Tuesday 31 July 2018

என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்


லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களை நோக்கி வரும் பிரச்சனைகளால் காயப் படலாம். ஒரு போதும் தகர்ந்து போகாதீர்கள்.
பழையதை மறப்போம். புதியதை நினைப்போம். கோபங்களை அகற்றுவோம். மகிழ்ச்சியை பரப்புவோம்.
உங்கள் எதிர் கால கனவுகள் என்ன என்று தெரியாத வரையில் உங்கள் செயல்களில் வேகமும் மனதில் உத்வேகமும் வராது.
வாழ்க்கையில் முன்னேறாமல் இருக்க நாம் எந்த சிரத்தையும் மேற் கோள்ள வேண்டியதில்லை. "வெற்றி" பெற மட்டுமே உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.
கேக்'க்கு மேல வைக்கிற கிரீம் அந்த கேக்கையே இனிப்பாக்குது. பலூன்'க்கு கீழ கட்டப் படுற நூல், பலூனையே பறக்க வைக்குது. வீடு முழுக்க வெளிச்சம் வரணும்ன்னா. ஒரு சின்ன தீக்குச்சி அல்லது சுவிட்ச் தான் தேவைப் படுது. சின்ன சின்ன விஷயங்கள் எப்பவுமே வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. அழகானது. ஆமாம். சின்னதா இந்த கருத்துக்கள் தான் உங்களை நாள் முழுதும் உற்சாகமாக வைக்கப் போகுது.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

தெலுங்கானாவில் பூனகிரி மாவட்டத்தில் நாகிரெட்டிபள்ளி என்ற ஊரில் உலகத்திலேயே முதன் முதலாக 250 கிலோ தங்கத்தில் நம் சிவபெருமான் மகா லிங்க வடிவில்

மலரட்டும் மாண்பு.....


தினபூமி மதுரை 31.07.2018 பக்கம் 9


விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் 1805 வாழிய புகழ் -மனிதத்தேனீ


துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழ் கலாச்சாரம் முதலிடம் பெற்றது.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ராமர் சீதை லக்ஷ்மணருடன் வனவாசம் மேற்கொள்கிறார். வழியில் ஒரு சிறிய ஆறு..
அங்கிருந்த ஓடக்காரன் ராமனை ஏற்றிக் கொள்ள மட்டும் ஒரு நிபந்தனை விதிக்கிறான்..
உன் கால்களை நன்றாக கழுவிய பின்னரே ஓடத்தில் கால் வைக்க வேண்டும்.. என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு ஓடம் தான்.. உன் பாதம் பட்டு அதுவும் பெண்ணாகி விட்டால் என்ன செய்வது..?
சொன்னதோடல்லாமல், அவனே தன் கைகளால் கண்ணீர் மல்க, ராமனுக்கு பாதபூஜை செய்கிறான்...
ஓடம் மறுகரையை அடைந்தவுடன், ராமன் தான் அணிந்திருந்த ஒரு கணையாழியை பரிசளிக்க,
ஓடக்காரனோ அதை மறுத்ததோடு,
ஒரு ஓடக்காரனிடம் இன்னொரு ஓடக்காரன் பரிசில் பெறக் கூடாது என்கிறான்..
கோபமடைந்த லக்ஷ்மணன், என்ன உளறுகிறாய்..?
அவர் ஓடக்காரன் அல்ல, இளவரசர் என்கிறான்..
ஓடக்காரன் கை கூப்பியபடி, அமைதியாகச் சொல்கிறான்.. எனக்கு அவர் இளவரசர் அல்ல..
நான் இந்தச் சிறிய ஆற்றைக் கடக்க உதவும் சின்ன ஓடக்காரன்...
அவர் இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க வைக்கும் பெரிய ஓடக்காரன்...
ராமன் அவனை அன்போடு ஆலிங்கனம் செய்து கொள்கிறான்..
அவனே குகன்..

தினத்தந்தி இளைஞர் மலர் 21.07.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


Monday 30 July 2018

ரவிந்திரநாத் தாகூர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மதுரைமணி 30.07.2018 பக்கம் 4


மெய்யம்மை ஆச்சி 90ஆம் ஆண்டு நிறைவு விழா


மகிழ்ச்சி நம்முடன் உள்ளது என்பதை எளிதாகச் சொல்லும் காணொளி.

கலைத் தந்தை கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினக் கூட்டம்




முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

படித்தேன், பகிர வைத்தது...
GOOD MOTIVATION
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
படித்ததில் பிடித்தது பயன் படும் என்று நினைத்தால் மற்றவர்களுக்கு அனுப்பவும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


ஓய்வின்றி உழைக்கும் கண்டரமாணிக்கம் சி. ஆதப்பன் மகள் சேது கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ

இன்று இரவு திருநகர் நகரத்தார் சங்கம் தொடக்க நாள் முதல் அயராது உழைக்கும் முன்னாள் செயலாளர், ஓய்வின்றி உழைக்கும் கண்டரமாணிக்கம் சி. ஆதப்பன் மகள் சேது கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ, அருகில் அலமேலு சொக்கலிங்கம், நாகரத்தினம் ஆதப்பன்.


கருமுத்து தியாகராசன் நினைவு தினக் கூட்டம் பானர்


வயிரவன்பட்டியில் நடைபெற்ற கல்லல் மெய்யம்மை ஆச்சி விஸ்வநாதன் 90 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ

இன்று காலை வயிரவன்பட்டியில் நடைபெற்ற கல்லல் மெய்யம்மை ஆச்சி விஸ்வநாதன் 90 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ 75 நிமிடம் சிறப்புரை, அருகில் வி. மீனாட்சி சுந்தரம், மெ. மெ. மெய்யப்ப செட்டியார், சே. ராஜேந்திரன், சகோதரர் மெய்யப்ப செட்டியார், எனது சகலை கரு. சிதம்பரம், அரியக்குடி அருணாசலம் செட்டியார், மற்றும் உறவினர்கள் உள்ளனா். விரிவான செய்தி நாளை வரும்.




மெய்யம்மை ஆச்சி 90ஆம் ஆண்டு நிறைவு விழா


மனிதத்தேனீயின் தேன்துளி


கருமுத்து தியாகராசர் நினைவைப் போற்றுவோம் - மனிதத்தேனீ


லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


Saturday 28 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தீவினையாளர்கள் நடக்கும்
பாதைக்கு மிகத்தொலைவில்,
இறைவன் உன்னை
அனுப்பும் இடத்திற்கு
நீ நட!
குழந்தையே
மகிழ்ச்சியாய் இரு!
தூய்மையாய் இரு!
பணிவாய் இரு!
செல்வர்களைப் பற்றியோ
வலிமையானவர்களைப் பற்றியோ
உனக்கென்ன ?
ஒரே ஒரு காற்று
அடித்துச் சென்றுவிடும்
அவர்களை.
மாசற்ற நெஞ்சமே!
மிக மிக வலிமையானது.....”
- பிரஞ்சுப் பாவலன் விக்தர் உய்கோ

தினத்தந்தி மதுரை 28.07.2018 பக்கம் 8


தினபூமி மதுரை 28.07.2018 பக்கம் 9


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எது வரை வாழ்வோமென்று தெரியாது. ஆனால் இப்படித் தான் வாழ வேண்டுமென்று தெரியும். அதன் படி வாழ்வோம்.
🔮புரிதல் அவசியம்... விட்டுக் கொடுத்தல் அத்தியாவசியம்.
🔮கிடைக்கும் போதே பயன் படுத்து. இருக்கும் போதே அனுபவி. நினைத்தவுடன் செய்து முடி. உணர்வுகளுக்கு கட்டுப் பட்டு, உன்னை இழந்து விடாதே, ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை.
🔮தேடி வருவதல்ல வாழ்க்கை. தேடிச் செல்வதே வாழ்க்கை.
🔮உங்களிடம் கேட்பது முடிவல்ல ஆலோசனை தான். புரிந்து கொண்டு ஆலோசனை சொல்லுங்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

தினத்தந்தி இளைஞர் மலர் 30.06.2018 பக்கம் 4


மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

விழிப்புணர்வுக்காக.....
ஒரு சின்ன அட்வைஸ். முக்கியமா பெண்களுக்கு. பேஸ்புக்க பொறுத்த வரைக்கும், எவ்ளோ நல்லா பழகினாலும் 'நம்பக தன்மை'ன்றது குறைவுதான். முடிஞ்ச வரைக்கும் புதுநட்புக்கள இணைக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சு, யாரெல்லாம் அவங்க நட்புல இருக்காங்கனு பாருங்க. சின்னடவுட் வந்தாலும், திரும்ப உங்களுக்கு அவங்க நட்பு அழைப்பு குடுக்க முடியாதபடி... Mark as Spam குடுத்துடுங்க. முடிந்தவரை Share option - ல பதிவு போடாம, உங்க நட்பு பட்டியல்ல இல்லாதவங்க உங்க பதிவுகள பார்க்க முடியாதபடி, Only Friends option-ல போடுங்க. மிகமுக்கியமா புரோபைல் பிக்சர, (எல்லோரும் பார்க்கமுடியும்) நட்பு பட்டியல்ல இல்லாதவங்க, கமென்ட் பண்ண முடியாதபடி, Only Friends - ல வெச்சு, 'Profile picture guard' On பண்ணிடுங்க. (ஆனா 'Profile picture guard' னால, 100 % பாதுகாப்பெல்லாம் கிடையாது. Screen Shot கூட எடுக்கலாம்.)
அப்புறம்... "சகோதரி சாப்டீங்களா? ஐயையோ... மணி ஒன்னாச்சு இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது. காய்ச்சலாடா ? தலைவலியாடா ? ஏன் என்கிட்ட சொல்லல" இந்த அப்பரெண்டீஸ வெல்லாம்... அதிகபட்சம் மெசஞ்சரோட நிப்பாட்டுங்க. போன் நெம்பர குடுத்து, உங்களுக்கு நீங்களே முட்ட மந்திரிச்சு சூனியம் வெச்சுகாதீங்க. அதயும் மீறி சிலபேருக்கு நெம்பர் குடுக்கனும் ன்ற அவசியம் வந்தா... சிரமம் பார்க்காம ஒரு புதுநெம்பர வாங்கி, பேஸ்புக் நட்புகளுக்காக மட்டும் வெச்சுகங்க. அத... பேங்க், ஸ்மார்ட், ஆதார், பான்கார்ட், சொந்தகாரங்களுக்கு குடுக்கன்னு... அதி அவசியமான சமாச்சாரங்களுக்கு யூஸ் பண்ணாதீங்க. அது, ஒன் அன்ட் ஒன்லி பார் பேஸ்புக்கு மட்டுமே இருக்கனும். அப்படி இருந்தா... நாளைக்கு இந்த அப்ரெண்டீசுகளால பிரச்சன (கண்டிப்பா வரும்) வந்தா... சங்கடபடாம அந்த 'சிம்'ம ஒடச்சு வீசிட்டு புதுசிம் வாங்கி, 'ஹாய்... குட் மார்னிங் டூட்ஸ்' பதிவ போட்டுட்டு போயிட்டே இருக்கலாம்.
அப்புறம் புரோபைல் போட்டோ வெக்குற சமாச்சாரம். சிலபேர் தைரியமா வெக்கறீங்க. கொஞ்சம் விழிப்புணர்வு எட்டி பாத்திருக்குற இந்த காலத்துல, அதவெச்சு ஒன்னும் பண்ண முடியாதுன்றத விட, சில சில்றங்க எதயாவது பண்ண முயற்சி செய்யபோய்... அந்த சமாச்சாரம் புருஷனுக்கு தெரிஞ்சு, "இந்த மயிருக்கு தாண்டி அந்த எழவெல்லாம் வேண்டாம்னு தலதலையா அடிச்சுகிட்டேன். ஐஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி நீ போன நோண்டும் போதே தெரியும்டீ... நீ இப்படி மானத்த கெடுப்பேன்னு" ஆரம்பிச்சு, வீட்டு மோட்டுவலைல எரிமல புகைய ஆரம்பிச்சுடும். ஜாக்ரத.
"நீ வளர்க்கும் யானைய நம்பு. ஆனா சங்கிலிய கழட்டி விடாத" இதுதான் முகநூல் சூத்திரம். சில அரைவேக்காட்டு நல்லவங்க... புத்திசாலி மாதிரி நடிக்கமுடியும். ஆனா, ஒரு புத்திசாலி கிரிமினலினால், தன்னை ஒரு அப்பாவி முட்டாள்போல, நம்பவைக்க முடியும். இது ரயில் ஸ்நேகத்தில் பின்னப் படுகிற மாயவலை. இத நம்பி உங்க குடும்பத்துல குழப்பம் பண்ணிக்காதீங்க. உங்க மானம், மரியாதைக்கான பாதுகாப்புக்கு... நீங்களே பொறுப்பு. குடும்பம் நிரந்தரம். ஆனா... போலிமுகம் காட்டும் இந்த முகநூல்... !!! 😴😴😴
- Sakthi venkatesan.
படித்தது.(குறிப்பு;எல்லா ஆண்களும் அப்படி என்று சொல்ல வில்லை)
நன்றி ராஜப்பா தஞ்சை

வாழிய நலம் - நகரச் சிவன் கோவில் அருள்மிகு சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோவில்


Friday 27 July 2018

மதுரைமணி 27.07.2018 பக்கம் 4


மாலைமுரசு 27.07.2018 பக்கம் 4


மக்கள்குரல் 27.07.2018 பக்கம் 5


டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினக் கூட்டம்






















கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் வாழிய புகழ் -மனிதத்தேனீ


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள் வாழிய அவர் புகழ் -மனிதத்தேனீ


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🈴சக மனிதனைப் பார்த்து பொறாமை, கோபம், வெறுப்பு, உயர்வு தாழ்வு எண்ணங்கள் உண்டானால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள்.
🈴தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விட தவறு செய்யாமல் இருக்க பாடம் கற்றுக் கொள்.
🈴வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைக்கலாமே.
🈴நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பதும் பையில் இல்லை. இன்று மட்டுமே நிஜம். பயன்படுத்தி முன்னேறு.
🈴அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவம் சொன்னாலும் உணர வைக்க முடியாது.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்