Wednesday 31 January 2018

வைத்தியநாத அய்யர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மக்கள்குரல் 31.01.2018 பக்கம் 10


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தைப்பூசம் என்றால் என்ன தெரியுமா?
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும்.
அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.
எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர்.
சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். #chendurmurugan #Tiruchendur

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍳பொருளைக் கொடுத்து உதவுதல் மட்டுமே உதவி என்கிற ஓர் தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. உங்களது அறிவை, அனுபவத்தை பகிருங்கள் அதுவும் ஓர் சிறந்த கொடையே.
🍳யார் கிட்ட எப்படி பேசனும்னு தெரியாததாலேயே சில உறவுகளையும், நண்பர்களையும் இழக்க நேரிடுகிறது. அதுனால நிதானமா பாத்துப் பேசுங்க.
🍳நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.
🍳வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகச் சிறந்த சேவை என்பது, உன் வேலையை அடுத்தவங்க உதவி இல்லாமல், நீயே செய்து கொள்வதே.
🍳மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்தை குறைச்சாலே இருக்குற மீதி வாழ்க்கையை நிம்மதியா வாழலாம்.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


கும்பாபிஷேக சிறப்புப் பட்டிமன்றம்





வீரமாமுனிவர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

Nijam......
மனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை!
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!
நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!
பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது.. விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்.. ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது..!!
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!
நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா, மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!
வாழ்க நலமுடன்....

மனிதத்தேனீயின் தேன்துளி


Tuesday 30 January 2018

மாலைமுரசு 30.01.2018 பக்கம் 4


மதுரைமணி 30.01.2018 பக்கம் 4


மக்கள்குரல் 30.01.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும்.
சுய நம்பிக்கை என்பது உங்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பிற்கு இன்னொரு பெயர் அவ்வளவு தான். உங்கள் மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நம்பிக்கை இருந்தால் நீங்கள் யார் எவர் என்பதற்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் உங்கள் தோள்களில் தாங்கிக் கொள்வீர்கள். அது இருப்புணர்வின் ஒரு மகத்தான அனுபவம். இந்த அனுபவம் வந்து விட்டால் உங்களை யாரும் அடிமைப் படுத்த முடியாது.
தனது சொந்தக் காலிலேயே நிற்கும் வலிமையுள்ள மனிதனின் அழகைப் பார்த்திருக்கிறீர்களா? எது வந்தாலும் சரி, இன்பம், துன்பம், வாழ்வு, சாவு எதுவாக இருந்தாலும் சரி தன் மேல் அன்பு வைத்திருக்கும் மனிதன் இருப்புணர்வோடு ஒருங்கிணைந்து இருக்கிறான். அப்படிப் பட்ட மனிதன் தனது வாழ்வை மட்டும் அல்ல, தனது சாவையும் முழுமையாக ரசிக்கிறான்.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸை இந்த சமுதாயம் தண்டித்தது. சாக்ரடீஸைப் போன்ற மனிதர்கள் இந்தச் சமுதாயத்தின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. காரணம், அவர்கள் எப்போதும் சுதந்திரமான தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள். இந்த சமுதாயத்தையோ, மற்ற மனிதர்களையோ தங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை.
சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். அவரைக் கொல்வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டிருந்தவன் அவருக்கான விஷத்தைக் கலந்து கொண்டிருந்தான். சூரியன் மேற்கில் மறையும் நேரம். சாக்ரடீசுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட நேரம் அது தான்.
ஆனால் அந்த அதிகாரி இன்னும் விஷத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தான். தாமதமாகி விட்டது. சாக்ரடீஸ் உற்சாகத்துடன் கேட்டார்: “காலம் கடந்து கொண்டிருக்கிறது. சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏன் தாமதம்?”
அந்த அதிகாரியால் இதை நம்ப முடியவில்லை. இப்படி எந்த மனிதனாவது தனது சாவிற்கு அவசரப் படுவானா? எந்த மனிதனாவது தனது சாவிற்காக குறிக்கப் பட்ட நேரம் தாண்டி விடக் கூடாது என்று ஆதங்கப் படுவானா? சொல்லப் போனால் இந்தத் தாமதத்திற்கு சாவு தண்டனைக் கைதி நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சில நிமிடங்களாவது அதிகமாக வாழ முடிந்ததே என்று நன்றி சொல்ல வேண்டும்.
அந்த அதிகாரி சாக்ரடீஸ் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன். நீதிமன்றத்தில் அவர் பேசியதைக் கேட்டிருக்கிறான். அந்தப் பேச்சில் இருந்த உண்மையில், அதன் கம்பீரத்தில், அந்தப் பேச்சு வெளிப் படுத்திய அந்த மேதையின் உள் அழகில் மயங்கியிருக்கிறான். ஏதென்ஸ் நகர மக்களிடம் இருந்த மொத்த அறிவையும் விட சாக்ரடீசிடம் அதிக அறிவு இருந்ததை உணர்ந்திருக்கிறான் அந்த அதிகாரி.
அதனால் தான் விஷம் கலப்பதை வேண்டுமென்றே தாமதப் படுத்திக் கொண்டு இருந்தான். அப்படிப் பட்ட மேதை இன்னும் சில நிமிடங்களாவது அதிகமாக வாழட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் அவன் மெதுவாகச் செயல் பட்டான். ஆனால் சாக்ரடீஸ் அவனை மேலும் தாமதப் படுத்த அனுமதிக்கவில்லை. “சோம்போறியாக இருக்காதே. விஷத்தை உடனே கொண்டு வா.” என்று அந்த ஞானச் சிங்கம் கர்ஜித்தது.
அந்த அதிகாரி கேட்டான்: “ஐயா, நீங்கள் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள்? உங்கள் முகத்தில் ஓர் அபரிமிதமான ஒளியை நான் பார்க்கிறேன். உங்கள் கண்களில் எதையோ அறிந்து கொள்ளும் தாகம் தெரிகிறது. ஐயா. உங்கள் நிலை உங்களுக்கு புரியவில்லையா? நீங்கள் இன்னும் சில நிமிடங்களில் சாகப் போகிறீர்கள்,”
கிரேக்க மேதை ஒரு புன் சிரிப்புடன் சொன்னார்.
“அதை அறியத் தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். சாவைப் பற்றி அறியத் தான் ஆவலாக இருக்கிறேன். வாழ்வைப் பற்றி எனக்குத் தெரியும். வாழ்வு அழகானது. வாழ்வின் கவலைகள், ஆசைகள், வலிகள் எல்லாம் நான் அறிவேன்.”
“வாழ்வு என்பது பெரிய இன்பம் தான். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியிடுவதே இன்பம் தான். நான் வாழ்ந்து விட்டேன். நான் அன்பு செலுத்தியிருக்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ அதை எல்லாம் செய்து விட்டேன். என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தேனோ, அதை எல்லாம் சொல்லி விட்டேன்.
“இப்போது நான் சாவை ருசி பார்க்க ஆவலாக இருக்கிறேன். அதுவும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக!
“இறந்த பின் என்ன ஆகும்? இரண்டு சாத்தியக் கூறுகள் தான் உள்ளன. ஒன்று, கீழை நாட்டு ஞானிகள் சொன்னதைப் போல எனது ஆன்மா வேறு வடிவத்தில் வாழலாம். அது எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? உடல் என்ற சிறையிலிருந்து விடு பட்டு உயிர் தன் போக்கில் பயணிப்பது எவ்வளவு சுகமானது?
“ஆம். இந்த உடல் ஒரு சிறை தான். இதற்கு என்று சில கட்டுப் பாடுகள் உள்ளன. அவை எல்லாம் அற்றுப் போனால், உடல் என்னும் விலங்கு அறுந்து விழுந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே சிலிர்க்கிறதே!
“இரண்டாவது சாத்தியக் கூறு, உடல் தான் இருக்கிறது ஆன்மா என்று ஒன்றும் இல்லை என்று மேற்கத்திய ஞானிகள் சொல்வது போல, நான் இறந்தவுடன் எல்லாம் முடிந்து போகலாம். அது கூட ஓர் இன்ப நிலை தான். இல்லாமல் இருக்கும் இணையற்ற இன்ப நிலை. இருப்பது என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்.
“இன்னும் சில நொடிகளில் இல்லாமல் இருப்பது என்றால் என்ன என்று நான் தெரிந்து கொள்ளப் போகிறேன். நானே இல்லாமல் போய் விட்ட பின் பிரச்சினை தான் என்ன? ஒன்றுமில்லை. நான் ஏன் கவலைப் பட வேண்டும்? கவலைப் படத் தான் நான் இருக்கப் போவதில்லையே. ஏன் இருக்கும் காலத்தை வீணாக்க வேண்டும்?”
தன்னைத் தானே விரும்பும் மனிதனால் தான் இப்படியெல்லாம் பேச முடியும். தனது சாவிற்கான பொறுப்பைக் கூட சாக்ரடீஸ் விரும்பி ஏற்றுக் கொண்டார். நீதிமன்றம் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மக்களுக்கு அவர் மேல் ஒரு தவறான அபிப்பிராயம் இருந்தது. மிகச் சாதாரண அறிவுள்ள கிரேக்க மக்களால் அந்த மேதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தனி மனிதனின் அறிவு அவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியும் என்று அந்த முட்டாள்களால் நம்ப முடியவில்லை. ஆனால் என்ன செய்வது? அன்றைய தேதியில் முட்டாள்கள் தான் பெரும் பான்மையானராய் இருந்தார்கள். அந்த முட்டாள்கள் தான் அந்த மேதைக்கு மரண தண்டனை விதித்தனர்.
சாக்ரடீசின் ஒரு வாதத்திற்குக் கூட அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஏன், சாக்ரடீசின் வாதத்தை அவர்களால் புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. எங்கே பதில் சொல்ல? அவர்களின் வாதங்களை சாக்ரடீஸ் அழகாக தகர்த்து எறிந்தார்.
அன்று கிரேக்க நாட்டில் பெயரளவிலாவது ஜனநாயகம் இருந்தது. அதனால் தான் - ஓஷோ
நல்லதே நட
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினக் கூட்டம்





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் . 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும். இது ஒரு அனுபவ சத்தியமான உண்மை .

மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 29 January 2018

மதுரைமணி 29.01.2018 பக்கம் 4


TRINITY MIRROR 29.01.2018 பக்கம் 6


மக்கள்குரல் 29.01.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நமது ஏற்ற தாழ்வுக்கு காரணம் நம் எண்ணங்களே.
மனது சந்தோஷமா இருக்கும் போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை. எப்பவுமே சந்தோஷமா இருங்க. எதிர் காலத்தை எதிர் கொள்ள மகிழ்ச்சியான மன நிலையும் சூழ்நிலையும் அமையும்.
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது.
நமது எண்ணங்களின் அலைவரிசைக்கு ஏற்ப இருந்தால் அவர்கள் நல்லவர்கள். இல்லையேல் அவர்களின் தரத்திற்கேற்ப பெயரை வைத்து மோசமானவர் ஆக்கி விடுகிறோம்.
நல்லதே நினைப்போம். நன்மையாக முடியட்டும்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

தமிழின் தலைநகர் மதுரையில் நமது அம்மாவின் எண்ணப்படி தமிழ்த்தாய் கோவிலுடன் சுற்றுலா மற்றும் தமிழ் வளர்ச்சிக்கான மையம் அமைத்திட அரசை வலியுறுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்தபோது. 29-01-2018காலை


மாலைமுரசு 28.01.2018 பக்கம் 5



மதுரைமணி 28.01.2018 பக்கம் 2


‘முருகு’ இலவச நூல் வெளியீட்டு விழா




தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் பானர்


மதுரை பைகாராவில் நாளை மாலை விழா


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵 நமக்கு கிடைத்த வாழ்க்கை கூட கிடைக்காத பலரையும் பார்க்கும் போது கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்ல தோன்றுகிறது.
🏵 அறிமுகமில்லாத ஒருவருக்கு உதவி விட்டு தடயமின்றி நகரும் போது எதையோ சாதித்தது போல தோன்றி விடுகிறது.
🏵 சந்தோஷம் என்பது பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்றது இல்ல.. எவ்வளவோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு வாழ்றது..
🏵 புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப் படுத்துதல் சிறந்தது! உதவி செய்வதை விட மற்றவர்கள் வாழ வழி செய்வது சிறந்தது!
🏵 பிரச்சனையை எதிர்த்து போராடுறது திறமை என்றால், பிரச்சனையை விட்டு விலகிப் போறது புத்திசாலித்தனம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

காரைக்குடி கல்விக்குடியாகிட வள்ளல் அழகப்பருக்கு பெருநிலம் கொடுத்த எங்கள் இலுப்பைக்குடி கோவிலில் இன்று தரிசனம்.


தடம் மாறாத அரசியல் பயணத்தில் அம்மாவின் ஆற்றல்மிக்க அமைச்சர் அன்புச் சகோதரர் செல்லூர் கே. ராஜூ-ஜெயந்திராஜு தம்பதியரின் பேரப்பிள்ளைகள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் - மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்


மனிதத்தேனீயின் தேன்துளி


மதுரை திருநகர் தனக்கன்குளம் அண்ணாமலையார் பில்டர்ஸ் சிவாங்கா அவென்யூ அருள்மிகு இராஜ கணபதி ஆலய கும்பாபிஷேக சிறப்புப் பட்டிமன்றத்தில் நடுவராக மனிதத்தேனீ, கவிஞர் கோ, எஸ். திருநாவுக்கரசு, பாரதி சத்தியநாராயணன், லெட்சுமி சிதம்பரம் வாதிட்டனர். மற்றும் உரிமையாளர் கண்டனூர் மு. அழகப்பன், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வைரமணி, செயலாளர் அசோக்குமார், பொருளாளர் பொன். கார்த்திகேயன் உள்ளனா்.