Thursday 28 May 2020

*எப்போதும் உண்மையே பேசுங்கள்..*


*நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..*
*அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..*
*ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்.*
*ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை.*
*“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”*
*இது எல்லோருக்கும் பொருந்தும்.. தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..*
*உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,*
*நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.. உண்மை என்றும் மாறப்போவதில்லை..*
*பொய் சொன்னால்தான், யாரிடம் என்ன சொன்னோம், எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..*
*எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. பொய்யாக நடிக்காதீர்கள்.. மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.. அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..*
*வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.. அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்கு தாருங்கள்..!!!*
நன்றி கோனாபட்டு சுப்பு

No comments:

Post a Comment