Tuesday 19 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

லைட்ஸ் ஆன்*
1965ம் வருடம் வந்த படம் திருவிளையாடல்.
அந்தப் பாடல் வந்த சமயத்தில் தமிழகத்தில் நாத்திக பிரச்சாரம் தலைவிரித்தாடிக் கொண்டிர்ந்த நேரம்.
அந்த நேரத்தில் இயக்குனர் ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் வந்த படம் தான் திருவிளையாடல்.
நாத்திக வீச்சு இருந்த அந்த நாட்களிலேயே படம் 250 நாட்களுக்கு மேல் தமிழகமெங்கு ஓடியது.
திருவிளையாடல் சிவபெருமானின் சில விளையாட்டுக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்
(ச.க.ம.18.5.2020.🙏🙏)
படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள்
ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனம். கே.வி. மகாதேவன் இசை.
கண்ணதாசன் பாடல்கள் எல்லாமே ரசிகர்களைக் கட்டிப் போட்டது.(படம்.இதோ👆👆👇👇)
பெரும்பாலும் கண்ணதாசன் பாடல்களை அப்போதெல்லாம் வானொலியில் கேட்டாலே, மக்களுக்கு படத்தின் கதை, ஓரளவுக்கு புரிந்து விடும்.
எண்களை வைத்துக் கொண்டு ஒருவரால் பாட்டு எழுத முடியுமா ?
(ச.க.ம.18.5.2020.🙏🙏)
தமிழ்த் திரையில் எண்களை வைத்துக்கொண்டு பாடல் எழுதிய ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்.
படத்தில் சிவனும் பார்வதியும் இருக்கும் போது ஒளவை பிராட்டி வருவாள்.
அப்போது பார்வதி ஒளவையிடம் ` ஒளவையே, ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்தி ஈசனைப் பாடு ‘ என்பாள்
(ச.க.ம.18.5.2020.🙏🙏)
ஒளவை பாடுவாள்
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிவை ஸ்வரங்களில் ஏழானவன்
(ச.க.ம.18.5.2020.🙏🙏)
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
(ச.க.ம.18.5.2020.🙏🙏)
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்ரு சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
(பகிர்வு.ச.கணேசன். மதுரை.18.5.2020.🙏🙏)
காற்றானவன் – ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் – அன்பின் ஒளியாகி நின்றானவன்
(பதிவு.ச.கணேசன். மதுரை.18.5.2020.🙏🙏)
ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை ஈசனை வரிசைப் படுத்திவிட்டு,
பிறகு ஈசனின் பெருமைகளை இதை விட உயர்த்தி ஒரு கவிஞனால், அதுவும் நிகழ்கால கவிஞனால் முடியுமா ?
நட்புடன்!!!!!!

No comments:

Post a Comment