Thursday 31 October 2019

வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 31.10.2019 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
31.10.2019
வியாழக்கிழமை
 
👉🏻இன்று தமிழின் முதல் பேசும் படம்
காளிதாஸ் வெளியிட்ட தினம்-1931.
எச். எம். ரெட்டி
இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப் படத்தில்
பி. ஜி. வெங்கடேசன்,
டி. பி. ராஜலட்சுமி
உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம்
தமிழில்
வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.
📽📽📽
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில்
கொண்ட
சிலையா
கொத்து மலர் கொடியா..
படுவது கவியா இல்லை
பாரி வள்ளல்
மகனா
சேரனுக்கு
உறவா
செந்தமிழர்
நிலவா..
(படுவது)
கல்யாண
பந்தலில்
தோரணமா -
இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக்
மோகனமா
வில்லேந்தும்
காவலந்தானா
வேல் விழியால் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும்
மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(படுவது)
மன்னாதி
மன்னர்கள்
கூடும்
மாளிகையா -
உள்ளம்
வண்டாட்டம்
மாதர்கள் கூடும் மண்டபமா..
செண்டாடும்
சேயிழைதனா
தெய்வீக காதலிதானா..
செந்தூரம்
கொஞ்சும்
முகத்தில்
செவ்வாய்
மின்னும் தேன் மொழிதானா..
(பேசுவது)
படம்: பணக்கார குடும்பம்

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.⛹🏿

தினபூமி மதுரை 31.10.2019 பக்கம் 7


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Hமன அமைதி
‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.
‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ என்றாள் அம்மா
‘உன் பொண்ணு கிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது
தனிக்குடித்தனம் போயிடுன்னு’ அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.
‘ரொம்ப மகிழ்ச்சி. இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னா?’
‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’ அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.
நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாகப் பார்க்கிறது.
1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி என்ற மனநிலையே மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.
2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனிதநேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப்படுத்தும்.
3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி.
4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித்தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.
5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.
6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகி விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.
7. நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய் விட்டுச் சிரித்தால் மனம் மென்மையாகும்.
8. உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாதது. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.
9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.
10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்.
11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.
12. மனதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.
13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டைக்
குழந்தைகளுக்குக் கூட ஒருமித்த கருத்து தான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ
விடுவதே சிறந்த அணுகுமுறை.
14. கடமையைச் சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.
15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்.
மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.
16. நோய்கள் வரக்கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளைக் கடைப்பிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.
17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும். வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.
18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள்தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.
19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோகப் பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல்பட உதவும்.
20. மனதின் தீயசிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப்படுத்த உதவும்.
மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம்.. இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல்படுவோம்.
மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்...🙋‍♂️

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறலை சரி செய்ய உதவும் உணவு !*

நமது உடலின் தட்பவெப்ப நிலையை சமன் செய்வது நரம்பு மண்டலம். இந்த நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முரண்படும் போது நுரையீரல் மற்றும் இரைப்பையில் மாற்றம் நிகழும் அதாவது குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் சாப்பிட்ட பின்பு உண்டாகும் வயிற்று வலி இவற்றிலிருந்து விடுபட கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
கொத்தவரங்காயில் இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது.
கொத்தவரங்காய் (5), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புடலங்காய் (50 கிராம் - தோல், விதையுடன்), மூன்றையும் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி, வடிகட்டி காலை மற்றும் மாலையில் குடித்து வரவும். பின்பு வழக்கமாக உண்ணக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

Wednesday 30 October 2019

மக்கள்குரல் மதுரை 30.10.2019 பக்கம் 5


சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா கருத்தரங்கம்




நகரத்தார் வரலாற்றில் புதிய மைல்கல்..

நகரத்தார் வரலாற்றில் புதிய மைல்கல்..
நேற்று இரவு காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே 90நிமிடங்கள் நம்முடன் பங்கேற்று, புதிய தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி முயற்சிகளுக்கு வலிமை சேர்த்தார்.
அவர் தனது உரையில் நமது சொத்துக்கள் மீட்பதில் முழு உதவி செய்யவோம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் விரைவில் வர முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
புதிய நிர்வாகிகள் முயற்சி வெல்லட்டும். முன்னோர்கள் கனவு நனவாகட்டும்.
- மனிதத்தேனீ


மிழ்க் கடல் இராய.சொக்கலிங்கம் பிறந்த தினம் இன்று 30.10.1898. வாழிய அவர் புகழ் -மனிதத்தேனீ


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
29.10.2019
செவ்வாய் கிழமை
 
👉🏻இன்று கவிஞர் வாலி பிறந்தநாள்-1931.
கவிஞர் வாலி அவர்களின் இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்.
தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.
வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கவியரசர் கண்ணதாசன் எழுதி்ய பாடல் ஒன்று.
🎶
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
படம்: சுமைதாங்கி

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

Tuesday 29 October 2019

பரிதிற்மாற் கலைஞர் நினைவு தினக் கூட்டம்


கவிஞானி வாலி அவர்களின் பிறந்த நாள், வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உண்மையான ஏழை யார்? அந்த ஏழை எப்படி இருப்பார்?*
*༺༻*
பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான். பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.
*༺༻*
இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.
விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.
*༺༻*
கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன்
*உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?''* என்று கேட்டான்.
*༺༻*
துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.
பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான்.
*༺༻*
*உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''*
*அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா?* என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.
*༺༻*
*இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய்.*
*நீதான் உண்மையான ஏழை... நீயே போர்வையை வைத்துக் கொள்!''* என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.
*நீதி: எதிலும் திருப்தி இல்லாத, எவ்வளவு வந்தாலும் பத்தாது என்ற மனநிலையில் உள்ளவர்களே உண்மையான ஏழை*

நாளை காலை நடைபெறும் கூட்டம்.


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌸தன்னைத் தானே கவனிப்பதே "வாழும் கலை"*
*༺༻*
காசி மன்னரின் ரதம் இமயமலை நோக்கி
சென்று கொண்டிருந்தது. வாழ்வை
வெறுத்த அவருக்கு தற்கொலை
எண்ணம் அதிகரித்தது. வழியில் ஒரு
மனிதர் மரத்தடியில் தியானத்தில்
இருந்தார்.
*༺༻*
எளிமையான அவரது முகம்
தாமரை போல மலர்ந்திருந்தது.
காந்தத்தைக் கண்ட இரும்பாக அவரைக்
கண்டதும் ரதத்தை நிறுத்தினார் மன்னர்,
கண்களைத் திறந்த அந்த மனிதர், *'என்ன வேண்டும்?'* எனக் கேட்டார். *“காசியின் மன்னர் நான்! செல்வம் எல்லாம் இருந்தும், ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன்.* எளிமையாக இருந்தாலும்
உங்களின் பிரகாசமான முகம் என்னை
ஈர்க்கிறது. சாக முடிவெடுத்த
நிலையிலும், உங்களிடம் சற்று நேரம்
பேசத் தோன்றுகிறது. அதனால் நின்று
விட்டேன்" என்றார் மன்னர்.
*༺༻*
மன்னரின் பேச்சைக் கேட்டாலும், அந்த
மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின்
கால்களை நோக்கியிருந்தது.
மன்னருக்குச் சிறுவயது முதல்
கால்களை ஆட்டும் பழக்கம் உண்டு. அந்த
மனிதர் தனது கால்களையே பார்க்கிறார்
என்பதை அறிந்ததும் சட்டென
அசைப்பதை நிறுத்தினார் மன்னர்.
"மன்னா ! எவ்வளவு காலமாக இந்த
பழக்கம் உள்ளது?" எனக் கேட்டார் அவர்.
"நினைவு தெரிந்த நாள் முதல்...." என்றார்.
" இப்போது ஏன் நிறுத்தி விட்டாய்?" என்று
கேட்டார் அவர்.
" நீங்கள் என் கால்களையே உற்று
கவனித்தீர்கள்" என்றார்.
*"பார்த்தாயா! மற்றவர் உன்னைக் கவனிக்க வேண்டுமென கருதுகிறார். பிறரைச் சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய்.*
*༺༻*
உலகத்தைப் பற்றி கவலைப்படாதே.
உன் கால்களை நான் கவனித்ததால்,
நீண்டநாள் பழக்கத்தைக் கூட நிறுத்தி
விட்டேன் என்கிறாய். இனி *"உன்னை நீயே கவனிக்க தொடங்கு. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது தெரிய வரும்"*
என்றார்.
மன்னரின் மனதில் ஒளிக்கீற்று
படர்ந்தது. பணிவோடு, "தாங்கள் யார்?"
என்று கேட்டார்.
*"புத்தர்”* என்றார் அந்த மனிதர்.
காலில் விழுந்து வணங்கினார்.
*தன்னைத் தானே கவனிப்பதே வாழும் கலை* என்பதை அறிந்ததும், மன்னரின்
ரதம் அரண்மனை நோக்கி திரும்பியது.

மனிதத்தேனீயின் தேன்துளி


தீபாவளி இனிதாக ஆரம்பம்.



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வாழ்வில் வெற்றி கிடைப்பதற்கு முன்பே நாம் வெற்றியாளர் என்று நம்ப வேண்டும்.*
*༺༻*
வாயிலிருந்து வரும்
வார்த்தைகள்தான்
வாழ்வை உருவாக்கின்றன.
பேசுவதைக் கவனியுங்கள்.
எதைச் சொல்கிறோமோ
அது மெய்யாகிறது. நீங்கள்
உங்களைப் *புத்திசாலி* என்று
சொன்னால் நீங்கள் புத்திசாலி.
நாம் நம்மை பற்றி என்ன
சொல்கிறோமோ அதுதான் நாம்
சொன்னது மற்றும் நம்புவது
எதுவோ அதுவாகவே ஆகிறோம்
*உங்களால் முடியும்* என்று
நீங்கள் சொன்னால் உங்களால்
முடியும்; உங்களால் முடியாது
என்று சொன்னீர்களானால்
உங்களால் முடியாது. இரண்டு
வழிகளிலும் நீங்கள் சரியே”-
*༺༻*
எதிர்மறையான விஷயத்தையும்
சொல்ல நேர்மறையான வழி
ஒன்று நிச்சயம் உள்ளது. நான்
உடல்நலமின்றி உள்ளேன்
என்பதற்குப் பதிலாக,
குணமாகிக்கொண்டிருக்கிறேன்
என்று கூறுங்கள்.
நீங்கள் உடைந்துபோனதைப்
பற்றி இன்னொரு நபரிடம்
கூறவே கூறாதீர்!
"எனது
நிதி நிலை மாற்றத்திற்கு
உள்ளாகியிருக்கிறது” என்று
சொல்லுங்கள்.
*༺༻*
*நமக்கு நாமே உறுதி அளித்துக்கொள்வோம்*
நான் அருமையானவன்
நான் அதிகபட்சம்
ஆசீர்வதிக்கப்படுபவன்,
மிகவும் விரும்பப்படுபவன்.
நான் மேலானவன்.
நான் இங்கே வரும்போதும்
ஆசீர்வதிக்கப்பட்டவன்,
போகும்போதும்
ஆசீர்வதிக்கப்படுவேன்,
நான் நேர்மையானவன்.
எனது வார்த்தைகள் மலைகளை
நகரவைக்கும்,
நான் சாதனைகளை
முறியடிப்பவன்
என் கைகள் பட்ட இடமெல்லாம்
செழிக்கும்...
இதுபோன்ற செயல்முறைகள்
அகந்தையானவை என்று
சிலர் நினைக்கலாம்.
ஆனால், *அகந்தைக்கும், தன்னம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.*
*༺༻*
பணத்தை வெற்றி என்று பலர்
நினைத்துவிடுகிறார்கள்.
நல்லது செய்வதற்கான
கருவியாகப் பணத்தைப்
பயன்படுத்துங்கள். நன்றி
செலுத்துவதற்கான
கருவியாக மற்றவருக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும் கொடுக்கப்
பயன்படுத்துங்கள்.
ஆனால் வாழ்க்கையின்
லட்சியமாக அதை
ஆக்கிவிடாதீர்கள்.
*༺༻*
*பணத்தால் வென்றவர்களை விட எண்ணங்களால் வென்றவர்கள் அதிகம்*

மனிதத்தேனீயின் தேன்துளி


தித்திக்கும் தீபாவளியில்


திருநகர் எங்கள் இல்லத்தில் தீபாவளி, மத்தாப்பு ஒளியில் தொடங்கியது.




Saturday 26 October 2019

மாலைமுரசு 26.10.2019 பக்கம் 4


புதிய வரலாறு.......

புதிய வரலாறு.......
காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் புதிய தலைவர், மீட்புச் செம்மல், மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் செயல் திறன் இந்த ஆண்டு மிட்டாய் திருவிழா களை கட்டிய கண் கொள்ளா காட்சிகள்.
பால்க்குடம் எடுத்து நமது சிக்ரா நந்தவனத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் அருள் பெற்றனர்.
இனி எல்லாம் நம்வசமே. - மனிதத்தேனீ






தினபூமி மதுரை 26.10.2019 பக்கம் 6


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' *கவலையின்மையே* *பலத்தைத்* *தரும்*
...............................
இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான்.
அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.
வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும்.
கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார்.
ஒரு வீதியில் செல்லும் போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.
“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்கு பதில் அளித்தான்.
மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம்,
“அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான்.
இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள்.
‘சம்பாதித்து வந்தால் தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவன் ஆகி விடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார்.
யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை.
அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளி விட்டது.
“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான் இளைஞன் அதனால் பலமிழந்தான்.
கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.
ஆம்.,நண்பர்களே..,
மனது சரியாக சிந்திக்கத் தொடங்கினால் மனக்கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை.
கவலையால் உடல், உங்கள் நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது..
வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழித்தேயாக வேண்டும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 25 October 2019

மதுரைமணி 25.10.2019 பக்கம் 3


மக்கள்குரல் மதுரை 25.10.2019 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடவுளின் வேலை தான் என்ன*
ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது:
''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''பிறந்து கொள்''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது:
''நான் வளர வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''வளர்ந்து கொள்''
வளர்ந்த குழந்தை கேட்டது:
''நான் படிக்க வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''படித்துக் கொள்''
படித்த பையன் கேட்டான்:
''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
🌀கடவுள் சொன்னார்:
''தேடிக் கண்டுபிடி''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்:
''எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''நல்ல பெண்ணாய்ப் பார்த்துத் திருமணம் செய்துகொள்''
திருமணம் ஆனதும் கேட்டான்:
''நல்ல குழந்தை வேண்டுமே!''
🌀கடவுள் சொன்னார்:
''பெற்றுக் கொள்''
வயதானபின் அவன் கேட்டான்:
''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே''
🌀கடவுள் சொன்னார்:
''இறந்து கொள்''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்:
''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய். அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
🌀கடவுள் புன்னகையுடன் சொன்னார்:
*''இத்தனை நிகழ்வுகளிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இருக்கிறதே, அதுதான் நான்''*