Saturday 31 August 2019

தினபூமி மதுரை 31.08.2019 பக்கம் 6


மணிவிழா மலர் தமிழ்வானம் பெற்று இன்று காலை திருநகரில் மனிதத்தேனீக்கு வாழ்த்து தெரிவித்த நல்லாசிரியர், பொதுப்பணி ஆர்வலர் ஜான் பெலிக்ஸ் கென்னடி, ஆர். லூனா பெலிக்ஸ், ஜெ. பெனிட்டோ பாஸ்டின், அருகில் அலமேலு சொக்கலிங்கம்.


இன்று பிற்பகல் சிறப்புரை.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சொந்தம்:- தந்தை வழியில் ஏழு தலைமுறைக்கு உட்பட்டவர்கள்.
பந்தங்கள் :- தந்தை வழியில் ஏழு தலைமுறைக்கு அப்பால்பட்டவர்கள்
உற்றார்;- தந்தை வழியில் மூன்று தலைமுறைக்கு அப்பால் பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர்.
உறவினர்;- தனக்கும் தந்தை வழியில் மூன்று தலைமுறைக்குள் பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர்.
அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது .
இந்தச் செய்தியை முன்னோர்கள் ஜீன்களை ' தாது ' என்பார்கள் . தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது. தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. இவை தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்பான டி.என்.ஏ - ல் உள்ளது.
மேலும் ஆத்ம தத்துவத்தாலும், காரண தத்துவத்தாலும், ஐந்திணைகள், மற்றும் சமுதாய பழக்கவழக்கங்களால் சந்ததிகளின் குணநலங்கள் மாறுபடுகிறது.

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 30 August 2019

மதுரைமணி 30.08.2019 பக்கம் 4


பன்முகப் பேராற்றல் மிக்க தமிழ் உணர்வாளர், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ் இலக்கியக் கருவூலம், நீதியரசர் வி. ராமசுப்பிரமணியன் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள செய்தியறிந்து மகிழ்ச்சி. வாழிய நேர்மையாளரின் பணி. - மனிதத்தேனீ


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்




இன்று தொடங்கும் புத்தகத் திருவிழாவில் 03-09-2019 மாலை எனது சிறப்புரை, கடந்த 13ஆண்டுகளாக தொடர்ந்து உரையாற்றுகின்றேன்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் 
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு கழுதை சொன்னது*
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!
கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐕 🐕 🐕 🐕 🐕 🐕
அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு நாய் கூறியது 
கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!
கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐒 🐒 🐒 🐒 🐒 🐒
அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!
*இதற்கு குரங்கு கூறியது 
20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!
கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!
👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼
கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!
*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*
*இதற்கு மனிதன் கூறினான் 
20 வருஷம் ரொம்ப குறைவு...!
*கழுதை* வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
*நாய்* வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
*குரங்கு* வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!
கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!
அன்று முதல்
மனிதன் முதல்
*20 வருடங்களை*
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!
குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
*15 வருடங்களுக்கு*
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!
வயதாகி, Retire ஆன
பிறகு *குரங்கு* போல்
*10 வருடங்களுக்கு*
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!
*மனித வாழ்க்கையின் உண்மை...!*

மனிதத்தேனீயின் தேன்துளி


என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்


Thursday 29 August 2019

சரியான இடம் பிழையான இடம்...

சரியான இடம் பிழையான இடம்...
ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,
*மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்* என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
*இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும்* என்றனர்.
தந்தை, *பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார்* என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், *இதற்கு 5000 டாலர் தரமுடியும்* என்றனர்,
தந்தை, *இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார்* என்றார்,
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், *நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்* என்றனர்.
தந்தை, மகனைப் பார்த்து, *மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிருத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை* என்றார்.
*உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்*
*உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே*
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.

மனிதத்தேனீயின் தேன்துளி