Tuesday 28 February 2023

ஓ. சோமசுந்தரம் அவர்களுக்கு வாழிய பல்லாண்டு


 

அச்சம் கவலை வெறுப்பு . . .

 அச்சம் கவலை வெறுப்பு . . .

நமக்கு ஏற்பட்ட சிக்கல்களின் ஆரம்பமான இடத்தை விட்டுப் பல நேரங்களில் நாம் தீர்வுகளை எங்கோ தேடுகின்றோம்.
ஆம் சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம். எதனால் இந்த சிக்கல்கள் நேர்ந்தது என்று சிந்தித்துத் தெளிவு பெறுவதில்லை.
சரி நாம் தான் சிக்கல்களுக்கு கட்டியங்காரனாக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை உறுதியாக எதிர்கொள்கிறோமா. என்றால் அதுவும் இல்லை. (கட்டியங்காரன் - சூத்திரதாரி)
ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத சிக்கல் என்று எதுவுமில்லை.
காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை.
அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது.
எல்லா பூட்டுகளுக்கும் சாவி உண்டு, அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு.
வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமை ஆகாது, அவற்றை எதிர்கொள்வதே சிறந்தது.
கவலையுறுவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விலக முடியாது, இன்னும் கூற வேண்டுமானால், கவலையுறும் பொழுது சிக்கல்கள் இன்னும் பெரிதாகி விடும்.
தீர்க்கவியலாத துன்பம் வாழ்க்கையில் ஏதுமில்லை, ஆனால் அவற்றைத் தீர்க்க வழிமுறைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்...
திறக்க முடியாத பூட்டுகள் ஏதுமில்லை, அதற்கான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 27 February 2023

ஆழமான நம்பிக்கை, முயற்சி.

 ஆழமான நம்பிக்கை, முயற்சி.

ஒரு மண் சுவற்றில் ஆணி அறைந்தேன். கெட்டியான பிடிப்பு இல்லாததால். அந்த ஆணியில் ஒரு காலண்டர் ..கூட மாட்ட முடியவில்லை. அதே ஆணியை எடுத்து இன்னொரு இடத்தில் அதே சுவற்றில் அடித்தேன். அப்போதும் கெட்டியான பிடிப்பு இல்லாமல் மறுபடி அதே நிலைதான்.
மறுபடி மறுபடி முயற்சி செய்தும் என்னால் முடியாமலே போனது. விளைவு சுவரெல்லாம் பள்ளங்கள் ஆனது தான் மிச்சம்.
இந்த மண் சுவரை போலவே. உங்கள் மனதிலும் எதனிலும் நிலையான பற்றுக்கோடு இல்லாமல் இருந்தால் இப்படித்தான்.. எந்தச் செயலை எடுத்தாலும் இருக்கும்.அதனுடைய விளைவு…எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்கிற அவப் பெயர் தான்.
உங்களைப் பற்றிய பிறருடைய அபிமானம் எப்படி இருக்க வேண்டும் மிக கெட்டிக்காரன் என்பதா, ஆம் என்றால். கெட்டிக்காரன் ஆவதற்கு உங்களுக்கு எது தேவை.
எந்தச் செயலை எடுத்த போதும் ஆழமான நம்பிக்கை. அதிலே தீவிர முயற்சி. கடுமையான பிரயத்தனம். அந்த செயலில் அதீத விருப்பம். எப்படி முடிக்க வேண்டும், என்பதிலே ஒன்றுக்கு ஒரே ஒரு யோசனை மட்டும். போதும். (பல யோசனை கூடாது. மனம் தடுமாற அதுவும் காரணம்) போகவேண்டிய ஊருக்கான விபரம் மட்டும் தெரிந்தால் போதும். வழியில் உள்ள ஆயிரம் ஊர்களின் விபரங்கள் தேவை இல்லை.
அல்லது உங்கள் பார்வையில் சாதித்தவர்கள் எவரேனும் தென்பட்டால். (அப்பா, முதலாளி, குருநாதர் போன்றவர்கள்) அவர்கள் தன் செயல்களில் பின்பற்றுகிற லாவகங்களை. அப்படியே காப்பி அடியுங்கள்.
உங்களாலும் பலமுறை முயன்ற பின்னாவது ஒருமுறையேனும் சாதிக்க முடியும். முதல் சாதனை முதல் வெற்றி, அடுத்தடுத்த படிக்கட்டுகளாய் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். நாளடைவில் தானாகவே மன தடுமாற்றம் மறைந்துவிடும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

எழுத்தாளர் சுஜாதா நினைவைப் போற்றுவோம்


 

வாழிய புதுமணத் தம்பதியர். நேற்று நண்பகல் மதுரை பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருமை நண்பர், அபுதாபி தமிழ் மக்கள் மன்றத் தலைவர், பொறியாளர் எஸ். சிவகுமார் என்ற தேவராஜ் - திருநகர் என் எஸ் ஆர். மகால் உரிமையாளர்,டாக்டர் எம். ரோகிணி அவர்களின் மகன் டாக்டர் நவீன் ராஜ் - டாக்டர் நான்சி ஷர்மா திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, பொறியாளர் சொ. ராம்குமார் நகைச்சுவை அரசு மதுரை முத்து,கரகம் பாலா, தி மு க முன்னோடி பொய்சொல்லான். வாழிய புதுமணத் தம்பதியர்.



 

அன்பும் பண்பும்.

 அன்பும் பண்பும்.

எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.
இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும்.
ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.
வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது; கொல்ல முடியாது; தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும். உறுமும். இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்துச் சாப்பிடும்.
அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப் புலிகள்.
பொதுவாக, ஒன்று இளவயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கழுதைப்புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும்.
*இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை.*
மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வாழ்க்கை,
மிகவும் தற்காலிகமானது.
அந்த தற்காலிகத்தை, நான் சிங்கங்களில் பார்த்திருக்கிறேன். வயதான ஆட்களின் வாழ்க்கைகளில் பார்த்திருக்கிறேன். நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் வலிமையற்று வீழும் ஒவ்வொரு உயிரிலும் பார்த்திருக்கிறேன்.
இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும்.
காணாமற் போகும்.
அதனால்,
*🌿வாழும் வரை பண்பாக நடந்து கொள்ளுங்கள்; அன்போடு இருக்கப் பழகுங்கள்.* கடந்தகாலம் நன்றாய்க் கழிய எதிர்காலம் செழிப்பாய் அமையும். உங்களின் மீதும் உங்களைப் படைத்த இறைவனின் மீதும் எப்போதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். *

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Saturday 25 February 2023

எதிர்பார்ப்பு இல்லாத உதவி.

 எதிர்பார்ப்பு இல்லாத உதவி.

ஏழைச் சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தாள் ஒரு இளம்பெண், அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல்,
கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும் பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள்.உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்” என்றான்.நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும் போது, அதற்குப் பதிலாக,
எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்க” என்றாள் கனிவுடன்.
பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான். அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் பசியால் வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக
அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.
அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர் அன்றில் இருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார்.
பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.
அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்தாள். மிகப் பெரிய தொகை குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள்.
கட்டணத் தொகைக்குக் கீழே, மருத்துவர் எழுதி இருந்தார்.
“ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி..
*நிபந்தனையற்ற அன்பு என்ற நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நாமும் நன்றாக இருக்கலாம்; மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்*.
*எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தால்,
ஏற்புத்தன்மை மற்றும் தெளிவாக சிந்திக்கும் மனப்பான்மையையும் மேம்படுத்த
உதவுகின்றது.*
*ஆம்., நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வோம்.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வேதரத்தினம் பிள்ளை பிறந்த நாள்


 

உறவுகளை மேம்படுத்துங்கள்.

 உறவுகளை மேம்படுத்துங்கள்.

*உறவுகள் அறவே வேண்டாம் என்று தனிமையை நாடும் சிலரது கடைசி காலம் எப்படி இருக்கும் என்பதை மறைந்த பிரபல பாடகி வாணிஜெயராம் அவர்களின்
மரணமே சான்று*
*முதுமையில் தனிமை கொடுமை” என்பதற்கு ஓர் உதாரணம் மறைந்த வாணி ஜெயராம் அவர்களின் மரணம் எனலாம்*.
*தனிமையை அவர் தேர்ந்தெடுத்தாரா? அல்லது தனிமை அவருக்கு கிடைத்த வாழ்க்கையா? என நமக்குத் தெரியாது.*
*வாணி ஜெயராம் அவர்கள், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மலர்ந்த முகத்தோடும், சிரித்துக் கொண்டேதான் தன்னுடை பாடல்களைப் பாடுவதோடு அல்லது உரை நிகழ்த்தியோ இருந்துள்ளார்.*
*ஒரு காதல் பாடலைக்கூட, ஓர் ஆன்மிக பாடல் போன்ற முக பாவனையில் பாடும் மனப்பக்குவம் கொண்டவர் என அவருடைய மேடை நிகழ்ச்சிகள் கூறுகிறது.*
*ஆனால், வாணி ஜெயராம் அவர்கள் தனி ஒரு ஆளாக யாரும் இல்லாத வீட்டில் தனிமையில், இரவு நேரத்தில் கீழே விழுந்து காயங்களுடன் இறந்துள்ளார் என்பது அதிர்ச்சிக்குண்டான செய்தி*.
*இவர் மரணத்தின் விளிம்பில் இருந்து இறக்கும்போது, அவர் என்ன என்ன நினைத்திருப்பார்… அருகில் உதவவோ அல்லது ஆறுதலுக்கோ அல்லது தலைசாய்க்க ஒரு உறவுகளின் மடியை நிச்சயம் அவர் ஆத்மா அல்லல்ப்பட்டு தேடியிருக்கலாம்.*
*ஆனால், அவர் கடைசி நேரத்தில் தான் நினைத்த எதுவுமே நடக்காமல், உலகறிந்த பிரபல பாடகரான ஒருவர்… யாரும் அருகில் இல்லாமல் நள்ளிரவில் கீழே விழுந்து இறந்துள்ளார்,*
*தன்னுடைய இறப்பைக்கூட உலகிற்கு தெரியப்படுத்த முடியாமல், விடியும் வரை ஒரு பணிப் பெண்ணின் வருகைக்கு காத்திருக்க வேண்டி இருந்துள்ளது இவரின் நிலை, அந்த பணிப்பெண் வந்த பிறகே அவர் இறந்த செய்தி உலகிற்கு தெரிந்தது, இந்த இடத்தில் பணமும் புகழும் என்ன செய்தது*.
*எத்தனை கோடி பணம், புகழ், திறமைகள் இருந்தாலும், இறப்பு நமக்கு எப்படி வரும் என யாராலும் கூற இயலாது.*
*வாழும் நாட்களில் உறவுகளை விட்டு ஒதுங்கிப் போக வேண்டாம், உறவுகளிடம் சில பல குறைகள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். அதைப் பொருட்படுத்தி அன்போடு அரைவணைத்துச் செல்வோம், வயதான உறவுகளை தனிமைப் படுத்தாதீர்கள்.*
*உறவுகளே!!!* *நட்புகளே...*
*பணம், பொருள் , புகழ் சேர்ப்பது என்பது தேவைதான், அதைவிட தேவை நம்மைச் சுற்றி நமக்கு விசுவாசமுள்ள உறவுகளும், மனிதர்களும் எப்போதும் தேவை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .
நாம் விசுவாசமாக அன்போடு அனைவரையும் நெருங்கி நேசிக்கத் தொடங்கினால் எந்த உறவும் நம்மைவிட்டுப் பிரியாது*
*உறவுகளைப் பத்திரப்படுத்துவோம் பாதுகாப்பாய் வாழ்ந்துவிட்டுச் செல்வோம்*.

Friday 24 February 2023

நல்லதை மட்டுமே நடவு செய்யுங்கள்.

 நல்லதை மட்டுமே நடவு செய்யுங்கள்.

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன் அம்மாவுடன் வசித்து வந்தான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.
ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி
அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.
அது அவனுக்குப்
பெரிய துயரத்தைத் தரும்.
ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.
ரயில் வருகிற நேரம்
ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.
பின் பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி.
எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா.
இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க. அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுகிறான்.
தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.
காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.
அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.
"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.
ஆனால் அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.
முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான். நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்.
செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்.
நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" எனக் கதறி அழுகிறான்.
ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்.
*நல்லதையே கற்றுத் தருவோம்... அர்த்தமுள்ள வாழ்வுக்கு.*

மனிதத்தேனீயின் தேன்துளி


 

ஆளுமையின் அடையாளம்


 

Thursday 23 February 2023

பயம் என்னும் பலவீனம்.

 பயம் என்னும் பலவீனம்.

மாடிப் பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா அலர்ஜி. மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன்.
காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலணிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் என விழுந்தது.
வீட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்பா ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே என்றார். ஒ... மன்னிச்சிருங்கள்.. பழக்கதோஷம்.. இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார்.
மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலணியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சென்னது ஞாபகம் வந்தது.
ஆகா.. தப்பு செய்துவிட்டோமே.. இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலணி யை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சப்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான்.
விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான்.
''என்னப்பா..ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலணியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதைப் பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார்.
இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில் பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம். வீணான கற்பனைகளால் குழப்பம் அடையாதீர்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வைத்தியநாத அய்யர் நினைவைப் போற்றுவோம்


 

மேனாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மகள் திருமண வரவேற்பு.

 மேனாள் அமைச்சர்

ஆர் பி உதயகுமார் மகள் திருமண வரவேற்பு.
இன்று இரவு மதுரை திருமங்கலம்
டி. குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோயில் மணி மண்டபத்தில் நடைபெற்ற அன்புச் சகோதரர், மேனாள் அமைச்சர், அஇஅதிமுக சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மகள்
பிரியதர்ஷனி - முரளி
திருமண வரவேற்பில் மனிதத்தேனீ.
மற்றும்
தியாக தீபம் அ. பாலு, சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர்
மீ. ராமசுப்பிரமணியன், கனகமகால் ரெ. கார்த்திகேயன்.
மேனாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், தமிழரசன், டாக்டர் பா. சரவணன் டாக்டர் எஸ் ஜி பாலமுருகன் குடும்பத்தினர் , மேனாள் டீன் மருதுபாண்டியன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. . ராஜசேகரன், ரோட்டரி மேனாள் ஆளுநர் சைபால் சண்முகசுந்தரம், புலவர் வை. சங்கரலிங்கம், பழங்காநத்தம் வெற்றிவேல், பத்திரிகையாளர்கள் ரமேஷ்பாபு, சுப்பிரமணியன், எஸ் ஜே இதயா, பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு குடும்பத்தினர், சேம்பர் செயலாளர் ஜெ. செல்வம், கலைமகள் பேப்பர் காசி விஸ்வநாதன், மெர்குரி பேப்பர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மேனாள் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொழில் வணிக சங்கத்தினர், இலக்கிய ஆர்வலர்கள், அரிமா ரோட்டரி சங்கத்தின் முன்னோடிகள், உறவினர்கள், நண்பர்கள் என எங்கும் பெருமக்களின் திருக்கூட்டம்.
ஏராளமான உணவு அரங்கம், சிறப்பான விரிவான உணவு ஏற்பாடு.
மகளின் மணவிழாவை மாநாடு போல நடத்தி மகிழ்ந்தார்.
நாளை காலை மேனாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மணவிழா நடைபெறுகிறது.
அந்த விழாவில் 51 ஏழை எளிய மக்களின் மணவிழா நடைபெறுகிறது.
இது மக்களின் திருவிழா போல களை கட்டியுள்ளது.
கொரனோ காலத்தில் மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இவரது பங்களிப்பு மற்றும் தினமும் உணவு வழங்கிய போது மணமகளின் செயல்திறன் மிகுந்த பாராட்டுக்குரியது.
மகளின் மணவிழா மற்றும் ஏழை எளிய மக்களின் திருமண விழா ஏற்பாடுகளை கடந்த மூன்று மாதங்களாக அன்புச் சகோதரர்
ஆர் பி உதயகுமார் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வாழிய இளம் தம்பதியர் வாழியவே.



























Wednesday 22 February 2023

கண்ணோட்டங்களில் கவனம்.

 கண்ணோட்டங்களில் கவனம்.

"பெரும்பாலான மக்கள் தங்கள் முன்னோக்கின வரம்புகளை உலகின் வாய்ப்புகளாகக் கருதிக் கொள்கின்றனர்.
ஒருசிலர் அவ்வாறு நினைப்பதில்லை. அவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஜெர்மானிய தத்துவவியலாளரான ஆர்துவர் ஷொபென்ஹவர் கூறியுள்ளார்.
இது ஓர் ஆழமான கருத்து
*இக்கணத்தில் நீங்கள் பார்க்கின்ற வாழ்க்கைதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.*
உங்கள் பயங்கள், குறைபாடுகள், தவறான அனுமானங்கள் ஆகியவற்றின் ஊடாக விஷயங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.
நீங்கள் எந்தக் கண்ணாடிச் சன்னலின் ஊடாக உலகத்தைப் பார்க்கிறீர்களோ அந்தச் சன்னலின்மீது படிந்துள்ள கறையை நீங்கள் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு மீண்டும் அதன் ஊடாக நீங்கள் பார்க்கும்போது, முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகள் உங்கள் பார்வையில் படும்.
உள்ளது உள்ளபடியே நாம் உலகத்தைப் பார்ப்பதில்லை, மாறாக, நம்முடைய சொந்தக் கண்ணோட்டத்தின் ஊடாகவே நாம் அதைப் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பல வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மனிதனாலும் ஒரு மைல் துரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க முடியாது என்ற ஓர் உறுதியான நம்பிக்கை நிலவியது. ஆனால் ரோஜர் பேனிஸ்டர் அதை முறியடித்து, ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடந்த பிறகு, ஒருசில் வாரங்களுக்குள் ஏராளமானோர் அவர் செய்ததைப் போலவே செய்து சாதனை படைத்தனர்.
ஏனெனில் எது சாத்தியம் என்பதை ரோஜர் மக்களுக்குக் காட்டினார். அந்த நம்பிக்கையின் துணையுடன் சாத்தியமற்றதைப் பிறரும் சாத்தியமாக்கினர்.
உங்களை மட்டுப்படுத்துகின்ற நம்பிக்கை எது,
எவையெல்லாம் சாத்தியமற்றவை என்று உங்களை நீங்களே நம்ப வைத்திருக்கிறீர்கள்.
உங்களால் எவற்றையெல்லாம் பெற முடியாது எவற்றையெல்லாம் செய்ய முடியாது அல்லது உங்களால் யாராக ஆக முடியாது போன்றவை, குறித்து நீங்கள் எவ்வளவு பொய்யான அனுமானங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் சிந்தனைதான் உங்கள் யதார்த்தத்தை உருவாக்குகிறது. உங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயம் நிகழாது என்று நீங்கள் நினைத்தால், அந்த இலக்கை யதார்த்தமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டீர்கள்.
இது சாத்தியமில்லை என்ற உங்களுடைய நினைப்பு உங்களை முழுவதுமாக ஆட்கொண்டும். உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற குறைபாடுகள், நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடியாத விதத்தில் உங்கள் கைகளைக் கட்டிப் போடுகின்ற சங்கிலிகளாக ஆகிவிடும்.
All reactions:
2

மனிதத்தேனீயின் தேன்துளி


 

வாழிய பல்லாண்டு


 

Tuesday 21 February 2023

புன்னகையும் சிந்தனையும்.

 புன்னகையும் சிந்தனையும்.

எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர
அறிவுச்
செல்வமாக
“கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
மரத்தின் பெருமை அதன் உயரத்தால் அல்ல
அது உதிர்க்கும் பழங்களைப் பொறுத்தது.
மலரின் பெருமை அதன் நிறத்தில் அல்ல
அது வெளிப்படுத்தும் மணத்தைப் பொறுத்தது.
அழும்போது தனிமையில் அழு;
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம்
ஆனால் உன் சிரிப்பு
ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது.
உலகத்தில் மிக மலிவான பொருள்
அன்பும் புன்னகையும் தான். அவைதான் பெறுபவனுக்கும் வழங்குபவனுக்கும்
அதிக இன்பத்தை வழங்கும்.
அதனால் அதனை அள்ளி வழங்குவோம்.