Saturday 30 March 2024

வாழ்க்கை முறை .

 வாழ்க்கை முறை .

_*நாம சரியா இருந்தா கோபப்பட அவசியமில்லை.......*_
_*நாம தப்பா இருந்தா கோபப்பட தகுதி இல்லை.*_
_*எடுத்து கொள்வதற்கும்*_
_*எடுத்து கொடுப்பதற்கும்*_
_*வித்தியாசம் உண்டு*_
_*கற்ற கல்வியால்*_
_*அது தெளிய வேண்டும்*_
_*தெளியவில்லையென்றால்*_
_*அது மனப்பாடம்*_
_*சுய வைத்தியம் என்பது*_
_*சொந்த செலவில்*_
_*சூனியம் போல*_
_*இனி பெருமைக்கு*_
_*ஏரோபிளேனும்*_
_*ஒரு எருமைமாடு போதும்.*_
_*கஷ்டத்துக்கு அப்புறம் சந்தோசம் வரும்னு நாம நினைச்சுட்டு இருப்போம்.......*_
_*ஆனா வாழ்க்கை*_
_*அதான்டா இதுன்னு சொல்லிட்டுப் போயிடும்.*_
_*தடுக்கி விடப் பல கால்கள்*_
_*இருக்கட்டும்..!*_
_*ஊன்றி எழ ஒரு கை உள்ளது,*_
_*நம்பிக்கை'.*_
_*உனக்கு உதவிக்கு யாரும் இல்லை என்று நீ நினைத்து மனம் உடைந்து நிற்கதியாக நின்றபோது உன் கரங்களை இருக்க பற்றியவன் நான்.*_
_*தனியாக இருப்பதாய் எண்ணி வருந்தாதே எந்த சூழ்நிலையிலும் உன்னை கைவிடமாட்டேன் நிழலாக உன்னுடனே இருப்பேன்.*_
_*யார் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் முடிவில் நான் உன்னுடன் நமசிவாயம் இருக்கின்றேன்.*_
_*சில காயங்கள் மருந்தால் சரியாகாது மறந்தால்.. தான் சரியாகும்.. மறப்பதும்.. மன்னிப்பதும் நமது பக்குவம்.*_
_*கொடுத்த வாக்கை, காப்பாற்றுவதன் மூலம் நமக்கும், பிறர்க்கும் அதன்மூலம் யாவர்க்கும் நன்மை ஏற்படுமாயின் அது நேர்மை சார்ந்த வாழ்க்கை முறையாகும்.*_
_*நீங்கள் வாழும் வாழ்க்கை முறையோடு, நீங்கள் ஒத்துப் போய் விட்டால், அந்த வாழ்வே தெய்வீகமானதாகும்.*_
_*தன் பொய்கள் வெளிப்படும் பயத்தில் இருப்பவர்களே.......*_
_*வெகு சாதரணமான அடிப்படை கேள்விகளுக்கு கூட பதற்றமடைவார்கள்.............!!*_
*_பெருமையாக வாழ்ந்து_*
*_காட்டுங்கள் தவறில்லை........!!_*
*ஆனால்*
*_அடுத்தவர் முன் பெருமைக்கு_*
*_வாழ்ந்து காட்டாதீர்கள்_*
*_அவமானமும், ஏமாற்றமும்_*
*_தான் மிஞ்சும்.........!!_*

மனிதத்தேனீயின் தேன்துளி

 


Friday 29 March 2024

எதார்த்த மனிதர்கள் .

 எதார்த்த மனிதர்கள் .

🌷👍வெளிநாட்டில்
இருந்து சென்னைக்கு வந்த
இந்தியத் தம்பதிகள், தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக, சென்னையிலுள்ள முக்கியமான வணிக வளாகத்திற்குச் சென்று, மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிக் கொண்டு, தங்களது கார் இருக்கும் இடத்தை நோக்கிச்
சென்றனர்.
அவர்களின் எதிரே
வயதான ஒரு அம்மா கையேந்தி
நின்றார்.
அந்த அம்மாவைப் பார்த்தவுடன் வெளி நாட்டில் இருந்து வந்த பெண்ணோ, சற்று கோபத்துடன் தள்ளிப் போம்மா! என்றாள்.
ஆனால் அவளது கணவனோ, அந்த அம்மாவை அழைத்து, ஒரு நூறு ரூபாயை அந்தம்மாவின் கையில் வைத்தான்.
அந்த வயதான அம்மா, அந்த ஆண்
மகனைப் பார்த்து தலை கவிழ்ந்து கையெடுத்து
கும்பிட்டார்கள்.
அவனுக்கோ அந்த அம்மாவின் செயலைப் பார்த்து கண் கலங்கியது.
இதைப் பார்த்த
மனைவி,
கணவனைப்
பார்த்துக் கேட்டாள்,
"நீங்கள் என்ன கர்ணனின் வாரிசா?
அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா?" என்றாள்.
கணவன் சிரித்துக்
கொண்டே பதில் சொன்னான்,
"நாம் வாங்கிய பொருட்களுக்கு லட்சத்தில் செலவு செய்தோம்.
ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என்று நீ என்னைக் கேட்கவில்லை!"
அந்த வயதான அம்மாவுக்கு, பசிக்கு சாப்பிட நூறு ரூபாய் கொடுத்தால்,
ஏன் கொடுத்தாய் என்று கேட்கிறாய்?
நம்மாலே இரண்டு வேளை அந்தம்மா சாப்பிடலாம்.
அந்த நேரத்தில் நம்மை நினைக்கும் அல்லவா?". என்றான்.
அவன் அடுத்து ஒன்றைச் சொன்னான் நண்பர்களே!
அதைத் தான் நாம் ஒவ்வொருவரும் குறித்து வைத்து பின்பற்ற வேண்டும்.
அது,
*மனிதனுக்கு மூன்று நிலை வரக் கூடும்.*
*அது என்ன தெரியுமா?'*
*'Disability' என்கிற இயலாமை...*
*'Disease' என்கிற நோய்...*
*அடுத்து 'Death' என்கிற இறப்பு...*
இந்த மூன்றும் எப்போது வரும் என்று எவராலும் சொல்ல முடியாது.
எனவே உன்னால் இயலும் போது, இல்லாதவர்களுக்கு உதவிடு!
இதன் மூலம், நமக்கு இறைவன் அந்த மூன்றையும் தள்ளிப் போடலாம்!" என்றான்.
இதனைக் கேட்ட மனைவி கண் கலங்கி நின்றாள்.
*எனவே நல்லதை நினைத்து, நல்லதை செய்வோம்!*
*நாளை நடப்பதை நாமா அறிவோம்?*
*நல்லது செய்வோரை யார் தடுத்தாலும் பாவம்!*
*முடிந்தால் நல்லது செய்வோம்!*
*முடியாவிட்டால் ஒதுங்கி அவர்களுக்காக பிரார்த்திப்போம்...*
*நலம் பெற மனதார நினைத்திடுவோம்!*
*உதவி செய்வோரை ஒருக்காலும்போய் தடுத்தலாகாது!*
*ஒருநாள் அத்தகைய உதவி நமக்கும் கூடத் தேவைப்படலாம்!*
*நம்மையும் அறியாமல் நல்லதையே செய்யப் பழகுவோம்...*
*கர்ணன் போல் இருக்க முடியா விட்டாலும் சற்று எதார்த்த மனிதராய் வாழ்வோம்*

எளிய வாழ்க்கை .

 எளிய வாழ்க்கை .

உடல் பலமுடன்
இருக்க விரும்பினால் முதலில்
மனதை வலிமையாக்குங்கள்.
மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.
கஷ்டமான வேலைகளைச்
செய்ய உடலைப் பழக்குங்கள். கஷ்டமான சூழ்நிலைகளை
கையாள மனதைப் பழக்குங்கள்.
உடலும் உள்ளமும் உறுதியாய் இருந்தால்
எதையும் எதிர்கொள்ளலாம்.
முடிவே இல்லற போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள் வென்று விடலாம்.
இறைவனின்
கருணைமழை எப்போதும் நம் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.
கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை.
நாம் மிகவும் சாதாரணமானவர்கள் என்பதை உணர்ந்து விட்டால், மனப்பூர்வமாகக் கடவுளிடம் சரணாகதி அடைவது சுலபமாகி விடும்.
வாழ்வில் மாற்றம் உண்டாக வேண்டுமானால், காலஅவகாசம் தேவைப்படும்.
அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருப்பது அவசியம்.
*உமது திருவுள்ளப்படியே நடக்கட்டும்'* என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
இதனால், சொந்த விருப்பு வெறுப்புகள் கூட காணாமல் போய்விடும்.
தன்னம்பிக்கை இல்லாதவருக்கு வாழ்க்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது.
வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறியே வரும்.
எது வந்தாலும் சலனமின்றி், தளர்ச்சியின்றி, பொறுமையோடு எதிர்கொள்ளுவதே அச்சமின்மை.
எண்ணம், செயல், இரண்டாலும் கடவுளுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும்.
அந்த பிணைப்பால்
உள்ளம் தெளிவுறும், மகிழ்ச்சி பெறும்.
_*நிம்மதி என்பது நம்மைத் தேடி வராது அது இருக்குமிடத்தைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்...*_
_*தேடுங்கள் நிம்மதி இருக்குமிடத்தை அது உங்கள் அருகிலேயே கூட இருக்கக்கூடும் இல்லை சற்று தொலைவில் இருக்கக்கூடும் அவ்வளவு தான்...!*_
_*உறுதியான தன்னம்பிக்கையானது, மலை போன்ற பிரச்சினைகளை நகர்த்தி, தெளிவான பாதையை உருவாக்கித் தரக் கூடியது. எனவே,* *மனதில் பலகீனமான எண்ணங்கள் வராமல் கவனமாக இருங்கள்.*_
_*எளிய வாழ்க்கையும்* _*உயர்ந்த சிந்தனையும்*_ _*இருந்துவிட்டால் எப்போதும்* *மகிழ்ச்சிக்கு* *குறைவிருக்காது*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Thursday 28 March 2024

முயற்சி பயிற்சி

 முயற்சி பயிற்சி . .

*தண்ணீரை* *_நினைத்துக்கொண்டு_*
*நெருப்பை* *_தொடுகிற செயல்தான்_*
*மாயை* *_என்பது_*
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தருபவர்களிடமும்
உங்களிடம் அக்கறையோடு பழகுபவர்களிடமும்
நீங்களும் அதிக அக்கறையாக இருங்கள்.
இல்லாததற்கு
ஏங்குவதல்ல மகிழ்ச்சி.
இருப்பதை உணர்தலே மகிழ்ச்சி.
நீங்கள் யார் என்பதில்
பெருமிதம் கொள்ளுங்கள்.
மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
உன்னைப் பற்றி உயர்வாக
எண்ணுவது போல,
பிறரைப் பற்றியும்
உயர்வாகவே கருது.
பொறுமையோடு
அமைதியாக நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழ்வது ஒரு மனிதன் தன் மீது கொண்ட நம்பிக்கைக்கும்
கடவுள் மீது கொண்ட நம்பிக்கைக்கும் சான்றாகும்.
_*எவ்வளவு காலத்திற்குத் தான் இந்த உலகத்தை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பாய் நீ.*_
_*இந்த உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும்படி ஏதாவது ஒரு முய(பயி)ற்சி எடு மனிதா.*_
_*அறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள்.*_
_*நீங்கள் எடுக்கும் முடிவு தான் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வைத் தரும்.*_
_*அந்த முடிவை சரியாக எடுக்கும் ஆற்றலை அறிவு தான் உங்களுக்குத் தரும்.*_
_*போலியும், பொய்யும் நிறைந்த மனிதனுக்கு*_
_*ஆரம்பத்தில் வெற்றி தோன்றலாம்.*_
_*முடிவில் தோல்வி நிச்சயம்.*_
_*பணம் இருக்கும் போது கிடைக்கும் உறவு, பாசம்,*_
_*மதிப்பு, மரியாதை*_ _*அனைத்தும் முற்றிலும்*_
_*போலியானது.*_
_*இந்த உண்மையை பணமும், வேலையும்*_
_*இல்லாதபோது உணர்ந்து கொள்வீர்கள்.*_
_*யார் எப்படி இருந்த போதும் நீங்கள் நேர்மையாக இருங்கள்.*_
_*அது தரும் பரிசே உண்மையான கம்பீரம்.*_
_*மனசை அப்பப்போ ட்ரிம் செய்து சந்தோசமா வெச்சிக்கணும்.*_
_*இல்லைன்னா புதர் மாதிரி வளர்ந்து கஷ்டமாகிடும்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

தீரர் சத்தியமூர்த்தி நினைவைப் போற்றுவோம்


 

Wednesday 27 March 2024

வெற்றியின் ரகசியம் . .

 வெற்றியின் ரகசியம் . .

_*கையாளும் விதத்தில் கையாண்டால் நம் கையை விட்டு எதுவும் போகாது.*_
_*பொருளோ உறவோ அல்லது வேறு எதுவோ அதை மிக கவனமாக கையாளுங்கள்.*_
எலிஸபெத் குப்ளர் ரோஸ்
என்ற அறிஞர்
சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக்
கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.
முதல் நிலை அந்தச் சோதனையை ஒத்துக் கொள்ளவே
முடியாத ஒரு வித ஜடநிலை.
இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை.
மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை.
நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை.
முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து
நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.
சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வது முக்கியம்.
சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற தீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல "ஆனது ஆகி விட்டது;
இதற்குத் தீர்வு என்ன"
என்று சிந்தித்துச் செயல்படத்
துவங்கும் போது தான்
சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.
சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.
பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில்
எதுவுமே வீண் அல்ல. எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம் சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும். ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம் தான்.
_*எலிப்பொறி உணர்த்தும் தத்துவம் என்னவென்றால்.*_
_*சிரமப்படாமல் கிடைக்கும்*_ _*அனைத்தையும்*_
_*சந்தேகப்படு என்பது தான்.*_
_*அழகானவர்கள் நம்மை ஈர்ப்பார்கள்.*_
_*ஆனால்.*_
_*அன்பானவர்கள் தான் நம்முடன் இருப்பார்கள்.*_
_*தைரியமா தூங்குங்க.*_
_*தைரியமா எழுந்திரிங்கன்னு.*_
_*என்ன தான் மத்தவங்களுக்கு சொன்னாலும் நாம் செய்த செயலின் பயம் நம்மை தூங்க விடாது, நிம்மதியா எழுந்திரிக்க விடாது.*_
_*பயமில்லாமல் காட்டிக்கொள்வதே பயம் தான்.*

மனிதத்தேனீயின் தேன்துளி

 


வாழிய பல்லாண்டு


 

நினைவைப் போற்றிடுவோம்


 

வாழிய பல்லாண்டு


 

Tuesday 26 March 2024

பெருமை பொறுமை . .

 பெருமை பொறுமை . .

_*குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல, மாளிகையில் இருப்பவரெல்லாம் பணக்காரரும் அல்ல. மனத்திருப்தியோடு இருப்பவர்களே உண்மையான பணக்காரர்கள்...!*_
_*உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இருங்கள். ஏனென்றால், பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.*_
_*எது உங்களை பலவீனப் படுத்துகிறதோ அதை தயக்கமின்றி தூக்கி எறிந்து விடுங்கள்.*_
_*வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வாங்காமல் செல்கிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.*_
பொறுமையாக இருப்பவனால் தான் விரும்பியதைப் பெறமுடியும்.
மௌனம் உங்களை
சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு.
ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
ஒவ்வொருவருக்கும்
பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை
பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள்
பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.
யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட,
யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையே சிறந்தது.
ஆயிரம் தவம்,தானம், தர்மங்களைக் காட்டிலும் உத்தமமானது "மனசாட்சியுள்ள மனிதனாய்"
வாழ்வது தான்.
ஒரு மனிதனின்
உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகள் தான்.
நீங்கள் அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்பொழுது, உங்களுடைய பாதையும் வெளிச்சமாகிறது.
_*உங்களை மற்றவர்கள் போற்றும் போது மகிழ்ச்சி அடையாதீர்கள்.*_
_*அது போல் உங்களை மற்றவர்கள் தூற்றும் போது மனம் வருந்தாதீர்கள்.*_
_*காரணம் உங்களுக்கு கிடைக்கும் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ*_
_*இரண்டுமே உங்கள் சொல்,செயல் மற்றும் கால மாற்றத்தால் ஏற்படுவதே.*_
_*எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகள்.*_
_*இது பலருக்கு தெரிவது இல்லை.*_
_*இதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 25 March 2024

சின்ன ஆசை பெரிய ஆசை .

 சின்ன ஆசை பெரிய ஆசை .

*_கடன் பட்டு பணக்காரனாக_*
*_வாழ்வதைவிட._*
*_கடன் படாத ஏழையாக_*
*_வாழ்வதே மேல்._*
எல்லோருமே
ஆசைப்படுவோம் அதில் தப்பில்லை. ஆனால் பேராசைபடும் போது
அது எவ்வளவு பெரிய ஆபத்தை கொண்டுவரும்ன்னு நமக்கு உணர்த்துகிறது இந்தக் கதை.
ஹீரோ ஒரு பணப் பைத்தியம். அப்படியிருக்கவனுக்கு
ஈஸியா பணம் கிடைக்குற வழி தெரிஞ்சா விடுவானா.
அவனுக்கு ஒரு சாபம்
பற்றித் தெரிய வருது.
ஹஸ்தர் என்னும் கடவுளுடைய சாபம்.
அந்த சாபப்படி ஹஸ்தரால் தானியங்களைத் தொட முடியாது. அதனால் ஹீீரோ ஹஸ்தரை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்குச் சென்று உணவு கொடுப்பான். அந்த உணவைச் சாப்பிடும் போது அதனிடமிருந்து தங்க காசுகளை எடுத்துட்டு வந்துடுவான். இப்படியே அவன் ராஜ போக வாழ்க்கை வாழுவான். ஆனால் அவன் ஒவ்வொரு முறை ஹஸ்தரை பார்க்க போகும் போதும் ஒரே ஒரு வாளியில் மட்டும் தான் உணவு எடுத்துட்டுப் போவான். இதுவரை அவனுக்கு இருந்தது ஆசை.
அவனுக்கு வயசாயிடிச்சி
இனி இந்த ரகசியத்தை
தன் பையனுக்குச் சொல்லித்தரணும்னு நினைப்பான். அவன் பையனிடம் இதைப் பத்தி சொல்ல அவன் ஒரு யோசனை சொல்லுவான்.
எதுக்கு ஒவ்வொரு முறையும் ஒன்னு ஒன்னா வாளியில் உணவு எடுத்துட்டு போகணும். நிறைய வாளியில் நிறைய உணவு எடுத்துட்டு போவோம். நிறைய தங்க காசுகள் கிடைக்கும்னு யோசனை சொல்லுவான். அது ஹீரோக்கு சரின்னு பட அவனும் அதை ஏத்துப்பான்.
நிறைய உணவு சமைச்சி நிறைய வாளிகளில் எடுத்துட்டு போவான். உணவை ஹஸ்தருக்கு கொடுக்க போகும் போது தான் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கும்.
அவன் எத்தனை வாளிகள் எடுத்துட்டு வந்திருப்பானோ அத்தனை ஹஸ்தர் அங்கே இவர்களுக்காக காத்திருக்கும். கதையின் முடிவு உங்களுக்கே புரிந்திருக்கும்.
ஹீரோ இதை கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டான்.
சில விஷயங்கள்
தாமதமாத் தான் புரியும்.
ஆனால் புரிஞ்சும் பிரயோஜனமில்லாத நிலைமைன்னு சொல்லுவாங்கள்ள அப்படிப்பட்ட நிலை.
*சின்ன ஆசைக்கு சின்னப் பிரச்சனை, சமாளிச்சிடலாம். பெரிய ஆசைக்கு பெரிய பிரச்சனை, சமாளிக்க முடியாது.*
*ஆசைக்கும் பேராசைக்கும் இடையேயான
நூலளவு வித்தியாசம் இதுதான்.*
_*துயரங்களை நம் மனத்தினுள் புகுத்தி வைத்தால், பல மடங்கு மிகுதியாகி மனச் சோர்வும், மேலும் பல துயரங்களும் ஏற்படும். துயரங்களை மறந்து மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும்.*_

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மாநகர் மதுரையில் ரோபோ சங்கர் மகள் திருமண விழா ஒரு கலைத் திருவிழாக நடைபெற்றது. வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 மாநகர் மதுரையில்

ரோபோ சங்கர் மகள் திருமண விழா ஒரு கலைத் திருவிழாக நடைபெற்றது.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.
இன்று காலை மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெ பி மகாலில் நடைபெற்ற அருமை இளவல், திரைப்படக் கலைஞர் ரோபோ சங்கர் - திரைப்படக் கலைஞர் பிரியங்கா சங்கர் மகள் திரைப்பட நடிகை இந்திரஜா- அருமைச் சகோதரி, தொடர்வோம் அன்பு இல்ல நிர்வாகி வளர்மதி பழனிச்சாமி மகன் திரைப்பட இயக்குநர் கார்த்திக்
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம்,
சொ. ராம்குமார், நாச்சம்மை தேவி பூஜா.
மாணவப் பருவம் தொட்டு நமது ரோபோ சங்கர் தனது பேராற்றல் மூலம் இன்று திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் பெரும் வளர்ச்சி கண்டு உலகப் புகழ் பெற்று மாநகர் மதுரைக்குப் பெருமை சேர்த்து வருகின்றார்.
மிகச் சிறந்த உழைப்பும் பேராற்றலும் பெற்று தனது பழமையான நட்பு வட்டத்தை மறவாமல், தனது உறவுகளை அரவணைத்து,
அதேபோல நமது சகோதரி வளர்மதி பழனிச்சாமி தனது உறவுகளையும், தான் சேவை உள்ளத்துடன் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவச் செல்வங்களையும், மாநகரின் முக்கியப் பிரமுகர்களையும் ஒருங்கிணைத்து
பிரமாண்டமான திருமணமாக நடத்தினர்.
அரங்கில் எங்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் என மகிழ்ச்சி வெள்ளம்.
கூடுதல் சிறப்பு :
பங்கேற்ற பலர் வாழ்த்தியும், பாடல்கள் பாடியும் அதற்கு மணமக்கள் அற்புதமாக ஆடியும் தங்கள் வெள்ளந்தியான நிலையை இயல்பாக காட்டினர்.
இது இறைவன் திருவருளால் சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்திடும் வண்ணம் அமைந்தது.
வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான உணவு
மற்றும்
செடிகள் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.
திரைத்துறையினர், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
வாழிய மணமக்கள் வாழியவே.


















எதை எப்போது . .

 எதை எப்போது . .

அச்சம்
ஒரு மடத்தில் துறவி ஒருவர்
இருந்தார். நிறைய சீடர்கள்
அவரிடம் கல்வி கற்று வந்தனர்.
சீடர்களுடன்
உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத்தீமைகளுக்கும் அச்சம் தான் அடிப்படைக் காரணம்;
அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது,'' என்றார்.
குறுக்கிட்ட சீடர் ஒருவர்,
“ஐயா! அச்சத்தால்
பேராசை உண்டாகும் என்கிறீர்கள்.
இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,'' என்றார்.
அதற்கு அவர் பதில் ஏதும் சொல்ல வில்லை.
அன்றிரவு
வழக்கம் போலத் துறவியும், சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர்.
அப்போது துறவியிடம் வந்த சமையல்காரர், “மடத்தில் அரிசி தீர்ந்துவிட்டதை நான் கவனிக்கவில்லை.
இருந்த அரிசியை வைத்து இரவு சமையலை முடித்து விட்டேன்.
நாளை நகரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வந்தால் தான்,
சமையல் செய்ய முடியும்.
நண்பகலில் தான்
உணவு தயாராகும். காலை உணவு சமைக்க வழி இல்லை,'' என்றார்.
பிறகு அவர் எல்லாருக்கும் உணவு பரிமாறினார்.
துறவியும், சீடர்களும் உண்டு முடித்தனர்.
சீடர்களைப் பார்த்து துறவி,
“இன்று நீங்கள் அனைவரும் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு உள்ளீர்கள் ஏன்'' என்று கேட்டார்.
“நாளை காலையில் உணவு கிடையாது என்று சமையல்காரர் சொன்னார்.
காலையில் பட்டினிகிடக்க வேண்டி இருக்கும்.
அதனால், இப்போது
அதிகமாகச் சாப்பிட்டுவிட்டோம்,'' என்றார் சீடர்களில் ஒருவன்.
“நாளை காலையில்
உணவு கிடைக்காது என்று அச்சம் கொண்டீர்கள்.
அதனால் வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டீர்கள்.
அச்சத்தால் பேராசை வரும்
என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா''
என்றார் துறவி.
அச்சத்தால் பேராசை வரும் என்பதை ஒப்புக்கொண்டனர் சீடர்கள்.
_*அனுபவம் என்பது எதை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல. எதை எப்போது செய்யக் கூடாது என்று தெளிவாக இருப்பதாகும்.*_
*_எல்லாமே தெரியும் என்று_*
*_சொல்லிக் கொள்ளலாம்_*
*_தவறில்லை._*
*ஆனால்*
*_அடுத்தவர்களுக்கு_*
*_எதுவுமே தெரியாது என்று_*
*_நினைத்து விடக்கூடாது._*
*அது தவறு*
*_துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும் ..._*
*_பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும்