Saturday 18 September 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
18:09.2021 சனிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
📎இன்று 1924ல் மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
📎இன்று ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்.
📎இன்று உலக மூங்கில் தினம்
📎இன்று உலக அறிவாளர்கள் தினம்.
📎1949ல் இன்று தி.மு.க துவக்கம்.
📎இன்று சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்.
இத் தினத்தின் நோக்கமானது, உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திடவும். தண்ணீரை கண்காணிக்க வேண்டும்.
நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ இயலாது.
நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம்.
நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக அமைகின்றது.
〰️〰️〰️🏊🏻‍♀️💦🌧️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶 தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன் தனக்கென்று கேட்டால் தருவேனோ?
தலைவிதி என்றால் விடுவேனோ? மலரும் முன்னே பறிப்பதற்கு அவன் தான் உன்னிடம் வருவானோ?
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
அழகிய முகத்தில் இருளென்ன? அசையும் உடலில் அமைதியெஎன்ன..
இழையும் புன்னகை ஓய்ந்ததென்ன? இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன?.
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
இறைவா உனக்கொரு கோயில் உண்டு..
இரவும் பகலும் தீபம் உண்டு..
எனக்கென இருப்பது ஒரு விளக்கு. இதனுடன் தானா உன் வழக்கு? இதனுடன் தானா உன் வழக்கு?
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன் தனக்கென்று கேட்டால் தருவேனோ தலைவிதி என்றால் விடுவேனோ
மலரும் முன்னே பறிப்பதற்கு அவன் தான் உன்னிடம் வருவானோ?
*பாடல் இடம் பெற்ற திரைப் படத்தின் விவரங்கள்:*
படம்: தங்கை
இயக்கம்: ஏ. சி. திருலோகச்சந்தர்
பாடலின் குரல்: டி.எம்.சௌந்தர்ராஜன்
தயாரிப்பு: பாலாஜி
சுஜாதா
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு: சிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடு: 19.05.1967
ஓட்டம்.நீளம்:4632 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment