Thursday 29 September 2016

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


காலைக் கதிரவனாய் எழுச்சியோடு அம்மா


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஒரு குட்டி கதை*
அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி . இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.
" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,
" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . *_காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்._*
*செல்லமே, கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே* *ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.*
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
நன்றி ஆா் பாஸ்கர்

The Hindu - Aananda Jothi Paper 29.09.16 page 4


Daily Thanthi paper 29.09.2016 Page 17


மனிதத்தேனீயின் தேன்துளி



Wednesday 28 September 2016

காந்திஜி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா காமராஜர் நினைவு தினம் அழைப்பிதழ்


தந்தி டி.வி.யில் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் மனிதத்தேனீ


டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#⃣🏹தள்ளிப் போட்டு வந்த விஷயங்களை ஒவ்வொன்றாக முடிப்பதால் ஏற்படும் நிம்மதி, மற்ற விஷயங்களையும் நாம் சீக்கிரம் முடிக்க உதவும்.
அதனால, எதையும் ஸ்பீடா செய்யுங்க, நிம்மதியா இருங்க.
#⃣🏹ஒரு ப்ரச்னைக்கு நமக்கு சில வழி தெரிகிறது என்றால் அடுத்தவர்களுக்கு சுலபமான பல வழி தெரியக் கூடும். எனவே மற்றவர் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.
#⃣🏹யார் சரி என்று பார்ப்பதை விட எது சரி என்று தீர்மானித்தால் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம்.
#⃣🏹வறுமையை யாரிடமும் சொலலாதீர்கள் ஒரு சிலரால் கேவலப் படுத்தப் படுவீர்கள்.உங்கள் திறமையை எல்லோரிடமும் சொல்லுங்கள் யாராவது ஒருவரால் உயர்த்தப் படுவீர்கள்.
#⃣🏹நல்ல சிந்தனைத் திறன் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல் படுத்திக் கொண்டே வாழ்வதில் தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.
🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵
~யார் சரி~ எது சரி
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

Dinamalar Paper 28.09.2016 page 10


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

''பாட்டி இல்லாத வீடு''
பாட்டி... பாக்கு இடிக்கும்
சத்தமே - எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!
அப்பா, அடிக்க
வரும்போதெல்லாம்....
பாட்டியே எனக்கு,
பாதுகாப்பு வளையம்!
கண்ணாடி விளக்கோடு....
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!
ஆடு கோழி கூட....
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல!
கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்....
நினைத்துக் கொள்வேன்,
"அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?!" என்று.
திருநீறு பூசி, உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி,
தாத்தா சாவிற்குப்பின்.....
நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்,
எதிரே வராததில் இருக்கிறது....
அவளது அறியாமையும்,
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!
பாட்டியின் ஆசையே....
என் திருமணத்தைப்
பார்ப்பதும்,
பின் இறப்பதும் தான்!
காரணம் கேட்டால்,
"செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்"
என்பாள் அந்த மகராசி!
கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது....
மண்பானை சமையல்,
மக்காச்சோளக்கூழ்,
மரக்குதிர் மட்டுமல்ல!
தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!
பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!
இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து.....
'தாத்தா பாட்டி இல்லாத வீடு'
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!
ஒருபோதும்....
பேரப்பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!
படித்ததில் பிடித்தது

Malai Murasu Paper 27.09.2016 page 3 & 4



தந்தி தொலைக்காட்சியில் பதிவு


Tuesday 27 September 2016

தமிழ் உணர்வுடன் செயல்பட்டவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் புகழாரம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*_"சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..."_*
***********************
🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..
🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........."
🌝 ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..
🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது
🌝 கல்வி கற்க புத்தகங்களை விட *'நோட்டுக்களே'* அதிகம் தேவைப்படுகின்றன.!
🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!!
🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!!
🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.??
🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலைஞ்சு போயிருக்கும்...
🌝 நாம் நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி....
🌝 பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை!
🌝 வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட, எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்...!!!!!
🌝 காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
🌝 திருக்குறளை, வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் பேரு...!!!!!
🌝 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை...!!!!
🌝 Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது..
🌝 நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது..... *நம்மோட பொறுமை..!*
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது..... *நம்மோட நடத்தை..!*
🌝 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை, லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம்னு அர்த்தம்....!!!!
🌝 எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!
🌝 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள். ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
🌝 கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!
🌝 நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை...!!!!
🌝 போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ????
🌝 பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!
🌝 பணம் மரத்தில் காய்க்குமானால், மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...
🌝 நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், *'தன்னடக்கம்'* என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். இதை உணர்ந்தவன் கண்டிப்பாக உயர்வான்!!
🌝 லாரியில அழுது கொண்டே செல்கிறது..... ஆற்றிடமிருந்து பிரித்து அள்ளப்பட்ட மணல்.......!!!!

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சில உண்மைகள்
*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…
*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்கு எதிராக செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!
*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!
*‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!
*சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!
தேடியபோது கிடைத்த உண்மைகள்..

Monday 26 September 2016

Nagarathar Post_August 2016- Page -10


நியூஸ் 18 சானல் தொலைக் காட்சியில் பதிவு


முடிவெடுப்பதில் மின்னலை மிஞ்சிய நமது அம்மா


சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா பானர்


தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு பற்றிய சிலைவடிவம் உள்ளது


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அதென்ன சின்ன ஒரு காய்ச்சலு க்கு இந்த அதிமுக காரங்க இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம் பன்றாங்க ன்னு கேட்கிற எல்லா தோழர்களுக்கும்...
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். கருணாநிதி க்கு ஒன்றென்றால் அவரின் பிள்ளைகள் அவரை பார்த்துக்கொள்வார்கள். மற்ற கட்சித் தலைவர்களுக்கும் அதே தான். ஆனால் எங்கள் அம்மாவுக்கு..?? நீங்கள் எல்லாம் நினைப்பது போல வெறும் உதட்டளவில் நாங்கள் எங்கள் கட்சியின் தலைமையை அம்மா என்று அழைப்பதில்லை. அம்மா என நாங்கள் எங்கள் தலைமையை அழைப்பது இதயத்தில் வெகு இயல்பாக எழுகிற பாசத்தின் உச்சம். இது தான் நீங்கள் கேட்ட கேட்கப்போகிற மொத்த கேள்விகளின் அடிப்படை பதில்.
சரி. மண்சோறு கும்பல் தீச்சட்டி கும்பல் ன்னு விமர்சனம் வருகிறதே..? அதற்கு பதில் வெகு எளிதானது. இயல்பானதும் கூட.நாங்கள் உயிருக்கிணையாக மதிக்கும் எங்கள் அம்மாவை அருகில் இருந்து மருந்து மாத்திரை கொடுத்து பார்க்கும் வாய்ப்பில்லை. அனைத்து தொண்டர்களுக்கும் அதே கருத்து தான். ஆக, அப்படிப்பட்ட அம்மாவிற்கு எளிய தொண்டனாக நாங்கள் என்ன செய்ய முடியும்..?? வெகு எளிது, பிரார்த்தனை. அதை நான் செய்கிறோம். நாங்கள் விரும்பியதை நாங்கள் என் தலைமைக்காக செய்கிறோம். எங்களுக்கு என்ன முடியுமோ அதை பொறுத்து என் பிரார்த்தனையின் அளவீடு மாறும்.
இதில் குற்றம் சொல்லவே, கிண்டலடிக்கவோ என்ன இருக்கிறது. எங்கள் கட்சியில் அனைத்து தொண்டனுக்கும் அம்மாவிற்காக பிரார்த்தனை செய்வது அல்லது செய்பவர்களைக் கண்டால் அவ்வளவு பிடிக்கிறது. ஏன்..?? அம்மாவிற்காக பிரார்த்தனை செய்தால் அம்மாவின் நலம் மென்மேலும் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை.
ஆக, அம்மாவிற்காக பிரார்த்தனை செய்பவர்களைக்கண்டால் மண்சோறு கும்பல் தீச்சட்டி கும்பல் என விழிப்பவர்கள் யாராக இருக்க முடியும்..?? நிச்சயம் எங்கள் புரட்சித்தலைவியின் எதிரிகளாகத் தான் இருக்க முடியும். அல்லது கருணா கும்பலிடம் வாங்கி குடித்து காலத்தை ஓட்டும் கருணாவின் காலை நக்கிப்பிழைக்கும் கும்பலாக இருக்க முடியும்.....
-All AIADMK Members and Friends
நன்றி சிதம்பரம்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கேள்வி - மனத்தூய்மை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தக் காண்கிறேன். அது எவ்வாறு அமையும் ?
இராம் மனோகர் - ஒழுக்கத்தால்தான் அமையும். வேறு எதனாலும் அமையாது. உடனே ஒழுக்கம் எவ்வாறு அமையும் என்று கேட்கக் கூடும். ஒழுக்கம் என்றால் மிகவும் கடினமான ஒன்று என்று நாம் அனைவருமே நினைக்கிறோம். ஆனால், ஒழுக்கம் என்றால் மிகவும் எளியதுதான். என் குரு வேதாத்திரி மகரிஷியிடம் ஒருவர் கேட்டார் ''ஐயா ஒழுக்கம் என்றால் என்ன ?'' அவர் சொன்னார் ''தனக்கோ, பிறர்க்கோ உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் வாழ்வதுஒழுக்கம்'' என்று. பாருங்கள் ஒழுக்கம் எவ்வளவு எளிமையானது என்று. படிப்பதற்கு எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டுமே !!
வள்ளுவப் பெருந்தகை இது குறித்து பேசும் பொழுது, ''மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.'' என்பார். இதுதான் மனத்தூய்மையின் சிறப்பு. அதாவது மனத்தூய்மையோடு செய்யும் செயல்களே சிறக்கும். அதுவே அறச் செயல்கள். மற்றவை எல்லாம் நிலைத்த சிறப்புத் தன்மை உடையவைகள் அலல. மின்னல் தோன்றி மறைவது போல மறையும் வெறும் ஆரவாரத் தன்மை உடையவைகளே. சரி, இந்த மனத் தூய்மையை ஒருவன் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? அதாவது ஒழுக்கமுடையவனாக வாழ என்ன செய்ய வேண்டும் ? அதற்கும் வள்ளுவர் வழி காட்டுகிறார்.
''அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.'' என்கிறார். அதாவது பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்த நான்கையும் தவிர்த்து வாழ்வதே ஒழுக்கம். அதுவே அறம். அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே மனத்தூய்மை வாய்க்கும் என்பதை உணர்க. இவை நான்கும் தனக்கும், பிறர்க்கும் தீமை பயக்கும் பண்புகளாகும். இவைகள் நீங்கும் பொழுது ஒழுக்கமும் அதன் பயனாய் மனத் தூய்மையும் அமையும். இதையே வள்ளலார் ''புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா திரவும் பகலும்நின் தனையே கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்'' என்பார்.
எனவே ஒழுக்கமில்லாமல், மனத்தூய்மை இல்லாமல் செய்யும் தவம் சிறக்காது என்பதை உணர்த்தவே சில பதிவுகளில் மனத்தூய்மையின் அவசியம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி பாஸ்கர்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*விவேகானந்தர் கதைகள் துணிவு மிக்க சிறுவன்!*
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.
அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.
நன்றி பாஸ்கர்

மனிதத்தேனீயின் தேன்துளி



Saturday 24 September 2016

Malai Murasu Paper 24.09.2016 page 5


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌴 *_```மனோசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது?```_*
🍁 *_```எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்!_*
🍁 *_```Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்!!_*
🌴 *_```ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது!?```_*
🍁 *_```நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?!```_*
🍁 ```ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை!!```
🍁 ```அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்!!```
🍁 ```தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்!!```
🍁 ```உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.!!```
🍁 ```அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்!!```
🌴 ```ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?!```
🍁 ```நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது!!```
🍁 ```சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது!``` ```அதனால்; நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்!!!```
🍁 ```வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே!!"```
🍁 ```ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முகூர்த்தமே பேரன்பாளர்களே!```
நன்றி ஆா் பாஸ்கர்