Saturday 29 February 2020

தியாகி சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம்


தினபூமி மதுரை 29.02.2020 பக்கம் 6


மனிதத்தேனீயின் தேன்துளி


பிரதமருக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவள் பகிரங்க மன்னிப்பு கோரினாள்













பிரதமருக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவள் பகிரங்க மன்னிப்பு கோரினாள்..
சேலம் மாநகர் மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரில், 'சமூக வலைதளங்களில், பரிமளா என்ற ஐடியில், மோடி கதையை முடிங்கப்பா... இவனெல்லாம் இன்னும், ஐந்து வருசம் இருந்தா இந்தியா அப்படியே, 50 ஆண்டு பின்னாடி போய் விடும். மனித வெடி குண்டு வேண்டும்னா சொல்லுங்க நான் வாரேன்' என பதிவிட்டுள்ள பெண்ணை கண்டறிந்து, அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறபட்டிருந்தது.
புகாரை பெற்ற சைபர் க்ரைம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் சேலம், நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வரும், கன்னங்குறிச்சியை சேர்ந்த பரிமளா, 39, என்பது கண்டுபடிக்கப்பட்டது.அவள் மீது மற்றவர்களை குற்றம் செய்ய துாண்டியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, பரிமளா, தன் பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ளதாவது: சேலத்தில், கடந்த பிப்.,25 மாலை, இரவு உணவு வாங்க ஓட்டலுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்த நிலையில், சில நண்பர்கள் எனக்கு போன் செய்து, பாரத பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்வு இருப்பதாக சொன்னார்கள்.உடனடியாக அந்த பதிவை அழித்து விட்டேன். இந்திய இறையாண்மைக்கும், அரசு பொறுப்பாளர்களுக்கும் எந்த வித மிரட்டலும் என்னால் வேண்டுமென்றே செய்யப்பட வில்லை. நான் இந்திய இறையாண்மை, நாட்டின் மீதும், பாரத பிரதமர் மோடி மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்,
எப்படியோ துரதிஷ்டவசமாக அந்த பதிவு பதியப்பட்டு விட்டது. வேண்டுமென்றே பதியப்படவில்லை. இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளாள்.
குறிப்பு;இவளின் முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் பார்த்தாலே தெரியுமே..?எதிர்மறையாக வரும் பின்னூட்டங்களுக்கு இவள் பதிலையும் பார்த்தாலும் தெரியுமே..?இவள் சொல்வது அனைத்தும் பொய் என்பது தெரிந்தும் க்ரைம் போலீஸ்,இவளை தண்டிக்காமல் விடுவது ஏன்..?தெரியாமல் செய்தால் மன்னிக்கலாம்..இவளின் பல பதிவுகளை படித்துள்ளேன்..அவைகளை மறுத்து பின்னூட்டமும் செய்துள்ளேன்.இவள் மன்னிக்கப்பட வேண்டியவள் அல்ல..தண்டிக்கப்பட வேண்டியவள்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்....
படிக்க தவறாதீர்.
வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:
சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.
அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.
அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.
அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.
என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.
அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.
பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.
சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.
60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.
என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.
அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்
இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.
படித்த கணவர் #நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.
என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்...
ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.
பாசிட்டிவ் ஆன வார்த்தைகளை உபயோகிக்க பழகிக் கொள்ளுங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்..
- படித்ததில் பிடித்தது.

Friday 28 February 2020

ஜார்ஜ் ஜோசப் நினைவு தினக் கூட்டம்


மாலைமுரசு 28.02.2020 பக்கம் 5


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீரால் கொல்லப்பட்டதாக கருதப்படும் உளவுத்துறையின் அங்கித் ஷர்மா உடம்பில் 400க்கும் மேற்பட்ட கத்திக் குத்துகள். "4 முதல் 6 மணி நேரம் இப்படி குத்தி சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இப்படி ஒரு கொடூரத்தை நாங்கள் பார்த்ததேயில்லை" என்கிறார்கள் தடயவியல் மருத்துவர்கள்...
- அமைதிமார்க்கம் அத்தனை பேரும் ஐஸிஸ் பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமில்லை. டில்லி அரசியலில் ஆதாயம் தேட ஆம் ஆத்மியும் காங்கிரசும் - பிரஷாந்த் கிஷோர் ஆலோசனையில் - "குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம்" என்று இந்த போராட்டங்களை ஆரம்பித்து, இன்று குறைந்தது 33 பேர் உயிரை பழி வாங்கியிருக்கிறது.
"தாஹீர் ஹுசைன் யாரென்றே எங்களுக்கு தெரியாது" என்ற ஆம் ஆத்மியினர் தாஹீருக்கும் ஆம் ஆத்மிக்கும் உள்ள தொடர்புகளை வெளியிட்டதும், "அவனை கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்கிறோம்" என்று நாடகமாடுகிறது.
தாஹீர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த கயவர்களுக்கு வாக்களித்த டில்லி மக்கள் இப்போது கேஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது கடுப்பில் இருக்கிறார்கள். காவலர் ரத்தன் லால் துப்பாக்கி கலவர பாய்மாரின் குண்டுகளுக்கு பலியானதையடுத்து அவரது இறுதி சடங்குக்கு கேஜ்ரிவால் உள்ளிட்டோர் சென்ற போது மக்கள் அவர்களை துரத்தி விட்டனர்...
சாயம் வெளுக்க தொடங்கியிருக்கிறது...
Ankit Sharma’s body was stabbed over 400 times: Post mortem report
https://www.opindia.com/…/ib-officer-ankit-sharma-post-mor…/
Delhi police file FIR against AAP corporator Tahir Hussain under IPC Section 302 for murder of IB officer Ankit Sharma
https://www.opindia.com/…/aap-tahir-hussain-fir-section-30…/
Delhi Anti-CAA riots: Autopsy report confirms that head constable Ratan Lal died of bullet injuries
https://www.opindia.com/…/delhi-police-head-constable-rata…/

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் இந்த நீதிபதி முரளிதர்?
டெல்லி கலவரத்தில் என்னடா சம்பந்தம் இ ல்லாமல் பிஜேபி ஆட்களின் மீது மட்டும் வழக்கு பதிய உத்தரவு போடுகிறாரே யார் இந்தநீதிபதி முரளிதர் என்றுபார்த்தால் கடை சியில் அவர் நம்முடைய திராவிட கூட்டத்தில்
ஒருவர் தான் என்று தெரிந்து விட்டது.
நீதிபதி முரளிதர் அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்துவளர்த்து படித்து 1984-1987 வரை சென்னை ஹைகோர்ட்டில் லாயராக இருந்து அப்படியே டெல்லிக்கு சென்று உச்சநீதிமன்ற லாயராகி பிறகு நீதிபதியாக உயர்ந்தவர்.
இடதுசாரி சிந்தனை உடைய முரளிதர் போபா ல் விஷவாயு வழக்கு நர்மதா அணை வழக்கு
என்று அரசுக்கு எதிரான வழக்குகளில் ஈடு
பாடு கொண்டு வழக்காடியவர்.பின்னர் மனித
உரிமை கமிசனில் உறுப்பினராகிய பிறகு
அரசுக்கு எதிராகவே மனநிலை கொண்டவ ராக மாறியவர்.
2006 ல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று டெல்லி ஹைகோர்ட்டில் நீதிபதியாக பதவிக்
கு வந்தவர். இவருடைய நீதி மாண்புக்கு ஒரு
சிறு எடுத்துக்காட்டு பீமாகோரேகான் வழக்
கில் சமந்தப்பட்ட அர்பன் நக்சல் கௌதம் நவ
லாகாவை மும்பை போலீஸ் கைது செய்து
வீட்டு சிறையில் வைத்து இருந்ததை கேன்சல்
செய்து வெளியில் விட்டவர்.
நீதிபதி முரளிதர் வழங்கிய தீர்ப்பில் மிக மு க்கியமானது நாஸ்பவுண்டேசன் சார்பில்
தொடர ப்பட்ட வழக்கில் ஓரினசேர்க்கையை அதாவது ஹோமேசெக்ஸ் குற்றம் அல்ல என்று இந்திய மரபினை உடைத்து 2009 ல் தீர்ப்பு வழங்கியவர் என்றால் இவர் எப்படி பட்டவர் என்று அறிந்து கொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்பு படி இபிகோ 377
பிரிவின் கீழ் ஹோமோசெக்ஸ் குற்றம் அத ற்கு 10 வருட தண்டனை உண்டு.ஆனால்
அதை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கிய மா
மேதை தான் நீதிபதி முரளிதர்.
இப்படிப்பட்ட நீதிபதி முரளிதர் டெல்லி கலவர
ங்கள் மீது கலவரத்தை நடத்தியவர்களை கண்டு கொள்ளாது பிஜேபி தலைவர்கள்
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நடந்து வரு ம் போராட்டத்தை விலக்காவிட்டால் நாங்களே
விலக்க வைப்போம் என்று கூறியதை வை த்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து
வழக்கு பதிவு செய்ய தீர்ப்பு வழங்கி இருக்கி றார்.
வழக்கமாக உயர் பதவியில் உள்ள ஒரு அரசு அதிகாரியை 3 வருடங்களுக்கு மேல் ஒரு
இடத்தில் பணி புரிய வைத்து இருக்க மாட்டார் கள் ஆனால் நீதிபதி முரளிதர் 13 வருடங்க ளாக டெல்லி ஹைகோர்ட்டிலேயே தொடர்ந்து
இருந்து இருக்கிறார்.
நீதிபதி முரளிதர் இடமாற்றம் பற்றி கடந்த
ஜனவரி மாதமே கொலிஜியம் முடிவு எடுத்து
விட்டது. இது பற்றிய செய்திகள் ஜனவரி 28
ம் தேதியே வந்துள்ளது ஆனால் அதைப்
பற்றி கண்டு கொள்ளாமல் அவருடைய ஆதர
வு வக்கீல்களை வைத்து ட்ரான்ஸ்பரை எதி ர்த்து போராட வைத்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் அது முடியாமல் போகவே வேறு வழி
யின்றி ஏற்றுக் கொண்டு டில்லி கலவரங்க ளை முன்வைத்து அரசாங்கத்தையும் பிஜேபி
தலைவர்களையும் குற்றவாளிகளாக மாற்றி
விட்டு தன்னுடைய இடமாற்றத்திறகு தன்னு டைய தீர்ப்பை வைத்து பிஜேபி அரசாங்கம்
பழி வாங்குகிறது என்று மற்றவர்களுக்கு
தெரிய வைத்து இருக்கிறார்..

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*"நன்றி சொல்வோம்''*
நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம்.
நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது.உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்.நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்.
நன்றி, பாராட்டு உரியவருக்கு கொடுக்கும்போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் நமக்கு திருப்பிக் கொடுப்பார்கள்.
நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.
உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.
அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார்.
மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்:
கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்..
நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.
நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள்.முணு முணுக்காதீர்கள்.
மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.
சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்கு மான சொத்தாக இருக்கும்...

மனிதத்தேனீயின் தேன்துளி


முகமுடி அணிந்த மனிதர்கள்....

டெல்லியில் நேரு விஹார் 59 வார்டு ஆம் ஆத்மி கவுன்சிலர் தாரிக் ஹுசைனின்
பேக்டரி சீல் வைக்கப் பட்டுள்ளது. இங்கிரு ந்து தான் கலவரத்திற்கு தேவையான கற்க ளும் பெட்ரோல் குண்டுகளும் கலவரகாரர் களுக்கு சப்ளை செய்யப்பட்டு ள்ளது.
அது மட்டுமல்லாது இவரினால் தான் பலர்
உயிர் இழந்து இருக்கிறார்கள் என்று டெல்லி
போலீஸ் கண்டு பிடித்துள்ளது. ஐபியில் வேலை பார்த்த அங்கித் சர்மாவும் இவரால்
தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இவனிடம்மட்டும் 100 க்கும் மேற்பட்ட பங்களா தேசிகள்வேலை செய்து வருகிறார்கள்.. இவ ன் கூட ஒரு பங்களாதேசியாக இருக்கலாம்..




Thursday 27 February 2020

மாலைமுரசு 27.02.2020 பக்கம் 5


மதுரைமணி 27.02.2020 பக்கம் 3


பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் பாராட்டு விழாவில் ...

தினமலர் மதுரை 27.02.2020 பக்கம் 3


தினமலர் மதுரை 25.02.2020 பக்கம் 1


பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் மனோகர் தேவதாஸ் -க்குப் பாராட்டு விழா









முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர் சமூகச் செயற்பாட்டாளரா..?
என் வீட்டை அபகரிக்க நினைக்கிறார்!'- வீட்டின் உரிமையாளர் புகாரால் கைது செய்யப்பட்டார் பியூஷ் மானஸ்..
இவர் குடியிருக்கும் வாடகை வீட்டைக் காலி செய்யாமல் பிரச்னை செய்ததாகச் சொல்லி வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பியூஷ் மானஸ் கன்னங்குறிச்சி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பியூஷ் மீது புகார் கொடுத்த வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி, ''நாங்கள் கர்நாடகாவில் குடியிருந்தோம்.
எங்களுக்குச் சொந்தமான வீடு சேலம் ஏற்காடு அடிவாரத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ளது. சேலத்தைச் சேர்ந்த பியூஷ் மானஸ் என்னுடைய வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார். அதையடுத்து 2015ம் ஆண்டு அவரிடம் ஒரு லட்சம் முன் பணமும், மாதந்தோறும் பத்தாயிரம் வாடகையும் கொடுப்பதாக உறுதி பெற்று 11 மாத ஒப்பந்த அடிப்படையில் என் வீட்டை வாடகைக்கு விட்டோம்.
இந்நிலையில் என் கணவர் 2017 ஏப்ரலில் இறந்து விட்டார். அதன் பிறகு சொந்த வீட்டில் குடியேற முடிவெடுத்து 2018-ல் என் வீட்டை வந்து பார்த்தேன். எங்க வீட்டை ஒட்டியுள்ள மாநகராட்சி நிலத்தில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அதைப் பார்ப்பதற்காக என் வீட்டுக்குள் நுழைந்தேன். என்னை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
அதன் பிறகு வீட்டை காலி பண்ணச் சொல்லியும் காலி பண்ணவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. கடந்த மே மாதத்திலிருந்து 9 மாதமாக வீட்டு வாடகையும் கொடுக்கவில்லை. விதவையான என் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். அதையடுத்து கலெக்டரிடமும் முதல்வரிடமும் மனு கொடுத்தேன்'' என்றார்.
இதுபற்றி பியூஷ் மானஸ் மனைவி மோனிகா, ''அந்த வீட்டில் யாராலும் குடியிருக்க முடியாது. நாங்கள் அந்த வீட்டிற்கு 4 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். ஆஷாவின் கணவர் சிங்கிடம் தான் ஒப்பந்தம் போட்டுள்ளோம். வீடு காலி பண்ணச் சொன்னார்கள். எங்க குழந்தைகள் 3 ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகுதான் காலி பண்ண முடியும் என்று தெளிவாகச் சொன்னோம். வீட்டு வாடகை மாதந்தோறும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் போட்டுள்ளோம்" என்றார் என்று 'விகடன்'பதிவு செய்துள்ளது.
குறிப்பு;அந்த வீட்டில் யாராலும் குடியிருக்க முடியாது என கூறுபவர் உடனே காலிசெய்ய வேண்டியதுதானே..?மாதம் 10ஆயிரம் வாடகை வீட்டிற்கு 4 லட்சத்திற்கும் மேல் செலவா?அதுவும்11 மாதத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யும் வீட்டிற்கு? குழந்தைகள் 3 ஆண்டுகள் படிப்பு முடித்த பிறகுதான் காலிபண்ண முடியும் என்று சொன்னால் வீட்டு உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் சரியா?வீட்டின் உரிமையாளருக்கு வாடகையும் கொடுக்காமல்,குழந்தைகள் படிப்பு முடிந்த பின்தான் காலி செய்வேன் என,சமீபத்தில் கணவனை இழந்த பெண்ணிடம் வாதிடும் இவர் சமூகச் செயற்பாட்டளரா..?
நன்றி ராஜப்பா தஞ்சை

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' மனதை ஒருநிலைப் படுத்தினால்''..
.................................
நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும்.
எந்த செயலையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும்..
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப் படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும்.
குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒரு நிலைப் படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.
நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார்
ஆனால் எந்த வேலையையும் ஒருமைப் பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார்.
ஒருநாள் அவரை அழைத்து பூதக் கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டு வரச் சொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார்.
ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார்.
அப்போது தாயார் கூறினார்,,
''ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது.
அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.
இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக் கொண்டார்.
அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றுவராக திகழ்ந்த சர் சி வி இராமன் அவரே ஆவார்.
.
ஆம்.,நண்பர்களே..
ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும்.
இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி..)

எழுத்தாளர் சுஜாதா நினைவைப் போற்றுவோம்


மனிதத்தேனீயின் தேன்துளி


Wednesday 26 February 2020

மக்கள்குரல் மதுரை 26.02.2020 பக்கம் 5


மதுரைமணி 26.02.2020 பக்கம் 4


தினமலர் மதுரை 26.02.2020 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

புறக்கணிப்புகளை புறக்கணியுங்கள்!*
இந்த உலகத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம். *ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.* வாழ்க்கையில் பிறரால் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நமக்கான போராட்டங்கள் ஆரம்பமாகிறது. நம்பிக்கை கொடுக்கவும் நம்பி கை கொடுக்கவும் யாரேனும் இருக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் பெரும்பான்மையான மனிதர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய எண்ணப் போராட்டங்களே மனப் பூசல்களையும், விரக்தியையையும் சோர்வையும் தருகிறது.வாழ்வில் வெற்றி பெற அவமானங்களும், புறக்கணிப்பும் அவசியம் தேவை தான். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சேகரித்து வையுங்கள். பின்னாளில் நமக்கான வெற்றி விழாவில் சொல்வதற்கு உதவும். சக மனிதன் வளர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணங்கள் தான் இந்த புறக்கணிப்பிற்கான காரணமாகும்.பின்னாடி பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னாடி போக முடியாது. இந்த *புறக்கணிப்பு கூட ஒரு உந்துதல் சக்தி தான்.* மண்ணிற்குள் புதைத்து வைத்த விதைகள் முட்டி மோதி வெளியே வருவது போல இவற்றையெல்லாம் புறம் தள்ளி வெளியே வாருங்கள். மனத் தடைகளைத் தாண்டி, புறத் தடைகளைத் தாண்டி வருவதுதான் வாழ்விற்கான வெற்றியாகும்.
*༺🌷༻*
வேலை கேட்டுச் சென்ற முதியவரிடம் அந்த நிறுவன முதலாளி 59 வயதில் உங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்டதற்கு, *இனிக்கும் 16 வயது இளமையும், அதனுடன் 45 வருட கடினமான அனுபவமும்* சேர்ந்து 59 வயது இளைஞன் நான் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த அந்த முதியவரை, நிர்வாக ஆலோசனை தலைவர் பதவியில் அமர்த்தினாராம் முதலாளி. மகரயாழ் இப்படித் தான் எதிர்பாராத சூழலையும் எதிர் நோக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
*༺🌷༻*
*உளிபடாத கல் சிலையாவதில்லை. வலி இல்லாத வாழ்க்கையும் வெற்றி பெறுவதில்லை.* எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டால் வாழ்வில் சுவாராசியமேது?மிகப்பெரிய அவமானங்களைக் கடந்து வந்தவர்களே இன்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
*༺🌷༻*
இன்பமும் துன்பமும்: எது வரினும் மனம் தளராத தன்மை, பரந்த ஆகாயம் போன்ற விசாலப் பார்வை, இதுவும் கடந்து போகும் என்ற மனப் பாங்கு, எந்த சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை, பாறை போன்ற மன உறுதி இவை அனைத்தும் இருந்தாலே போதும் எந்த புறக்கணிப்புகளும், அவமானங்களும் நம்மை ஒன்றும் செய்யாது. எதிர்மறை எண்ணங்களை புறக்கணிக்கலாம். எதிர்மறை மனிதர்களைப் புறக்கணிக்கலாம். வேண்டாத ஆசைகளைப் புறக்கணிக்கலாம். தீய சிந்தனைகளையும், தீய மனிதர்களையும் புறக்கணிக்கலாம். அதே சமயம் நாம், பிறர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ, அதை நாமும் மற்றவருக்கு செய்யக் கூடாது என்பதில் கவனம் வைப்போம்.#மகரயாழ் மனதாலும், சொல்லாலும், செயலாலும் பிறரைக் காயப்படுத்தக் கூடாது.
*༺🌷༻*
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. சொற்காளால் அவமானப்பட்டு பிரிந்த உறவுகள் அதிகம். அதனால் தான் *நாவினால் சுட்ட வடு* என்று வான் மறை கூறுகிறது. *ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்.* வெல்லும் சொற்களாக நமது சொற்கள் இருக்கட்டும். அவமானப்படுத்தும் சொற்களை தவிர்த்து ஆக்கப்பூர்வ சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்வுப் பூர்வ மனிதர்களை நல்ல உணர்வுகளால் இணைப்பது நல்ல வார்த்தைகளே.சகமனிதனை நேசிக்க ஆரம்பித்தாலே போதும். புறக்கணிப்புகளும், அவமானங்களும் என்ற வார்த்தைகளே நம் கலைக் களஞ்சியத்தில் இல்லாமல் போய் விடும்.அங்கீகரிப்போம் எளிய மனிதர்களையும். அரவணைப்போம் அகிலத்தையும். புறக்கணிப்புகளைப் புறம்தள்ளுவோம். அவமானங்களை அடித்து நொறுக்குவோம். *வாழ்தல் இனிது. வாழ்க்கையும் இனிது.*
*🌸நன்றி🙂🙏💐*
*🌸ம.ஜெயமேரி.

மனிதத்தேனீயின் தேன்துளி


வரும் சனிக்கிழமை மாலை சேதுபதி மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெறும் விழா.


Monday 24 February 2020

இந்தியாவின் கலாச்சாரத்தில் வியந்த ட்ரம்ப்

இந்தியாவின் கலாச்சாரத்தில் வியந்த ட்ரம்ப்...!! பாகிஸ்தானின் பித்தலாட்டங்கள் இனி எடுபடாது...!!
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிலுள்ள கலை , கலாச்சாரம் , அமைதி போதிக்கும் சமர்மதி ஆசிரமம் , மற்றும் ஆன்மீக நிறைந்த பண்பாடு என இந்தியாவை கண்டு அவருக்குள் இந்தியா குறித்து நல்ல மனமாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் இவான்காவுடன் இந்தியா வந்துள்ளார் . இந்தியாவுடன் எப்போதுமே ஏட்டிக்கு போட்டி என்ற நிலையில் இருந்துவந்த அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தது . இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று முதல்முறையாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது மனைவி மகள் என குடும்பத்துடன் சர்வதேச பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக இந்தியா குறித்து மேம்போக்கான மனநிலையிலிருந்து வந்த அதிபர் ட்ரம்புக்கு இந்தியாவின் இந்த வருகை நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் இந்தியா வந்து இறங்கியவுடன் அவருக்கு பாரம்பரி முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து புறப்பட்ட அவர், மகாத்மா காந்தியடிகளில் அமைதி, அறம் போதிக்கும் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார் , அங்கே மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்க்கை , மற்றும் ஒழுக்கத்தை போதித்த குரங்கு பொம்மைகள் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து வியந்த ட்ரம்ப் இந்தியாவின் எளிமையால் நெகிழ்ச்சியடைந்தார்.
இந்தியாவினுடைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அவர் அங்கு கண்டகாட்சிகள் இந்தியாவின் மீது நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கியுள்ளது. எப்போதும் அமைதியையும் சமாதானத்தையும் போதிக்கும் நாடு இந்தியா என்ற என்பதை அவர் இதன் மூலம் அவர் உணர்ந்து கொண்டதாக தெரிகிறது . அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு மற்றும் இந்தியாவில் கலாச்சாரம் அமைதி உள்ளிட்டவை ட்ரம்ப் மனதில் இந்தியாவை குறித்த கண்ணோட்டத்தையே மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது .
அவர் இந்தியாவிற்கு நேரில் வந்ததன் மூலம் இந்தியாவின் அமைதியையும் அன்பையும் கலாச்சாரத்தையும் அவர் புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது .
இது நாள்வரை இந்தியாவின் மீது பாகிஸ்தான் கூறிவந்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை இந்த பயணத்தில் மூலம் ட்ரம்ப் உணர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது என்று Asianet news பதிவு செய்துள்ளது.
நன்றி ராஜப்பா தஞ்சை

முதுபெரும் தியாகி அ.வைத்தியநாத அய்யர் நினைவு தினக் கூட்டம்




தினபூமி மதுரை 24.02.2020 பக்கம் 4


மக்கள்குரல் மதுரை 23.02.2020 பக்கம் 4


மாலைமுரசு 23.02.2020 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தொடரும் அநீதி...
திமுக,கூட்டணி எம்பி பாரிவேந்தரின் கல்லூரியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை..ஸ்டாலின்,கனிமொழி மௌனம்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனில்குமாரின் மகள் ஆயிஷா ராணா (19). இவர், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் தூக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இக்கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், விடுதியில் தங்கியிருந்த 4 மாணவ, மாணவிகள் மேல்மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்போது மேலும் ஒரு மாணவி விடுதிக்குள் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் இக்கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டனர்.
இவைகள் எல்லாம் தற்கொலைகள்தானா..?என மக்கள் கேட்கின்றனர். எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த கல்லூரி மாணவ,மாணவிகளின் மரணம் மட்டும் தெரியாதது ஏன்..?டெல்லி கல்லூரி மாணவர்களின் காயத்தை விசாரிக்க சென்ற,திமுக மகளீர் அணிதலைவி கனிமொழிக்கும், இளைஞர் அணிதலைவர் உதயநிதிக்கும், எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் மாணவிகளின் தொடர் மரணம் பற்றி கேள்வி கேட்கவோ,போராடவோ முடியாததற்கு காரணம் என்ன?கூட்டணி தர்மமா..?அல்லது அனைத்திலும் கூட்டா..?மாநில,மத்திய அரசுகளும் இவைகளை வேடிக்கை பார்பது ஏன்?புதிய தலைமுறை மற்றும் மீடியாக்கள் இதைப்பற்றியும் விவாதிக்கலாமே..?
நன்றி ராஜப்பா தஞ்சை

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1000 முறை வீழ்ந்தாலும்...மீண்டு எழு..👍*
குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை.
*༺🌷༻*
அதை குருநாதர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும், சிஷ்யனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீள்வது என ஒவ்வொரு முறையும் கவலையோடுதான் பணிகளை ஆரம்பிப்பான். பதட்டம் பற்றிக்கொள்ளும்.
பதறினால் சிதறத்தானே செய்யும். ஒருமுறைகூட முதல் முயற்சியிலேயே வெற்றியைச் சுவைத்ததில்லை அவன்.
*༺🌷༻*
ஒருசில நாட்கள் அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார்.
*༺🌷༻*
‘‘கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளிகள் சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப்போல நடந்துதான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தே கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?’’ என்று கேட்டார் குரு. மகரயாழ்
ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘‘தெரியவில்லை குருவே’’ என்றான் சிஷ்யன்.
*༺🌷༻*
குரு பேசலானார்.. ‘‘சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியைப் பிடித்தவுடன் முதலில் அதன் சிறகுகளை வெட்டியெடுத்துவிடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகும்..’’.
கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.
*༺🌷༻*
‘‘வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்துவிடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால் அது பறக்க முயற்சிப்பதில்லை! தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக்கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்துபோய்விடும்..’’.
*༺🌷༻*
குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது சிஷ்யனுக்கு. முழுமையாகப் புரியச் செய்தார் குரு. #மகரயாழ்
*༺🌷༻*
‘‘எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல்வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்தமுறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும்தான் முக்கியமாகும். இத்தனை தடவைகள் தோற்றுப்போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டுசென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல்வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப்போவோம்..’’ என்றார் குரு.
*༺🌷༻*
அதன் பின்னர் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்துபோனது சிஷ்யனிடம். என்ன ஆச்சர்யம்... முதல் முயற்சிகளிலேயே வெற்றிகள் அவனைத் தேடி வந்தன.
*💐நன்றி🙏*
*💐திரு. ஜி.கெளதம்*

ஆளுமையின் அடையாளம்


திருநகர் அண்ணா பூங்காவில் நடந்த திருநகர் மக்கள் மன்றம் தொடக்க விழாவில் மனிதத்தேனீ

நேற்று இரவு திருநகர் அண்ணா பூங்காவில் நடந்த திருநகர் மக்கள் மன்றம் தொடக்க விழாவில் மனிதத்தேனீ, முனைவர் ம. திருமலை, காவல் துறை உதவி ஆணையர் ஆ. மணிவண்ணன், எல். கிருஷ்ணசாமி, அதன் தலைவர் மு. செல்லா, செயலாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மா. ராஜேந்திரன், துணைத் தலைவர் பொன். மனோகரன் உள்ளனர்.
விரிவான செய்திகள் திங்கள்கிழமை வரும்.




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*"பிடிவாத குணம்’’..*
..................................
பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை” என்றும் சொல்லமுடியாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது? அது ஒருவரின் வாழ்க்கை சூழலை பொறுத்தே அமைந்தே இருக்கும்.*
“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பகும்” என்று சொல்கிறார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்..
பிடிவாத குணம் என்பது,ஒரு வலிமையான மனோபவம்..தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான்.பலமுறை தோற்ற பின்பும்,வெற்றியை விரட்டி பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
’எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற மோகன்தாசின் பிடிவாத குணம்தான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது..
ஆராய்ச்சி கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம்தான் தாமஸ் ஆல்வா எடிசனை,1600 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது..
என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நாம் மிதிப்பேன்’’எனும் பிடிவாதம்தான் ‘’யாக்’’ எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப் பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம்தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தி உள்ளது.
ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடிபோல, வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்துக்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம்,
ஆனால் அவை எல்லால் வெறும் கருப்புப் பக்கங்களே!. எப்படி இருக்கக் கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.
சுயநல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல் அழிவார்கள்..
ஆம்.,நண்பர்களே..
*தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும்,*
*தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தொலைத்து விடும்.*💐💐💐

வைத்தியநாத அய்யர் நினைவு தினக் கூட்டம்