Saturday 23 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முதன் முறையாக உலக சிக்கலாகின்றது.!
இந்திய எல்லையில் 1950ல் இருந்து சீனா அட்டகாசம் செய்வது புதிதல்ல,
1962 படையெடுப்புக்கு முன்பே அவர்கள் அடிக்கடி வந்து நின்றார்கள்,
#நேரு அது மரம் முளைக்காத பொட்டல்காடு என்றார்,
#எதிர்கட்சிகள் எம் மண்டையும் முடிமுளைக்காத இடம்தான் விட்டுவிட முடியுமா? என கேட்டதற்கு நேருவிடம் பதில் இல்லை.
இந்த தெனாவெட்டுத்தான் 1962ல் போராய் முடிந்து இந்திய நிலம் ஆக்கிரமிக்கபட்டது.
இப்பொழுது முழு #காஷ்மீரையும் மீட்கும் திட்டத்தில் இந்தியா இறங்கி ஓசைபடாமல் பல பகுதிகளை மீட்டும் விட்டது, சில பகுதிகளில் சர்ச்சை நீடிக்கின்றது.
#சீனா இதை தாங்கி கொள்ளமுடியாமல் பல சர்ச்சைகளில் ஈடுபடும் நேரம் #அமெரிக்கா காட்சிக்குள் வருகின்றது.
சீனாவினை ஒழித்து கட்ட அதனிடம் வம்பிழுப்பது இல்லை.
அது வம்பு செய்யும் இடம்க்களில் சென்று நிற்பது என கடும் ஆத்திரத்தில் அது சுற்றிவருகின்றது.
நேற்று அமெரிக்க பிரதிநிதி "சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து நாம் இந்தியாவினை ஆதரிக்கின்றோம்" என சொல்லியிருப்பது பெரும் திருப்பம்.
ஆக இந்திய சீன எல்லை தகறாறு உலக பிரச்சினையாகின்றது,
இதில் இந்தியாவுக்கு சாதகமான சில நகர்வுகள் நடக்கலாம்,
குறைந்தபட்சம் ஒரு பின்னணி பாதுகாப்பாவது உண்டு.
1962ல் சீனபடையெடுப்பில் அமெரிக்காதான் சில உதவிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது,
#ஆனால் நேரு முழுவதும் அதை பயன்படுத்தாமல் தோற்றார்.
மோடி அரசு காலத்தை மிக கச்சிதமாக பயன்படுத்துகின்றது, சீன எல்லை சிக்கலையும் தீர்த்துவிட்டால் இந்தியாவின் அதிரடி #பிரதமர்_மோடி என்பதை மாற்ற இன்னொருவர் வர முடியாது.!
நன்றி வெங்கடேசன் சுவாமிநாதன்

No comments:

Post a Comment