Friday 15 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிவாயநம*
*சைவர்களின் புனித தலமான காசியில்,* கி.பி 1813முதல் காசி விசுவநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூசை நடக்கிறது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நமது தமிழகத்தைச் சேர்ந்த *நாட்டுக்கோட்டை நகரத்தார்களால்* அன்று முதல் இன்று வரை, வாரணாசியில் உள்ள *ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில்* இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இது *"சம்போ"* என்று அழைக்கப்படுகிறது. *"சம்போ சம்போ மகா தேவா"* என்று கூவி கொண்டு செல்வதால் இப்பெயர் வந்தது.*
*"பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் "சம்போ" நேரப்படி தவறுவதில்லை"* என்பது வாரணாசி பழமொழி.
*இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை,* நெருக்கடி நிலை காலத்தில் கூட தவறியதில்லை.
தற்போது 50 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்திலும் *விசுவநாதருக்கு நாள் தோறும் பூசைகள் நடக்கின்றன.*
அதற்கான பூசைப் பொருட்கள் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது.
தகவல் தந்த *காசி சத்திர மேலாண்மை கழகத் தலைவர் பழ.இராமசாமி அவர்களுக்கு நன்றி.*

No comments:

Post a Comment