Saturday 31 December 2022

மகிழ்ச்சியாக அமைதியாக வாழலாம்.

 மகிழ்ச்சியாக அமைதியாக வாழலாம்.

இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு.
ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக்கவலை,
மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான்.
அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறையப் பேர்.
வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இல்லை.
அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும்.
கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார்.
ஒரு வீதியில் செல்லும் போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்” என்றார்.
“அரசே கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்குப் பதில் அளித்தான்.
மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம்,
“அம்மா ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான்.
இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள்.
‘சம்பாதித்து வந்தால் தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவன் ஆகி விடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார்.
யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை.
அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளி விட்டது.
“அரசே பார்த்தீர்களா சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான் இளைஞன் அதனால் பலமிழந்தான்.
கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.
*மனது சரியாக சிந்திக்கத் தொடங்கினால் மனக்கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை.*
*கவலையால் உடல், உங்கள் நலன்கள் கெடுகின்றன.
ஏன் வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது..*
*வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழித்தேயாக வேண்டும்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

விஸ்வநாத தாஸ் நினைவைப் போற்றுவோம்


 

Friday 30 December 2022

மாலைமுரசு 30.12.2022 பக்கம் 6


 

மனிதத்தேனீயின் தேன்துளி



 

பெண்களின் பேராற்றல்.

 பெண்களின் பேராற்றல்.

*"பெண்ணின் பெருந்தக்க யாவுள"* என்னும் *வள்ளுவர்* கருத்து என்றும் போற்றத்தக்கது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறப்படுகிறது.
நம்மைப் பெற்றவள் ஒரு பெண். நமக்குச் சந்ததியைப் பெற்றுக் கொடுப்பவள் ஒரு பெண், நமக்கு சகோதரியாக நல்ல உறவாக இருப்பவர்கள் பெண்கள். இந்த நிலையில் பெண்களுக்கு உரிய மரியாதை அனைத்து நிலைகளிலும் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் முற்காலத்தில் அடிமைத்தனமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஆணுக்கு நிகராக படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும், வந்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு உயரிய அடையாளம் நிச்சயமாக கொடுக்கப்பட வேண்டும்.
மகளிர் அமைப்புகள் பெண்களிடையே இது சார்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற மனப்பாங்கை மாணவர்களிடையே ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டும். பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
ஆணாதிக்கம் மிகுந்திருந்த பல்வேறு துறைகளில், சில பெண்கள் துணிச்சலோடு நுழைந்து எத்தனையோ சவால்களைச் வெற்றியோடு சமாளித்து தங்கள் திறமைகளைத் திண்மையுடன் நிரூபித்துள்ளனர்.
இந்த துணிச்சலும், திண்மையும் அனைத்துப் பெண்களிடமும் ஏற்பட வேண்டும். அப்போது தான் மகாகவி பாரதியார் குறிப்பிட்ட *புதுமைப்பெண்களை*
நாம் காணமுடியும்.
1

Thursday 29 December 2022

முன்னோடியாக இருங்கள்.

 முன்னோடியாக இருங்கள்.

நம்மில் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாகச் செல்கிறோம். ஆனால் எப்போது இணக்கமாகச் செல்ல வேண்டும். எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களுடன் இணங்கிப் போவது என்பது ஒருவரின் பண்பினையும், பணிவையும் குறிக்கும்.
பணிவு என்பது சிலரின் கணிப்பில் இயலாமை என்று பிழையான எண்ணங்களைக் கருத்தில் கொள்ளாதீர்கள்.
இணங்கிப் போகிறவர்கள் கோழைகளும் அல்ல. அஞ்சி நடப்பவர்களும் அல்ல.
அவர்கள் அறிவுடன் கூடிய திறமையாளர்கள். இத்தகைய திறமையாளர்கள் எனப் பெயர் வரக் காரணம் இணங்கிப் போகும் அறிவும், புலமைக் கூர்மையும், திறமையும் தான் என்பதை யாரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை.
இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தாற் போல் இணங்கி வாழ்ந்து வந்தால் சில வேளைகளில் நாம் நம் சுயம் இழப்பது உறுதி.
ஓர் உயிருள்ள கிணற்றுத் தவளை , வீட்டின் சமையலறையில், அடுப்பில் பற்ற வைத்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது.
தண்ணீரின் வெப்பம் கூடக் கூட தவளை தன் உடம்பின் வெப்பநிலையை சூழ்நிலை வெப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்தது.
அதன் தன்மை அத்தகையது. தண்ணீர் அதன் கொதிநிலையை (100℃) அடையும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முற்பட்டது.
ஆனால் முடியவில்லை. காரணம் உடலின் வெப்ப நிலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்ததால் அது வலுவிழந்துப் போய் விட்டது.
அதுமட்டுமல்ல , பாவம் சிறிது நேரத்தில் அந்தத் தவளையும் இறந்தே போய் விட்டது.
தவளையைக் கொன்றது எது. எளிதில் கூறி விடலாம், கொதிநீர் தான் தவளையைக் கொன்று விட்டது என்று.
ஆனால் உண்மை அதுவல்ல. எப்போது குதித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத தவளையின் அந்த இயலாமை தான் அதைக் கொன்று விட்டது.
இணங்கிப் போகும் ஒருவருக்கு, மற்றவர்களும் இணங்கிப் போவார்கள்.
நீங்கள் பிறருக்கு ''இணங்கிப் போவது'' என்கிற பாடத்தை, கற்பிப்பதில் முன்னோடியாகத் திகழுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 28 December 2022

வருத்த உணர்ச்சியை தூர எறியுங்கள்.

 வருத்த உணர்ச்சியை தூர எறியுங்கள்.

ஓர் ஆடு கடும் வெயிலில் நிழலும் உணவும் தேடித் திரிந்தது. வழியில் இன்னொரு ஆடு தன்னைப் போலவே பசியில் சோர்ந்து படுத்துக் கிடந்ததைப் பார்த்தது.
இருவருமாக இரை தேடுவோம் என்று பேசிக் கொண்டு புறப்பட்டன.
ஒரு மரத்தில் உண்ணுவதற்கான இலைகள் இருந்தன. ஆனால் எட்டவில்லை. கீழிருந்த கல்லைப் பார்த்த ஆடு அதில் ஏறி எம்பிப் பார்த்தது. அப்போதும் எட்டவில்லை. இன்னொரு ஆடு தன் மீது ஏறி நின்று இலையைச் சாப்பிடச் சொல்லியது. அதன்படி ஒரு ஆடு சாப்பிட்டு முடித்ததும், அது மற்ற ஆடுக்கு தன் முதுகைக் காட்டி உதவியது.
இரு ஆடுகளும் பசி தணிந்து மகிழ்ச்சியடைந்தன.
இந்தக் கதையில் ஆடுகள் வாழ்க்கைக் கல்வித் திறன்களை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள்.
தனக்குப் பசிக்கிறது; உணவும் நிழலும் தேவை என்பது *"தன் தேவையை உணர்ந்த நிலை".*
இன்னொரு ஆடும் தன்னைப் போலவே பசியில் இருக்கிறது என்பதைக் கவனித்தது *"எம்ப்பதி".*
அத்துடன் உறவாட ஆரம்பித்தது *"இண்ட்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப்."*
இருவருமாக இரை தேடலாம் என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டது *"கம்யுனிகேஷன்".*
மரத்தில் இலைகள் எட்டாமல் இருந்தது *"ப்ராப்ளம்."*
அதை அவிழ்க்க முதலில் யோசித்தது *"க்ரிட்டிகல் திங்க்கிங்".*
கல்லையும் பின்னர் ஒருவர் முதுகை மற்றவரும் பயன்படுத்தியது *"க்ரியேட்டிவ் திங்க்கிங்".*
விளைவுதான் *"ப்ராப்ளம் சால்விங்".*
உணவும் நிழலும் கிடைக்காமல் அலைந்ததில் ஏற்பட்ட அழுத்தத்தை லேசாக்கிக் கொள்ளவும், வருத்த உணர்ச்சியைக் கையாளவும் தவறியிருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை.
*ஆடுகளை விட எக்ஸ்ட்ராவாக அறிவும் ஆற்றலும் உள்ள நாம் எத்தனை அற்புதமாக வாழமுடியும்!*
*நான் யார் என்று
உணர்வதுதான் முதல் படி.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 27 December 2022

நம்பிக்கை விதைகள்.

 நம்பிக்கை விதைகள்.

நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.
நாளை நமக்காக
காத்து இருக்கிறது
சோர்வை அகற்றி
நம்பிக்கை வளர்ப்போம்
1. செயல்களை முறையாகத் திட்டமிட வேண்டும்
2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்
3. ஆழமாக சுவாசியுங்கள,
இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்.
4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்
5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்
6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு
7. கடவுளை நம்புங்கள்
8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்
9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்
10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்
11. உங்களுக்கு ஒன்றைப் பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்
12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
மண்ணில் பிறப்பது ஒரு முறை
வாழ்வது ஒரு முறை
சாதிப்போம் பல முறை
வாழ்த்தட்டும் தலைமுறை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 26 December 2022

மதுரைமணி 26.12.2022 பக்கம் 2


 

மனமும் மகிழ்வும் நூல் வெளியீட்டு விழா 25.12.2022

மனமும் மகிழ்வும் நூல் வெளியீட்டு விழா













 

காகத்தின் பேரழகு.

 காகத்தின் பேரழகு.

யார் உலகில் மிகவும்
மகிழ்ச்சியா இருக்கிறாங்கன்னு ஒரு சிறிய கதை மூலம் தெரிந்து கொள்வோமா.
ஒரு ஊர்ல ஒரு காக்கா
இருந்துச்சாம் .
அது ரொம்ப
மகிழ்ச்சியா இருந்துச்சு,
ஒரு கொக்கைப் பார்க்கும்
வரை.
அது கொக்கைப் பார்த்து
சொல்லிச்சாம். நீ
வெள்ளையா எவ்வளவு
அழகா இருக்கே .கருப்பா
இருக்கும் என்னை எனக்கு
பிடிக்கலை என்றது.
கொக்கு சொன்னது.
நானும் அப்படிதான்
நினைத்தேன் , கிளியைப்
பார்க்கும் வரை. அது
இரண்டு நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு
தெரியுமா என்றது.
காகமும் கிளியிடம்
சென்று,கொக்கு சொன்னதைக் கேட்டவுடன் கிளி
சொன்னது. உண்மைதான்
நான் மகிழ்ச்சியாத்தான்
இருந்தேன் ,ஆனால் ஒரு
மயிலைப் பார்க்கும் வரை.
அது பல நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு
தெரியுமா என்றது.
உடனே காகமும் மயில்
இருக்கும் ஒரு மிருக
காட்சி சாலை சென்று
மயிலைப் பார்க்க , அங்கு
ஆயிரக்கணக்கான
ஜனங்கள் மயிலைப் பார்க்க
காத்திருக்க , காகம்
நினைத்தது
ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி
என்று.
அழகு மயிலே , உன்னைக்
காண இவ்வளவு பேர் .
என்னைப் பார்த்தாலே
இவர்கள் முகத்தை
திருப்பிக் கொள்கிறார்கள்.
என்னைப்
பொறுத்தவரை
உலகிலேயே நீதான்
அதிக மகிழ்ச்சியானவர்
என்றது.
மயில் சொன்னது.
அன்பு
காகமே , நான் எப்பவும்
நினைத்து
கொண்டிருந்தேன் நான்
தான் அழகு மேலும்
மகிழ்ச்சியான பறவை
என்று.
ஆனால் எனது இந்த
அழகு தான் என்னை ஒரு
சிறையில் பூட்டி
வைத்திருக்கச் செய்கிறது.
இந்த மிருகக் காட்சி சாலை
முழுதும் நான் பார்த்ததில் ,
காகம் மட்டுமே பூட்டி
வைக்கப்படவில்லை .
எனவே நான் யோசித்தது ,
நானும் காகமாக
இருந்தால், உலகம் முழுதும்
ஜாலியாகச் சுற்றி
வரலாமே என்றது.
நண்பர்களே , இதுதான்
நமது பிரச்சினையும் .
நாம் தேவை இல்லாமல்
நம்மை மற்றவர்களுடன்
ஒப்பிட்டு நம்மை நாமே
கவலை கொள்ளச்
செய்கிறோம்.
நாம் எப்பவும் கடவுள்
கொடுப்பதை வைத்து
சந்தோசம் கொள்வது
இல்லை.
அவர் கொடுத்ததை மதிப்பதும்
இல்லை.இது நம்மை ஒரு பெரும்
துயருக்கு இழுத்துச்
செல்கிறது.
ஒப்பீடுகளால் யாதொரு
பயனும் இல்லை.
உன்னை முதலில் நேசிக்க
கற்றுக்கொள்.
உன்னை விட யாரும் உன்னை
நேசிக்க முடியாது.
மகிழ்ச்சி என்பது நமக்குள்தான் இருக்கிறது.அதை வெளியே தேடி அலைய வேண்டியதில்லை.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

உழைப்பே உயர்வு.

 உழைப்பே உயர்வு.

பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.
அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்.
போராசியர் ஒருவர் மூன்று கேள்விகளை மாணவர்களிடம் கொடுத்துப் பதில் எழுதித் தரச் சொன்னார். அதில் மிகவும் கடினமான கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கு 60 மதிப்பெண்ணும் தந்து இருந்தார்.
தேர்வு முடிந்ததும் மாணவர்களின்
விடைத்தாள்களின் விடைகளைப் பார்க்காமல் மிகவும் கடினமான கேள்விகளைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் நிலையும் தந்தார்.
மாணவர்களோ, "பதில்களைப் பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே" என்று கேட்க, பேராசிரியரோ" உங்கள் பதிலுக்காக நான் இந்தத் தேர்வை வைக்கவில்லை.
உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்தத் தேர்வை வைத்தேன். கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல்நிலை அடைவார்கள்" என்று உங்களுக்கு உணர்த்தவே இந்தத் தேர்வு என்று சொல்லி முடித்தார்.
*விடாமுயற்சியுடன், சலியாத உழைப்பும் இருந்தால் மிகவும் கடினமான செயல்களை எளிதில் வெல்லலாம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 24 December 2022

முயற்சி திருவினையாக்கும். சேலம் நகரத்தார்களின் முன்னோடி, சிறப்பான பஞ்சு வணிகம், பல்வேறு அறப் பணிகளில் தனது பங்களிப்பு என சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் பண்பாளர், தேவகோட்டை நா. பஞ்சநதம் இன்று நண்பகல் மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இனிய தருணம். இவர்களின் மாமனார் சிறந்த பேராசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என மாநகர் மதுரையில் நீண்ட காலம் நமது சமூகப் பணிகளில் இருந்த அண்ணன் தேவநாவே என்கிற தேவநா. வெங்கடாஜலம் அவர்களும், பஞ்சநதம் அவர்களின் இல்லத்தரசியார் சேலம் மகளிர் சங்கத்தின் முன்னோடி சித்திரா பஞ்சு உடன் உள்ளனர். வாழிய இவர்களது முயற்சி.

 


ஆனந்தம் பேரானந்தம் இன்று காலை எங்கள் அலுவலகம் வருகை தந்த தமிழ் கூறும் நல்லுலகின் பேராசிரியர், மேனாள் டிவிஎஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தமிழாசிரியர், மேனாள் மதுரைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர், நமது செம்மொழித் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் எங்கள் பேரன்புக்கு உரிய முனைவர் கமலம் சங்கர் அவர்கள் நூல்களும் பரிசும் வழங்கிய தருணம். உடன் சுகுணா தீனதயாளன் வாழிய பேராற்றல் மிக்க டாக்டர் கமலம் சங்கர் - மனிதத்தேனீ



 

நற்செயல்களின் மூலாதாரம்.

நற்செயல்களின் மூலாதாரம்.
உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். *’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியைச் சேர்ந்தவை.*
*வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவிக்கும்போது பேனா கொடுத்து உதவியவரிடம் புன்முறுவலுடன் நன்றி எனச் சொல்வது,*
*சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான்*.
*நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியைக் கூட்டும். அவ்வளர்ச்சியைப் பாதுகாக்கும்.*
பாசிட்டிவ் எனர்ஜியின் *பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி.* ’அவன் அழியணும், அந்தக் குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியைச் சேர்ந்தது. *ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது*. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி.
*இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?*
*மனிதனின் சிந்தனை அறைதான்*
*இரு சக்திகளும் "மனிதனின் சிந்தனை" என்ற ஒரே அறையில்தான் வித்தாகப் பிறக்கின்றன.*
அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.
*மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்தச் சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது*
*சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்குச் சிந்தனைத் தருகிறது.
அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது.*
*அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது.
அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே வாழும் வீட்டில் சமூகத்தில்,நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியைப் பரவ விடுங்கள்.

அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்.* 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வழக்கமான எங்கள் நாட்காட்டி.


 

நாளை மாலை


 

Friday 23 December 2022

ஊருக்கு உழைத்திடும் குடும்பத்தின் இளைஞர், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் துணைச் செயலாளர் பணியாற்றிட களம் காண்கின்றார் அன்புச் சகோதரர் செவ்வூர் பழ. ராமநாதன். தனது சொந்த ஊரான செவ்வூரில் மக்கள் பயன்பாட்டிற்கு பல இடங்களை வாரி வழங்கிய குடும்பத்தின் இளைஞர், திருப்பூரில் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆலோசகர், உழைப்பு எளிமை பணிவு அரவணைப்பு என தெளிவான சிந்தனையுடன் நமது காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேன்மைக்கு மேன்மை சேர்த்திட, துணைச் செயலாளர் பணியாற்றிட களம் காண்கின்றார் அன்புச் சகோதரர் பழ. ராமநாதன். நமது பேராதரவினைப் பெற்ற இவரது வெற்றிக்குத் துணை நின்றிடுவோம். - மனிதத்தேனீ


 

அன்பால் நிறையுங்கள்.

 அன்பால் நிறையுங்கள்.

வீட்டை விட்டு வெளியேறும் போதே கண்ணாடி முன்னால் நின்று ஒரு முறை சிரித்துப் பாருங்கள். உங்கள் முகத்திற்கு விசேஷ மேக்-அப் போட்டது போல், உங்கள் முகத்தைப் பார்க்க உங்களுக்கே மகிழ்ச்சியாகவும்,
பெருமையாகவும் இருக்கும்.
அதே மகிழ்ச்சியும், பெருமையும் அன்று முழுவதும் நிலைக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
சிரிப்பைப் பொறுத்தவரையில் அது மேலோட்டமான முகத்தோடு மட்டும் அல்ல; மனதோடும் தொடர்புடையது. மனதில் அன்பிருந்தால் மட்டுமே நல்ல சிரிப்பு வரும். அதனால் மனதை அன்பால் நிறையுங்கள்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித் தொடர்புள்ளது. இதன் காரணமாக, சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்.
கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும்.
சந்தோஷ அலைகள் நம்மைச் சுற்றி நேர் நிலையான
எண்ணங்களைப் பரப்பும்.
சோக அலைகள் நம்மைச் சுற்றி எதிர்மறையான
எண்ணங்களைப் பரப்பும்.
ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.
சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல் என்பதை உணர்ந்து, சிரித்து வாழ்வோம்.
சிறப்பாக வாழ்வோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

பூ.கக்கன்ஜி நினைவைப் போற்றுவோம்


 

Thursday 22 December 2022

எப்போதும் ஆனந்தம்.

 எப்போதும் ஆனந்தம்.

நாம் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக் கொண்டு செல்கின்றோம்.
எது முக்கியம், எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால் , வாழ்வு எப்போதும் ஆனந்தமாக இருக்கும்..
துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டு இருந்தனர்.
மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் போது, வழியில் ஓர் அழகான இளம்பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
இதைக் கண்ட துறவிகளில் ஒருவர்,
"என்னாயிற்று பெண்ணே ஏதேனும் உதவி தேவையா" என்று கேட்டார்.
பதிலுக்கு அந்தப் பெண்,
"நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது.
நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகி விடும்" என்று கூறி வருந்தினாள்.
"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக் கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்து விடுகின்றேன்" என்று கூறி விட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.
திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.
'ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்'' என்று கேட்க,
அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்.
இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா" என்று கேட்டார்.
உதவி செய்த துறவி,
"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் தோளில் இருந்து இறக்கி விட்டேன், நீங்கள் தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.
*அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.*
*மற்றவர்கள் செய்த உதவியை விமர்சிக்காமல்,*
*உபத்திரவம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.*
*முடிந்தவரை யாருக்கும் கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்.*
*நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது. *