Monday 20 September 2021

நான் எனும் ஆணவத்தை அழித்தல்.

 நான் எனும் ஆணவத்தை அழித்தல்.

எல்லோரும் உண்மையை விரும்புகிறார்கள். (ஆமாம் அடுத்தவர்கள் விஷயத்தில் மட்டும்.) முதலாளி, தொழிலாளி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தொழிலாளியும் முதலாளி தனக்கு உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமென்று விரும்புகிறார். கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவர்கள். எல்லோருமே பிறரிடம் உண்மையை எதிர்பார்க்கிறார்கள். அதையே விரும்பவும் செய்கிறார்கள்.
அப்படியானால், உண்மையை ஏன் தன்னிடமிருந்து தொடங்கக் கூடாது?
உண்மையாக இருப்பவர்களைத்தான் உலகம் விரும்புகிறது.
மனித வாழ்வின் ரகசியம் ஒன்றை உங்களோடு பகிரப் போகிறோம் . அது மனித மனத்தின் தேடல் மட்டுமன்று. உயிரியல்பு என்பதே ஆனந்தம்தான். துக்கம் என்பது மேகத்தைப் போல வந்து போவது. ஆனந்தமே வானத்தைப் போன்றது.
எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா
என்று பாடியது எல்லாம் ஆனந்தத்தின் வெளிப்பாடுகள்தான்.
தன் இயல்பைத் தொடர்ந்து உள்நோக்கிய கவனித்தல் மூலம் உணர்தல்.
உலக இயல்பை உணர்தல். எல்லா கேள்விகளுக்கும் பதில் உடனடியாகக் கிடைத்து விடுவதில்லை. அதற்கான நேரம் வரும்வரை பொறுமையோடு காத்திருத்தல்.
மனதை பக்குவப்படுத்தவே கிரியாக்கள் உள்ளன. *பக்தி யோகம், இராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம்* போன்றவைகள் மனதைப் பக்குவப்படுத்துவதற்கானவை.
இதன் மூலம் மனித மனம் பக்குவம் அடைந்து தனக்குள் இருக்கும் ஆனந்தத்தை அடையாளம் காணவும் அதில் லயித்திருக்கும் செய்யும்.
ஆன்மீக முன்னேற்றத்தின் முக்கியப்படி…
அன்பு செலுத்துதல்.
பிறரது குறைகளைப் பெரிதுபடுத்தாத தன்மை, தனது குறைகளை நீக்க முயற்சித்தல்.
எளிமையை விரும்புதல்
ஆணவத்தை அழித்தல்.
இயற்கையோடு இயைந்து வாழ்தல்.
அர்த்தமற்ற பரபரப்பை குறைத்தல்.
நேரத்தை நல்லவைகளுக்காக மட்டும் செலவிடுதல்.
இப்படி வாழப் பழகினால் வாழ்க்கை சுவைக்கும். ஆனந்தமான வாழ்க்கை அமையும். ஆனந்தம் எனும் விருட்சம் நேசித்தல் எனும் விதைக்குள் காத்திருக்கிறது ரகசியமாய்.

No comments:

Post a Comment