Thursday 31 March 2016

தியாகதீபம் அ.பாலு பணிநிறைவுப் பாராட்டு விழா பானர்


சுற்றமும் நட்பும் இதழ் - மார்ச் -2016 - பக்கம் - 3


மகிழ்வோர் மன்றம் 11ஆம் ஆண்டு நிறைவு விழா நகைச்சுவை திருவிழா அழைப்பிதழ்


மனிதத்தேனீ வாழ்த்து


முகநூல் தகவல் ( மனிதத்தேனீ )

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..
படித்தது.....ரசித்தது 

மனிதத்தேனீயின் தேன்துளி



மனிதத்தேனீயின் தேன்துளி




மனிதத்தேனீயின் தேன்துளி


Wednesday 30 March 2016

யுகாதி திருநாள் அழைப்பிதழ்


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்

மனிதத்தேனீயின் தேன்துளி



Tuesday 29 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

* ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல.
சாவுன்னா பயம் ல?
* ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல.
அவ்ளோ தைரியசாலி ல ?
* யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல.
எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல?
* ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல.
அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல?
* மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்?
புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ?
* காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்?
நிறைய உண்மைகள் பேசவேணும் ல?

வள்ளல் டாக்டர் அழகப்பச் செட்டியார் நினைவு தினக் கூட்டம் அழைப்பிதழ்


மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இந்த்தகவலை மற்றவருக்கும் தெரியபடுத்துவோம்..
உங்கள் யாவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த நல்ல செய்தி நாடு முழுதும் செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து பேர்களுக்கு ஒரு சங்கிலி தெடர் போல் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள். 1) குப்பைகளை எறியாதீர்கள் சாலைகள்/தெருக்களில். 2)எச்சில் துப்பாதீர்கள் சாலைகள்/சுவர்கள் மீது. 3)சுவர்கள்/பணத்தாள்கள் மீது எழுதாதீர்கள். 4)மற்றவர்களை தவறாகவும்/இழிவாகவும் நடத்தாதீர்கள். 5)நீர்/ மின்சாரம் சேமியிங்கள். 6)மரம் நடுவீர். 7)சாலை விதிகளை பின்பற்றுங்கள். 8)பெற்றோர்களையும், முதியவர்களையும் எப்பொழுதும் மரியாதையுடன் நடத்துங்கள், அவர்களின் ஆசீர்வாதங்களை பொற்றுக் கொள்ளுங்கள். 9)பெண்களை மரியாதையுடன் நடத்துங்கள். 10) ஆம்பலன்ஸ் போன்ற அவசர வாகனகளுக்கு வழிவிடுங்கள். நாம் தான் மாற வேண்டும் நாடு அல்ல. நாம் மாறினால் நாடு தானகவே மாறிவிடும். நம்முடைய வருங்கால சந்ததிகள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலில் வாழ வேண்டுமானால் இவைகளை உறுதியுடன் அநுதினம் கடைபிடியிங்கள். எந்த தனிப்பட்ட தலைவர்களோ,தனிமனிதனோ, நாட்டை மாற்ற முடியாது.🙏🙏🙏🙏👏👏👏👆👆

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


மனிதத்தேனீ சிறப்புரையாற்றிய ராயல் விஷன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறப்புப்பள்ளி ஆண்டு விழா News & Photos




தியாகதீபம் அ.பாலு பணிநிறைவு பாராட்டு விழா போஸ்டர்


Monday 28 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்
1. பணிவு:
ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விஷயங்களைப் பழகியவுடன், கர்வம் அவர்களூடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது.
என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல்படி, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.
2. கருணை:
உங்களைச் சுற்றிள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.
உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.
3. பழகும் தன்மை:
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களூக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிபடையாக நடந்து கொள்ளுங்கள்.
திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.
4. அரவணைக்கும் குணம்:
உலகில் எல்லாவிதமான மனிதர்களூம் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு,
பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.
5. இணைந்து பணியாற்றும் குணம்:
நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம்.
நாம் அனைவரும் இணைந்து பணீயாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.
6. முடிவெடுக்கும் திறன்:
நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம்.
நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள்
நமது வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமையும். இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

Makkal Kurual Paper 28.03.2016 Page 5


Malai Murasu Paper 28.03.2016 page 8


Malai Murasu Paper 28.03.2016 page 5


Makkal Kurual Paper 26.03.2016 Page 4


தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம் News & Photos



மனிதத்தேனீயின் தேன்துளி



மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


Saturday 26 March 2016

Madurai Mani Paper 26.03.2016 Page 4


முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
















விஜயகாந்த்கிட்ட
💥இனப்படுகொலை எப்போ நடந்ததுனு கேளு.
💥கெயில்ன்னா என்னனு கேளு.
💥டெல்டா மாவட்டங்கள்னா எந்த எந்த மாவட்டம்னு கேளு.
💥கூடங்குளம் அனுமின்நிலையம் வேணுமா வேணாமானு கேளு.
💥பென்னிகுயிக் எந்த அணைய கட்டுனார்னு கேளு.
💥தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை மாவட்டம்னு கேளு.
💥அதில் புதுசா எந்த மாவட்டம் உருவாகி இருக்குனு கேளு.
💥பெருச்சித்தனரார்னா யாருனு கேளு.
💥நியூட்ரினோனா என்னனு கேளு.
💥திராவிடம்னா என்னனு கேளு.
💥அது யாரு உருவாக்கினானு கேளு.
💥தமிழ் முத்திரையில் இருக்கிற கோபுரம் எந்த ஊர்னு கேளு.
💥தமிழ் நாடுனு யார் பெயர் வச்சதுனு கேளு.
💥அஞ்சு திருக்குறள் பார்க்காம சொல்ல சொல்லி கேளு.
💥அதுக்கு அர்த்தம் என்னனு கேளு.
💥பாரதியார் எந்த ஊர்னு கேளு.
💥சோழன் கொடி என்னனு கேளு.
💥விவசாயம் அழிந்து போனதுக்கு காரணம் என்னனு கேளு.
💥நாட்டு மாடு எப்படி இருக்கும்னு கேளு.
💥தமிழ்நாட்டுக்கு அடிப்படை வசதி இப்போ என்னனு கேளு.
💥நீர் மேலாண்மைனா என்னனு கேளு.
💥தமிழ்நாடில் எத்தனை ஏரி இருக்குனு கேளு.
💥எதிர்கட்சி தலைவரா இருந்து சட்டமன்றத்தில் ஒரு கேள்விகூட கேட்காத தலைவர்
💥இவரு தமிழக முதல்வரானால் .....
💥மக்கழே ..............

முகநூல் தகவல்(மனிதத்தேனீ)

நார்மன் வின்சென்ட் பீலே" என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் “The Power of Positive Thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்.
தோல்வி மேல் தோல்வி அடைந்து
விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.
தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.
பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.
கோட்டுக்கு வலது
பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார்.
வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று
புலம்பிக் கொண்டு அந்த துண்டு
காகிதத்தை வாங்கினார்.
சிறிது நேரம் கழித்து காகிதத்தை
வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.
இப்போது பீலேசில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.
“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.
அதற்கு அவர் "எனது மகன் ஜெயிலுக்கேபோகவில்லையே" என்று கூறினார்.
“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.
தொடர்ந்து “உங்களுடைய மனைவி
உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.
“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு "சாப்பிடாமல் நான்
இருந்த்தில்லை" என்று பதிலளித்தார்.
“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து
சென்றபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு "என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது" என்று பதில் கூறினார்.
இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப்புறம் நிரம்பியிருந்தது.
இடது பக்கத்தில் எழுத இன்னும்
இடமிருந்தது.
கடந்த காலத்தில் முழுக்க முழுக்க
மகிழ்ச்சியான நிகழ்வுகளைக்
கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும்
இல்லை.
அதுபோல முழுக்க முழுக்க
துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.
இரண்டும் கலந்த்து தான் வாழ்க்கை.
ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளைமட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய
வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்.
கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது.
அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளுபலகையாக இருக்க வேண்டும்.
என்ன நடந்தாலும் வாழ்க்கையை
மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று
முடிவெடுங்கள்.
மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாய் எழுதத் தொடங்குங்கள்.
வலது பக்கம் நிரம்பட்டும்..!!
இடது பக்கம்
காலியாகட்டும்..!!

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நிச்சயமற்ற மனித வாழ்க்கை - வாழும் வரை சேவை செய்
அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, இதில் நானே பெரியவன் நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டு விட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் என்று தன்னைத்தான் \புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இறந்த பின்பு நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும், நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள் இறந்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், எல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் தான்.
பின்னர் பார்த்தால் அனைவரும் அவரவர், வேலையை செய்து கொண்டிருப்பார்கள், 'அட நாம் இல்லையென்றாலும் எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னால் செய்ய முடியாத காரியங்களையும் மற்றவர்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, நானில்லையென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்
எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை மற்றவருக்கு நன்மையை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வினை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும் மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.
நிச்சயமற்ற மனித வாழ்க்கை - வாழும் வரை நமது வசதிக்கேற்ப
சேவை செய்து சந்தோஷமாக வாழ்வோம்..!
இன்னாரைப் போல் வாழவேண்டும் என்று நினைப்பதைவிட
நம்மைப் போல் வாழவேணடும் என்று பிறர் எண்ணும்
அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு...!.!
படித்ததில் பிடித்தது

Dinamani paper 26.03.16 page 3


மனிதத்தேனீயின் தேன்துளி


தீரர் சத்தியமூர்த்தி நினைவு தினக் கூட்டம் ஃபானர்


Friday 25 March 2016

மனிதத்தேனீயின் தேன்துளி



முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தயவு செய்து படியுங்கள்..... இதைப் படிக்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குவதால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்! பல நபர்களின் கண்ணீரும் தடுக்கப்படலாம்!
STROKE ; பக்கவாதம்
முதல் மூன்று எழுத்துக்களை நினைவில் கொள்ளவும்!....... S...T...R...
எனது நண்பன் இந்தப் பதிவை எனக்கு அனுப்பி, இதை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி பதிவிடப் ஊக்கப் படுத்தினான்!
இவ்வளவு இலகுவான ஒன்றை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், நம்மால் சிலரை காப்பாற்ற முடியும்!
எனவே இந்தப் பதிவு!
Stroke. அடையாளம்
**********************
கண்டுகொள்வது;;
**********************
ஒரு பார்ட்டியின் போது, ஒரு பெண் , கையில் உணவுத் தட்டுடன் நடக்கும்போது, சிறிது தடுமாறி, விழப் போகும் போது சமாளித்து விட்டாள்.
மற்றவர்கள் ஆம்புலன்ஸ் கூப்பிடவா என கேட்டபொழுது,
அவள் அனைவருக்கும் சொன்னது அவளது புது காலணிகள் கல்லில் தடுக்கியதால் அவள் தடுமாறி விழப் போனதாகவும், தான் நன்றாக இருப்பதாகவும் கூறினாள்!.
எனவே அவளது உடையைச் சுத்தம் பண்ண உதவி, வேறு உணவும் அவளுக்கு அளித்தனர்!
அந்தப் பெண், இன்கிரிட் அவளது பெயர்! எதிர்பாராது நடந்த தடுமாற்றத்தால் சற்றே ஆடிப் போயிருந்தாலும், அந்த விருந்தின் மீதி நேரத்தை நண்பர்களுடன் நன்றாகவே கழித்துக் கொண்டிருந்தாள்....!
இன்கிரிட்சின் கணவர்
பிறகு அவரது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகக் கூறினார்! ( மாலை 6 மணிக்கு இன்கிரிட் இறந்து போனதாகத் தகவல் வந்தது!)
அவர்களுக்கு மட்டும் ஸ்டோரோக் வருவதன் அறிகுறிகளை அடையாளம் காணத் தெரிந்திருந்தால்,
ஒருவேளை இன்கிரிட் நம்மிடையே இன்று உயிரோடு இருந்திருக்கக் கூடும்!!
சிலர் ஸ்ட்ரோக் வருவதினால் இறப்பதில்லை! மாறாக
ஒரு நம்பிக்கையற்ற, ஆதரவற்ற நிலையை அடைகிறார்கள்!
ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் இதனைப் படிப்பதற்கு....... படியுங்கள்! ஸ்ட்ரோக் வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!!
STROKE அறிகுறிகளை அடையாளப் படுத்த:-
ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை, பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்திற்குள், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று விட்டால், அந்நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுவதுமாக மாற்றி விடலாம் என்கிறார் நரம்பியல் நிபுணர்!! முழுவதுமாக.......
அவர் சொல்வது
அதற்குத் தேவை, 1)பாதிக்கப்பட்ட நபரின் பாதிப்பைக் கண்டு பிடித்து அங்கீகரிப்பது, 2)பாதிக்கப்பட்டவரின்
பாதிப்பு , 'ஸ்ட்ரோக்' என அடையாளம் கண்டறியப்படுவது,
3)மூன்றாவதாக அந்நபரை சரியான மருத்துவ வசதிக்குட்படுத்துவது!!
3 மணி நேரத்திற்குள்!
இது மிகவும் கடினமானதே!! "
ஸ்ட்ரோக் அடையாளம்
கண்டு கொள்வது எப்படி?;;;;
3 வழிகள் எப்போதும் நினைவில் வையுங்கள்!
எவையெல்லாம்?
வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!
சிலசமயங்களில் ஸ்ட்ரோக் என்பதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்வது கடினமாக இருக்கும்!! துரதிஷ்டவசமாக அதற்கான விழிப்புணர்வு இல்லாமை பாதிப்பை அதிகமாகத் தருகிறது!
பாதிக்கப்படும் நபரின் அருகிலிருப்பவர்கள்
"ஸ்ட்ரோக்" என்பதை அடையாளம் காணத் தவறும் போது,ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுபவர், கடுமையான மூளை பாதிப்புக்குள்ளாகிறார்!
தற்போது டாக்டர்கள் சொல்வது;;
பாதிக்கப்படும் நபரின் அருகிலிருக்கும் பார்வையாளர்கள், மூன்று. எளிய கேள்விகளைப் பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்பதினால், பாதிக்கப்பட்டவருக்கு, ஸ்ட்ரோக் அறிகுறிகள் இருப்பதாக அடையாளம் காணலாம்" என்கின்றனர்.
S** Smile பாதிக்கப்பட்ட நபரைப் புன்னகை ( Smile) புரியச் சொல்லுங்கள்!
T** Talk. பாதிக்கப்பட்ட நபரை ஒரு எளிய வாக்கியத்தைத் தடுமாற்றமின்றி பேசச் சொல்லுங்கள்!
(உ.ம். வானம் மிகவும் தெளிவாய் இருக்கிறது!)
R*** Raise பாதிக்கப்பட்ட நபரின் இரண்டு கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்!
பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த மூன்று பணிகளைச் செய்வதில்,ஏதாவது ஒன்றில். பிரச்சினையிருந்தாலும்,
உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து,
பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்பவரிடம், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை விளக்கிச் சொல்லுங்கள்!
குறிப்பு;; "ஸ்ட்ரோக்" கின் மற்றுமொரு அடையாளம்!!
1. பாதிக்கப்பட்ட நபரை அவரது நாக்கை வெளியே நீட்டச் சொல்லுங்கள்!
2. அவரது நாக்கு கோணலாய் இருந்தாலோ, நாக்கு ஏதாவது ஒரு பக்கமாய்ச் சென்றால் அதுவும் அவர் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டதிற்கான அடையாளமே!
ஒரு முக்கியமான இதய நோய் நிபுணர் சொல்வது;;
இந்த பதிவைப் படிப்பவர்கள்,
அனைவரும் 10 நபர்களுக்காவது இதனை இமெயிலில் அனுப்பினால், ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்!
அது உங்களுடையதாகவும் இருக்கலாம்!!!!

Malai Murasu Paper 25.03.2016 page 4


புனிதவெள்ளி சந்திப்பு News & Photos





முகநூல் தகவல் (மனிதத்தேனீ)






















திருமதி. தெய்வா மோகன் ஒண்டாரியோ, கனடாவில் நீதிபதியாக பதவி ஏற்றார்.இந்த தமிழச்சியின் பெருமையை திக்கெட்டும் பரப்புவோம்...

மனிதத்தேனீயின் தேன்துளி