Wednesday 27 May 2020

புதிய பாரதம்..

புதிய பாரதம்..
இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்திருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது.
சீனாவின் நோக்கம் என்னவாக இருக்கும்..?
சீனாதான் சர்வதேச அளவில் கொரோனா பரவுவதற்க்கு காரணம் என்று,
அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நாடுகளும் சீனாவை குற்றம் சாட்டுவதால் அதனை திசை திருப்பும் வகையில் சீனா இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று சர்வதேச நாடுகள் சொல்லும் போது, சர்வதேச அளவில் சீனாவுக்கு என்று இருந்த கொஞ்சம் நஞ்சமதிப்பும் நாளுக்கு நாள் குறைய தொடங்கி இருக்கிறது.
உலகின் உற்பத்தி மையமாக திகழ்ந்த சீனா தனது பொருட்களை, மற்ற நாடுகளில் விற்க இனி கடுமையாக போராட வேண்டியிருக்கும். அசலை உற்பத்தி செய்வதை காட்டிலும் அசலுக்கு நிகரான போலியை உற்பத்தி செய்வதில் சீனர்கள் எப்போதும் கைதேர்ந்தவர்கள். எதிலும் ஒரு டூப்ளிகேட் வேணும்னு கேட்டா,உலகில் சீனாவை தான் எல்லாரும் சொல்லுவாங்க.(கொரோனாவை தவிர.)
சீனா ஏற்றுமதியில் மிகப்பெரிய ஒரு நாடு. சீனாவில் இருந்து நிறைய நாடுகள் இறக்குமதி செய்கிறார்கள்.இந்நிலையில், சீனாவை எல்லா நாடுகளும் குற்றம்சாட்டுவதால் நமக்கு பாதிப்பு ஏற்படுமோ, உற்பத்தி செய்வதில் நமக்கு பாதிப்பு ஏற்படுமோ, தனது பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்க கடுமையாக போராட வேண்டியிருக்குமோ.இதை எப்படி நாம் சமாளிக்க என்று நம் எல்லையில் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். சீனா மட்டுமல்ல?சீனாவின் நட்பு நாடாகவும்,நமக்கு வேண்டாத நாடாகவும் உள்ள,பாகிஸ்தான்,நேபால் ஆகிய நாடுகளையும் தூண்டிவிட்டு,நமக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.
1949 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சி செய்கிறது.. இதுவரைக்கும் இது மாதிரியான கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல் அவர்கள் சந்தித்தது இல்லை. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு கெட்ட பெயர், அவ பெயர் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருக்கின்றது. இது சீன மக்களிடம் ஒரு அதிருப்தியை ஏற்படுத்திவிடுமோ ? என்ற ஒரு அச்சமும் ஒரு காரணம்.
சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நாடாக வளர்ந்து வரக்கூடியது நமது இந்தியா. இதை நாம் வளரவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு,நமது வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதும் சீனாவின் திட்டம்.
கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் பரவியது. இதை உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அனைத்தும், சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்காங்க, கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். அதில் இந்தியாவும் இணைந்து இருப்பது கூட ஒரு காரணம்.
இப்பொழுது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் பொருளாதாரம் சரிந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் இதுபோன்ற ஒரு நெருக்கடியை இந்தியாவுக்கு கொடுக்க சீனா திட்டமிட்டிருக்கும், அதனால தான் எல்லையில் படைகளைக் குவித்து கொண்டிருக்கிறார்கள்.
சீனா தற்போது எல்லையில் படைகளை குவித்து வருவது ஒரு புதிய ஐடியா கிடையாது. சீனாவின் அதிபர் மட்டுமல்ல ஜி ஜின்பிங், ராணுவத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1962ல் சீனாவில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதிபராக இருந்த மாவோ ஜெடாங்கின் தவறான கொள்கை தான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.அப்போதும் இதே போன்று எல்லையில் ஒரு பிரச்சினையை உருவாக்கியவர் தான் இந்த மாவோ ஜெடாங்.
1979ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு பொருளாதார பாதிப்பை திசை திருப்ப அப்போதைய அதிபர் டெங்க் ஜியோபிங் வியட்நாம் போரை நடத்தினார்.
இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சிபோல் அல்லாமல், பிஜேபி ஆட்சிக்கு வந்தபின், டவுலட் பெக் ஓல்டியை சாலை மூலம் சீனாவை கனெக்ட் செய்தது தான் சீனாவுக்கு இந்தியா மேல் ஏக கடுப்பு..
2015 இல் புருட்சே கேம்ப் என்னும் இடத்தில் சீனா தற்காலிக முகாம்களை அமைத்து அந்த இடம் தனக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடியது.
ஆனால் அந்த புருட்சே கேம்ப் வழியாகவே இன்று இந்தியா சாலை அமைத்து கட்டிடம் கட்டி முகாம் அமைத்ததை தான் சீனாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கம்யூனிஸம் ரஷ்யாவில் ஆரம்பித்த நோக்கம் என்னமோ நியாயமான காரணம் தான். அன்று தன்னை காக்க அடுத்தவனை அழிக்க ஆரம்பித்த கம்யூனிஸம், இன்று தான் கொழுக்க அடுத்தவனை அழிப்பது தான் கம்யூனிஸத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உள்ளது.
இப்படி சீனா தான் வளரவும், தான் பிரச்சனையை மறைக்கவும் தன்னை சுற்றி உள்ள நாடுகளை இம்சிப்பதையே சீன கம்யூனிஸ்ட் அரசு கொள்கையாக வைத்துள்ளது.
ஆனால் இதை எல்லாம் பிஜேபி அரசு முறியடிக்க நினைத்ததன் செயல் வடிவமே அந்த SSN ரோட்..
டவுலட் பெக் ஓல்டி முதல் கோயுல் வரை இந்திய‌ ராணுவமும் டேங்கிகளும் எளிதாக செல்ல வழி செய்யும் சாலை தான் இந்த SSN ரோட்.
டவுலட் பெக் முதல் டெப்ருக் வரையில் எல்லா காலத்திலும் செல்வதற்கு ஏற்ற சாலை யாக இந்த 244 கிலோமீட்டர் பாதை சாலையாக மாற்றியது தான் நமது பிஜேபி அரசு சீனாவிற்கு தந்த மாபெரும் பதிலடி ..
16000 அடி உயரத்தில் ,244 கிலோமீட்டர் சாலை, அதில் 37 பாலங்கள், என இந்த சாலையை அமைக்க ஒரு மாபெரும் பொறியியல் சாதனையையே செய்து சீனர்களுக்கு புதிய இந்தியாவை காட்டியது..
அதிலும் இந்த சாலை கல்வான் பல்லாதாக்கு பகுதியில் சீன எல்லைக்கு 9 கிலோமீட்டர் அருகே செல்கிறது..
ஒருகாலத்தில் எங்கு எல்லாம் சீனா தங்கள் இடம் என கூடாரம் அமைத்ததோ இன்று அந்த இடத்தில் எல்லாம் இந்திய ராணுவத்திற்கான ஆல் வெதர் சாலை,
சுருக்கமாக சொன்னால் முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது பைனாகுலரில் பார்த்தாலும் தெரியாத தூரத்தில் இருக்கும் சீன படைகளை,
இன்று பிஜேபி ஆட்சியில்,இந்தியா அவர்களுக்கு அருகே சென்று சாலை அமைத்து இன்று கெத்தாக அவர்களை கண்ணுக்கு கண் பார்த்து முறைத்தால் சீனாகாரனுக்கு எப்படி இருக்கும்??..
இதுவரை காங்கிரஸ் ஆட்சியில் சீனர்கள் இந்திய எல்லைக்குள் வந்தால், இந்தியா, "இது எங்கள் இடம்" என்னும் பாதாகைகளை காட்டி மைக்கில் சத்தம் மட்டுமே எழுப்புவார்கள்.
ஆனால் பிஜேபி ஆட்சியில், கடந்த மே 5 ஆம் தேதி கல்வான் அருகே ஊடுருவிய சீனர்களை இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கி எலும்புகளை முறித்து அணுப்பி உள்ளனர் இந்திய ‌ராணுவத்தினர்..
மே 9 ஆம் தேதி சிக்கீமில் ஊடுருவிய சீனர்களின் பல்லை உடைத்து அனுப்பி உள்ளது.. மே 14 ஆம் தேதி இந்திய எல்லை அருகே பறந்த சீன ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த நம் சுகாய் விமானம் ஆயத்தமானதால் அந்த ஹெலிகாப்டர் பின் வாங்கியது..
இப்படி சீன ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக சீன சொல்லும் இடத்தில் எல்லாம் இன்று இந்தியா கொடி..
சீனா ஊடுருவி காலம் போய் இன்று சீன பத்திரிக்கைகள் இந்தியா சீன எல்லையில் ஊடுருவி அந்து மீறி கட்டிடங்கள் கட்டியுள்ளது என்று குறை சொல்லும் அளவு வளர்ந்தது தான் புதிய பாரதம்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment