Wednesday 31 August 2016

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

[31/08 3:33 pm] ‪+91 99944 04565‬: ஒரு
குட்டிக்கதை,
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை
ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்
அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு
ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது,
மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது.
செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம்
மேலும் தரையில் ஒருபிளவைப்பார்த்தவுடன் அது சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை
இழுத்துச் சென்றது மேலும் பலதடங்கல்கள்
அது தன் திசையைச் சற்றே மாற்றி
வெற்றிகரமாக முன்னேறியது.
ஒருமணிநேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம்செய்தது அவர் வியந்துபோனார்
ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து அதிசயித்தார்.
ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன.
எறும்பு இறுதியில் தனது இருப்பிட.இலக்கை
அடைந்தது.அது எறும்புப்புற்று எனப்படும் ஒரு சிறிய ஆனால் ஆழமான குழி அருகே வந்தது
எறும்பால் அந்த இலையுடன் குழியினுள்
செல்ல.இயல வில்லை.அதுமட்டுமே செல்ல முடிந்தது.
தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுத்தான் செல்ல வேண்டியதாயிற்று
இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!
மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக்கொள்கிறான்.
அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப்பலப்பல
இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத்தான்
செல்ல வேண்டும்.
எறும்பிடமும் பாடம் கற்கலாம்
வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம்.எதுவும் நம்மோடு வரப்போவதில்லை
புரிந்தால் மதி
புரிந்துகொள்ள மறுத்தால் விதி...!!!
இனிய நண்பகல் வணக்கம் நண்பர்களே!!!
[31/08 3:41 pm] ‪+91 99944 04565‬: மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.
அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார்.
காட்சி ஒன்றுதான்..
சிந்தனைகளோ வெவ்வேறு...
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"
😊😊
இனிய மாலை வணக்கம் ...
நன்றி ஆா் பாஸ்கர்

Suttramum Natpum - August 2016 page 5


அகில இந்திய மதுரை வானொலியில் இலக்கிய உலா அழைப்பிதழ்


அம்மாவின் வெற்றிப் பயணம் தொடர மனிதத்தேனீ வாழ்த்து


மனிதத்தேனீயின் தேன்துளி


தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அழைப்பிதழ்


எம்.எஸ்.சுப்புலெட்சுமி நூற்றாண்டு விழா அழைப்பிதழ்


Monday 29 August 2016

பாரதியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்


மனிதத்தேனீ சிறப்புரையாற்ற உள்ள விழா


என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம் ஃபானர்


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான். மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. !!!!!
இனிய சிவ காலை வணக்கம் நண்பர்களே!!
நன்றி பாஸ்கர்

மனிதத்தேனீயின் தேன்துளி



Saturday 27 August 2016

Madurai Mani Paper 27.08.2016 Page 4


Daily Thanthi Paper 27.08.2016 Page 9


இறைவன் திருவடியில் ஆர்.எம்.வெள்ளையப்ப செட்டியார்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உன் வாழ்க்கையை நீ வாழ்
******************************************
எறும்பு - பட்டாம்பூச்சியின்
வாழ்க்கையை வாழ
ஆசைப்படவில்லை.....!!!
நாய் - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை.....!!!
யானை - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை......!!!
காகம் - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை.....!!!
அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது.....!!!
நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்....???
நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???
நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......???
நீ ஏன் வருந்துகிறாய்......???
நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???
உன் வாழ்க்கை விசேஷமானது......!!!
நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது.....!!!
நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது......!!!
நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது....!!!
ஆகாயம் போல் பூமி இல்லை.....!!!
பூமி போல் காற்று இல்லை .....!!!
காற்று போல் தீ இல்லை.....!!!
தீயைப் போல் தண்ணீர் இல்லை.......!!!
ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை.....!!!
பல்லி போல் புலி இல்லை......!!!
தங்கம் போல் தகரம் இல்லை......!!!
பலாப் பழம் போல் வாழைப் பழம் இல்லை......!!!
கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை......!!!
துணி போல் கருங்கல் இல்லை.....!!!
சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை.....!!!
நாற்காலி போல் கட்டில் இல்லை.....!!!
ஒரு மரத்தின் பழங்களிலேயே
ஒன்று போல் மற்றொன்று இல்லை.....!!!
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே
ஒருவர் போல் மற்றொருவர் இல்லை......!!!
ஆண் உடல் போல் பெண்ணுடல் இல்லை.....!!!
நேற்று போல் இன்று இல்லை.....!!!
இன்று போல் நாளை இல்லை......!!!
போன நிமிடம் போல் இந்த நிமிடம் இல்லை.....!!!
இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இல்லை.....!!!
ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.......!!!
இத்தனை ஏன் ....
உன் தலைவலி போல் பல்வலி இல்லை......!!!
உன்னுடைய கண் போல் காது இல்லை.....!!!
இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!
அதனால் நீ தனி தான்.....!!!
உன் கைரேகை தனி தான்......!!!
உன் பசி தனி தான்......!!!
உன் தேவை தனி தான்.....!!!
உன் பலம் தனி தான்.....!!!
உன் பலவீனம் தனி தான்......!!!
உன் பிரச்சனை தனி தான்......!!!
உனக்குரிய தீர்வும் தனி தான்.....!!!
உன் சிந்தனை தனி தான்.....!!!
உன் மனது தனி தான்.....!!!
உன் எதிர்பார்ப்பு தனி தான்......!!!
உன் அனுபவம் தனி தான்.....!!!
உன் பயம் தனி தான்.....!!!
உன் நம்பிக்கை தனி தான்.....!!!
உன் தூக்கம் தனி தான்......!!!
உன் மூச்சுக்காற்று தனி தான்......!!!
உன் ப்ராரப்தம் தனி தான்.....!!!
உன் வலி தனி தான்.....!!!
உன் தேடல் தனி தான்.....!!!
உன் கேள்வி தனி தான்.....!!!
உன் பதில் தனி தான்.....!!!
உன் வாழ்க்கைப் பாடம் தனி தான்......!!!
உன் வாழ்க்கை தனி தான்......!!!
உன் வாழ்க்கை அதிசயமானது தான்......!!!
உன் வாழ்க்கை ஆச்சரியமானது தான்......!!!
உன் வாழ்க்கை அபூர்வமானது தான்......!!!
உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது தான்.....!!!
உன் வாழ்க்கை உத்தமமானது தான்.....!!!
அதனால்.....
இன்றிலிருந்து......
இப்பொழுதிலிருந்து.......
உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!
வாழ்வின் ரசனை தெரியும்.......!!!
வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!
இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!
உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!
உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!
உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!
என்றும் அன்புடன்
நன்றி ஆா் பாஸ்கர்

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திரு. கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?
Following are excerpts from the book.
தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி
BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..
வாழ்க இல்லறம் !
Even aftr 10yrs married life those who are fighting with wife/husband for each and small things...
THIS IS SAMARPANAM.....
நன்றி நாச்சியப்பன் B O B

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு லேட் நைட், மனைவியோட மொபைல்லெ ‘பீப்’ சத்தம் கேட்குது.
கணவன் எழுந்து அந்த மொபைலைப் பார்த்துட்டு, கோபமா மனைவிகிட்ட..
” யார் இது? ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது…? ” ன்னு கேட்கிறான் .
மனைவி ‘அட…! யாருடா அது….!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்ல்றாங்களே..’ ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு….
நன்றி பொன் மனோகரன்
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க …
“அட லூஸுப் புருஷா ..
மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு…
அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே… பேட்டரிஃபுல் ( battery full)

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Friday 26 August 2016

Madurai Mani Paper 26.08.2016 Page 4


அன்னை தெரசா பிறந்தநாள் கூட்டம் News & Photos



மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!
வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......
இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......
இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,
உயிர் பிரிய-வாழ்வு......
சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.
உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......
உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....
உன் குழந்தைகளை பேணு......
அவர்களிடம் அன்பாய் இரு.......
அவ்வப்போது பரிசுகள் அளி......
அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
அடிமையாகவும் ஆகாதே.........
பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
உரிமை அறிவர்,கடமை அறியார்
அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.
இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,
ஆனால்......
எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
ஏந்தாதே,
எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திருந்தால்,
எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.
மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,
மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே.....!!!
அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.
நல்ல உணவு உண்டு.....
நடை பயிற்சி செய்து.....
உடல் நலம் பேணி......
இறை பக்தி கொண்டு......
குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்-இன்னும்......
இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!
அதற்கு தயாராகு......!!!
படித்ததில் பிடித்தது......!!!
நன்றி ஆா் பாஸ்கர்

Thursday 25 August 2016

Makkal Kurual Paper 25.08.2016 Page 4


அன்னை தெரசா பிறந்தநாள் விழா ஃபானர்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நாள் ராஜா, இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார் . இரண்டு மெய்க்காப்பாளர்களும் அவரோடு கூடச் சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . தடுமாற்றத்தில் ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள். மழையும் , காற்றும் வேறு பயமுறுத்தின. சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
சிறிது நேர நடையிலேயே குடிசையை அடைந்து , விரைவாய் உள்ளே நுழைந்தார். அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மாறு வேடத்தில் இருந்த போதிலும் , அவன் எழுந்து மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திக்கியே " என்றார்.
பதிலுக்கு அவன் ,
" நீ தான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. எதுக்கு நான் வணக்கம் சொல்லணும் " என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவி செய்வதற்காக ஒரு பொற்காசு மூட்டையை இடையில்வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு மீண்டும் கேட்டார் ,
"பார்த்தாயா நான் எவ்வளவு பெரியவன் என்பதை ?
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு , " ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே , உனக்கு எப்பபடி வணக்கம்
சொல்வது ?" என்றான்.
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி ,
" இப்ப வணக்கம் சொல்வாயா? " என்றார் .
காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே , உனக்கா வணக்கம் சொல்வேன் ? "
அரசர் இன்னும் உக்கிரமானார் . பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார் ,
" எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்ப வணக்கம்
சொல்வியா ?" .
மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான் ,
" உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே ! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே . சரிசமமா இருக்கிற உன்னை எதுக்கு மதிக்கணும் ? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார் ,
" இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன் .
இப்பவாவது வணக்கம் சொல் " என்றார் .
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
" இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை . ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும் " என்றான். ராஜா வாயடைத்துப் போனார் .
செல்லமே!
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்

மனிதத்தேனீயின் தேன்துளி