Saturday 30 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵 ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் | சிந்தனை கதைகள் 🏵
🌹 ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான்
அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான்
அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது
அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை
குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன
கேலி பொறுக்க முடியாத பானை
அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது
"ஐயா...!?! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன்
உங்களுக்கும் தினமும் என் குறையால்,
வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது
என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே......
நீ ஒன்று கவனித்தாயா......???
நாம் வரும் பாதையில்,
உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா.....???
உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும்
அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து
எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன
அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன்
மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல்
தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால்,
நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது
போற்றுபவர்கள் போற்றட்டும்
தூற்றுபவர்கள் தூற்றட்டும்
சுயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் 🌹
யாதுமாகி
நன்றி பழ. சின்னையா

தினத்தந்தி - இளைஞர் மலர் 02.06.2018 பக்கம் 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்"
-என்ற இடி போன்ற அந்த செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார் தலைவர் தன் உதவியாளரிடம்....
"என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க" என்ற கேள்விக்கு...
"பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்" எதிர் கேள்வி கேட்ட செம்மல்
"ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக்காரன்"
"என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்.
#உலகம்_சுற்றும்_வாலிபன் வெளிநாட்டு ஷூட்டிங்கில் ஒரு நடிகை தன் சொந்த செலவில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.
'என் சொந்தப் படத்தில் நான் தான் செலவு செய்யணும்' என்றேன்..
அவ்வளவு தான். மறு நாள் அனைவரும் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தொகை 84000 ரூபாய். (1972-இல்)
நான் போட்ட அரங்குக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு தொகை தந்தேன். ஷூட்டிங் முடிந்து ஹோட்டலை காலி செய்த இரவு அனைவரும் சாப்பிட்டதற்கான பில்லைப் பார்த்து அவங்களுக்கே மயக்கம் வந்துடுத்து.
இதை நான் பெருமையாகவோ வருத்தமாகவோ சொல்லலே. அவங்க என் மேல எடுத்துக் கிட்ட உரிமையும் நம்பிக்கையும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
பார்க்கலாம் குஞ்சப்பன் கிட்டே ஸ்டே [தடை ] வாங்க சொல்லிய இருக்கேன். வந்தா (ராமவர) தோட்டம். இல்லைன்னா சத்யா ஸ்டூடியோவிலேயே குடும்பம் நடத்துவோம்"
-என்று சலனமில்லாமல் சொல்லிவிட்டு சாதாரணமாக பேப்பர் படிக்க ஆரம்பிக்கிறார்.
"எப்படிங்க உங்களாலே இவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியுது?"
"வாழ்க்கையிலே எது நடந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் இருக்கணும்.ஜனங்க என்னை பெரிய கோடீஸ்வரன்னு நினைக்கறாங்க. ஆனா நான் ஏழைன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்..
நான் ஒன்றும் குபேர வீட்டு பிள்ளை இல்லை?எனக்கு குடிசையிலும்
வாழத்தெரியும். இப்போ கூட கண்ணாடி மூடிய காரில் பயணம் செய்யறேன் என்றால் அதுக்கு ஜனங்கதான் காரணம்.
என்னைப் பார்த்துட்டாங்கன்னா அன்புல என்னை பிய்ச்சு எடுத்துடுவாங்க.
எங்க அம்மா எங்களை இரண்டனா பணத்தில் வளர்த்தாங்க. இந்த ராமச்சந்திரனால இரண்டு ரூபாயிலே இப்போ வாழ முடியும்.
ஆனால் என் மக்கள் என்னை ஏழையாக்க மாட்டார்கள். எப்பவுமே நாம் நீதிக்கு தலை வணங்கித் தானே தீரணும்" சொன்னவர் உடனே இன்னொற்றையும் சொல்கிறார்.
"அட இந்தத் தலைப்பிலேயே ஒரு படம் பண்ணலாமே"
அந்த வகையில் உருவானது தான்
#நீதிக்கு_தலை_வணங்கு படம்.
எவ்வளவோ பேர்களின் வீட்டை மீட்டுக் கொடுத்தவரின் வீடு பறி போகும் நிலையில் இருந்தாலும்...அவருடைய தர்மம் அவர் வீட்டை மட்டுமல்ல இந்த நாட்டையும் அல்லவா அவரிடம் தந்தது....
எத்தனை ஆழமான அன்பும் நம்பிக்கையும் மக்கள் மேல் அவர் கொண்டிருந்தால், 'என்னை ஜனங்கள் ஏழையாக்க மாட்டார்கள்' என்று சொல்லி இன்றளவும் நம் மனங்களில் கோடீஸ்வரனாகவே கொலு வீற்றிருப்பார்..
நன்றி ஜோதிடர் முருகேசன்

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

























திராவிடர் கழக ஆபீசுக்குள் ஒருவன் வேகமாய் ஓடி வருகிறான்..
"அண்ணே... அண்ணே..! செம நியுஸ்..! யாரோ ஒரு பொண்ணு ஒரு சாமியார்ட்ட போயிருக்காங்க.. அந்த சாமியார் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செஞ்சதோட இன்னும் நாலு சாமியாரும் அந்தப் பெண்ணை நாசம் பண்ணியிருக்காங்க..!"
தலைவர் : "சூப்பர் நியூஸ்டா..! கலக்கிட்லாம்..! கமான், கமான்...! எல்லாரும் பெரிய போராட்டத்துக்கு ரெடியாவுங்க..! வைரமுத்துக்கு ஃபோன் போட்டு கவிதை எழுத சொல்லிடு... சைமன்கிட்ட சொல்லி அவங்க பசங்களையெல்லாம் போராட்டத்துக்கு வர சொல்லிடு..! திருமாக்கு ஸ்பெஷலா சொல்லிடு..! கனிமொழிக்கு இன்ஃபார்ம் பண்ணி அறிக்கை அமிச்சி அதை சொல்ல சொல்லிடு..! நம்ம கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு சொல்லிடு.. செக்குலர் போராட்டம்னு சொல்லுங்க வந்துருவாங்க.. ! எங்கெங்கல்லாம் போராட்டம்னு லிஸ்ட் போடு.. ! பாரதிராஜா, சத்யராஜ், கவுதமன், மத்த போராளிங்களை கறுப்பு சட்டை போட்டுட்டு வர சொல்லிடு..! முஸ்லீம்லீக் ஆளுங்க இங்கதான் உக்காந்துகிட்டு இருப்பாங்க, சொல்லிட்லாம்.. அப்புறம் பேராயர் சற்குணம் கிட்ட சொல்லிடு......"
"பேராயரா..? வேணாம்ணே.. அவுரு வரமாட்டார்ணே..!"
"என்னாடா சொல்ற..? ஒழுங்கா சொல்டா..!"
"நடந்தது ஒரு சர்ச்லேண்ணே... செஞ்சது ஒரு பாதிரியார்....!"
"டேய் மூதேவி..! சாமியார்னு சொன்னே..? இப்போ பாதிரியார்னு சொல்றே..?"
"கோயில்ல சாமியார் மாதிரிதானே சர்ச்ல பாதிரியார்..? ரெண்டும் ஒண்ணுதானேண்ணே..? அதான் சாமியார்னு சொல்லிட்டேன்...."
"அடேய் கூமுட்ட... ரெண்டும் ஒண்ணாடா..? ரெண்டும் ஒண்ணா..? நீயெல்லாம் தமிழ்நாட்ல இத்தன வருஷமா செக்குலர் நாத்திகவாதியா இருக்கே.. இது கூடத் தெரியாதாடா முண்டம்..? நம்ம பொழப்புல மண்ணள்ளி போடப் பாத்தியேடா..? போ.. போய் இதப்பத்தி வாயே தொறக்காம கமுக்கமா உள்ள போய் போத்திகிட்டு படு..! எல்லாம் கேன்ஸல்..!"

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌐எவன் பிறர் செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
🌐ஒருவரை நமக்குப் பிடித்து விட்டது என்றால், அவர் செய்யும் தவறுகள் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.
🌐யாரும் பிறரை அவமானப் படுத்தக் கூடாது. எல்லோருக்கும் சுய மரியாதை இருக்கிறது என்று புரிந்து நடக்க வேண்டும்.
🌐சில உறவுகளிடையே உண்மையாய் இருப்பதை விட ஊமையாய் இருப்பது சிறந்தது.
🌐பணக்காரராக வாழ்கிறோம் என்பதை விட யாருக்கும் பாரமில்லாமல் வாழ்கிறோம் என்பதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

மனிதத்தேனீயின் தேன்துளி


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Friday 29 June 2018

ஜுலை மாதம் கல்வித் திருவிழா அழைப்பு.


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஆபாச படத்தை விட ஒரு மோசமானா உண்மை!* 😈
*3 மாணவர்கள் 1 மாணவி!*
*ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்று வந்த 20 வயது மாணவியை 2 வருடங்களாக மிரட்டி பாலியல் பாலாத்காரம் செய்த மூன்று சட்ட மாணவர்களுக்கு தலா 20 வருடம் தண்டனை விதித்து சாட்டை சுழற்றியுள்ளது ஹரியானா நீதிமன்றம்.*
*அதுவும் சட்ட வரலாற்றில் முதல்முறையாக வாட்சப் உரையாடல் செய்திகளை (electronic form of evidence) ஆதாரமாக கொண்டு இந்த வரலாற்று தீர்ப்பு இவர்கள் செவுளில் சப் என அறையப்பட்டுள்ளது, தனது தீர்ப்பில் கூட இச்செய்திகளை சேர்க்கமுடியாதபடி அவ்வளவு கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகளால் இந்த பெண் பலவந்தப்படுத்தப்பட்டு மிரட்டி பணியவைக்கப்படுகிறாள் என தீர்ப்பில் குறிப்பிட்டு மனம் வருந்தியுள்ளார் நீதிபதி சுனிதா.*
*மிகுந்த எதிர்ப்புகளையும், போராட்டத்தையும் கடந்தே இந்த நீதி இந்த மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது, அதற்காக இந்த பெண் அனுபவித்த வலிகள், வேதனைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, செல்வாக்கு மிகுந்த இந்த குற்றவாளிகளை எதிர்த்து இப்பெண் நடத்திய போராட்டத்தின் இத்தீர்ப்பின் கவனிக்க வேண்டிய சிலவிஷயங்களை பார்ப்போம்.*
*வழக்கின் முதன்மை குற்றவாளி ஹர்திக் சட்டம் மற்றும் அரசியல் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் , 20 வயது. அதே பல்கலைகழகத்தில் சட்டம் பயில்கிறார், படிப்பில் நான்கு முறை தங்க மெடல் பெற்றவர், மேலாண்மை பயிலும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி காதல் என்ற பெயரில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொல்லி கெஞ்சி கூத்தாடுகிறார், அந்த ஒரு நொடி தான் தன் வாழ்க்கையின் அடுத்த இரண்டு வருடங்களை நார் நாராய் கிழித்து போடப்போவது தெரியாமல் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் பார்த்தவுடன் அழித்துவிடுவேன் என்ற தந்திர வார்த்தைகளை நம்பி, காதலன் தானே என குருட்டு தைரியத்தில் அந்த பெண்ணும் தன் அந்தரங்க புகைப்படத்தை அவனுக்கு அனுப்பிவிடுகிறார்,*
ஆனால் அந்த புகைப்படத்துக்காக காத்திருந்தது மட்டுமல்ல, அவனது அறை நண்பர்களும் தான். ஆம் வெறிநாய்கள் விரித்த வலையில் வெண்புறா வசமாக மாட்டிக்கொண்டது. 'எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்களுக்கும் நீ வேண்டும் , மீறினால் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டப்படுகிறார், செல்வாக்கு மிகுந்த மிரட்டலுக்கு பணிகிறார் இந்த மாணவி, மிரட்டலுக்கு மட்டுமல்ல , அவன் நண்பர்களுக்கும் சேர்த்தே தான்...
*அவர்கள் விரும்பிய போதெல்லாம் இது நடந்தேறியிருக்கிறது, நேரில் மட்டுமல்லாது ஸ்கைப் வீடியோ வாயிலாக சில ஆபாசங்கள் புரிய சொல்லி வற்புறுத்தப்படுகிறார், தப்பிக்க வேறுவழியில்லாமல் இந்த மிரட்டலுக்கும் பணிகிறார் இந்த பெண். ஒவ்வொரு மிரட்டலும் 'இம்முறை நீ இதை பண்ணிவிடு, உன் புகைப்படத்தை நான் அழித்துவிடுவேன்' என்ற ஓநாய் கண்ணீரை நம்பியே நிகழ்த்தப்பட்டுள்ளது.*
இவ்வகை இச்சைகளும் போரடித்து போன இந்த எச்சைகள் வக்கிரத்தின் உச்சமாக அப்பெண்ணை மது அருந்த சொல்லி ,ஆபாச நடனம் ஆட சொல்லி மூன்று பெரும் சேர்ந்து அப்பெண்ணை வன்புணர்ந்திருக்கிறார்கள்,
*இதற்கு மேலும் தாமதித்தால் தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் காவல் நிலையம் சென்றுள்ளார் மாணவி, வழக்கம் போல கடமை தவறா நம் கனவான்கள் செல்வாக்கான இம்மாணவர் குடும்பங்களுக்கு செருப்பாய் மாறி வழக்கை ஏற்க மறுக்கின்றனர், மிரட்டல்களுக்கு எல்லாம் பணியாமல் தொடர் போராட்டம் நிகழ்த்திய மாணவியின் நிலை கண்டு கலங்கிய ஒரு நல்ல காவல் அதிகாரி வழக்கை ஏற்று FIR பதிகிறார், FIR பதிந்த அடுத்த நாளே அரசியல் அழுத்தம் காரணமாக பணியிடம் மாற்றப்பட்டிருக்கிறார் அந்த அதிகாரி,*
*புதிதாக வழக்கை விசாரித்த அதிகாரி முக்கிய ஆதாரமான பெண்ணின் மொபைல் போனை தர சொல்லி வற்புறுத்த, ஆதாரங்கள் அழிக்கப்படும் என்று அந்த பெண் தர மறுக்க இதற்காக பெண்ணின் குடும்பம் மிரட்டப்பட , போதாக்குறைக்கு குற்றவாளிகளின் சட்ட குடும்பங்கள் மாணவியின் நடத்தையில் குறைகூறி வழக்கு கொடுக்க என நித்தம் நித்தம் போராட்டமும், வலியும் வேதனையுமாகத்தான் இவ்வழக்கு நீதிமன்றத்தை அடைந்துள்ளது, நீதிபதி சுனிதாவின் முன்னிலையில் அந்த பெண் அளித்த கண்ணீர் சாட்சியமே மேலே கூறப்பட்டுள்ள அத்தனை விபரங்களும், அரசியல் செல்வாக்கால் அலைக்கழிக்கப்பட்ட வழக்கின் தன்மையை கண்டு அதிர்ந்து போன நீதிபதி உடனடியாக வழக்கின் முக்கிய ஆதாரமான பெண்ணின் மொபைலை கைப்பற்றி வாட்சப் தகவல்களை ஆராய்ந்தே இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளார்.*
*இதற்கும் எதிர்தரப்பு இந்த பெண் மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருக்கிறார், தெரிந்தே தான் குடித்திருக்கிறார், இசைந்தே தான் அவர்கள் இச்சைகளை பூர்த்தி செய்துள்ளார், பணமும் பெற்றிருக்கிறார் என சரளத்துக்கும் சரடு விட, எரிச்சலான நீதிபதி, Mr வண்டு முருகன், இந்த பெண் அவர்களில் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார், மூன்று ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை மிரட்டும் போது அதை எதிர்க்கும் மனநிலையில் பாதிக்கப்பட்டவரும் இல்லை, அவர் எதிர்த்தாலும் அவரை விடும் மன நிலையில் இந்த மூன்று சேடிஸ சைக்கோக்களும் இல்லை, ஆகவே நீங்கள் மூடுங்கள், 20 வருட தண்டனை தீர்ப்பை வாங்கிக்கொண்டு ஓடுங்கள் என பத்ரகாளியாய் மாறி எதிர்தரப்பையும் காவல்துறையையும் தோலுறித்து தொங்க விட்டிருக்கிறார் நீதிபதி சுனிதா.*
*ஆக நம் பெண் நட்புகளுக்கு சில விஷயங்கள்*.
1. *வாட்சப் தகவல்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்கப்படும், ப்ளூ டிக் தான் ஆதார ரெசிப்ட்.*
2. *எந்த சூழ்நிலையிலும் அந்தரங்க புகைப்படங்கள் எடுக்காதீர்கள், கணவரோ காதலனோ எந்த எருமை கேட்டாலும் இதை செய்துவிடாதீர்கள்.*
3. *சமூகவலைத்தளங்களில் மற்றும் இணையத்தில் நிரந்தரம் என்ற ஒன்றே கிடையாது, ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு நொடியும் தகவல்களும், புகைப்படங்களும் கொட்டி கொட்டி குவியும் குப்பைமேடு இது,*
4. *உங்கள் புகைப்படம் கசிந்துவிட்டால் கூட போடா ------என்று போய் கொண்டே இருங்கள், அதிர்ச்சியாக இருந்தாலும் இப்போதைக்கு இது மட்டுமே ஆறுதல் தரும்.*
5. *இதையும் மீறி புகைப்படத்தை வைத்து மிரட்டினால் தயங்காமல் காவல்துறையை அணுகுங்கள், எவ்வகை மிரட்டலுக்கும் பணிந்துவிடாதீர்கள்.*
6. *இந்த வரலாற்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி கூட ஒரு பெண் தான், ஆகவே தான் சாட்டை சற்று வேகமாக சுழற்றப்பட்டுள்ளது, ஒரு பெண்ணின் வலியை, வேதனையை எவ்வளவு விளக்கினாலும் ஆணுக்கு முழுதும் புரியவைக்கமுடியாது,*
7 *ஆகவே உங்கள் பாதுகாப்பை வேறு யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள், உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் மட்டுமே.* 👺👹🤒 பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பொது நலன் கருதி வெளியிடுவது, With Regards, S.N.AHMED., B.A., L.L.B., NATIONAL MEMBER & GAZETTE AUTHORITY, NATIONAL LEGAL ACT AND HUMAN RIGHTS COUNCIL- NEW DL (UNDERTAKING UNESCO COUNCIL ACT), TAMILNADU.

வாழிய தமிழுணர்வு


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிடித்த பாட்டியின் பழமொழிகள்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய்
திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும்
நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, ஆனால்
கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
8. கரும்பு கசப்பது வாயின்குற்றமே.
09. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
10. காட்டிலே செத்தாலும்
வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட
நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனத்தில்
கண்ட அரிசி
சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு
போகாமல் கெட்டது,
கடன்
கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை.
போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும்,
நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து
அரசாண்ட இடத்தில்
பூனை இருந்து
புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன்
அங்காடிக்குப் போனால்
விற்கவும் மாட்டான்,
வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை
உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி.
இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை.
ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன?
ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல்
தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி.
ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக,
கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.)
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள்,
செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனிடம் சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா.?.

சொர்க்கர் தேவர் இறைவனடி சேர்ந்த செய்தியறிந்து கவலையுற்றேன் வாழிய அவர் புகழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவலைகளை களை எடுங்கள்.
*********************************************
🌿ஒருவன் தன் நிழல் ஏன் கூடவே வருகிறது? அதை எப்படியாவது விரட்டியடிக்க வேண்டும் என விரும்புகிறான். என்ன செய்தாலும் அவனால் தன் நிழலை விரட்டவே முடியவில்லை. 
🌿நிழலை விரட்ட இருட்டுக்குள் போய்விடுவது ஒரு வழியாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால், அவனுக்கு இருட்டு என்றால் பயம். வெளிச்சத்திலும் வாழவேண்டும்; ஆனால் நிழலும் இருக்கக் கூடாது என நினைத்தான்.
🌿அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. தன் நிழலை புதைத்துவிட்டால் என்னவென்று நினைத்து, ஓர் ஆளை அழைத்து குழி தோண்ட வைத்தான். 
🌿மேட்டில் நின்று கொண்டு, தன் நிழல் குழியில் விழும்போது மண்ணை போட்டு மூடினான். பெரிய புதைமேடு உருவானது. ' நல்லவேளை நிழலைப் புதைத்துவிட்டேன்…’ என சந்தோஷமாக நினைத்தபோது புதைமேட்டின் மீது அவனது நிழல் தெரிந்தது. பாவம் அவன் ஏமாந்து போனான் .
🌿நிழலைப் புதைக்க முயன்ற மனிதனை போன்றதே கவலையை ஒழிக்க முயற்சிப்பதும்.
🌿கவலையே இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். ஆனால், கவலைகளின் கூடாரமாகவே பலர் இங்கு வாழ்கிறார்கள்.
🌿கவலைதான் கோபமாகிறது. கவலைதான் பொறாமையாகிறது. கவலைதான் இயலாமையாகிறது. கவலைதான் குரோதமாகிறது. கவலைகள் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. 🌿மனதில் ஒரு கவலை தீரும்போது, இன்னொரு கவலை உருவாகிவிடுகிறது
🌿ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான கவலை நம்மைப் பற்றிக் கொள்கிறது. 
🌿நாளை விடுமுறையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற கவலை சிறார்களுக்கு. 
🌿கடனை எப்படி அடைப்பது? எப்போது வீடு வாங்குவது? எப்போது கார் வாங்குவது? திருமணம் எப்போது நடக்கும் என ஆளுக்கு ஒரு விதமான கவலை. 
🌿தன் கவலைகளை யாரிடமாவது கொட்டிவிடவே பெரும்பான்மையினர் முயற்சிக்கிறார்கள். தேடிப் போய் கவலைகளை பரிமாறுகிறார்கள்.
🌿ஒருவர் தனது கவலையை மறக்க நிறைய சாப்பிடுவார். எதற்காக சாப்பாட்டில் இவ்வளவு ஆர்வம் எனக் கேட்டால், ''மனசு நிறைய கவலையிருக்கு சார்; அதை மறைக்கிறதுக்கு இப்படி எதையாவது செய்ய வேண்டியிருக்கு…’’ என்பார்.
🌿இன்னொருவர் கவலையாக இருக்கிறது…’ என்று சொல்லி சாப்பிடவே மாட்டார். வற்புறுத்தினால் ஒரு இட்லி அல்லது ஒரு டம்ளர் பால் இவ்வளவே அவரது ஒருநாள் உணவு. ஒருவர் அப்படி; மற்றவர் இப்படி. இருவரும் கவலையால் பீடிக்கப்பட்டவர்களே.
🌿நம் கவலைக்கு சிலர் காரணமாக இருப்பதைப் போல, சிலரது கவலைக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். 
🌿கவலைகொள்வது அலாரத்தில் மணி அடிப்பதைப் போன்றது. நாம்தான் அந்த அலாரத்தை செட் செய்து வைத்திருக்கிறோம். அது அடிக்கும்போது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்று ரெடி செய்திருக்கிறோம். அலாரம் அடிக்கும்போது நமக்கு அது பிடிக்கவில்லை என்றால், தவறு யார் மீது? எந்த அலாரமும் தானே அடித்துக் கொள்வதில்லையே!
🌿எப்போதுமே நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகளை நமக்கு சொல்லிவிடுகிறது. 
🌿நாம்தான் அதைக் கேட்காமல் அலட்சியப்படுத்துகிறோம். வீண் எதிர்ப்பார்ப்புகளை, பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தை எதிர்ப்பார்க்கிறோம். நாம் ஏமாற்றப்படும்போதோ, நாம் நினைத்தபடி நடக்காதபோதோ, விரும்பியது கிடைக்காதபோதோ நாம் கவலைப்படுகிறோம். அப்போது நாம், ' அப்பவே நினைச்சேன்’ என நமக்குள் சொல்லிக் கொள்ளவே செய்கிறோம். அது மனம் சொன்னதை கேட்காமல் விட்டுவிட்டோம் என்பதன் அறிகுறியே.
🌿சந்தோஷத்தை உண்டாக்கவும், பகிரவும் தெரியாமல் போவதே கவலை கொள்வதற்கான காரணம். உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். 
🌿ஆனால், அதில் நீங்கள் செய்யும் வேலை சிறியதாக இருக்கக் கூடாது. எவ்வளவு சிறப்பாக செயலை செய்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். நிறைவான வேலை செய்துவிட்டவனுக்கு கவலைகள் தோன்றாது.
🌿நமக்கு எது தேவை என்பதைப் போலவே, எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. 
🌿கடவுளிடம் கேட்டது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பலன்கள் மட்டுமே தீர்வு கிடையாது. சில தீர்வுகள் நாம் அறியாத வடிவத்தில் அறியாத விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேரக்கூடும் என்பதை உணர முயற்சியுங்கள்.
🌿உண்மையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் எதிரி இருக்கிறான். அவன் நாம் விரும்பாததை நம்மைக் கொண்டே செய்ய வைக்கிறான். அவனைக் கண்டறிவதும், அவன் உருவாகும் விதம் பற்றி ஆராய்வதுமே கவலையை விரட்டுவதற்கான வழிகள்.
🌿 எதிர்பார்ப்புகள் யாவும் எளிதாக நிறைவேறுவதில்லை என்ற உண்மையைத்தான் கவலைகள் புலப்படுத்துகின்றன.
🌿வறுமையும், நோயும், உடற்குறைபாடுகளும் ஏற்படுத்திய கவலைகளைத் தாண்டி எத்தனையோ மனிதர்கள் அரும்பெரும் சாதனைகள் செய்திருக்கிறார்கள். 
🌿ஒருவரது சந்தோஷம் மற்றவருக்குத் தொற்றிக் கொள்வதில்லை. ஆனால், கவலைகள் உடனே தொற்றிக் கொண்டுவிடுகின்றன.
🌿வயல் இருக்கும் வரை களைகள் முளைக்கவே செய்யும். களைகளைக் கண்டறிந்து பிடுங்கி எறிவது தானே புத்திசாலித்தனம். 
🌿ஆனந்தம் எனும் பூஞ்சோலை ஆரோக்கியமாக நிலைக்க கவலைகளை களைஎடுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி