Thursday 30 November 2023

நேசிப்பும் வெறுப்பும் . .

 நேசிப்பும் வெறுப்பும் . .

பணத்தைக் கண்டால் தான்
புன்னகை வருகிறதென்றால்
கண்டிப்பாக
அது ஒருவகை வியாதியாகத் தான் இருக்கும்.
நீங்கள் செல்லும்
வேகத்தை விட
நீங்கள் செல்லும்
திசை மிக முக்கியமானது.
சிலர் துரோகத்தில் ஒழிந்து போன புன்னகையை
சிலரின் அன்பில் மீட்டெடுக்கும் வாழ்க்கை
*வரமே*.
நண்பர்கள் யாரும் மீண்டும் பிறப்பதில்லை
நட்புக்கள் என்றும் இறப்பதில்லை.
ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதற்காக
வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த உடன் பிறப்புகள் தான்
*நண்பர்கள்*..
நம்மைப் பற்றி
அதிகமாக விமர்சனம் செய்யும் நபருக்கே
நம்மைப் பற்றிய பயம்
அதிகம் இருக்கும்.
முட்டாள்தனமென்று நாம் நினைப்பதைத் தான்
சிலர் மூலதனமாய்
நினைக்கிறார்கள்.
நேசிப்பின் உச்சம்
அவ்வப்போது விட்டுக் கொடுத்தல்
வெறுப்பின் உச்சம்
அப்படியே விட்டு விடுதல்.
ஏற்றம் வரும் போது
பணிவு வேண்டும்,
ஏமாற்றம் வரும் போது
துணிவு வேண்டும்.
பொது நலமாய் இரு.
உன்னைச் சுற்றி இருப்பவர்கள் சுயநலமாய் இருப்பின்
நீயும் சுயநலமாய் மாற வேண்டும்
என்ற அவசியமில்லை.
ஓடி ஓடி
உதவி செய்யும் வரை தான் அனைவராலும் மதிக்கப்படுவாய்
ஒரு முறை மறுத்துப்பார்,
அடுத்த நொடியே மறக்கப்படுவாய்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Wednesday 29 November 2023

நேர்வழி பாதுகாப்பானது . .

 நேர்வழி பாதுகாப்பானது . .

''மாபெரும்
செயல்களைத் திறம்படச்
செய்து முடிக்க
உறுதி எடுக்க வேண்டும் என்றால்,
உங்களுக்கு
இன்றியமையாத
முதல் மூலப்பொருளான,
வெற்றிக்குத் தேவையான முதல்படியான, தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும்.
தடைகளையும்,
அவமதிப்புகளையும்,
தன்னம்பிக்கை தான்
சமாளித்து அடித்துத் துரத்தி
பொன்னாக நம்மை உருவாக்கும்.
நேர்வழி
பாதுகாப்பானது
என்பதை உணர்த்தும்.
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள்.
அனைத்தையும்
உங்கள் துணிச்சல் தான் சாதிக்கும்.
எதையும் கண்டு
பயப்படாதீர்கள்.
நீங்கள் மகத்தான
காரியங்களைச் செய்வீர்கள்.
எந்த விநாடி
பயப்படத் துவங்குகிறீர்களோ,
அந்த விநாடியில் இருந்து நீங்கள் ஒன்றுமே
இல்லாதவர்களாகி விடுகிறீர்கள்.
உலகத்தில் மிக அதிகமான துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்தப் பயம் தான்.
இந்தப் பயம் தான் எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் காரணம்.
எழுந்திருங்கள்,
துணிச்சல் கொள்ளுங்கள்,
குறிக்கோள் அடையப்படும் வரை நில்லாதீர்கள்.
''தன்னம்பிக்கை,
தெளிவு,
துணிச்சல்''
இந்த மூன்றும் தான்
ஒருவனை எப்போதும் காப்பாற்றி
வழி நடத்திச் செல்லும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Tuesday 28 November 2023

மாலை முரசு 28.11.2023 பக்கம் 3


 

10.11.2023 மதுரை நகரத்தார் சங்க முப்பெரும் விழாவில் ஆற்றுப்படுத்துதல் தல...

கனவும் நனவாகும் . .

 கனவும் நனவாகும் . .

தங்கள் வாழ்க்கையில்
ஏற்பட்ட பல்வேறு
சோதனைகளைக் கடந்து,
சாதனை படைத்த சரித்த நாயகர்களின், தன்னம்பிக்கை வரிகள் இங்கே.
*மகாத்மா காந்தி*
வன்முறை மூலம் அடையும் வெற்றி தோல்விக்குச் சமமே.
அது தற்காலிகமான ஒன்றே அன்றி வேறு இல்லை. அகிம்சை மூலம் பெறும் வெற்றியே உண்மை வெற்றி.
*ஸ்டீபன் ஹாக்கிங்*
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால்,
செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கிறது.
*சுவாமி விவேகானந்தர்*
ஒரே ஓர் எண்ணத்தைக்
கையில் எடுங்கள்.
அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள்.
அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள், கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும்.
இதுவே, வெற்றியின் ரகசியம்.
*லியோ டால்ஸ்டாய்*
வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்.
*ஒப்ரா வின்ஃபிரே*
இந்த நொடியில்
உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்து விடுகிறது.
*எடிசன்*
துவண்டுபோவதே ஒரு மனிதனுடைய மிகப் பெரிய பலவீனம்.
வெற்றிக்கான நிச்சய வழி,
தோல்வி அடைந்த பிறகும், இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது.
*பெர்னாட்ஷா*
நான் ஆரம்பத்தில் 10 காரியங்களைச் செய்தால், 9 தோல்வியாகவே முடியும். தோல்வி என்னைக் கேலி செய்தது.
9 முறை வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன்.
90 முறை முயன்றால் 9 வெற்றி கிடைக்கும் அல்லவா அன்று முதல், முயற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன்.
இதுதான் எனது வெற்றியின் ரகசியம்.
*வால்ட் டிஸ்னி*
விடாமுயற்சியுடனும்
தைரியத்துடனும்
கனவுகளைத் துரத்திக்கொண்டு
ஓட முடிவெடுத்தவரின்
ஒவ்வொரு கனவும் நனவாகும்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

Monday 27 November 2023

மன அழுத்தம் விலகட்டும்

 மன அழுத்தம் விலகட்டும் . . .

பெரும்பாலான மக்கள்
அவர்களது
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்
மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு
இந்த உணர்வுகள்
கடுமையானதாகவும்,
நீடித்தும்
அமைந்து விடுகிறது.
இந்த வகை மன அழுத்தம்
எளிதில் ‘விலகாது',
அந்த நபரிடம்
‘தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்'
என்று
கூறுவதெல்லாம் உதவாது.
அது அவ்வளவு
எளிதானதல்ல.
ஆனால் வழியிருக்கிறது.
மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர்
மருந்துகளையோ,
சிகிச்சையோ அல்லது
இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.
உதவியை நாடுவது
மிக முக்கியமானதாகும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
அழுத்தமான மனநிலை -
பெரும்பாலான நாள், தினமும்
மனநிலை மாற்றங்கள் -
ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால்,
அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்
பலவீனம் மற்றும் வாழ்க்கையில்
பிடிமானத்தை இழத்தல்
கோபம் மற்றும் அமைதியின்மை
உறக்கத்தில் மாற்றங்கள் - அதிகமாக
உறங்குதல் அல்லது
குறைவாக உறங்குதல்
குறிப்பிடத்தகுந்த எடை
அதிகரிப்பு அல்லது எடையிழப்பு
மதிப்பின்மை மற்றும்
குற்றவுணர்வு எண்ணங்கள்
கவனித்தலில் மற்றும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்
பாலுறவில் ஈடுபாடு குறைதல்
மரணம் மற்றும் தற்கொலை
பற்றிய எண்ணங்கள்
நீங்கள் அறிந்த ஒருவர்
மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருந்தால்
ஒரு மருத்துவரையோ அல்லது
உடல் நல நிபுணரையோ சந்திக்க
அவரை ஊக்கப்படுத்துங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மனிதத்தேனீயின் தேன்துளி


 

மூச்சு விடும் நேரம் . . .

 மூச்சு விடும் நேரம் . . .

இழந்த காலத்தை
மறுபடியும் அடைய முடியாது.
எதிர்காலம் என்னவென்று நம்மால் அனுமானிக்கவும் முடியாது.
கையில் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே.
அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவுதம புத்தர்
தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு வினாவினை எழுப்பினார்.
‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்.
அனைவருக்குமே விடை தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடர்
‘நூறு ஆண்டுகள்’ என்றார்.
புத்தரின் முகத்தில் புன்னகை.
அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்.
சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் இல்லையா.
அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற் போன்றது தான்.
ஆகையால் ஆண்டுகள் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதினர் சீடர்கள்.
உடனே ஒரு சீடர் எழுந்து,
‘எழுபது ஆண்டுகள்’ என்றார்.
‘இதுவும் தவறு’ என்றது
புத்தரின் மென்மையான குரல்.
‘அறுபது ஆண்டுகள்’
என்றார் மற்றொரு சீடர்.
‘இது கூட தவறு தான்’
என்றார் புத்தர்.
இவை அனைத்தும்
அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடர் ‘ஐம்பது ஆண்டுகள்’ என்று கூறி விட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து அமைதியாக நின்றிருந்தார்.
புத்தரின் வார்த்தை
அந்தச் சீடரையும் வருத்தம் கொள்ளச் செய்தது.
ஆம் அந்த விடையும்
தவறானது என்று கூறி விட்டார் புத்தர்.
சீடர்களுக்கு
ஏமாற்றமே மிஞ்சியது.
‘இதென்ன வியப்பாக இருக்கிறது
ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர் வாழ முடியாது.’
என்று குழம்பிப் போனார்கள்.
சற்று நேரம்
தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார் புத்தர். சரியான விடையைக் கூற முடியாமல் சீடர்கள் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது.
தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காண விரும்பாத புத்தர்.
‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு
"மூச்சு விடும் நேரம்"
என்றார்.
சீடர்கள் அனைவருக்கும் வியப்பு.
அந்த வியப்பு மாறாமலேயே,
‘மூச்சு விடும் நேரம்,
கணப்பொழுது தானே என்றனர்.
‘உண்மை தான்.
மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில் தான் இருக்கிறது.
எனவே ஒவ்வொரு கணமாக
நாம் வாழ வேண்டும்.
மனிதர்கள் பலர் கடந்த கால மகிழ்ச்சியிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய
அச்சத்திலும்,
கவலையிலும்
தான் வாழ்கிறார்கள்.
நேற்று என்பது
முடிந்து போனது.
அது இறந்துப் போன காலம்.
அதே போல நாளை என்பது யாரும் அறிந்து கொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தைச் செலவு இடுவது மடமை.
அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக
வாழ வேண்டும்’ என்றார் புத்தர்.
நம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே
வருத்தத்துடன் கடந்தக் காலத்தைக் காண்பதும் ,
அச்சத்துடன் எதிர்காலத்தைக் காண்பதும்
நிகழ்காலத்தைக் கொள்ளையடித்து விடும்.
பழைய முறை சிந்தனைகளும்,
நடத்தை முறைகளும்
நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது.
எனவே நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை நமது வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வோம்

Saturday 25 November 2023

சிறந்த பக்குவம்

 சிறந்த பக்குவம் . .

*எழுத்துக் கூட்டி
எளிதாகப் படிக்கும் அளவுக்கு,
யாருடைய தலையெழுத்தையும்
இறைவன் இங்கு எழுதவில்லை.*
*கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும்.*
*அதைக் கடந்து
சாதிப்பது தான் வாழ்க்கை.*
*சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும். *
*ஒவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்.*
*வெற்றுப் படகாக மாறுங்கள். *
*உங்கள் உள்ளே சென்று
நீங்கள் யாரும் இல்லை என்பதை உணருங்கள்.*
*நீங்கள் யாரும் இல்லை என்பதை நீங்கள் உணரும் தருணத்தில் நீங்கள் ஒரு புதிய பரிமாணத்தில் வெடிக்கிறீர்கள். *
*ஏனென்றால் ஒரு நபர்
தான் யாரும் இல்லை என்பதை உணரும் போது
அவர் தான் எல்லாம் என்பதை உணர்ந்து கொள்கிறார்.*
*உளியில் அடிபட்டாலும்
சிற்பமாய் மாறும்போது வலி மறந்திடும்.*
*செதுக்கச் செதுக்கத்தான் சிற்பம்.*
*வாழ்க்கையும் அப்படித்தான்.*
*மனசாட்சிக்கு மட்டும் பயந்து வாழ்ந்தால் போதுமானது.*
*வாழ்க்கை உண்மையாக மாறும்.*
*தடுக்கி விழுந்த
குழந்தையைப் பதறிப் போய்
தூக்குவது தாய்.*
*பக்கத்திலிருந்து
வேடிக்கை (தானாக எழுகிறதா என்று) பார்ப்பது தந்தை.*
*இரண்டுமே
இரு வேறு வகையான அன்புதான்*
*இது உன் பாதை
உனக்கான பாதை*
*உன்னுடன் பலர் நடக்கலாம்
ஆனால்
உனக்காக யாரும் நடக்க முடியாது.*
*காற்றை அனுபவிக்கலாம்
தேடிக் கண்டு பிடிக்க முடியாது
தேடினால் குழப்பமே மிஞ்சும்.*
*எது உன்னை நோக்கி வருகிறதோ
அதை அனுபவிக்கக்
கற்றுக் கொள்
வாழ்க்கை இனிக்கும்.*
*பஸ் கூட்டமா இருந்தா
என்ன இது
இவ்வளவு கூட்டம்னு திட்டுறோம்,*
*அதே பஸ் காலியா இருந்தா
என்ன இது
பஸ் இப்படித் தூக்கித் தூக்கிப் போடுதேனு திட்டுறோம்.*
*ஆக வாழ்க்கையும் சரி
பயணமும் சரி
சம நிலையில் இருந்தால் மட்டுமே
சிறக்கும்.*

மதுரைமணி 25.11.2023 பக்கம் 3


 

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 62 இல் தடம் பதிக்கும் எனது இல்லத்தரசியார் அலமேலு சொக்கலிங்கம். எங்கள் வழக்கம் போல இன்று காலை திருநகர் தாய்மடி இல்லம், இங்கு சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர் 80 பேர் உள்ளனர். மற்றும் பசுமலையில் உள்ள இளந்தளிர் மாணவர் இல்லத்தில் உள்ள பெருமக்களுடன் பங்கேற்று சிறப்பு உணவு மற்றும் கைக்குட்டை வழங்கி மகிழ்ந்தோம். உடன் எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார், மற்றும் இல்ல நிர்வாகி சேது முத்துராஜ், ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளனர். மகிழ்வுடன் - மனிதத்தேனீ

 
















மனிதத்தேனீயின் தேன்துளி


 

Friday 24 November 2023

வையாபுரி கும்பாபிஷேக விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை.

 வையாபுரி கும்பாபிஷேக விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை.

இன்று காலை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா குழிபிறை அருகில் உள்ள வையாபுரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
வாழவைக்கும் வையாபுரி என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.
குழிபிறை ஊராட்சித் தலைவர் கோடீஸ்வரா எஸ். அழகப்பன் முன்னிலை வகித்தார்.
திருப்பணிக் குழுத் தலைவர்
குழிபிறை லெ. வள்ளியப்பன் தலைமையில் பனையபட்டி
ந. சுப்பிரமணியன், கோவனூர் விஎஸ்பி. சிங்காரம், பனையபட்டி கேஆர். ராமநாதன், மதியாணி எஸ். பால்சாமி, கண்டெடுத்தான்பட்டி அ. பழனிவேல், வாழக்குறிச்சி ராம. சுப்பையா, செம்பூதி எஸ். முத்துக்குமார், அரசமலை கேஆர். வீரப்பன், இல்லினிப்பட்டி பாண்டிலிங்கம், வையாபுரி எஸ். பாலசுப்பிரமணிய பட்டர், கே. சேகர், பிஎல். கண்ணுசாமி உள்ளிட்ட பெருமக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நகரத்தார்கள் நாட்டார்கள் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் முப்பதாயிரம் மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
யாகசாலை, அன்னதானம் என விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
எம்ஆர். ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
வாழிய அறப்பணிகள்