு துணிந்து நடைபெற்ற
இச்சங்கமங்களின் செயல்பாடுகள், சம்பவங்கள் இதம்...இதம்...!
"ஜல்லிக்கட்டு" தமிழர்களின்
உணர்வுகளை எழுப்பி,
எழுச்சி ஊட்டியது உண்மை என்றால்
"கோரானோ' சௌராஷ்ட்ரா மக்களின்
இயல்பான உணர்வுகளை தட்டி எழுப்பி,
தன் சக மனிதனின் துயர் துடைக்கும்
பண்பையும், துடிப்பான இளைஞர்களையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளது உண்மையே..!
"ஜல்லிக்கட்டு' உலகமக்களின்
நெஞ்சில் நீங்க இடம்
பெற்று விட்டது போல,
கோரானோவின் போது
ஒருவருக்கொருவர்
சளைத்தவர்கள் இல்லை
என்னும் வகையில்
தன்னெழுச்சியாக
பொதுநலப்பணி செய்து வரும்
சமூக ஊர் சபைகளும்,
சமூக பொது ஸ்தாபனங்களும்,
சமூக கல்வி ஸ்தாபனங்களும்,
சமூகப் பிரமுகர்களும்,
களப்பணி இளைஞர்களும்,
முன் பணியாற்றுவோர்க்கு
பின்புலமாக இருந்து
சேவை செய்பவர்களும்,
நன்கொடையாளர்களும்,
உழைப்பாளர்களும்,
சமூக மக்களின் நெஞ்சில்
நீங்கா இடம் பெற்று விட்டனர்...
காலம் அவர்களை நிச்சயம்
அடையாளம் காணும்,
அடையாளப்படுத்தும்...!
நம் குலம் மேம்பட,
நலம் நாளும் வசப்பட
நம் சமூக ஒற்றுமையே
தாரக மந்திரமாகட்டும்.
தரணி எங்கும் நம் இனம் அறப் பணிகளால் உயர்ந்து நிற்கட்டும்...
தனி மனித மாற்றமே
நம் சமுதாயத்தின் மாற்றம்...!
வாழிய கொடையுள்ளங்கள்...
இன்பமே எந்நாளும் துன்பமில்லை...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
~எஸ்.ஜெ. ராஜன், மதுரை.
நன்றி: மனிதத்தேனீ

No comments:

Post a Comment