Saturday 30 October 2021

மதுரை திருநகரில் பசும்பொன் தேவர் திருமகன் குருபூஜை

 






தமிழ் கடல் இராய. சொக்கலிங்கம் பிறந்த நாள்


 

வெளி வேஷம் இல்லாத குணம்.

 வெளி வேஷம் இல்லாத குணம்.

மனதில் அழுக்குகளை வைத்துக் கொண்டு வெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகப்பூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.
நம் புன்னகை கூட போலியாக
வெளிவேஷமாக இருப்பதைச் சிறிது நேரத்தில் காட்டிக் கொடுத்து விடும் .
ஆகையால் மனம் சுத்தமாக வேண்டும் என்றால் ஒவொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும் .
கண்களில் இருக்கும் அசுத்தம், காதுகளில் இருக்கும் அசுத்தம் போலவே,
வார்த்தைகளில் இருக்கும்.
அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் நம் எண்ணைங்களை சுத்தமாக்க வேண்டும்.
நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது,நம் கண்கள் நல்ல ஓவியங்களைப் பார்க்கிறது.
நம் காதுகள் நல்ல வார்த்தைகளைக் கேட்கிறது.அப்போது மனம் தானாகவே சுத்தமாகி விடும்.
இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் .
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று "என்று கூறுகிறார் .
இனிய சொற்கள் பரந்து இருக்கும் போது,
கடுஞ்சொற்களைக் கையாள்வது, பழுத்தப் பழங்கள் குவிந்து கிடக்கையில்,
காய்களைத் தேடிப் பிடித்து உண்டு,
அதன் பின் அதன் கசப்பை உணர்வது போல இருக்கிறது என்று அருமையாகச் சொல்லுகிறார்.
ஆம்,நண்பர்களே
இனிமையான நல்ல பழங்கள் போன்று நாம் பேசும் போது கனிவு மிகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனிதருக்குள் பாகுபாடு இல்லை.

 மனிதருக்குள் பாகுபாடு இல்லை.

On.30 -10-2021,இன்று,ஐப்பசிமாதம்,13,ம்,நாள்,
*சனிக்கிழமை***தசமி*திதி** Om🌺🌺🌺 🌹,*
மனிதர்களுக்குள் இருக்கும் பாகுபாடுகள் என்னென்ன?
மனிதருக்குள் பாகுபாடு என்பதேது! Om🌺🌺🌺
தேவகியின் மகனாக யாதவ குலத்திலே பிறந்து -வளர்ப்பிலே யசோதைக்கு மகனாக ஆயர்பாடியில் வளர்ந்து- கோபிகையின் நெஞ்சங்களில் நிறைந்து- நம்மை ஆட்டுவிக்கும் கண்ணனவன் - இரு தாயின் அன்பிலே பேதமை காண்பானோ !
நட்பிற்கு உதாரணமாக வாழ்ந்த ராமபிரான் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை கண்ட பின்பு மனிதருக்குள் பாகுபாடு என்பது இல்லை என்பதை புரிந்து கொள்வோம்….
தாய் கைகேயி பேச்சுக்கு கட்டுப்பட்டு ஸ்ரீராமபிரான் மனைவி சீதா தேவியோடு -தம்பி லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு பதினான்கு வருடங்கள் காட்டில் காலத்தை கழிப்பதற்காக வந்து கொண்டிருந்தார் .இதை அறிந்த வேடுவகுலத்தைச் சேர்ந்த குகன் என்பவன் கங்கைக் கரைஓரமாக ராமன் வரவை எண்ணிக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.அரசகுல மன்னன்ஸ்ரீராமனை வேடுவ குல மன்னனாகிய குகன் நட்புக்கொள்ள ஆசைப்பட்டு‌…கங்கை கரைஓரத்திலே , வேடுவ குலத்தை சேர்ந்த தம்மிடம் ஸ்ரீ ராமபிரான் பேச மாட்டாரோ!என தேனோடு மீனுடன் இது தகுமோ ! எனஐயத்தோடு காத்திருக்க -அங்கு வந்த ஸ்ரீராமனோ கனிவோடு குகனை நோக்குகின்றார்.
"ஜாதி மதம் நட்புக்குண்டோ- என்அன்பு நண்பனே* மலை மேலேமர உச்சிதனிலே கொண்ட தேன் போல உயர்ந்த தன்றோ !
நம் நட்பு.அதுமட்டுமா !
மீன் கூட்டம் மிகுந்து வாழும் கடல்தனிலே-
அதனினும் ஆழமன்றோ நம் நட்பு *அதை அறிந்தே என் நண்பன்மீனும், தேனும் எனக்களிக்க-
இந்த அன்பு என்றும் வேண்டும் என் நண்பா" எனக்கூறி அன்போடு குகனை ஆரத் தழுவிக் கொள்கிறார்.
குலம் பார்த்து வருவதில்லை நட்பு*குணம் பார்த்து வருவது தான் நட்பு*ஒன்றே குலம் *என வாழ்கின்ற மனதிற்கு உயர்வு -தாழ்வு என்பது எல்லாமே அவரவர் எண்ணங்களின் வெளிப்பாடுதான். உயர்ந்த எண்ணங்களை உடையவன் மேலோன் -தாழ்ந்த எண்ணங்கள் கொண்டவன் கீழோன்.
தனக்கென இலாது கொடுத்துச் சிவந்த கைகள் எல்லாம் மேல்சாதி. கைகளில் இருந்தும் கொடுக்க மனமிலாதோர் கீழ் ஜாதி என்பது தானே உண்மை.முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்..
பிரம்மம் என்றால் என்ன ?
ஈஸ்வரன் யார் ?பிரபஞ்சம்என்றால் எது? மாயை
என்றால் என்ன? இவற்றுக்கிடையில் என்ன சம்பந்தம்? நான் யார் !எங்கிருந்து வந்தேன் !நான்செய்ய வேண்டியது என்ன ?முதலிய விஷயங்களை பற்றிய உண்மை அறிவு இல்லாமல் இருப்பதே-
அகங்காரம் -மமகாரம் -பற்று ஆசை இவைகள் அனைத்தும் விலகி மனிதன் பிரம்ம நிலையை அடையும் போது- நம்முடைய மனதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அடியோடு அழிந்து போகின்றது.
வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரமாகும் . அந்த வாழ்க்கையை பாரதியின் கனவுப் படி வாழ்ந்து மனித பிறவியில் -உயர்வு தாழ்வு பேதமின்றி வாழ்ந்து மனித பிறவியின் பயனை அடையலாம்.
பால் வடியும் குழந்தையின்முகம் தனிலே-
தினம் வணங்கும் தெய்வத்தின் முன்தனிலே –
அன்புகனிந்த தாயின் அகம் தனிலேபண்பிலே சிறந்த நம் மனதினிலே பழையன போய்விடுக -புதியன என் மனதில் தோன்றிய எழுந்திடுக* என்று ஒரு புத்துணர்ச்சி கிடைத்திடவே- புதியதொரு ஜகம் அமைப்போம் புவியெல்லாம் ஒன்றுபட்டு இனிதாக வாழ்ந்திடுவோம்.நன்றி Om🌺🌺🌺 🙏 🌹
ஓம் நமசிவாய○ஓம் சிவாய நமஹ. ஓம் மஹேஸ்வராய நமஹ ஓம் சம்பவாய நமஹ. ஓம் பினாகினே நமஹ. ஓம் சசிசேகராய நமஹ. ஓம் வாமதேவாய நமஹ. ஓம் விருபாக்ஷாய நம‌ ஓம் கபர்தினே நமஹ. ஓம் நீலலோஹிதாய நமஹ ஓம் சங்கராய நமஹ, Om🌺🌺🌺
நன்றி கவியரசு கண்ணதாசன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேராற்றலைப் போற்றிடுவோம்


 

லட்டு நாயகன் வெங்கடாஜலபதி

 லட்டு நாயகன் வெங்கடாஜலபதி

🙏
கடவுளுக்கு படைக்கப்பிட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் புகழ்பெற்றது திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகும்.
இங்கு ஏன் லட்டு வழங்கப்படுகிறது என்பதற்கு அழுத்தமான புராண காரணம் இருந்தாலும். மிகவும் பரவலாக சொல்லப்படும் ஒன்று, இந்த லட்டு பிரசாதம் வெங்கடாஜலபதிக்கு மிகவும் உகந்தது ஆகும்.
திருப்பதிக்கு யாத்திரை சென்றால் இந்த பிரசாதமின்றி அந்த யாத்திரை முழுமையடையாது என்று கூட சொல்லலாம். பிரம்மோட்சவம் நாட்களில் இந்த பிரசாதம் பஞ்சாய் பறந்து தீர்ந்து போவதை கண்கூடாக பார்க்க முடியும்.
இந்த லட்டை ஶ்ரீவாரி லட்டு என்றும் அழைப்பார்கள். திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு நெய்வேத்யமாக வழங்கப்பட்டு பின் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. திருக்கோவிலில் இந்த லட்டு தயாரிக்கப்படும் இடத்திற்கு "பொட்டு " என்று பெயர். இந்த இடம் திருக்கோவிலின் சம்பங்கி பிரதக்‌ஷணம் எனும் இடத்தினுள் அமைந்துள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 2.8 இலட்சம் இலட்டுகள் இந்த இடத்தில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஒரே நாளில் இங்கு 8,00.000 இலட்சம் லட்டுகள் வரை தயாரிக்க கூடும்.
இந்த லட்டின் தனித்தன்மையை குறிக்கும் பொருட்டு இந்த பிரசாதத்திற்கு புவி சார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. நாம் வெறுமனே திருப்பதி இலட்டு என்று பொதுவாக அழைக்கிறோம். ஆனாலும் கூட அதிலும் பல்வேறு வகைகள் உண்டு.
○உதாரணமாக ப்ரோக்கதம் லட்டு என்பது பொதுவாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது. இதன் சராசரி எடை 175 கிராம்கள். இதுவே மிகவும் அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் ஒன்று.
○அடுத்ததாக, அஸ்தனம் லட்டு இது மிகவும் முக்கியான புனித நாட்களில் மட்டுமே தயாரிக்கப்படும். இது அதிகபட்சமாக இதுவரை 750கிராம் எடைவரையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிகமான முந்திரி, பாதாம் மற்றும் குங்கும பூ இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
○மூன்றாவதாக கல்யாணோட்ஷவ லட்டு. இது கல்யாண உற்சவத்தில் பங்கு பெறும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது மற்றும் அர்ஜித சேவையில் பங்கேற்கும் சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த இலட்டினை தயாரிக்க பயன்படும் பொருட்களை திட்டம் என்று அழைக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த லட்டினை தயாரிக்க திட்டத்தில் உள்ள பொருட்களை விடவும் வேங்கடேஷனின் அருள் முக்கியம். இந்த லட்டில் வெங்கடேசனின் அருள் முழுமையாக நிறைந்துள்ளது என்பார் காஞ்சி பெரியவர்.
ஒருவர் வெறுமனே கோவிலுக்கு சென்றுவிட்டாலோ கையில் பெற்றுவிட்டாலோ இதை உண்டுவிட முடியாது. அய்யனின் அருள் பரிபூரணமாக பெற்ற ஒருவரே இதை உண்ண முடியும் என்பது நம்பிக்கை.
நன்றி ஆன்மீக களஞ்சியம்


Friday 29 October 2021

தீபாவளி கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்!

 From Aravind's wedding to Arangan's Thalai Deepavali....

SRIRANGAM...All Deepavalis are unique thalai Deepavalis!
தீபாவளி கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்!
புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டா வேண்டுமா என்ன? திருவரங்கத்தில் திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே!
ஆம், ஸ்ரீரங்கநாதர், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை அல்லவா! ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே!
வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான். முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர். மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நம்பெருமாளுக்கும், தொடர்ந்து ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள், விரலி மஞ்சள் ஆகியவை நம்பெருமாள் சார்பில் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளி அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் மூலவர், உற்ஸவருக்குப் புத்தாடை, மலர் மாலை அலங்காரம் முடிந்ததும், ஆழ்வார், ஆச்சாரிய உற்ஸவர்கள் பெரிய சந்நிதிக்குக் கிழக்கே உள்ள கிளிமண்டபத்தில் பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பர். அப்போது பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ரங்கநாதருக்காக தீபாவளி சீர் தரக் காத்திருப்பார்.
அப்போது நம்பெருமாள் சந்தனு மண்டபம் எழுந்தருள்வார். அங்கே திருமஞ்சனம் அலங்காரம் முடிந்தபின் பெரியாழ்வார் அரங்கனுக்கு தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்குவர்.
நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர் வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். வேத பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க, சீர் தரப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.
நம்பெருமாளின் இந்த தீபாவளி தரிசனம், பக்தரின் வறுமை போக்கும். ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு இராது என்பது நம்பிக்கை.
நன்றி ராமசாமி நாராயணன்


சுய சிந்தனை. தூக்கிப் போட்டு விடுங்கள்...

 சுய சிந்தனை.

தூக்கிப் போட்டு விடுங்கள்...
எதை என்றா கேட்கிறீர்கள்?
மனத்திலிருக்கும் குப்பையைத் தான் சொல்கிறேன்.
தேவையில்லாத இருளைச் சேரவிட்டால், தேவைப்படும் போது, வெளிச்சம் நமக்கு கிடைக்காமலேயே போய்விடும்.
கப்பலில் ஓட்டை விழுந்து விட்டால், முதலில் கனமான பொருட்களை தூக்கிப் போட்டு விடுவர்.
அது என்னவாக இருந்தாலும் சரி; கடலில் தூக்கி எறிந்து விடுவர். அப்போது தான், கனம் குறைந்து லேசாகி, கப்பலில் உள்ள மனித உயிர்கள் தப்பும்.
இதில், 10 சதவீத மனநிலையாவது, மனதில் குப்பை சேர்க்கிற பேர்வழிகளுக்கு வேண்டும். எந்த எண்ணங்கள் நமக்கு வேதனையையும், சோகங்களையும் எதிர்மறையாகவே நம்முள் ஏற்படுத்துகிறதோ, அதைத் தூக்கி கிடாசி விட வேண்டியது தானே.
தங்களைச் சுற்றியிருப்போர் மிகச் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் பலர், தங்களைப் பற்றிய சுய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர் என்பதே, கண் கூடான உண்மை. முதுகில் தட்டிக் கொடுத்து, எதையும் சாதிக்கலாம் என்று நம்புங்கள்.
முதுகில் குத்தி விட்டு எதையுமே சாதிக்க முடியாது என்பதையும் நம்புங்கள்.
வெறுப்பை வெறுப்பால் அணைக்க முடியாது தானே, அது போல தான், நட்பு, பழக்கம், உறவு இவற்றில் ஏற்படும் பிணக்குகளை அந்த பிணக்கை பிடித்துக் கொண்டேயிருப்பதால் தீர்க்க முடியாது.
மறக்க முயற்சி செய்வோம் அல்லது மன்னிக்கவாவது முயலுவோம். நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், இதில் ஏதாவது ஒன்றைச் செய்து தான் ஆக வேண்டும்

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்

 அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.
இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.
“எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம்.
`பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.
நன்றி கவியரசு கண்ணதாசன்

பிறப்புக்கு தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே.

 பிறப்புக்கு தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே.

இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும், ரேகைகளும் எங்கிருந்து வந்தன?
மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?
நாம் வளர்வது எப்படி?
குழந்தை பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?
ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக் கொண்டே இருப்பது எப்படி?
இவை அறிவு போடும் கேள்விகள்.
ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாக கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன.
இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதை முதலிலேயே கண்டு கொண்டவர்கள் இந்துக்கள்தான்.
இரக்கம், அன்பு, கருணையை காட்டிய பௌத்த மதம் கடவுள் ஒன்றை காட்டவில்லை.
ஆனால், கடவுள் என்று ஒன்றை காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை.
பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்டதற்கு காரணம் இதுதான்.
ஆகவேதான் எந்த நிலையிலும் கடவுள் நம்பிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது ஒரு இந்துவுக்கு. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்கு தப்பமுடியாது.
"ஆஸ்தி" என்றால் சொத்து.
"நாஸ்தி" என்றால் பூஜ்ஜியம்.
"நாஸ்திகன்" ஒன்றுமில்லாத சூனியம்.
இந்து கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கின்றான்.
ஆகவே, நாத்திகனும், இந்துவே: ஆஸ்திகனும் இந்துவே.
இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதத்திலிருந்து" "ஏன் இந்த நம்பிக்கை"?
நன்றி கவியரசு கண்ணதாசன்



Thursday 28 October 2021

அண்ணன் என்.நன்மாறன் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



 

எளிமையும் சிறந்ததும் வசப்படும்.

 எளிமையும் சிறந்ததும் வசப்படும்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்...
அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றி செய்து கொண்டிருக்கிறோம். மிகையான காரியங்களில் கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கிறோம்...
சிக்கலான எண்ணங்களால் மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படியொரு வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம். மனங்களைச் சுரண்டும் இந்த வாழ்க்கையைத் தான் நாம் நவீன வாழ்க்கை முறை என்கிறோம்...
இத்தகைய சிக்கலான ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அதன் தாக்கம் நம்மிடம் இருக்கவே செய்யும். ஆனால்!, எண்ணங்கள், செயல்கள், மனப்பான்மை போன்ற அம்சங்களால் நம்மால் நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள முடியும்...
நம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். அத்துடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஊக்கவிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதற்குச் சில வழிகள் உள்ளன...
நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும் போது வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. பிடிக்காத செயல்களை ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாகச் செய்யும் போது வாழ்க்கை சலிப்பாகி விடும்...
ஆனால்!, நம்மில் பெரும்பாலானவர்கள் பிடிக்காதவற்றைச் செய்வதற்குத் தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பிடிக்காத வேலை, படிப்பு, உறவு போன்றவற்றை ஏதோவோர் அழுத்தத்துக்குப் பயந்து தொடராமல், பிடித்த விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நம் ஆற்றலைப் பயன்படுத்துவோம்...
இதைச் செய்யும் போது வாழ்க்கை நமக்குப் பிடித்த வகையில் முழுமையாக மாறி விடும். வாழ்க்கையில் நமது ஆற்றலின் பெரும்பகுதியை மற்றவர்களைத் தீர்மானிப்பதற்காகச் செலவிடுகிறோம். இந்தத் தீர்மானிக்கும் மனப்பான்மை நமக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது...
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவரைப் பிரித்து வைக்கிறது. ஒருவருக்கொருவர் மோதலையும் உணர்வுகள் அளவிலான வலியையும் உருவாக்குகிறது...
மற்றவர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும் போது, அவர்களை நம்மால் கூடுதல் அக்கறையுடனும் புரிதலுடனும் அணுக முடியும்...
இந்தத் தீர்மானிக்காத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்...
ஆம் நண்பர்களே
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளைக் கடந்து தான் முன்னேற வேண்டும். ஆனால்!, அந்தத் தடைகளைப் பற்றித் தொடர்ந்து குறைபட்டுக் கொண்டேயிருப்பது எந்த வகையிலும் நமக்கு உதவாது.
அத்துடன், இப்படிக் குறைபட்டுக் கொண்டேயிருப்பது, வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க விடாமல் தடுத்து விடும். அதனால்!, சிக்கல்களைப் பற்றிக் குறைபடுவதற்குப் பதிலாக, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது சிறந்தது.
நாம் பிறந்ததிலிருந்தே, நம்மை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நம்மிலிருந்து வித்தியாசமான ஒரு மனிதராக மாற நாம் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.
நம்மிடம் ஏதோ சிக்கல் இருப்பதாக நாமே நம்பத் தொடங்கி விடுகிறோம். அதனால்!, நமது அகத்திலிருந்து வரும் குரலையும் நம்ப மறுக்கிறோம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிவிக்கும் கருத்துகளை வைத்தும் நம்மைத் தீர்மானிக்கத் தொடங்குகிறோம். ஆனால்!, உண்மை என்னவென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அதனால், உங்கள் அகத்திலிருந்து வரும் குரலைக் கவனித்து, அது சொல்லும் பாதையில் நடக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், சிறந்ததாகவும் மாறி விடும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி !இன்று 27/10/2021புதன்கிழமை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி பதிவு செய்துள்ளோம் ஸ்ரீ ஆஞ்சனேயபிரபுவை வணங்கி துதிக்க செவ்வாய்க்கிழமை மிக முக்கியமான நாளாக வடமாநிலங்களில் மற்றும் ஏராளமான இடங்களில் இது பழக்கமாகவே உள்ளது .

 

ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி
1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்


Wednesday 27 October 2021

30 ஆம் ஆண்டு மணநாள்


 

மனம் என்னும் மந்திரச் சாவி

 மனம் என்னும் மந்திரச் சாவி.

மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிற போதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது...
ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது; ஆனால்!, மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில் அமைதியைத் தேடுவது கடினம்...
*நாம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளேயே தேடக் கற்றுக்கொள்ள வேண்டும்.* நம்முள்ளேயே உறைந்திருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் கண்டு பிடித்தால், வெளிப்புறச் சூழ்நிலை நம்மைப் பாதிக்காது...
சிலநேரம் நாம் அனைவரும் ஆசை, காமம் பற்றித் தேவையற்ற சிந்தனைகளால் மனதின் அமைதியைக் கெடுக்கிறோம். மனதை அமைதிபடுத்துவதற்கு அதன் போக்கிலேயே சென்று வெல்வதே எளிமையான வழியாகும். அதனைச் செய்ய மனதை இனிமைப் படுத்த வேண்டும்...
அமைதியை மனமே ஏற்படுத்த வேண்டும். உலக அமைதியில் மட்டுமல்ல உள்ளூர் அமைதியிலும் நமது மனமே அதிகமாய் ஒரு மந்திரச் சாவியை வைத்திருக்கிறது...
அமைதியில்லாமல் தவிப்பவர்களில் பலர் குழம்பிய குட்டைகளாகவே இருப்பார்கள். ஆழம் குறைந்த குட்டைதான் என்றாலும் அது கலங்கியிருந்தால் அதன் அடியில் இருப்பது எதுவும் நமக்குத் தெரியாது...
ஆனால்!, தெளிவாக இருக்கின்ற நீர்நிலை ஆழம் மிகுந்திருந்தாலும் அதன் அடியில் இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்...
புறச்சூழல் எப்படியிருந்தாலும் அமைதி வெளியே இல்லை; நம் அகத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...
ஆம் நண்பர்களே
அமைதி'' என்றால், நம்மைச் சுற்றி, சிக்கல்கள் ஏதுமற்ற அமைதியான சூழல் அல்ல.
மாறாக, நம்மைச்சுற்றி அச்சுறுத்தும் சிக்கல்கள் இருந்தாலும், உள்ளத்தில் உணரும் அமைதியே, உண்மையான அமைதி.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மருது சகோதரர்கள் தினம்


 

கூடல் அழகனின் ஆடல் கலைகள் திருவிளையாடல் 60

 கூடல் அழகனின் ஆடல் கலைகள்

திருவிளையாடல்.60
60. பரியை நரி ஆக்கியது
சிவனை நினைத்த வாதவூரர்
பாண்டியன் கொடுத்த
பல்வகைப் பொருளுடன் ,
தன்மனை சேர்ந்தார்
மாணிக்க வாசகர்.
மற்றவர் பேசிடக்
கோபம் கொண்டார்
தவவழி இருந்து
சிவனைப் பணிந்தார்
நரியாய் மாறிய குதிரைகள்
பிற்பகல் முடிந்து
மாலை வந்தது.
இரவு கடந்து
நள்ளிர வானதும்
குதிரைகள் எல்லாம்
நரியாய் மாறின!
ஊளை யிட்டு
தப்பி யோடின.
ஊளையிட்டு துயரைவிளைத்த நரிகள்
உண்மையில் நின்ற
குதிரைகள் எல்லாம்
கடித்துக் குதறி
ரத்தம் குடித்தன.
நரிகள் எல்லாம்
குதிரையின் குடலைப்
பிடுங்கித் தின்றதைக்
காவலர் பார்த்தனர் .
சந்து பொந்துகள்
புகுந்தவை எல்லாம்
காவலர் விரட்ட
வெளியே ஓடின.
நொண்டி நோய்நொடி
குருட்டுக் கிழநரி
குளங்கள் தெருக்கள்
ஆலயம் திரிந்தன.
வீடுகள் புகுந்து
துயரை விளைத்து,
புறா கிளி கோழி
நாசம் செய்தன.
கோட்டை வாசல்
திறக்கப் பட்டதும்,
நரிகள் எல்லாம்
காட்டில் மறைந்தன.
கோபம் கொண்ட
பாண்டிய மன்னன்
விடிந்ததும் காவலர்
சபைக்குச் சென்றனர்.
குதிரைகள் எல்லாம்
நரியாய் மாறி,
இருந்த குதிரையும்
நாசம் செய்ததை ,
மன்னவன் கேட்டுக்
கோபம் கொண்டான்.
வாதவூரரிடம் பரிகள் நரியானது கூறிய பாண்டியன்
வாதவூரர் ஏதும் அறியா
இறைவன் நினைவில்,
தனை மறந்தங்கே
அவையில் நின்றார்
சினத்துடன் நோக்கிய
பாண்டியன் பார்த்து,
"குற்றம் என்ன? "
என்றே கேட்டார்.
"பரிகள் நரியாய்
மாறிய தன்றி
ஊளை யிட்டு
நாசம் செய்ததை.
அறியாயோ? "என
அவர்முகம் பார்த்தான்.
கோபத் துடனே
காவலர் அழைத்தான்.
வாதவூரரைத் தண்டிக்கச் சொல்லுதல்
"இழுத்துச் சென்று
எடுத்த பொருள்களை த்
தண்டனை கொடுத்துத்
திரும்பப் பெறுங்கள்!"
என்றே சொல்லிட
இழுத்துச் சென்றனர் .
உச்சி வெய்யிலில்
நிற்க வைத்தனர்.
வெயிலில் நிற்கவைத்துக் கல்லையேற்றுதல்
சூரியன் பார்க்கக்
கல்லை நெற்றியில்
ஏற்றி வைத்தபின்
கைகள் இரண்டிலும்,
கல்லை வைத்தனர் .
துன்பம் தாங்கா
வாத வூரார்
கீழே வீழ்ந்தார்.
வைகையில் வெள்ளம் வரச்செய்து இறைவன் காத்தல்
சிவனைப் பணிந்தார்
சோர்ந்து விழுந்தார் .
வறட்சி ஏற்பட
வானம் பார்த்தார்,
இறைவன் அவர்நிலை
கண்டு இறங்கினான்.
வைகையில் வெள்ளம்
வந்திடச் செய்தான்.
வைகை ஆறு
பெருக்கெடுத் தோட,
கரைகளை உடைத்து
மரங்களைப் பறித்து,
ஊருக்குள் வந்து
தெருக்களைச் சூழ்ந்தது .
வீடுகள் குடிசைகள்
புரட்டிச் சென்றது.
புலம்பித் தவித்த மக்கள்
மன்னவன் செங்கோல்
தவறி விட்டானோ?
தென்னவன் சிவனின்
திருவிளை யாடலோ?
என்றே மக்கள்
புலம்பித் தவித்தனர்.
உடைமைகள் காக்க
ஓடினர் எங்கும்.
விடுதலைபெற்ற வாதவூரர்
தண்டனை கொடுத்திட
வந்த காவலர்
வாத வூரார்
விட்டுச் சென்றனர்.
விடுதலை பெற்ற
வாத வூரர் ,
கோவில் சென்று
சிவனைப் பணிந்தார்.
--தொடரும்....
இலக்கு பழனியப்பன் பி. அழகாபுரி