Thursday 28 May 2020

வியட்நாமில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

வியட்நாமில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த கலாச்சார உதாரணமாகும் என்று கூறியுள்ளார்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிக்கையின்படி, ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு, வளாகத்தில் இரண்டு தனித்தனி குழுக்களாக கோயில்களை மீட்டெடுத்துள்ளது, இப்போது மூன்றாவது குழு கோவில்களில் வேலை செய்து வருகிறது.
நன்றி ராஜப்பா தஞ்சை
Nachiappan Palaniappan, Krishna Raman and 3 others
1 comment
Like
Comment
Share

No comments:

Post a Comment