Saturday 30 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சேலம் மாநகரம் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த S.அஜ்ஜி தர்ஷினி(15) மற்றும் S.தேஜி தர்ஷினி(16) ஆகியோர்கள் 29.05.2020-ஆம் தேதி தங்களது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ATM சென்றுள்ளனர், அங்கு ஏற்கனவே யாரோ ATM-ஐ பயன்படுத்தி விட்டு ரூ.10,000/- பணத்தை எடுக்காமல் சென்றுவிட்டனர்.அது தங்களுடைய பணம் அல்ல என அறிந்த சிறுமிகள் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இன்று 30.05.2020-ஆம் தேதி வந்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்,சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கதுரை மற்றும் சேலம் மாநகர துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து திரு.S.செந்தில் ஆகியோரிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர். இந்த சிறுவயதிலேயே பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட சிறுமிகளை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி பரிசும் வழங்கினர்.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை;
பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை*
'தர்மம் தலை காக்கும்' என்பது மூத்தோர்
வாக்கு. நாம் செய்யும் தானதர்மங்கள் எம்மை
என்றும் காத்து வாழ வைக்கும் என்பது இதன்
கருத்து. ஆம்! எமக்கு கிடைக்கும்
செல்வங்களில் ஒரு பகுதியை நாம்
இல்லாதவர்களுக்கு கொடுக்கவென ஒதுக்க
வேண்டும். எமது தேவைகளில்
அத்தியவசியமானவற்றை நிச்சயமாக பூர்த்தி
செய்யத்தான் வேண்டும். ஆனால் எமது
ஆடம்பரச்செலவுகளைக்
குறைத்துக்கொண்டு, அத்தியவசியமான
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது
தவிக்கும் எமது சமூக அங்கத்தவர்களுக்கு
நாம் வழங்க வேண்டும்.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பாய்' என்ற ஓர் வாக்குண்டு.
ஏழைகளுக்கு உதவி, அவர்கள் மனதார
எம்மை வாழ்த்துவதை விட மேலான வாழ்த்து
வேறேதும் இல்லை .ஏழைகள் பசியால் வாடும்
போது நாம் பசி தீர்த்தபின் அது
செமிக்கவென மேலும் பழம் உண்ணுதல் நன்றா? நாம் உண்ணத்தான் வேண்டும்,
உடுக்கத்தான் வேண்டும், ஆயினும் எம்மைப்
போன்ற பலர் இப்போது பசியால் துடித்துக்
கொண்டிருப்பதையும் நாம் உணர வேண்டும்.
சமூகத்து அங்கத்தினர் என்ற வகையில்
அவர்களது பசியாற்ற நாம் என்ன செய்ய
முடியும் எனச் சிந்தித்து செயற்பட வேண்டும்.
'தனக்கு மிஞ்சித்தான் தானம்' என்பர். அது
சரியானது தான். எனவே எமது தேவைகளை
பூர்த்தி செய்து பின் ஏனையோருக்கு உதவ
வேண்டும். சிலர் அதனை மறந்து
உள்ளதல்லாவற்றையும் பிறருக்கு வழங்கி
விடுவதுண்டு. ஆனால் அது வரவேற்கத்
தக்கதல்ல. காரணம் நாளை நம் தேவை
எப்படிப் பூர்த்தியாகும் என்பதையும் சற்றுச்
சிந்திக்க வேண்டும்.
எனவே எம்மால் குறைக்கக்கூடிய,
கட்டுப்படுத்தக்கூடிய
தேவையற்ற
செலவுகளை, விரயங்களை குறைத்து,
தவிர்த்து பிறருக்கு வழங்க வேண்டும். மகரயாழ்
இல்லாதவர்களுக்கு வழங்குவது என்பது
வங்கியில் சேமிப்புச் செய்வது போன்றது.
பிறிதொரு நேரம் எமது ஆபத்தின் போது நாம்
செய்த தானங்களும் தர்மங்களும் வேறு ஓர்
உருவில் வந்து எம்மைக் காக்கும். எனவே
சிறுவயதிலிருந்தே நாம் இந் நற்செயலைப்
பழகிக் கொள்வோமாக.
*'இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பாய்'* என்ற பாரதியார்
கனவு நனவாக நடப்போமாக.

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை;
பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை*
'தர்மம் தலை காக்கும்' என்பது மூத்தோர்
வாக்கு. நாம் செய்யும் தானதர்மங்கள் எம்மை
என்றும் காத்து வாழ வைக்கும் என்பது இதன்
கருத்து. ஆம்! எமக்கு கிடைக்கும்
செல்வங்களில் ஒரு பகுதியை நாம்
இல்லாதவர்களுக்கு கொடுக்கவென ஒதுக்க
வேண்டும். எமது தேவைகளில்
அத்தியவசியமானவற்றை நிச்சயமாக பூர்த்தி
செய்யத்தான் வேண்டும். ஆனால் எமது
ஆடம்பரச்செலவுகளைக்
குறைத்துக்கொண்டு, அத்தியவசியமான
தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது
தவிக்கும் எமது சமூக அங்கத்தவர்களுக்கு
நாம் வழங்க வேண்டும்.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பாய்' என்ற ஓர் வாக்குண்டு.
ஏழைகளுக்கு உதவி, அவர்கள் மனதார
எம்மை வாழ்த்துவதை விட மேலான வாழ்த்து
வேறேதும் இல்லை .ஏழைகள் பசியால் வாடும்
போது நாம் பசி தீர்த்தபின் அது
செமிக்கவென மேலும் பழம் உண்ணுதல் நன்றா? நாம் உண்ணத்தான் வேண்டும்,
உடுக்கத்தான் வேண்டும், ஆயினும் எம்மைப்
போன்ற பலர் இப்போது பசியால் துடித்துக்
கொண்டிருப்பதையும் நாம் உணர வேண்டும்.
சமூகத்து அங்கத்தினர் என்ற வகையில்
அவர்களது பசியாற்ற நாம் என்ன செய்ய
முடியும் எனச் சிந்தித்து செயற்பட வேண்டும்.
'தனக்கு மிஞ்சித்தான் தானம்' என்பர். அது
சரியானது தான். எனவே எமது தேவைகளை
பூர்த்தி செய்து பின் ஏனையோருக்கு உதவ
வேண்டும். சிலர் அதனை மறந்து
உள்ளதல்லாவற்றையும் பிறருக்கு வழங்கி
விடுவதுண்டு. ஆனால் அது வரவேற்கத்
தக்கதல்ல. காரணம் நாளை நம் தேவை
எப்படிப் பூர்த்தியாகும் என்பதையும் சற்றுச்
சிந்திக்க வேண்டும்.
எனவே எம்மால் குறைக்கக்கூடிய,
கட்டுப்படுத்தக்கூடிய
தேவையற்ற
செலவுகளை, விரயங்களை குறைத்து,
தவிர்த்து பிறருக்கு வழங்க வேண்டும். மகரயாழ்
இல்லாதவர்களுக்கு வழங்குவது என்பது
வங்கியில் சேமிப்புச் செய்வது போன்றது.
பிறிதொரு நேரம் எமது ஆபத்தின் போது நாம்
செய்த தானங்களும் தர்மங்களும் வேறு ஓர்
உருவில் வந்து எம்மைக் காக்கும். எனவே
சிறுவயதிலிருந்தே நாம் இந் நற்செயலைப்
பழகிக் கொள்வோமாக.
*'இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பாய்'* என்ற பாரதியார்
கனவு நனவாக நடப்போமாக.

மனிதத்தேனீயின் தேன்துளி


Friday 29 May 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரை C4 திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி ஃப்ளவர்சீலா அவர்கள் கொரோனா கட்டுப்பாடு சமயத்தில் திறம்பட சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியதுடன் அப்பகுதி எளிய நிலையிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கியதையும் பாராட்டி சமூகசேவகர் மதுரைக்கல்லூரி வாரிய உறுப்பினர்
இல. அமுதன் பொன்னாடை அணிவித்து
கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு இயற்பியல் துறை பேராசிரியர் திரு இராமகிருஷ்ணன் மற்றும் TVS மக்கள் தொடர்பு அலுவலர் திரு வெங்கடேஷ் உடன் இருந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Sivananda Srinivasan, Venkatesan Kalimuthu and 4 others
2 comments
1 share

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கோரானோ எழுப்பி விட்ட
சௌராஷ்ட்ரா சமூக எழுச்சி...!
அன்புடையீர், வாழிய நலம்.
உலகம் முழுவதும், கடந்த 60 நாட்களில்
ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண
பேரிடர் சூழலில், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்
போட்டுள்ள சூழ்நிலை இன்று...
பரந்து விரிந்துள்ள இப்புவியெங்கும்
வாழும் நம் சௌராஷ்ட்ரா சமூகத்தார்
தங்கள் மனதில் இயல்பிலேயே
ஈரநெஞ்சம் படைத்தவர்கள்,
ஈகைகுணம் நிறைந்தவர்கள்
என்பதை இப்பேரிடர் காலத்தில்
தங்கள் சேவை மூலம் செயல் வடிவில்
நிரூபித்து வருகிறார்கள்...
ஆம், இப்பேரிடர் காலத்தில்
தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிப்பவர்களின் தேவையறிந்து,
அவர்களை ஆறுதல்படுத்தும்
விதமாக, தமிழ்நாடு
முழுவதும் 72 ஊர்களில் உள்ள
சௌராஷ்ட்ரா சமூக ஸ்தாபனங்கள்,
சௌராஷ்ட்ரா பெருமக்களின்
குடும்பத்தினரை நேரில் சந்தித்து,
அவர்களுக்கு அத்தியாவசமாக தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பலசரக்கு, முகக்கவசம், கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் என்று
வளரும் தலைமுறையும்,
வளர்ந்த தலைமுறையும்
சமூக ஸ்தாபனங்களுடன்
கைகோர்த்து இணைந்து நின்று மக்களுக்கு நிவாரணம் வழங்கி,
களப் பணி ஆற்றியது
அளப்பரிய பணியாகும்...
மறுபுறம், மாதக்கணக்கில்
வகைவகையான
உணவுகளை சமைத்து
"பகல் நேரத்தில்' மட்டும் அல்ல,
"இரவிலும்" அன்னதானம் வழங்கும் பணி இன்றும் சில பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
தமிழ்நாட்டில்
தன்னெழுச்சியாக நடைபெற்ற
"ஜல்லிக்கட்டு'
போராட்டம் போல,
அனைத்து ஊர் சபைகளும்,
சமூக ஸ்தாபனங்களும்,
சமூகப் பிரமுகர்களும்,
"கோரானோ கோபித்துக்
கொண்டாலும் பரவாயில்லை"
என்று தன்னெழுச்சியாக தங்கள் உயிருக்குக் கூட கவலைப்படாமல்,
தன் சக மனிதனின் வயிற்றுக்கு
சோறிட வீதியில் இறங்கி,
சேவை செய்த இவர்கள் தான்
நம் சமூகத்தின் இன்றைய
காவலர்கள். நம் சமுகம் என்றும் நன்றியுடன் அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும்...!
அன்பும், கருணையும்
என்கின்ற ஈரப்பசை
அவர்கள் நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகின்றது...!
இதுதான் நம் சமூகம்...!
இது தான் நமக்கு
சொந்தமான கலாச்சாரம்...!
சௌராஷ்ட்ரா சமூகக் கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு வழக்கம் உண்டு.
புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும்
பெருமாளை வணங்கி, நாலு வீட்டில்
"பிட்ஷை" வாங்கி, தங்கள் வீட்டில் சமைத்து, அடியவர்களை அழைத்து,
இறைவன் பெயரில் அன்னதானம் நடத்துவார்கள்.
அதேபோல் இன்று, இந்த பேரிடர் காலத்தில், தங்கள் தொழில், வியாபாரம், வருமானம் பாதித்த வேளையிலும்,
நாலு பேருக்கு உதவ, தங்கள் கைப்பொருளை தானமாக வழங்கி,
அந்த உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்கிய பண்பாட்டைக் கண்டு
இன்று உலகம் வியக்கிறது...!
கோரானோ வைரஸுக்கு
"ஜீன் மாறிக்கொண்டே இருக்கிறது"
என்று மருத்துவ உலகம்
சொல்லிக்கொண்டு இருக்கிறது.
அதேநேரத்தில்
சௌராஷ்ட்ரா சமூகமே இன்று திரண்டு நின்று, தன் சக மனிதனின் பசியை போக்க, தன்னலமற்ற சேவையின் மூலம் பல வகைகளில் உதவிகள் பல புரிந்து, தங்களுடைய இயல்பில், தங்கள்
சமூகக் கலாச்சார பாரம்பரியம் ,
பண்பாடு என்பது தங்கள் உதிரத்தில்
கலந்த ஒன்று, தங்கள்
"ஜீன் மாறாமல் அப்படியே இருக்கிறது"
என்பதை இந்த மானிட உலகம் சொல்லும் வகையில் சௌராஷ்ட்ரா சமூகம் பெயர் வாங்கி விட்டது....!
இப்பேரிடர் காலத்தில், தங்களையும்
இந்த சமுதாயம் கவனிக்காத என்று தவித்த "திருநங்கையர்களையும்" தங்கள் சக மனிதர்களாக கருதி, அவர்களுக்கும் நம் சமூகத்தாரல் அத்தியாவசிய பொருட்கள்
பரிவோடு வழக்கப்பட்டது.
ஓர் இளைஞர் குழுவால், திருப்பரங்குன்றத்தில்
பறவையினங்களுக்கும்,
விலங்குகளுக்கும் அவர்களுக்கான
உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த சேவைகள் எல்லாம்
இறைவனுக்கு செய்யும்
சேவையாகக் கருதி செய்தனர்...
இப்படி, இது பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. எழுதுகிறேன்...
உயிருக்கு துணிந்து நடைபெற்ற
இச்சங்கமங்களின் செயல்பாடுகள், சம்பவங்கள் இதம்...இதம்...!
"ஜல்லிக்கட்டு" தமிழர்களின்
உணர்வுகளை எழுப்பி,
எழுச்சி ஊட்டியது உண்மை என்றால்
"கோரானோ' சௌராஷ்ட்ரா மக்களின்
இயல்பான உணர்வுகளை தட்டி எழுப்பி,
தன் சக மனிதனின் துயர் துடைக்கும்
பண்பையும், துடிப்பான இளைஞர்களையும் சமூகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளது உண்மையே..!
"ஜல்லிக்கட்டு' உலகமக்களின்
நெஞ்சில் நீங்க இடம்
பெற்று விட்டது போல,
கோரானோவின் போது
ஒருவருக்கொருவர்
சளைத்தவர்கள் இல்லை
என்னும் வகையில்
தன்னெழுச்சியாக
பொதுநலப்பணி செய்து வரும்
சமூக ஊர் சபைகளும்,
சமூக பொது ஸ்தாபனங்களும்,
சமூக கல்வி ஸ்தாபனங்களும்,
சமூகப் பிரமுகர்களும்,
களப்பணி இளைஞர்களும்,
முன் பணியாற்றுவோர்க்கு
பின்புலமாக இருந்து
சேவை செய்பவர்களும்,
நன்கொடையாளர்களும்,
உழைப்பாளர்களும்,
சமூக மக்களின் நெஞ்சில்
நீங்கா இடம் பெற்று விட்டனர்...
காலம் அவர்களை நிச்சயம்
அடையாளம் காணும்,
அடையாளப்படுத்தும்...!
நம் குலம் மேம்பட,
நலம் நாளும் வசப்பட
நம் சமூக ஒற்றுமையே
தாரக மந்திரமாகட்டும்.
தரணி எங்கும் நம் இனம் அறப் பணிகளால் உயர்ந்து நிற்கட்டும்...
தனி மனித மாற்றமே
நம் சமுதாயத்தின் மாற்றம்...!
வாழிய கொடையுள்ளங்கள்...
இன்பமே எந்நாளும் துன்பமில்லை...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
~எஸ்.ஜெ. ராஜன், மதுரை.
நன்றி: மனிதத்தேனீ

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.
"பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் புகழ் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்".
உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.
தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை.அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினாலோ,அல்லது இஸ்லாமிய மன்னன் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை!
இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை".கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்களாவது உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதியை தரிசித்துவாருங்கள், அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள்.
குறிப்பு;கீழே முதல் கமெண்டில் இதன் வீடியோ 'லிங்' பதிவு செய்துள்ளேன்.நன்றி.
(மீள் பதிவு.)
நன்றி ராஜப்பா தஞ்சை

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

''மன உறுதி இருந்தால்தான்..'
வெற்றியும் எளிதாகும்...
மன உறுதி என்பது உறுதியான முடிவான, வலுவான மன விருப்பம் என்கிற பண்பு நலனாகும்.
ஓர் அற்புதமான கருவில் இருந்துதான் ஒரு சிறந்த புத்தகம் உருவாகிறது.
அதேபோல் மனிதனுக்கு மன உறுதி இருந்தால்தான் அவனுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்’ -என்று அமெரிக்க எழுத்தாளர் லூயி லேமுர் (Louis L'Amour) உதிர்த்த பொன்மொழி..
திடமான மன உறுதியினால் நெருக்கடியையும், பெருங்கேட்டையும், துன்பத்தையும் கண்டு பின் வாங்காமல் துணிச்சலுடனும், உறுதியுடனும், மனவலிமை உடனும் சமாளிக்க முடியும்.
நடைபெறுகிற நிகழ்ச்சிகளிலோ, சூழ்நிலைகளிலோ முடங்கிப் போய் விடாமலும், அழிந்து போய் விடாமலும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.
ஒருவர் தமது குறிக்கோளை வெற்றிகரமாக அடைவற்கு உதவுவது மனஉறுதி.
எதிர்பாராத பாதிப்புகள் தாக்குகிறபோது பொறுமை உடனும், மனவலிமை உடனும் அதனை எதிர் கொள்வதற்கு மனஉறுதி ஒருவரை பண் படுத்துகிறது.
மனசக்தியை வழங்குவது மனஉறுதிதான். எல்லா விதமான விளைவுகளையும் எப்படிப்பட்ட நெருக்கடி களையும் சந்திக்கின்ற உறுதியை உருவாக்குகிறது.
நெருக்கடிகள் ஏற்படும்போது மனம் சோர்ந்து விடாமல் சமமாக எடை போட்டு அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
துன்பம் ஏற்படுகிறபோது அதைப் பார்த்துப் புன்னகையை வீசுகிற கொடையையும், தனி நபருக்கு எதையும் தாங்கும் சக்தியையும் வழங்குவது மனஉறுதிதான்.
மனஉறுதி ஒருவர் உள்ளத்தைத் தன்னம்பிக்கையால் நிரப்புகிறது. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கிற துணிச்சலைக் கொடுக்கிறது.
தன்னம்பிக்கையினையும், மன முதிர்ச்சியையும், மனநிறைவையும் வளர்ப்பது மனஉறுதிப் பண்பு தான். இதனால் ஒருவர் துணிச்சல் மிக்கவராகி அமைதி பெறுகிறார்.
மனோதிடம் இருக்கும் மனிதனால் என்ன செய்ய முடியும்?
எதையும் செய்ய முடியும்! ஒருவரின் லட்சியத்தை, கனவை நனவாக்க முதல் தேவை மனஉறுதி. இது இல்லை என்றால் எந்தச் சாதனையும் சாத்தியம் இல்லை.
மன உறுதியோடு, முயற்சி, அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பு, ஒழுங்கு எல்லாம் சேர்ந்துகொள்ளும்போது கனவு நனவாகிறது;
ஒருவர்தான் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து விடுகிறார். ஆக, எதுவும் சாத்தியம், சாத்தியமில்லை என்பது மனிதனின் மன உறுதியில்தான் அடங்கி இருக்கிறது.
ஆம்.,நண்பர்களே..,
ஒரு செயலுக்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம்.
மனஉறுதி இருந்தால்தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம்.
ஒவ்வொரு நாள் காலையிலும் மனஉறுதியுடன் தன்னம்பிக்கையுடன் எழுந்திருங்கள்.
உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.

மனிதத்தேனீயின் தேன்துளி