Monday 30 November 2020

ஆழ்ந்த இரங்கல்


 ஆழ்ந்த இரங்கல்..

மதுரையில் நீண்ட காலமாக பணியாற்றிய,( குறிப்பாக பிரேம் நிவாசில்)அருமைச் சகோதரர் கோனாபட்டு நாகப்பன் அவர்கள் நேற்று மதியம் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். இறுதிச் சடங்கு இன்று காலை கோனாபட்டில் நடைபெறுகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

எளிமை என்பது ஏழ்மை அல்ல

 எளிமை என்பது ஏழ்மை அல்ல.

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமை தான்...!
அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்...
எளிமை என்ற சொல்லுக்குப் பல பொருட்களுண்டு.
எளிமை தான் எத்தனை வகை...?
பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன...
பொருள் எளிமை
ஒருவர் பெருஞ்செல்வந்தராக இருப்பார். ஆனால்!, தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர் தான் எளிமைக்குச் சொந்தக்காரர்...
அவர் சாதாரண தட்டில் தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத் தானே தவிர, தட்டையல்ல...!
அவர் உடையிலும் எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும்...
நடத்தையில் எளிமை
நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது...
பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது...
செயல்முறையில் எளிமை
செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது, செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது...
எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்...
உணவில் எளிமை
உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது...
மொழியில் எளிமை
இறுதியாக, ஆனால்!, மிக முக்கியமாக மொழியில் எளிமை கடைபிடிப்பது...
மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது...
ஆம் நண்பர்களே...!
எளிமை என்பது ஏழ்மை அல்ல. அற்புதமான வாழ்க்கைக்கு வேர்...!
எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, நோயற்ற உடல், நிறைந்த செல்வம், போட்டி - பொறாமையற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்.

மனிதத்தேனீயின் தேன்துளி



 

ஏற்றமான வாழ்விற்கு எளிமையே மூலதனம்

 ஏற்றமான வாழ்விற்கு

எளிமையே மூலதனம்.
பதவியிலும், செல்வத்திலும், தொழிலிலும் உயர்நிலையை அடைந்த பலர் படோடோபமாகப் பொழுதைக் கழிப்பதும், பகட்டாக வாழ்வதும், ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதும் தான் தங்களுக்கு உற்ற நிலை என எண்ணிக் கொண்டு விடுகிறார்கள்... (படோடோபமாக- பகட்டுத்தனம்)
தங்களுக்கு நிகராக உள்ளவர்களோடு மட்டுமே நட்பு வைத்துக் கொள்கிறார்கள். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரோடும் கலந்து பழகாத பிரமுகர்களின் வாழ்க்கை ஒளிர்வதில்லை....
"இறங்கி வருவதில் தான் ஏற்றம் இருக்கிறது!, எளிமையாக வாழ்வது தான் வலிமை சேர்க்கிறது!"
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை பேரறிஞர் அண்ணா ஏற்றதும் அப்பதவிக்குரிய ஆடம்பரப் பொருட்களான விலை உயர்ந்த இருக்கைகள், நாற்காலிகள், நிலைக்கண்ணாடி, வரவேற்பறை அலங்காரப் பொருட்கள் என அவர் இல்லத்தில் பல பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன...
எடுத்து வந்த அதிகாரிகளிடம் அண்ணா,
‘இந்த ஆடம்பரப் பொருட்களை இங்கிருந்து அகற்றி விடுங்கள்.பதவியில் இல்லாத போது என்னிடம் இருந்தவையே இப்போதும் எனக்குப் போதும்’ என்றாராம்., ஒருபோதும் எளிமையை விட்டுக் கொடுக்காத உத்தமர் அண்ணா...
பதவி, செல்வம், கல்வி, தொண்டு என்பனவற்றால் மகுடம் பெற்ற மனிதர்கள், எளிமையான வாழ்வை மேற்கொள்வதும், எல்லோருக்குமாக இறங்கி வருவதுமாக இயங்கினால், அப்பண்பு அவர்கள் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கக் கல்லாக மிளிரும் என்பதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு உதாரணம்...
ஆம் நண்பர்களே...!
எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை...! தேவை எது...? இன்றியமையாத தேவை எது...? என்று அறிந்து நடந்தாலே ஆடம்பரம் தானே போய் விடும்...!
எதையும் வாங்கும் முன், அவசியம் தானா...? - என்ற ஒரு கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எளிமையாக இருங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் வாழிய புகழ்


 

இன்று மாலை அச்சகத்தின் வாசலில் பரணி தீபம்.


 

Saturday 28 November 2020

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்

 "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"

"ஒவ்வொருவரின் பார்வைக்கும் உள்ள வேறுபாடு"
ஒரு பாதையின் ஓரம் யோகி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.
அப்போது அந்த வழியே ஒரு மது அருந்தியவன் வந்தான்.
தியானத்தில் ஆழ்ந்து இருந்த யோகியை பார்த்து,
''இவனும் நம்மை மாதிரி பெரிய போதைக்காரன் போலிருக்கிறது.
இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான். அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''
என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.
அவன் அவரைப் பாரத்தவுடன்,
''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது.
இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் தூங்குகிறான், பாவம்,'' என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் ஞானி ஒருவர் அங்கு வந்தார்.
அவர், ''இவரும் நம்மைப் போல ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும். தியானத்தில்
இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''
என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.
இவ்வுலகில் நல்லவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் நல்லவராகவே பார்க்கின்றனர்.
தீயவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் தீயவராகவே பார்க்கின்றனர்.
"தூய மனம் உடையவர் எல்லாவற்றையும் தூயதாகவே காண்பார்"

மழையும் மழைசார்ந்த தமிழும்

 மழையும் மழைசார்ந்த தமிழும்!

தமிழில், 14 வகையான மழை உண்டு!
1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை
வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!
ஏன் அடைமழை என்கிறோம்?
அடைமழை = வினைத்தொகை!
☆ அடைத்த மழை
☆ அடைக்கின்ற மழை
☆ அடைக்கும் மழை
விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!
கனமழை வேறு! அடைமழை வேறு!
மழ = தமிழில் உரிச்சொல்!
☆ மழ களிறு= இளமையான களிறு
☆ மழவர் = இளைஞர்கள்
அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ
இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!
மழை வேறு/ மாரி வேறு!
அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!
மழை/மாரி ஒன்றா?
☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!
☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!
மார்+இ= மாரி!
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!
அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!
தமிழ்மொழி,
பிறமொழி போல் அல்ல!
வாழ்வியல் மிக்கது!
அட்டகாசம்...!
இன்னும் கொஞ்சம்...
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….
☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)💐💐💐🌳🌧️🌳🌧️🌳🌧️
எழுதியவர் பெயர் தெரியவில்லை!
*வாழ்க வளமுடன்*🙏🙏

எது வந்த போதும் கலங்காதே மனிதா

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.
ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக
ஒருவர் பொறுப்பேற்றார். அங்கிருந்து
மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட
நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம்
மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச்
சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை
வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு
கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.
ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருகாகு
தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி
வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன். அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம்
வேண்டும் என்று கேட்கவும்" என்று
எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான்
இப்போதுதானே வந்திருக்கிறேன்
நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.
அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து
பார்த்தார். அதில், "முன்பு மேலாளர்களாய்
இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது.
உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை
முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை
பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர்
செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது
என்று தெரியாமல் சென்று விட்டார்கள்
இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள்
ஆகிவிட்டன. இப்போது தொழிலாளர்கள்
தொழிற்சங்க தலைவர்கள் ஓர் பெரிய
பிரச்சனையை கிளப்பினார்கள். இவருக்கு
எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது
உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார்
அதில், "உனக்கு அடுத்து வரப்போகுய் புது மேலாளருக்கு இதே போல் மூன்று
கவர்களைத் தயார் செய்துவைக்கவும்" என்று
எழுதப்பட்டிருந்தது.
வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் கலங்காதீர்கள்.
எல்லா சிக்கல்களுக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும்.
*பூட்டுகள் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. பூட்டை தயாரிக்கும் போதே அந்த பூட்டை திறப்பதற்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றி நமதே.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

கோவில்களுக்கு நீங்கள்செல்லலாமா செல்லவேண்டாமா

 கோவில்களுக்கு நீங்கள்செல்லலாமா செல்லவேண்டாமா

கீழே படித்து விட்டு கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா செல்லவேண்டாமா முடிவு பண்ணுக….!!!
இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்…!!
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
*இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..*
*குழந்தைகளையும் பழக்குவோம்* …
அது அறிவியல் ஆகட்டும் ..
எதுவாகட்டும் ….
இறை சக்தி நம்மை காக்கட்டும் …
நன்றி ….ராஜ ராஜ சோழன்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்

 கார்த்திகை தீபம் ஸ்பெஷல்..

தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற் றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப் பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோ டு தொடர்புடைய இந்த விழாவை, திருஞான சம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடி வருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்ட தை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம்.
"நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட..." "கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே…"
ஆகிய வரிகளின் மூலம் வீடுகளும் தெருக்க ளும் விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப் பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. பன்னிரு தமிழ் மாதங்க ளுள் ஒன்று கார்த்திகை, இந்த மாதத்தில் பெளர்ணமி, கார்த்திகை நட்சத்திரத்துடன் வருகின்ற நாளைதான் நாம் கார்த்திகை தீபமாகக் கொண்டாடுகின்றோம்.
கார்த்திகை என்பதற்கு 'அழல்’, 'எரி’, 'ஆரல்’ போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன் வலம்வரும் காட்சி, திருவண்ணா மலை தீபம் என்றால் அது மிகையில்லை.
விழா பிறந்த கதை
முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்ச ன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்ம னை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர்.
"சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது" என்றார் பிரம்மா.
" அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியா லான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது" என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர்.
முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. திரிபுரங்களைக் கொண்டு நாடு, நகரம், பயிர், வயல், கோபுரம்... என்று பாராமல் அனைத்தையும் அழித்தனர். மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களின் இன்னல்களை களைவதன் பொருட்டு, பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளை குதிரை களாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் ஈசன்.
திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந் தனர். அந்த நாளே கார்த்திகை தீப நாளாகும்.
திருவண்ணாமலை தீபத்திருவிழா திருவண் ணாமலை தீபத்திரு விழா, பதினேழு நாள்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டது.
முதல் மூன்று நாள்கள் திருவண்ணாமலையி ன் காவல்தெய்வம் துர்க்கையம்மன் திருவிழா வும், கோயில் உள்ள காவல்தெய்வமான பிடா ரியம்மனை, திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டுவதும், விநாயகரை வணங்கி, துன்ப ங்கள் களைந்து விழா சிறப்புற வேண்டுவதும், இதுவே முதல் மூன்று நாள்கள் விழாவின் உட்பொருள்.
இந்த மூன்று நாள்கள் விழாவில் துர்க்கை, பிடாரி, விநாயகர் ஆகியோரின் திருவீதிஉலா நடைபெறுகிறது. கொடியேற்றம் திருவிழா நடைபெறுவதற்கு மங்கல ஆரம்பமாகும். அரு ணாச்சலேசுவரர் ஆலயத்தில் வருடத்துக்கு நான்குமுறை கொடியேற்றம் நடைபெறுகிறது. அவை தீபத் திருவிழா, தட்சாயண புண்ணிய காலம், உத்தராயணப் புண்ணியக்காலம் மற்றும் ஆடிப்பூரம் ஆகியவை.
முதல் நாள் விழா:
அழியும் தன்மைகொண்ட உடலைப் போற்றி பேணிகாத்து, நாள்களை வீணாகக் கழிக்கா மல், உடலின் போலித் தன்மையை அறிந்து, நினைவில் கொண்டு, இறைவனை வேண்டி அறியாமையை நீக்கியருள வேண்டும் என்ப தை அறிவுறுத்தும்விதமாக, அதாவது 'நிலை யாமை’ என்னும் தத்துவத்தை உணர்த்துவதே முதல் நாள் விழா.
இரண்டாம் நாள் விழா:
மனித உடல் ஐம்புலன்களின் தன்மையோடு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற் றோடு, `தான்’ என்னும் அகந்தையையும் கொ ண்டது. ஆன்மாவுக்கு வடிவமாக இறைவன் கொடுத்த உடலும் மனமும் உண்மைத் தன்மை அற்றவையே என்பதை புரிந்துகொண்டு, உல க மாயையிலிருந்து விடுபடுதல் இரண்டாம் நாள் விழாவின் நோக்கம்.
மூன்றாம் நாள் விழா:
மூவகை பற்றுகளான மண், பொன் பெண்ணா சை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பது தான் இந்த விழாவின் உட்பொருள். உலகிலுள் ள அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக அமைவது இந்த மூன்று காரணிகளே. எனவே, இந்த மூன்று காரணிகளின் மீதுள்ள பற்றை நீக்கினால், மிகச் சிறப்பான நல்வாழ்வு அமை யும் என்னும் எண்ணத்தை ஆழமாக, வலிமை யாக விளக்கும் தன்மைகொண்டது மூன்றாம் நாள் விழா.
நான்காம் நாள் விழா
ஆன்மா, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய தோற்றங்களை நீக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக அமைகி றது இந்த நான்கினது கூறுகளால் மனமானது ஆசைவழிபட்டுத் துன்பங்களை இன்பம் என நினைத்து, கடவுளை அடைதலை முக்கிய நோக்கமாகக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் பிறவி எய்தி உழல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது நான்காம் நாள் விழாவின் நோக்கம்.
ஐந்தாம் நாள் விழா:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பூத ங்களும், சாக்கியம் முதலான ஐந்து தவத்தை யும், ஆணவம், கன்மம், மாயை, வயிந்தவம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் அகல, இறைவனை வேண்டுவது இந்த ஐந்தாம் நாள் விழாவின் நோக்கம். மனத்தின்கண் உள்ள மாசுகளை நீக்கினால், மலங்கள் விலகி உள்ள ம் இறைவனை நாடும் என்பதை உட்பொருளா கக்கொண்டது.
ஆறாம் நாள் விழா:
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகையாறும், கலாத்து வா முதலான ஆறு அத்துவாக்களும், இருத்தல் என்னும் கன்ம மல குணம் ஆறும் நிலையற்ற வை என்று உணர்ந்து நீக்குவதால், இறைஞா னம் பெற்று உய்வதே ஆறாம் நாள் விழாவின் நோக்கமாகும். இந்நாளில் ஆலயத்திலுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களின் செப்புப் படிமங்கள், சின்னக்கடைத்தெருவில் உள்ள அறுபத்து மூவர் மண்டபத்தில் மண்டகப்படி நிகழ்த்தப்படுகிறது.
ஏழாம் நாள் விழா
அருணாசலேசுவரர் ஆலயத்தில் இந்நாளில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. குற்றங்க ளைக் களைந்து, மனதினைத் தூய்மைப்படு த்தும்விதமாக ஏழாம் நாள் விழா கொண்டாடப் படுகிறது. தேரில் அமர்ந்த இறைவன் உயிரை யும், தேரிலுள்ள சங்கிலிகள் மனித மூச்சுக் காற்றையும் குறிக்கின்றன. மக்கள் அனைவ ரும் ஒற்றுமையாக இருந்தால், எந்தவொரு காரியமும் சாதிக்கமுடியும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தத்துவங்களை தேரோட்டம் விளக்கு கிறது. காலையில் தேர் வலம் வருவதற்கு தே ரில் ஏற்றப்பட்ட திருவுருவங்கள், இரவு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்புதலோடு ஏழாம் நாள் விழா நிறைவடைகிறது.
திருவண்ணாமலை கொடிமரம்
எட்டாம் நாள் விழா:
முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களை நீக்குதல், தன்வய த்தனாதல், பேரருள் உடைமை... முதலான எட்டும் இறைவனுக்குரிய குணங்கள். இந்த எட்டுக் குணங்களையும் இறைவன் ஆன்மாக் க்ளுக்கு அருளல் வேண்டி எட்டாம் நாள் விழா நடத்தப்படுகிறது. இத்தகைய குணங்களை உலக உயிர்கள் பெறுவதால், அவற்றின் தீய குணங்கள் நீங்கி, நற்குணங்கள் நிலைக்கும் என்று கற்பிக்கப்படுகிறது. மாலையில் தீபம் ஏற்றுவதற்காகச் சேகரிக்கப்பட்ட காடாத் திரிக ளுக்குச் சம்பந்த விநாயகர் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ஒன்பதாம் நாள் விழா:
மூவகை வடிவங்களும், மூவகைத் தொழில்க ளும், மூவகை இடங்களில் உறைதலும் ஆகிய ஒன்பது நிலைகளும் நீங்கப் பெறல் என்பதை குறிப்பதே ஒன்பதாம் நாள் விழாவின் நோக்க ம். மனித மனம் ஆசைவயப்படுதல் நிலையில் அனைத்தையும் துறந்து, உலக மாயைகளிலி ருந்து வெளியேறி நற்கதி அடைவதே இந்த விழாவின் உட்பொருள். ஆறு மணியளவில் கொப்பரைக்கு பூஜைகள் செய்யப்பட்டு, அந்த க் கொப்பரையின் இருபுறமும் மரம்வைத்துக் கட்டி, பக்தர்கள் பக்தியுடன் மலைக்குச் சுமந்து செல்கிறார்கள்.
பத்தாம் நாள் விழா:
ஒன்பது நாள்கள் திருவிழாவில் உயிர்களின் மலங்கள் நீங்கிட வேண்டி, மீண்டும் பிறவாத உயிர்நிலையான `வீடுபேறு’ என்னும் பேரின்ப த்தைத் தந்தருள்வது பத்தாம் நாள் விழா கொ ண்டாட்டத்தின் உட்பொருள். அண்ணாமலை யானை வணங்கிய பின், பர்வதராசகுல மரபி னர் தீபமேற்றப்பெற்ற நெருப்பைப் பானையி ல் வைத்து, அது அணையாதவாறு மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதிர்வேட்டுகளின் சத்தம் வானைப் பிளக்க, தீப்பந்த வளையங்க ள் மலையை நோக்கிக் காட்டப்பட, பரணி தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்றுச் சென்ற பர்வதராசகுல பரம்பரையினர் மலை மேல் தீபம் ஏற்றுகின்றனர்.
திருவண்ணாமலை தீபம்:
இறைவன், உலக மக்களுக்கு ஒளி வடிவில் காட்சிதருகிறார். மலை மேல் ஏற்றப்பட்ட மகா தீபம் பதினோரு நாள்கள் எரிகிறது. தீபம் எரியும் கொப்பரை ஆறடி உயரம் கொண்டது. சுமார் 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் துணி நாடா, ஐந்து கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படு கிறது. ஐம்பூதங்களில் ஒன்று ஜோதி அக்னி வடிவாக எழுந்தருளி உலக உயிர்களைக் காக் கும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கார்த் திகை தீபத் திருவிழா உலகுக்கு எடுத்துக்காட் டுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் பின்வரும் மூன்று நாள்களில் பராசக்தி அம்மன் தெப்பத் திருவிழா, சுப்பிரமணியன் தெப்பத்திருவிழா, சண்டிகேசுவரர் தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. இறுதி நான்கு நாள்கள் இறையுருவங்களைப் புனித நீராட்டும் விழாக்களாக நடைபெறுகின் றன. கார்த்திகை தீபம் ஏற்றுவதால், பல அற்புத நன்மைகள் நடைபெறும் என்று நமது புராண, இதிகாசங்களின் வழி அறிய முடிகிறது.
"ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷ த்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தை போக்கிக்கொண்டா ள்" என்று தேவிபுராணம் கூறுகிறது. திரிசங்கு கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனா னான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடி த்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான்.
திருவண்ணாமலை கோயில்
"திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்" என்று அருணா சல புராணம் கூறுகிறது.
"கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலைநுனியிற் காட்ட நிற்போம்….
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’
தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, "கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்'’ என்றும், ''இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்''என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார்.
திருவண்ணாமலை கோயில்
மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி பொரி பொரி த்து வழிபடுவது சிறப்பு. அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்தி கை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோயில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம். திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்ட பிறகே, அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகிறது.
கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார்கால ம். இந்தக் காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்துவைக்கும் விழாவாகவு ம் அமைகிறது. அறிவியல் நோக்கில் உற்று நோக்கினால், பல பயன்களை உள்ளடக்கிய தை அறியலாம். கார்த்திகை தீபத் திருவிழா வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தருகிறது. மேலும் விளக்கிலிருந்து கிளம்பி வான மண்டலத்தில் பரவும் கார்பன் வாயு மழை மேகங்களைக் கலைத்து, மழை பெய்வதைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது.
திருவிழாக்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல் நல்வாழ்வு வாழும் முறைகளையும், அறத்தை யும் போதிப்பதாக உள்ளதை அருணாசலேசு வரர் ஆலய விழா உணர்த்துகிறது. இறைவன் தொடக்கமும் முடிவுமின்றி, தானே எல்லாவற் றையும் படைத்து, காத்து, ஒடுக்கி மீண்டும் படைத்து ஒளியாக நிற்கும் தத்துவத்தை திரு வண்ணாமலைத் தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் உட்பொருளாகக் கொண்டிருக்கிறது.
அண்ணாமலை எம் அண்ணா போற்றி...
கண்ணாரமுதக் கடலே போற்றி...
அண்ணாமலையார் திருவடிகளே சரணம்...
27.11.2020.. நேசமுடன் விஜயராகவன்....

Friday 27 November 2020

இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்கிறது ஒரு தமிழ்ப் பழமொழி ஒன்று

 இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்கிறது ஒரு தமிழ்ப் பழமொழி ஒன்று...

பசுமையும், பனி மேகங்களும், கானலும், நாம் இருக்கும் இடத்தில் தெரியாது, இங்கிருந்து கண்டால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து கண்டால் இங்கிருப்பது போலவும் தோன்றும்...
ஆற்றின் இக்கரையில் இருந்து கொண்டு ஒருவர் ஆற்றின் எதிர்புறக் கரையில் உள்ள தோட்டத்தைக் காண்கிறார். அட!, நமது தோட்டத்தைக் காட்டிலும் அந்தத் தோட்டம் மிகச் செழிப்பாக இருக்கிறதே!, என்று எண்ணி அந்தத் தோட்டத்தை காண்பதற்கு மறுகரை சென்றார்...
அப்படிக் காணும் போது தூரத்தில் செழிப்பாகத் தெரிந்த அந்தத் தோட்டத்தின் அருகில் சென்று காணும் போது, அந்தத் தோட்டத்தில் பயிர்களில் பரவியுள்ள நோயும், செடிகளின் வாட்டத்தையும் கண்டார்...
தூரத்தில் பச்சைப் பசேல் என்று தெரிந்த தோட்டம் இப்படி இருக்கிறதே!, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார், இனி எதையும் கண்டவுடன் முடிவெடுக்கக் கூடாது என்று உணர்ந்தார்...
ஆம்...! இது நம் வாழ்க்கை நெறிகளுக்கும் பொருந்தும்...
தூரத்தில் எதையும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு கருத்து கொள்ளக் கூடாது.சிலர் வெளிப் பார்வைக்கு கார், பங்களா,என்று தடபுடலாக என்று வாழ்வார்கள். ஆனால், அவர்களின் அருகில் சென்று பழகிப் பார்த்தால் தான் அவருக்கு உள்ள கடன்கள் பற்றியும், ஓட்டை உடைசல்கள் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.. பொதுவாகவே ஒருவரின் மேலோட்டமான விளம்பரங்களையும்,,
ஆடம்பரங்களையும்,,
படோபங்களையும் மட்டும் பார்த்து எடை போட்டு பழகி விட்டோம்...........
ஆம்.. நண்பர்களே.. ஒருவரைப் பற்றி முடிவு எடுக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று நிறுத்தி, நிதானமாக நாம் எடுத்த முடிவு சரிதானா? என்று ஒரு முறைக்கு பல முறை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதே சாலச் சிறந்தது..

மனிதத்தேனீயின் தேன்துளி


 

அன்புச் சகோதரர் டாக்டர் எம். முருகன் - டாக்டர் லதா முருகன் தம்பதியரின் மகன் டாக்டர் ஹரி நாராயணன் - அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெ. சங்குமணி- டாக்டர் சுஜாதா சங்குமணி தம்பதியர் மகள் டாக்டர் ஹம்ச நந்தினி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ

நேற்று இரவு மதுரை கருப்பாயூரணி எம் பி மகாலில் நடைபெற்ற ராகவேந்திரா மருத்துவமனை, அன்புச் சகோதரர் டாக்டர் எம். முருகன் - டாக்டர் லதா முருகன் தம்பதியரின் மகன் டாக்டர் ஹரி நாராயணன் - அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர்

ஜெ. சங்குமணி- டாக்டர் சுஜாதா சங்குமணி தம்பதியர் மகள் டாக்டர் ஹம்ச நந்தினி திருமண வரவேற்பில் மனிதத்தேனீ, மற்றும் அ இ அ தி மு க முன்னோடி சகோதரர் முனியசாமி, மாலை முரசு ஆசிரியர் அண்ணாமலை, கண் மருத்துவர் சீனிவாசன், இதய சிகிச்சை மருத்துவர் விவேக் போஸ், முனைவர் கு அன்புநாதன், தி மு க சட்டமன்ற உறுப்பினர் பி மூர்த்தி, எக்சலன்ட் ஹரிமாதவன் உள்ளனர். மாநகர் மதுரையின் உள்ள முன்னணி மருத்துவர்கள் அனைவரும் பங்கேற்ற இனிய திருவிழா.
வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ