Friday 31 January 2020

வைத்தியநாத அய்யர் நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 31.01.2020 பக்கம் 5


அண்ணல் காந்தி நினைவு தினக் கூட்டம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*பூர்ணாதேவி பாத்திமாவாக மாறினாள், தற்போது பிணமாக வங்கதேசத்தில் இருந்து திரும்புகிறாள் - கதறும் பெற்றோர் !!*_
_*அவிநாசி* :- காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு விவாதம் ஒன்றில், 140 கோடி பேர் வாழும் இந்தியாவில் கூடுதலாக குடியுரிமை சட்டத்தால் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் குடியா மூழ்கிவிடும்? என்று கேட்டிருந்தார். தற்போது உண்மையில் ஒரு குடி மூழ்கிவிட்டது!_
_சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் கொண்டுவந்து இந்தியாவில் அமல்படுத்தியுள்ளது. இதனை இந்தியாவின் எதிர்கட்சிகள் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாக கூறி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி வந்தன. மேலும் தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதனை முழுமையாக எதிர்த்து வந்தன. இந்த சூழலில்தான் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக புகுந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என கூறி அவிநாசியில் வேலை செய்துள்ளான் பங்களாதேஷை சேர்ந்த ரிஷிமுக் என்பவன்._
_இவன் அவிநாசி வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் - செல்வகோமதி தம்பத்தினரின் மகள் பூர்ணிமா தேவியை காதலித்து திருமணம் செய்து, அவளை பாத்திமா என மதம் மாற்றி தொடக்கத்தில் மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்றவன், அதன்பிறகு பங்காளதேஷிற்கு அழைத்து சென்றுவிட்டான்._
_தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் மனைவியை செக்குமாடாக பயன்படுத்தியவன், அவளை வேலைக்கு செல்லுமாறு கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 9-ம் தேதி வங்கதேசத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பூர்ணிமா பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என செய்திவர, அதிர்ந்து போய்விட்டனர் பெற்றோர்._
_இந்நிலையில் வங்கதேச போலீசார் பூர்ணிமா என்ற பாத்திமா தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் சென்று மகளை மதமாற்றியது இல்லாமல் நாடுகடத்தி தற்போது கொன்று விட்டான் எனவும், அவன் வேறு கல்யாணம் செய்வதற்காக எனது மகளை பலி கொடுத்துவிட்டான் எனவும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்தார்._
_விவகாரம் நாடு கடந்து இருப்பதால் தூதரகம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும் என அவிநாசி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐயோ இந்த குடியுரிமை சட்டம் முன்பே வந்திருந்தால் ஊடுருவல்கார நாய் அவிநாசிவரை வந்திருப்பானா? என் மகள் வங்கதேசம் போயிருக்கமாட்டாளே என கதறுக்கின்றனர். தற்போது அவர்களின் கண்ணீர் 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஊடுருவல்காரர்களை அனுமதித்தால் என்ன குடியா மூழ்கிவிட போகிறது என கேட்ட தனியரசுக்கும், குடியுரிமை சட்டத்தில் ஏன் குறிப்பிட்ட மதத்தினரை சேர்க்கவில்லை என்று போராடியவர்களுக்கும் பதில் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது._
_ஊடுருவல்காரர்கள் இங்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டுவிட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு தப்பித்து சென்று விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது இங்குள்ள பூர்ணிமாவின் பெற்றோர்கள்தான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், கோவை, அவிநாசி, காங்கேயம் ஆகிய பகுதிகளில் மட்டும் போலி அடையாள அட்டைகளுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல பங்களாதேஷ் ஊடுருவல்காரர்கள் இருப்பதாக புகார் கூறப்படுகிறது._
_*இப்போது சொல்லுங்கள் இந்தியாவிற்கு CAA NRC, NPR தேவையா? இல்லையா?*_

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*🍁🍁புதிய பார்வை*🍁🍁
சில காயங்கள்
*மருந்தால்*
சரியாகும்.
சில காயங்கள்
*மறந்தால்*
சரியாகும்...
மனிதனுக்கு
*பிரச்சனை*.
அதனால்,
கடவுளுக்கு
*அர்ச்சனை*...
*வறுமை*
வந்தால்
வாடக்கூடாது.
*வசதி*
வந்தால்
ஆடக்கூடாது...
*கருப்பு*
மனிதனின்
இரத்தமும்
சிவப்புதான்.
*சிவப்பு*
மனிதனின்
நிழலும்
கருப்புதான்...
வியர்வை
துளிகள்
*உப்பாக*
இருக்கலாம்.
ஆனால்,
அவை
வாழ்க்கையை
*இனிப்பாக*
மாற்றும்...
*வீரன்*
சாவது
இல்லை.
*கோழை*
வாழ்வதே
இல்லை...
உன்னை நீ
*செதுக்கி*
*கொண்டே*
இரு.
*வெற்றி*
பெற்றால்
சிலை.
*தோல்வி*
அடைந்தால்
சிற்பி...
மனிதனுக்கு
ABCD
*தெரியும்*.
ஆனா *"Q"* ல
போக *தெரியாது*.
எறும்புகளுக்கு
ABCD
*தெரியாது*.
ஆனா *"Q"* ல
போக *தெரியும்*...
உண்மை
எப்போதும்
*சுருக்கமாக*
பேசப்படுகிறது.
பொய்
எப்போதும்
*விரிவாக*
பேசப்படுகிறது...
பேசிப்பேசியே
நம்மை
ஏமாற்றுகிறார்கள்
என்பதெல்லாம்
*பொய்*.
அவர்கள்
பேச்சில், நாம்
ஏமாந்து
விடுகிறோம்,
என்பதே
*உண்மை*...
குறைகளை
*தன்னிடம்*
தேடுபவன்
தெளிவடைகிறான்.
குறைகளை
*பிறரிடம்*
தேடுபவன்
களங்கப்படுகிறான்.
*கடனாக*
இருந்தாலும்சரி,
*அன்பாக*
இருந்தாலும் சரி.
*திருப்பி*
*செலுத்தினால்தான்*
மதிப்பு...
உறவினர்களில்
யார்
முக்கியம்
என்பதை...
*உயிரற்ற*
பணமே
முடிவு செய்கிறது...
பணம்
கொடுத்துப்பார்.
உறவுகள் உன்னை
*போற்றும்*.
கொடுத்த
பணத்தை
திரும்ப
கேட்டுப்பார்.
மண்ணை வாரி
*தூற்றும்*...
அறுந்து போன
செருப்புக்கு கூட,
வீட்டில்
ஒரு இடம்
*உண்டு*.
இறந்து போன
மனித உடலுக்கு,
வீட்டில்
ஒரு இடமும்
*இல்லை*...
இதுதான்
உண்மை.
இதுவே
வாழ்க்கை...
🌹🌹🙏🙏🙏🌹🌹

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீயின் தேன்துளி


Thursday 30 January 2020

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

‘’பணம்தான் வாழ்க்கையா’’?
………………………………
வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.
“பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”
இருப்பதை வைத்து திருப்தியோடு வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது என்று சொல்ல முடியாது.
ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை பற்றி அதிகமாக கவலைப் பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.
பண பிரச்சினையினால்தான் நிறையப் பேர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்கு தங்கள் துணையை விட, ஏன் தங்கள் உயிரைவிட பணம்தான் முக்கியமாக இருக்கிறது.
ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். “
ஒருவனுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு நிம்மதியான வாழ்வைத் தராது”
ஆம்.,நண்பர்களே..,
பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக நினைக்கிற ஆட்களோடு பழகாதீர்கள்.
பணத்தைவிட நல்ல குணங்களை பெரிதாக மதிக்கும் நபர்களோடு பழகுங்கள்.
பண ஆசை உங்களுக்குள் வேர்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களைவிட,, குடும்பத்தைவிட,, உங்களைவிட ,பணம் முக்கியம் இல்லை.பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடாது.( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி)

மனிதத்தேனீயின் தேன்துளி


இன்று மாலை நடைபெறும் கூட்டம்.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க உதவும்: வி.கே முனுசாமி பேட்டி…
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு புதுச்சேரியைச் சோ்ந்த சுடுகளிமண் சிற்பக் கலைஞா் வி.கே.முனுசாமி தோ்வு செய்யப்பட்டாா்.
புதுவை மாநிலம், வில்லியனூா் கணுவாப்பேட்டையைச் சோ்ந்தவா் வி.கே.முனுசாமி (53). தனது 8 வயது முதலே சுடுகளிமண் சிற்பம் செய்யும் முறையை கற்ற இவா், சா்வதேச அளவில் புகழ்பெற்று வருகிறாா்.
முனுசாமி அரை அடி முதல் 21 அடி உயரம் வரை பல்வேறு சுடுகளிமண் சிற்பங்களை செய்து வருகிறாா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் என லட்சக்கணக்கானோருக்கு இந்தக் கலையை இலவசமாக கற்றுத் தந்துள்ளாா்.
இதற்காக 1998, 1999, 2000, 2005, 2006, 2017 ஆகிய ஆண்டுகளில் 6 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளாா். வில்லியனூா் சுடுகளிமண் சிற்பத்துக்காக மத்திய அரசின் புவிசாா் குறியீடையும் பெற்றுள்ளாா். மேலும், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெனிவா நாட்டில் உள்ள ஐ.நா. சபைக்குச் சென்று 125 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகளின் முன்பு சுடுகளிமண் சிற்பத்தை செய்து காண்பித்துள்ளாா். இதற்காக அங்கு கௌரவிக்கப்பட்டாா்.
சுடுகளிமண் சிற்பக் கலைக்கு வி.கே.முனுசாமி ஆற்றி வரும் பங்களிப்புக்காக, அவருக்கு மத்திய அரசு தற்போது பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து முனுசாமி கூறியதாவது:
அழிவின் விழிம்பில் இருக்கும் சுடுகளிமண் சிற்பக் கலையை வளா்ப்பதற்காக எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த விருது பாரம்பரிய சுடுமண் கலையை அனைத்துத் தரப்பினரிடமும் சென்றடைய கடுமையாக உழைக்க என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும் என்னை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி என்றாா் அவா்..

மருத்துவர் கயல்விழி - பொறியாளர் ஜெகதீஷ்குமார் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ

இன்று இரவு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர், தி. மு. க. வின் மூத்த முன்னோடி , அன்புச் சகோதரர் எஸ். மோகன்குமார் மகள் மருத்துவர் கயல்விழி - பொறியாளர் ஜெகதீஷ்குமார் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, நகைச் சுவை அரசு மதுரை முத்து, சன் குழுமத்தின் பொது மேலாளர் முருகன், கரகம் பாலா, நாகேஷ் செல்லக்கண்ணு, முத்து முருகன், வழக்கறிஞர் அருண்குமார், மூத்த பத்திரிகையாளர் நம்பிராஜன், ரஜினி மன்ற முன்னோடி பால தம்புராஜ் உள்ளனர்.
தி மு க வின் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
வாழிய மணமக்கள்.




Wednesday 29 January 2020

ஓர் இனிய சந்திப்பு. - மனிதத்தேனீ

குருவும் சீடரும்
எனது பொதுப் பணிகளை, துறைசார்ந்த பணிகளை நெறிப்படுத்தி பன்முகப் பேராற்றல் நிலை பெற்றிட பிள்ளையார் சுழி போட்ட குருநாதர், ஜேசி இயக்கத்தின் முன்னாள் அகில இந்திய துணைத் தலைவர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் செயல்திறன் மிக்க தலைவராகப் பணியாற்றிய, மதகுபட்டி பொறியாளர் எம். எஸ். முத்துராமன் அவர்களுடன் இன்று மாலை ஓர் இனிய சந்திப்பு. - மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தமிழ்நாட்டுல முஸ்லிம்கள், கிருஸ்டின்கள் இவ்வளவு அட்டகாசம் பண்ணிட்டிருக்காங்களே… மோதியும் அமித்ஷாவும் என்ன பண்ணிட்டிருக்காங்க?
இப்படிக் கேட்பவர்களுக்கு முஸ்லிம் கிருத்துவர்களின் பலம் என்ன பலவீனம் என்னவென்று தெரியவில்லை என்று புரிகிறது. பலம் என்றால், பணம், மற்றும் ஓட்டு என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றையும் எழுதினா புத்தகம் தான் போடணும். ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டும் சொல்றேன். பொறுமையா படிங்க.
“அன்பாயம்” பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?, குமரி முனையிலிருந்து, அந்தப் பக்கம் திருவனந்தபுரம், இந்தப்பக்கம் திருச்செந்தூர் வரை கடற்கரையிலிருந்து வடக்கு நோக்கிப் பரவி வரும் ஒரு பெரிய புற்று நோய். அன்பு + ஆயம் = அன்பாயம். கிருத்துவக் கட்டமைப்பு. அது பரவியிருக்கும் பகுதிகளில் இந்திய அரசியலமைப்பு வரைபடமெல்லாம் செல்லாது. அவர்களுக்கென்று மாவட்டங்கள் இருக்கு. அதன்படி தான் நிர்வாகம் நடக்கும். நாற்பது குடும்பத்திற்கு ஓர் அன்பாயம் என்பது கணக்கு. ஓர் அன்பாயத்தில் ஒரு தலைவர் / உபதலைவர், ஒரு செயலாளர் / உபசெயலாளர் . அன்பாயத்திற்குக் கட்டுப்பட்ட மக்கள் இந்த நால்வரைக் கேட்காமல் செய்யக் கூடிய விசயங்கள் என்பது, உண்பது, கழிப்பது, கலவுவது மட்டுமே. உடுப்பது கூட சில நேரங்களில் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். வேறு எதுவுமே இவர்களுக்குத் தெரியாமல் / சம்மதம் இல்லாமல் செய்ய முடியாது.
மாத மாதம் மாவட்டப் பேராயர் தலைமையில் ஒரு கூட்டம் நடக்கும். ஒரு மாதம் தலைவர் – உப செயலாளர், அடுத்த மாதம் செயலாளர் – உப தலைவர் கலந்து கொள்வது வழக்கம். உங்க வீட்டுக் குழந்தைகளை எங்கு படிக்க வைக்கணும்?, யாருக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்? எப்ப மீன் பிடிக்கப் போகணும்? யாரிடம் விற்கணும் என்பது வரை அன்பாயத்தின் தலையீடு இருக்கும். மீறினால்? மீறவே முடியாதளவு மூளைச் சலவை செய்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் என்றால், மீறினால், அங்கே வசிக்கவே முடியாது. வெளியேறினால், அதுவரை அங்கே சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் எல்லாம் காலி. இதெல்லாம் முரட்டுத்தனமாக நடக்காது. சிரிச்சுட்டே அன்பாக அறுத்துடுவாங்க. தமிழ்நாட்டில் புதிதாக வரும் உயர் ரக கார் / பைக் எல்லாம் சென்னையிலும் கோவையிலும் தான் ஓடுதுனு நினைச்சா, நீங்க தென்கடல் மீனவ சமுதாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் என்பேன்.
உடனே, நமக்குப் பழக்கப்பட்ட கேள்வி ஒன்று சட்டுனு எழும். இதெல்லாம் மத்திய அரசுக்குத் தெரியாதா? உளவுத்துறை சொல்லியிருக்காதா? பொறுங்கள்.
ஒக்கிப் புயல் வந்தது நினைவிருக்கா? அப்ப ஆயிரக்கணக்கான மீனவர்களைக் காணோம் என்று ஒப்பாரி வைத்தார்கள். நிர்மலா சீதாராமன் நேரடியாகக் களத்தில் அங்கே தான் இருந்தார். அவருக்கு ஒரு தகவல் தேவைப்பட்டது. யார் யார் எந்தெந்தப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றார்கள் என்று. அப்ப தான் புயலின் வேகத்தில் எப்படி சிக்கி எங்கே ஒதுங்கியிருப்பார்கள் என்று கணிக்க முடியும் என்று மீட்புப்படையினர் கேட்டது. ம்ம்ஹும் வாயைத் திறக்கலையே? இறுதியாக கடலுக்குச் செல்லும் முன் படகுக்கு டீஸல் போட மானிய டோக்கன் வாங்கியவர்கள் லிஸ்ட் கேட்டார் நிர்மலாம்மா. கேட்டதே அன்பாயத்திடம் தான். ஆனால், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லைனு முழு பூசணிக்காயையும் சுண்டைக்காய்க்குள் அமுக்கிக்கிட்டானுக. ஒக்கிப் புயலின் பொழுதே ஒரு பதிவு போட்டிருந்தேன். இனி இவனுக செத்தாய்ங்கடானு.
நடந்த தகவலும் அன்பாயத்தின் கட்டமைப்பையும் முழுவதும் மத்திய அரசு ஸ்கேன் பண்ணியிருக்கும். உடனே அதனைக் கலைக்கவோ, ஒடுக்கவோ நிச்சியமாக முடியாது. காரணம் இது சில பத்து வருடங்களாகக் கட்டமைக்கப்பட்ட அமைப்பு அல்ல! இருநூறு வருடங்களுக்கு மேலாக, மெல்ல மெல்ல படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டது. ஒரு புதிய சமூக ஒழுங்கையே கட்டமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்கள் ஒரு தனி நாட்டவர்கள். அதுவுமில்லாமல், அந்த பலத்துடன், உள்ளூர் அலுவலக அதிகாரிகள் முதல் மாநில- மத்திய அரசு வரை அதிகாரங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
சரி அவர்கள் பாட்டுக்கு அவர்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டுப் போகட்டுமே இதில் என்ன தவறு? இந்தப் புற்று நோய் மெல்ல மெல்ல வளர்ந்து தனிநாடு கேட்பதில் வந்து முடியும். இதெல்லாம் இன்னும் பத்து வருடங்களில் இல்லை. இன்னும் நூறு வருடம் காத்திருக்கத் தயார். ஆனால், பிடித்து வைத்திருக்கும் நிலத்திலிருந்து ஒரு துகள் மணலை மீட்க முடியாதவாறு கட்டமைத்திருக்கிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்று யோசித்துப் பார்க்க முடிகிறதா? இது ஒரேயொரு அமைப்பின் செயல்பாடுகள் தான். இது போல் எத்தனை அமைப்புகள் என்னென்ன விதமாகச் செயல்படுகிறது என்று அந்தந்த ஊர்ப்பக்கம் போகும் போது சிரிச்சுட்டே தகவல் சேகரிங்க புரியும்.
கிருத்துவர்களுடைய ஆளுமை ஊடகங்களில் எவ்வளவு இருக்கிறது என்றும் மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. இவர்களுக்குச் சாதகமாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் செய்திகள் போடுவது மட்டும் தான் நம் கண்களுக்குத் தெரிகிறது.. அதெல்லாம் 20 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இப்ப அவர்கள் லெவலே வேற…. எழுத எழுத வந்துட்டே இருக்கு. இத்துடன் கிருத்துவர்களின் பலத்திற்கான முன்னுரையை ( முன்னுரை மட்டும் தான் இது) நிறுத்திக் கொண்டு, அடுத்தப் பதிவில் முஸ்லிம்களின் பலம் என்ன என்று பார்ப்போம். அதன் பிறகு மோதியையும் அமித்ஷாவையும் நக்கலா கேள்வி கேட்டுக்குவோம்…
தொடரும்….

15.12.2019 நற்சாந்துபட்டி Dr.ஸ்ரீ நிதி - Er.அடைக்கலவன் மணவிழாவில் மனிதத்தேனீ 36 நிமிட சிறப்புரை

நாளை மாலை நடைபெறும் கூட்டம்.


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

“BJPயின் சோலிய முடி, RSSன் சோலிய முடி” என்று கிரஸண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒரு ஜிஹாதி கூவுவதை பகிர்ந்திருக்கிறார் கவிதா கஜேந்திரன் / ஜாகீர் (Member: National Federation of Indian Women | Leftist - என்கிறது கவிதாவின் பயோ).... அதை பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் ரீட்வீட்!
"This fascism will end at the hands of the women of this country man!! ♥️" என்று சொல்லுகிறார் கவிதா...
அவர்கள் எப்படி, 'சோலிய முடி'ப்பார்கள்? ரகுவை கொன்றது போலவா? இது கொலையை தூண்டும் பேச்சாகாதா ?
- அமைதிமார்க்கமும் அன்புமார்க்கமும், 'ஹிந்துக்கள் காஃபீர்கள் / இன்ஃபிடல்கள், வாழத்தகுதியற்றவர்கள், கொல்லப்படவேண்டும்' என்று வெளிப்படையாக சொல்லி ஹிந்துக்களை கொல்பவர்கள். அவர்களுக்கு துணையாக நிற்பவர்கள் இந்த 'நடுநிலை' கிரிப்டோக்கள். எச்சரிக்கை.
Kavitha Gajendran - @kavithazahir: Dear darling girls at Crescent Engineering college shouts “BJPயின் சோலிய முடி, RSSன் சோலிய முடி”
This fascism will end at the hands of the women of this country man!!
♥️✊🏾
Crescent engineering college students conducting protest against CAA-NRC-NPR right now!
#CAA
https://twitter.com/kavithazahir/status/1221683104210751488

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சீனா: ஊஹான் பிரதேச கொரோனா வைரஸ் சீனாவெங்கும் பரவி இப்போது வெகு குறுகிய காலத்தில் உலகெங்கும் பரவியுள்ளது - இலங்கை, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா என.
கனடாவில் பரிசோதித்து வந்த அந்த வைரஸை திருடிக் கொண்டுவந்து சீனாவில் வைத்து அதை bio weaponஆக உபயோகிக்க சீனா ஆராய்ச்சி செய்ததாகவும், அது பிழையாகப்போய் இப்போது நாடெங்கும் வைரஸ் பரவி உயிரை பலிவாங்கி வருகிறது என்கிறது zerohedge செய்தி .
வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளுக்கு போதிய அறைகள் இல்லாததால் தரையில் கிடக்க வைத்திருக்கிறார்கள். மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சீன அரசு, "நாங்கள் 10 நாட்களில் மருத்துவமனை கட்டுகிறோம். அதில் ஒரு பகுதி நிறைவேறிவிட்டது. இதோ பாருங்கள்" என்று படத்தை பகிர, "அது போலி படம். அந்த படத்தை 2019 முதலே பலரும் (வேறு விஷயங்களில்) பகிர்ந்து வருகிறார்கள். ஏன் போய் சொல்கிறீர்கள்" என்று ஆதாரத்துடன் மூக்குடைக்கிறார் ட்விட்டரில் மனீஷ் என்பவர்.
ஒன்றும் சரியாகப்படவில்லை...
இந்த வைரஸால் 6 கோடி பேருக்கு மேல் உயிரிழக்கலாம் என்று பயம் காட்டுகிறார்கள் - In a Recent Simulation, a Coronavirus Killed 65 Million People https://futurism.com/…/recent-simulation-coronavirus-killed… !
Did China Steal Coronavirus From Canada And Weaponize It?
https://www.zerohedge.com/…/did-china-steal-coronavirus-can…
#Update: After 16 hours of construction, the 1st building of Huoshenshan Hospital in #Wuhan has completed on Monday. The hospital is expected to be handed over to the military on Feb 2 upon completion and put into use for #coronavirus patients.
https://twitter.com/PDChina/status/1221807573332058113
Fake. This image is on the internet since atleast Sept 2019. Tineye found 13 matches.
https://twitter.com/winsplit/status/1221823517647233027

Tuesday 28 January 2020

தினமலர் மதுரை 28.01.2020 பக்கம் 4


தினபூமி மதுரை 28.01.2020 பக்கம் 7


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*" சிங்கத் தோல் போர்த்திய கழுதை "*
அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.
அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.
கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.
அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.
மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.
சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.
சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.
கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.
“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.
அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.
கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.
*நீதி:* நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 27 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திகுட்பட்ட ஊத்துப்பாளையம் என்ற குட்கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் பத்மாவதி தம்பதியரின் மூத்த மகள் தேவிகா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடலோர காவல் படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
தேவிகா
தற்போது உதவித் தலைமை கமாண்டன்ட் அதிகாரியாக குஜராத்தில் ஒகா நகரில் உள்ள மேற்கு கடலோர காவல் படையில் பணியாற்றி வருகிறார். நாட்டின் 71-வது குடியரசு தினவிழா அணிவகுப்பில், 120 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை இவர் தலைமை ஏற்று வழி நடத்தி செல்லவுள்ளார்.
தமிழகத்தில் இருந்து இச்சிறப்பை பெறும் முதல் பெண் அதிகாரி இவர்தான். மகளின் இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை தனது மகள் நிரூப்பித்து விட்டதாக கமாண்டண்ட் அதிகாரியின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

மாலைமுரசு 27.01.2020 பக்கம் 7


அந்தணர் குரல் 10ஆம் ஆண்டு விழா









முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர்களா மதவாதிகள்..?
பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான முகமது ஷெரிப் (80), உ.பி.,யில் பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் சேவையை அறிந்த மாநில அரசு, பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது அதன்படி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
யார் இந்த முகமது ஷெரிப்?
உ.பி., மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 27 ஆண்டுகளாக ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார்.
இது குறித்து ஷெரிப் அவர்கள் கூறியதாவது: 1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான். ஆதரவற்றவர் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது.
அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குறிப்பு;இஸ்லாமியரான முகமது ஷெரீப் மதங்களை கடந்து மனித நேயத்தோடு செயல்படுகிறார்..இதை அறிந்த உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசிடம் இவரது பெயரை பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்கிறார்,மத்திய அரசும் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கிறது.
இவர்களா மதவாதிகள்..?இதுவா மதவாத கட்சி..?இஸ்லாமியர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்..சீக்கியம்,புத்தம்,சமணம்,கிருஸ்தவ மதங்களை ஆதரிக்கும் பெரும்பான்மையான இந்து மக்களும்,பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி செய்யும் அரசும் நம்மை விட்டு விலகுவது ஏன் என சிந்தித்துப் பார்த்து சீர்செய்து கொள்ள வேண்டும்..முகமது ஷெரீப் போன்ற எத்தனையோ நல்ல இஸ்லாமியர்கள் உள்ளனர்..அவர்கள் தன் சமுதாயத்தில் தவறான வழிக்கு செல்லும் சில இளைஞர்களை கண்டிக்க வேண்டும்,அல்லது தனிமைப்படுத்த வேண்டும்..
பெரும்பான்மையான இந்துக்கள் மதம் பார்ப்பதில்லை.மதங்களை கடந்து நல்லவர்களை ஆதரிக்க, வரவேற்க என்றும் இந்துக்கள் தயங்கியதும் இல்லை.
மதத்தை விட மனிதத்தின் பக்கம் நிற்பவர்கள் இந்துக்கள்..இல்லை என்றால் இத்தனை மதங்கள் எப்படி இந்தியாவில் தோன்றி இருக்க முடியும்..?ஆயிரகணக்கான ஆண்டுகளாக இவ்வளவு மதத்தினரும் எப்படி ஒற்றுமையாக இந்த மண்ணில் இருந்து இருக்க முடியும்? மாற்று மதங்கள் இந்த மண்ணில் வளர்ந்து இருக்க முடியும்?இவர்களா மதவாதிகள்?

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*உதவி செய்ய எல்லோராலும் முடியும். ஆனால் கேட்பவரின் தேவையை அறிந்து அதற்கு தக்கவாறு உதவி செய்வது தர்மத்தைவிட பல மடங்க புண்ணியம் தரக்கூடிய கொடையாகும்.*
எதையுமே இல்லை என்று சொல்லாமல்,
கேட்பவர்களுக்கு வாரி வழங்கி வந்ததாலும்,
தர்ம நெறியை கைவிடாது
கடைப்பிடித்ததாலும் தானே
பஞ்சபாண்டவர்களில் தர்மத்திற்கு
உதாரணமாக தர்மரைக் கூறுகிறோம். ஆனால்,
தருமரை விட கர்ணனையே பெரிய
கொடையாளி என்று ஏன் இன்று வரையிலும்,
தர்மம் செய்வதற்கு கர்ணனை உதாரணமாகச்
சொல்லி, தர்மரை மறந்து விட்டோம்?
இந்த கேள்வி ஒரு முறை அர்ஜூனனின்
மனதில் எழுந்தது. 'கிருஷ்ணா ... கர்ணனைப்
போன்றே என்னுடைய அண்ணன் தர்மரும்
யாருக்கும் எதையும் இல்லை என்று
சொல்லாமல் தர்மம் செய்பவர் தானே?
இரண்டு பேருமே எதையும் இல்லை என்று
சொல்லாமல் கொடுப்பவர்கள் தான். அதிலும்
மாற்று கருத்தில்லை. ஆனால், கர்ணனுக்கு
மட்டும் ஏன் தர்மரை விட அதிகமான அளவு
புகழ்?" என்று கேட்டான்.
*༺🌷༻*
அர்ஜூனனுக்கு கர்ணனின் கொடை
உள்ளத்தை நேரில் புரிய வைக்க நினைத்த
கிருஷ்ணர், 'சரி, என்னுடன் வா, காட்டுகிறேன்'
என்று சொல்லி தன்னுடன் அர்ஜுனனை
அழைத்துச் சென்றார். மகரயாழ் இருவரும்
பிராமணர்களைப் போல வேடமிட்டுக்
கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.
அந்தணர்களைப் பார்த்த தருமர் அகமகிழ்ந்து,
என்ன வேண்டுமென்று கேட்டார்."யாகம் நடத்த
சந்தனக் கட்டைகள் வேண்டும்" என்றார்கள்.
*༺🌷༻*
மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை
வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை
நாடு முழுவதும் அனுப்பினார். ஆனால்
அப்போது மழைக்காலம். கொண்டு வந்த
மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.
அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.
என்ன செய்வது என்று திகைத்து நின்ற
தர்மரிடம் விடைப்பெற்றுக் கொண்டு இருவரும்
கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை
வைத்தார்கள்.
கர்ணன் யோசித்தான். "அடாடா... இது
மழைக்காலம் ஆயிற்றே. இந்த
மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள்
கிடைப்பது சிரமமாக அல்லவா இருக்கும்.
அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்"
என்றான். உள்ளே சென்று ஒரு கோடரியை
எடுத்து வந்தான். மாளிகையின் கதவுகளும்
சன்னல்களும் சந்தன மரத்தால்
செய்யப்பட்டவை. கர்ணன் அவற்றை வெட்டி
எடுத்துக் கொடுத்தான். இருவரும் திரும்பி
வரும் போது கிருஷ்ணர் கேட்டார்.
*༺🌷༻*
"இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம்
கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத்
தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும்
உடனே தந்திருப்பார் தான். ஆனால், அவர்
தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.
ஆனால் கர்ணன்... நாம் கேட்கவே இல்லை .
அவனாகவே யோசித்துச் செய்தான். தருமர்
பிறருக்கு கொடுப்பது, யாராவது கேட்டால்
இல்லை என்று சொல்லக்கூடாது என்பது
அவருடைய தர்மம் என்பதால். ஆனால்,
கர்ணன் கொடுப்பது, தர்மம் செய்வது
அவனுடைய விருப்பம் என்பதால் கேட்டுக்
கொடுப்பது தர்மம், கேட்பவரின் தேவையை
அறிந்து அதற்கு தக்கவாறு கொடுப்பது
தர்மத்தைவிட பல மடங்க புண்ணியம்
தரக்கூடிய கொடையாகும். அதனால் தான்
தான தர்மங்களைச் செய்வதில் கர்ணனை
மிஞ்சியவர் யாருமில்லை என்று மக்கள்
போற்றுகின்றனர் என்றார்.

மனிதத்தேனீயின் தேன்துளி


கண்ணன் மகன் முனைவர் அருண்பிரேம்-அபிநயா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.

26.01.2020 இரவு எங்கள் திருநகரில் நடைபெற்ற பள்ளியில் உடன் படித்த அருமை நண்பர் ஆனியன் முத்துவேல் கண்ணன் மகன் முனைவர் அருண்பிரேம்-அபிநயா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த டாக்டர் சரவண குமார், புகைப்படம் மற்றும் வீடியோ தொழில் நுட்ப வல்லுநர்கள் நண்பர்கள் கலைஞர், கார்த்திக்.




துரைப்பாண்டி மகன் வினாத் - நந்தினி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ

26.01.2020 இரவு மதுரை துவாரகா பேலசில் நடைபெற்ற வடக்கு மாசி வீதி கே, பூங்காவனம் கோனார் பேரனும் சொர்ணமுகி எண்டர்பிரைசஸ் பி. துரைப்பாண்டி மகன் வினாத் - நந்தினி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, ஓம் பிரகாஷ் ஜேயின் மற்றும் குடும்பத்தினர்.


நான்கு நாட்கள் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு

👆நான்கு நாட்கள் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அசாம் மற்றும். வடகிழக்கில் இருந்து பங்களாதேஷியர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர், CAB அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் குடியுரிமையைப் பெறுவது சாத்தியமில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது, அவர்கள் இங்கு அதிக நாட்கள் தங்கியிருந்தால் பங்களாதேஷும் பின்வாங்குவார்கள் 'எந்த நாட்டினதும் ஆண்கள்' ஆவதற்கான ஆபத்து எனவே அது ஒரே இரவில் நொறுங்கத் தொடங்கியது.
உண்மையில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*''குறைகளை எண்ணி''*
.............................
நம் குறைகூட ஒரு நாளில் நிறைவு ஆகலாம்.நம்மில் பலருக்கு பல குறைகள் இருக்கும். அதை நினைத்து வருத்தப்படுவது உண்டு.
வருத்தப்படுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை.
அந்த குறையை நமது பலமாக மாற்ற என்ன செய்யலாம்? என்று எண்ணி அதை செயல் படுத்தினால் வெற்றி நிச்சயம்..
குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள்..குறைகள் .கொடைகளா? என்ற கேள்வி எழலாம்.
ஆம், குறைகளும் நமக்கு ஒரு வகையில் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. ஆனால் நாம்தான் அதை கண்டு கொள்வதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் (Texas) மாநில நீதி மன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு.. விசாரணைக்கு வந்தது.
கைகளும், கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த ஒரு தாய், தன் 5 மாதக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில அரசு தீர்மானம் செய்தது.
தன்னால் முடியும் என்று நிரூபிக்க, அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கு ஆரம்பமானதும், அந்தத்தாய் நீதிமன்றத்தில் செய்தது, அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
கைகளும், கால்களும் இல்லாத அந்தத் தாய், தன் உதடுகள், நாவு இவற்றின் உதவியுடன், அவருக்கு முன் படுத்திருந்த குழந்தையின் துணிகளைக் கழற்றி, மீண்டும் புதுத் துணியை மாட்டி விட்டார்.
குழந்தைக்குத் தேவையான உணவை ஊட்டி
விட்டார்.
.இதைக் கண்ட நீதிபதி,தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, அந்தத் தாயை வணங்கினார்.
பின்னர் அவர், "திறமைகளை உடல் அளவில் பெற்றிருப்பது, உண்மையின் ஒரு சிறு பகுதிதான்;
உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே, உண்மையான திறமை என்பதை, எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி" என்று கூறினார்.
ஆம்.,நண்பர்களே..
குறைகளும், நிறைகளும் அனைவரிடம் இருக்கத்தான்
செய்கிறது.
நமது குறைகளை பெரிதுபடுத்தினால் அவையே அதிகமாய் நம் மனதில் தங்கு கின்றன.
எனவே,.நமது குறைகளை பொருட்படுத்தாமலும்,அதை எண்ணி கவலைப் படாமலும் துணிந்து செயல்படுவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


குடியரசு தின வாழ்த்துக்கள்


மதுரையில் நடைபெற்ற அந்தணர் குரல் 10 ஆம் ஆண்டு விழாவில் மனிதத்தேனீ

இன்று இரவு மதுரையில் நடைபெற்ற அந்தணர் குரல் 10 ஆம் ஆண்டு விழாவில் மனிதத்தேனீ 47 நிமிடங்கள் சிறப்புரை. விழாவில் மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், சேலம் ஸ்ரீ ராமன், வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி, தாம்பிராஸ் இல. அமுதன், வழக்கறிஞர் வி. ராமகிருஷ்ணன், அம்மா கேட்டரிங் பி எஸ் ஜி கிருஷ்ணய்யர், தினசூரியன் ஆசிரியர் ஜெய. ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் எஸ். பக்தவத்சலம், துணை ஆசிரியர் வி ஆர் ஜி ராஜி உள்ளனர்.
விரிவான செய்திகள் திங்கள்கிழமை வரும்.




Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சென்னையில் இஸ்லாமிய பயங்கரவாதம்.
சென்னை மவுண்ட் ரோடு ரேடியோ மார்க்கெட்டில் (ரிச்சிதெரு) ஒரு கடையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து we support CAA & NRC என்ற அச்சடிக்கப்பட்ட பேனா வழங்கியதை கண்டித்து
சுமார் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடை உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்.
இந்த தகவல் நமக்கு தெரிவித்த உடன் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டு உங்களோடு இந்து முன்னணி இருக்கிறது என்று நம்பிக்கையூட்டி அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பபேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விட்டு வந்தோம்.
காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து விட்டு வந்து உள்ளோம்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”*
*“என்னால் முடியும்”* என்று சொன்னாலும் *“என்னால் முடியாது”* என்று சொன்னாலும் இரண்டும் தனி நபர் நிஜங்கள். *இரண்டும் பலிக்கும்.*
*༺🌷༻*
நம் உள்ளே உள்ள நோக்கமே நம் வாழ்வின் சகல நிகழ்வுக்கும் விதை என்கின்றன நவீன ஆராய்ச்சிகள். #மகரயாழ் *அனைத்து மதங்களும் அனைத்துக் கோட்பாடுகளும் இதையே வலியுறுத்துகின்றன.*
*༺🌷༻*
“என் வாழ்க்கை தந்த அனுபவத்தில் வந்தவை தான் இந்த எண்ணங்கள். அதை எப்படி மாற்றுவது? “என்று கேட்கலாம். உங்கள் எண்ணங்கள் தான் வாழ்க்கை அனுபவங்களையே ஏற்படுத்துகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
*༺🌷༻*
நம் எண்ணம் எப்படி நம் செயல்பாட்டை மாற்றும் என்பதற்கு ஒரு கிரிக்கெட் உதாரணம் சொல்லலாம்.
*🧡👉தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆடுவதும்*
*💙👉ஜெயிக்கணும் என்ற எண்ணத்தில் ஆடுவதும் வேறு வேறு முடிவைத்தரும்!*
*༺🌷༻*
எல்லாருக்கும் வெற்றி வேண்டும். மகரயாழ் ஆனால் *உங்கள் மனதில் தோல்வியைத் தடுக்கும் வழி முறைகளை யோசிக்கிறீர்களா? அல்லது ஜெயிக்கும் உத்திகளை யோசிக்கிறீர்களா?*
*༺🌷༻*
உங்கள் படிப்பு, வேலை, காதல், திருமணம், தொழில், செல்வம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் உறுதிப்படுத்துவது உங்கள் எண்ணங்கள்.
*༺🌷༻*
*கவிஞர் கண்ணதாசன்* அனாயசமாக இவை அனைத்தையும் ஒரு சினிமாப் பாடல் வரியில் சொல்லிவிட்டார்:
*“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”*