Thursday 29 September 2022

மாநகர் மதுரையில் தி மு க நகர் மாவட்டச் செயலாளராக மீண்டும் பெரும் ஆதரவுடன் தேர்வாகியுள்ள நமது அன்புச் சகோதரர்,

 மாநகர் மதுரையில் தி மு க நகர் மாவட்டச் செயலாளராக மீண்டும் பெரும் ஆதரவுடன் தேர்வாகியுள்ள நமது அன்புச் சகோதரர்,

ஆற்றல் மிக்க செயல் மறவர், தி மு க வில் தடம் புரளாத ஐம்பது ஆண்டுகால பணிக்கு வலிமையாக இருப்பவர் எங்கும் எப்போதும் தான் சார்ந்த இயக்கத்தை விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் மற்றவர்களையும் மதிக்கும் மண்ணின் மைந்தர்,
தனது தந்தையின் அரசியல் நீட்சியாக தொடரும் பண்பாட்டுப் பெருமகன்
எங்கள் இனியவர்
கோ. தளபதி
அவர்களின் பணி சிறக்கட்டும்.
தமிழக முதல்வரின் சிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கட்டும்.
வாழிய மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்
கோ. தளபதி வாழியவே.
அன்புடன் - மனிதத்தேனீ



கற்கும் கலையும் கவனிக்கும் கலையும்.

 கற்கும் கலையும்

கவனிக்கும் கலையும்.
கேள்விகளில் மிகச் சிறந்தது, எது என்றால், “நான் யார்” என்பதே. இந்தக் கேள்வி ஒருவனை ஆட்கொள்ளும் பொழுது, அவன் மனம் வெறுமையாக்கப்பட்டு, அவனது வாழ்க்கை என்னும் புத்தகத்தை கவனத்துடனும், பொறுமையுடனும் படிக்கிறான்.
மனித சமுதாயத்திலும், அதன் அமைப்பிலும் அடிப்படையான மாறுதல் கொண்டு வர ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கை புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
அவ்வாறு படிக்கத் தொடங்கும் போது, தான் இதுவரை உலகியல் சுற்றுச் சூழலோடு இயங்கி வந்ததை உற்று நோக்குகிறான்.
இனிமேல் உலகத்தோடு இயங்கப் போவதையும் கவனத்தோடு கவனிக்கிறான். கவனிக்கும் கலையுடன், கற்கும் கலையும் உருவாகிறது.
உங்களுடைய சுய சிந்தனை, ஏற்கனவே மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப்பட்டவைகளை மறுபரீசிலனை செய்யவோ அல்லது அழிக்கவோ செய்யும்.
இப்பொழுது உங்களை நீங்கள் உங்களுக்குள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைப் பற்றி உணர்ந்து கொள்கிறீர்கள்.
உங்களுக்குப் புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகி விடும். அப்பொழுது ஒரு புதிய மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படும். அது உங்களை வேறுவிதமான தன்மையில் இயங்க வைக்கும்.
ஏனெனில் உங்களிடம் உண்மை பிறந்து இருக்கிறது.
ஒரு ஆட்டு மந்தையில் ஒரு பெண் சிங்கம் நுழைந்தது. பயந்து போன ஆடுகள் சிதறி ஓடின.தாய்மை நிலையில் இருந்த அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை பெற்றுப் போட்டு விட்டு இறந்து போனது.
தாயை இழந்த சிங்கக் குட்டிக்கு ஆட்டுக் கூட்டம் அடைக்கலம் தந்து பாலூட்டி வளர்த்தன.
ஆட்டுப் பாலைக் குடித்தும், புல் தின்றும், ஆடுகளோடு விளையாடி மே… மே… என்றும் கத்தியது.
வீரமும், கர்ஜனையும் மறந்து செம்மறி ஆடாகவே தன்னை எண்ணி வந்தது.
ஒரு நாள் ஒரு சிங்கம் ஆடுகளை வேட்டையாட வந்தது.எல்லா ஆடுகளும் பயந்து ஓடின.
கூடவே குட்டிச் சிங்கமும் பயந்து ஓடுவதைக் கண்டது. வேட்டைச் சிங்கம் வேட்டை ஆடுவதை விட்டு விட்டு தன்னைப் போலிருந்த குட்டி சிங்கத்தை மட்டும் துரத்திப் பிடித்தது.சிங்க ஆடு நடுங்கியது.
அதைப் பார்த்து சிங்கம் கேட்டது, ''நீ ஏன் என்னைக் கண்டு பயந்து ஓடுகிறாய், நீயும் என்னைப் போல வலிமையான என் இனம் அல்லவா?
சிங்க ஆடு மே.. மே… என்று கத்தியபடி பதில் சொன்னது,“நான் செம்மறி ஆடு தானே…நான் எப்படி சிங்கமாவேன்” என்றது.
தான் ஒரு சிங்கம் என்பதை அதற்கு உணர்த்த அந்தக் காட்டில் இருந்த ஒரு குளத்தின் அருகே இழுத்துச் சென்றது பெரிய சிங்கம்.
இதோ பார் நீயும் சிங்கம், நானும் சிங்கம் தெரிகிறதா?” என்று கோபமாக கர்ஜித்துக் கொண்டே அதன் தலையைத் தண்ணீரில் தெரியும்படி கவிழ்த்துக் காட்டியது.
ஆமாம் நானும் சிங்கம் தான்” என்று தண்ணீரில் தன் நிழலைப் பார்த்த குட்டி சிங்கம் கூறியது.
ஆஹா! உனக்கு இப்போது தன்னம்பிக்கை வந்து விட்டது” என்று சிங்கம் பலமாக கர்ஜித்தது. அதைப் பார்த்த சிங்க ஆடும் கர்ஜித்தது.
அதன் புதிய கர்ஜனை காடு முழுவதும் எதிரொலித்தது.தான் ஒரு சிங்கம் தான் என்ற தன்னம்பிக்கை வந்ததால் அது செம்மறி ஆட்டுக் கூட்டத்தை விட்டுச் சுதந்திரமாகத்
சுற்றித் திரிந்தது.
மனிதர்கள் தங்கள் சக்தியைப் புரிந்து கொள்ளாத வரை செம்மறி ஆடுகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.
புரிந்து கொண்டாலோ அப்போதே சிங்கத்தைப் போலவே வலிமை உடையவர்கள் ஆகிறார்கள்.
மனித மனம் அளப்பரிய சக்தி கொண்டது. ஒன்றை நினைத்தால் அதை நிச்சயம் அடையக் கூடிய சக்தியைத் தரவல்லது.
எழுந்திருங்கள்
துணிவோடு நில்லுங்கள். உங்களைச் சுற்றி பிணைக்கப்பட்டு உள்ள தளைகளை அறுத்து எறியுங்கள்.
உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 28 September 2022

செட்டிநாட்டின் பெருநகரம் தேவகோட்டை மாநகரத்தின் செயல் செம்மல் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட மாநகர் மதுரையில் இன்று நம் சமூகப் பெருமக்களை சந்தித்து பேராதரவினைப் பெற்றார். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் அன்புச் சகோதரர் சொ. கதிரேசன் அவர்களுக்கு மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம். தேவகோட்டை நகரச் சிவன் கோவில் மேனாள் மேனேஜிங் டிரஸ்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் முதுநிலை மேலாளர், பொது வாழ்வின் முன்னோடி எஸ். சொர்ணநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டிகள் எஸ்எம். ராமநாதன், சன் ஐஸ் எஸ். ராமநாதன் உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்குக் கோபுரம் திருப்பணி செய்த வயிநாகரம் குடும்பத்தினர் பணியைக் கருத்தில் கொண்டு, பெருநகருக்குப் பெருமை சேர்க்கும் வெற்றியைப் பெற்றிடுவோம்.


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு




 

Monday 26 September 2022

நற்குணம் உண்டாகட்டும்.

 நற்குணம் உண்டாகட்டும்.

உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாகப் பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது.
மேலும், இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.
மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு வந்து சேர்கிறது.
பிறரைப் பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே!, பழிச் சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றித் திரித்துப் பேசுவர். அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள்.
ஒரு கட்டத்தில் அவர் தன் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதி வரையில் அவருக்கு சொந்தம், உறவு என யாரும்
இல்லாமலேயே போய் விடும்.
புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.’ - என்றார் வள்ளுவர்.
ஒருவர் இல்லாதபோது அவரை பழித்துப் பேசி, அவர் இருக்கும்போது பொய்யாக வேறொன்று சொல்லி உயிர் வாழ்வதை விடச் சாதல் நல்லது என்கிறார்.
ஆனால் இன்று வம்புப் பேச்சுகள் இறந்தவரையும் விட்டு வைப்பதில்லை என்பதுதானே நடப்பியல்.
உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்கள் மீது எக்காரணம் கொண்டும் புறம் சொல்லக் கூடாது.
அந்தத் தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது, ஒருவரை புகழ்ந்து பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இகழ்ந்துப் பேசாதீர்கள்.
மற்றவர்களைப் பற்றி புறம் கூறாதிருக்கும் வகையில் நம் அகம் மேம்பட வேண்டும். புறங்கூறலைத் தவிர்த்து நம் அகத்தை மேம்படுத்துவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவைப் போற்றுவோம்


 

நேற்று மாலை 4-55 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் சிறப்பான தரிசனம்.

 



சில முயற்சிகள் நமக்கு வெற்றிகளைத் தரும், சில முயற்சிகள் நமக்கு தோல்விகளைத் தரும்.

 சில முயற்சிகள் நமக்கு வெற்றிகளைத் தரும், சில முயற்சிகள் நமக்கு தோல்விகளைத் தரும்.

எனினும் நம் எல்லா முயற்சிகளும் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
கடலை சேரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும் நதியைப் போலவே தொடர்ச்சியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சிகள்.
இலக்கு அடையும் வரை, நம்மால் முடிந்ததைச் செய்வதல்ல முயற்சி.
நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி.
இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி.
மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலியாகிறான்.
ஆனால், வெற்றிபெறும் வரை முயற்சி செய்பவனோ சாதனையாளனாகிறான்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றுவோம்


 

உடுமலை நாராயண கவி பிறந்த நாள்


 

Saturday 24 September 2022

புதுப் புது மலர்கள்.

 புதுப் புது மலர்கள்.

போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை.
போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது.
பிறந்த குழந்தை கூட அழுகை செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது..
போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்.
வாழ்க்கையில் தங்கள் குறிக்கோளை நிலை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது.
பூந்தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மலர்கள் பூப்பதுண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை.
அதுபோலத்தான் வாழ்க்கையெனும் பூந்தோட்டத்தில் இன்பம்,துன்பம் வருவதும் போவதும்.. எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல்தான் வாழ்க்கையும்.
போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே வெற்றி பெற இயலாது.. போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் போய்விடும்.
வாழ்க்கையில் உங்களுக்கு அழுவதற்கு நூறு காரணங்கள் இருந்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று வாழ்ந்து காட்டுங்கள்.
சரியான, நேர்மையான வாழ்க்கை பயணப் பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான்.
இந்தப் பாதையில் முட்களாகவும், கரடு முரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும்தான் நிறைந்து இருக்கும்.
களை இல்லாத தோட்டம் இல்லை; அதுபோலவேதான், போராட்டம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையை அழகானதாக மாற்றி கொள்வது நம் கையில்தான் உள்ளது.
எல்லோர் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் உள்ளன. நாம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். மன நிறைவு இருந்தாலே போதும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.
போராட்டங்கள் இருந்தாலும் கூட, யாரும் வாழ்க்கையை வெறுப்பதில்லை. போராட்டங்களையெல்லாம், ஏற்றுக் கொள்ளவும், நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும், வாழ்க்கை பூந்தோட்டமே.
நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும் உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும். வாழ வாருங்கள்; வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் உள்ளன.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் பா ஜ க தேசியத் தலைவர் ஜெ பி நட்டா தரிசனம், அவருக்கு பரிசு வழங்கி மகிழும் மேனாள் அறங்காவலர் ஏஎல் பெரியகருப்பன், அருகில் மத்திய அமைச்சர் எல். முருகன், புதுக்கோட்டை மாவட்ட பா ஜ க தலைவர் செல்வம் அழகப்பன்.

 


கண்டனூரில் நடைபெற்ற எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா.

 கண்டனூரில் நடைபெற்ற எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா.

இன்று காலை ஊரே திருவிழாவாக கூடி மகிழ்ந்த கண்டனூர் சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா வ உ சி தெரு அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
பிள்ளையார்பட்டி விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பான முறையில் நடைபெற்றது.
வாழ்த்தரங்கத்தில் கண்டனூர் அருளாடியார் அவர்கள் தலைமையில் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், குழந்தைக் கவிஞர் செல்லக் கணபதி, வாஷிங்டன் வீரப்பன் பேசினர்.
ராம இளங்கோ நன்றி கூறினார்.
வளரும் தலைமுறையும் வளர்ந்த தலைமுறையும் கை கோர்த்துக் கொண்டு மிகச்சிறப்பாக நடத்தினர்.
நாதஸ்வர சக்கரவர்த்தி வேதமூர்த்தி, சிறந்த ஒலி பெருக்கி ரேவதி சவுண்ட் சர்வீஸ், சமையல் கலைச் செம்மல்
ஏசிஎன் குமார் இவர்களின் சிறந்த பங்களிப்பு கூடுதல் சிறப்பு.
வாழிய தம்பதியர் வாழியவே.





மன உறுதி ஒன்றே தீர்வு.

 மன உறுதி ஒன்றே தீர்வு.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும் . இன்பமோ துன்பமோ அனுபவம் நம்மைப் பலப்
படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும் மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வைப் பறி கொடுக்கிறான்.
இவ்வுலகில் உள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை.
காரணம் அவைகளுக்கு வாழ்க்கையின் முடிவைப் பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதற்கு காரணம், அறிவு மட்டும் வாழ்க்கைக்குப் போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது.
அது என்ன தன்னம்பிக்கை, மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மன உறுதியொன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான், கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ள மாட்டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளைத் தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளைப் பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்.
ஆனால் தோல்விக்குப் பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைத் தேடிக் கொள்கிறான்.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். இன்பமும், துன்பமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்.
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாகி வருகிறது. எந்த ஆன்மீகமும் இவர்களை காப்பாற்றவில்லை.
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக்கொம்பே.
வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள்.
வாழ்க்கை என்பது, ஓர் குறிக்கோள், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள்.

Friday 23 September 2022

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கண்டனூரில் களை கட்டும் சி. ராம. கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா. இன்று காலை கண்டனூரில் எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். உறவினர்கள் நண்பர்கள் திருக்கூட்டம் காலையிலே வருகை. வாழிய தம்பதியர்




 

எங்கள் மாமியாரின் தம்பி சி ராம. ரெங்கநாதன் - மீனாட்சி தம்பதியர் பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ மற்றும் சகலைகள் அழ. அழகப்பன், கார் டிரேட் கேஆர். சிதம்பரம், ஹைடெக் எஸ். ஆறுமுகம் என்ற செந்தில், சாம்ப் ஸ்டூடியோ சித. சிதம்பரம் மற்றும் பெருமக்கள்.

 






செட்டிநாட்டின் பெருநகரம் தேவகோட்டை மாநகரம். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் அன்புச் சகோதரர் சொ. கதிரேசன் அவர்கள் மனிதத்தேனீ யுடன் சந்திப்பு. இன்று இரவு தேவகோட்டை நகரச் சிவன் கோவில் மேனாள் மேனேஜிங் டிரஸ்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் முதுநிலை மேலாளர், பொது வாழ்வின் முன்னோடி எஸ். சொர்ணநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டி, காசி சத்திர பணிகளுக்கு பேருதவியாக இருந்த சொ. கதிரேசன் அவர்கள் மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ந்த தருணம். அருகில் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டிகள் எஸ்எம். ராமநாதன், டி டி சுப்பிரமணியன், சன் ஐஸ் எஸ். ராமநாதன்,இலுப்பைக்குடி ஒருங்கிணைப்பாளர் கண்டனூர் பழ அண்ணாமலை, ஏஎல். வீரப்பன் உள்ளனர். பெருநகருக்குப் பெருமை சேர்க்கும் வெற்றியைப் பெற்றிடுவோம்.

 





Thursday 22 September 2022

உண்மையான நீதிபதி.

 உண்மையான நீதிபதி.

"மனசாட்சிக்கு பயந்து நடந்துகொள்ளுங்கள். மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா. இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
“அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது.
அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக் கிட்டே இருக்கின்றது” என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா.
அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் குரல்
இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களை குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு.
ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும்.
நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம்.
அந்த எச்சரிப்புக்குச் செவிசாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க மட்டும் அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது.
அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம் லிங்கன் அவர்கள் வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.
அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மைதான்.
உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு
''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்’’ என்றார்.
மனசாட்சி நம் உண்மையான முகம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும்.
உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து விடாதீர்கள்.
நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும். நாம் எல்லோருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சிதானே.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 20 September 2022

உழைப்பும் வெற்றியும் .

 உழைப்பும் வெற்றியும் .

சூரியன் அதன் கடமையைச் செய்ய மறப்பதில்லை.
பூமி அதன் திசையில் சுற்றாமல் ஓய்ந்து விடுவதில்லை
உழைப்பும் அதன் வெற்றியைத் தர மறப்பதுமில்லை
தொடர்ந்து
செயல்படுங்கள்
ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்
வெற்றி
உங்களைத் தேடி வரும்
நடப்பதை மாற்ற முடியாது.
ஆனால்
நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம்
நடக்காது என்று தெரியும் போது.
உங்களது மனநிலையை நல்ல முறையில் மாற்ற நீங்கள் தயார் எனில்
உங்களுக்காக சூழ்நிலையும் நன்றாக மாறும்.
வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும். ஆனால் சில வாய்ப்புகள் தான் வாழ்க்கையையே தரும். வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்.
வாழ்க்கை என்பது நாணயம் போல.
இன்பம் ஒரு பக்கத்திலும்,
துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்குத் தெரியும்.
மறந்துவிடாதீர்கள் மறுபக்கமும் அதன் வாய்ப்பிற்காக காத்திருக்கும்

சொல்லும் செயலும் அழகானது.

 சொல்லும் செயலும் அழகானது.

மெளனமும் சிரிப்பும் சக்தி வாய்ந்தவைகள்.
மெளனம் நிறைய பிரச்சினைகளைக் குறைத்து விடும்
சிரிப்பு நிறைய பிரச்சினைகளைத் தீர்த்து விடும்.
சொல் வீரராக இருப்பதைக் காட்டிலும்
செயல் வீரராக இருப்பது சிறந்தது.
எந்தத் தொழிலும் இழிவில்லை
தொழில் எதுவும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு.
உலகத்தை வெல்வதை விட
சுயநலத்தை வெல்வதே வெற்றி.
காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை
அது நம் மனதை பக்குவப்படுத்துகிறது
அவ்வளவு தான்.
எதையும் கற்றுக்கொள்வது தான் நல்லதே தவிர
கற்றுக் *கொல்வது* அல்ல.
நாம் எதைத் தொடர்ந்து செய்கிறோமோ
அதுவாகவே ஆகிறோம்.
எனவே திறமை என்பது ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்
காலம் கைகூடும்.
உள்ளத்தின் அழகென்பது
சொல்லும் செயலும் தான்.
இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்படும் வீரம்
அசாத்திய திறமைகளை
தனக்குத்தானே அறியச் செய்து விடும்.
சந்தோசத்தை தொடராதே
ஆனால்
சந்தோசமாயிருக்க சர்வ காலமும் தயாராயிரு.
ஆசை தவறில்லை
அடுத்தவர் பொருள் மீது ஆசை தான் தவறு.
கழுகைப் பிடிக்கத் தெரிந்தாலும்
இங்கே
காக்காப்பிடிக்க தெரிந்தவனுக்கே வாழ்க்கை.
தானாக எதுவும் மாறாது.
மாற்றவும் முடியாது என்கிற புரிதலே முதிர்ச்சி.
முறிவு என்று ஆன பின்
புரிய வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
பிரிய வேண்டும் என்றே பேசுகிறார்கள்.
நமக்குச் சரியெனப்படாத ஒன்றைத் தொடர்வது.
மற்றவர்களின் நிழலில் ஓய்வு எடுத்தலைப் போன்றதாகும்.
கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல
பயன்படுத்தி வீட்டு
என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் எனச் சொல்பவர்கள்.
வாழை இலையை தூக்கி எறிந்ததை நினைப்பதில்லை.

மனிதத்தேனீயின் தேன்துளி