Monday 20 September 2021

நமசிவாய

 நமசிவாய

🌹
👉உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்...?*
*ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று சொல்லும் பொழுதெல்லாம் நம் உயிரை ஈசனாக மதித்து நம் உடலுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் “உயிரே குருவாக இருக்கின்றது...” என்பதை நினைவு கொள்ள வேண்டும்.*
*நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ... எந்தக் குணத்தை நுகர்கின்றோமோ... அந்தக் குணமே உயிரிலே பட்டு நம்மை ஆட்சி புரிகின்றது.*
*உதாரணமாக ஒரு கோபமான குணத்தை நுகர்கிறோம் என்றால் உயிரிலே அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மைக் கோபக்காரனாக ஆக்கி அது தான் நம்மை ஆட்சி புரியும் (நாம் இயக்குவது அல்ல அந்த உணர்வே இயக்குகிறது).*
*அதே போல் ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த உணர்வை நுகர்ந்தால் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த வேதனையான உணர்ச்சிகள் தான் நம்மை ஆட்சி புரியும்.*
*அதே சமயத்தில் சாந்தமும் ஞானமும் கொண்டு நாம் பேசினால் அதன் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு நம் வாழ்க்கையில் ஞானத்தின் உணர்வாக அது தான் நம்மை ஆட்சி புரிகின்றது.*
*ஆகவே நமது வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அவை அனைத்தும் உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்கின்றது. அதன் வழி தான் நம் சொல் செயல் எல்லாமே அமைக்கின்றது.*
*1.இதற்கு உயிர் பொறுப்பல்ல...*
*2.உடல் பொறுப்பல்ல...*
*3.நாம் நுகர்ந்த (அந்தந்த) உணர்வு தான் பொறுப்பு...!*
*அதை உனர்த்துவதற்குத்தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் தான் விஷ்ணு. நாம் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது. உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று சொல்லாகவும் செயலாகவும் இயக்குகிறது.*
*உதாரணமாக...*
*1.ஒரு காரமான உணர்வை நுகர்ந்தால் ஆ... என்று அலறுகின்றோம்.*
*2.ஒரு கசப்பான உணர்வை நுகர்ந்தால் ஓய்... என்கிறோம்.*
*3.அரிப்பின் தன்மை கொண்ட விஷத்தின் தன்மையை நுகர நேர்ந்தால் உச்... உச்... என்று சொல்கின்றோம்.*
*இவ்வாறு நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (மணங்கள்) உயிரிலே பட்டு அந்தந்த உணர்ச்சிகள் நம்மைச் செயல்படுத்துவதும் அந்த உணர்வின் வழிப்படியே நமக்குள் எண்ணங்கள் வருவதும் நம்மை இயக்குவதும் போன்ற நிலைகள் நடக்கின்றது.*
*இப்படி நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் பலவாறு இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையை (உதாரணமாகக் கோபம் என்றால்) மீண்டும் மீண்டும் எண்ணிப் பல முறை எடுத்தால் இந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து கோபத்தை உண்டாக்கும் கருத்தன்மை அடைகின்றது.*
*அதனால்தான் நம் இரத்த நாளங்கள் இருக்குமிடத்த்தை இந்திரலோகம் என்று சொல்வது. அதாவது இந்திரீகம்... என்று சொல்வதை இந்திரலோகம் என்று காரணப் பெயராக வைக்கின்றார்கள்.*
*நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது சங்கு... நாதங்களாக எழும்பி அந்த உணர்ச்சிகள் தான் நமக்குள் இயக்குகின்றது.*
*இருந்தாலும் இதை இயக்குவது யார்...? நம் உயிரான ஈசன் தான், உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஞானிகள் வைக்கின்றார்கள்.*
*ஈசன் என்றால்...*
*1.உருவாக்குபவன்...*
*2.உணர்த்துபவன்...*
*3.இயக்குபவன்...! என்று பொருள்.*
*ஆனால் நாம் நுகர்ந்தது எந்த உணர்வாக இருந்தாலும் அதைப் பல முறை எண்ணி எடுத்துக் கொண்டால் நம் உடலுக்குள் சென்று இரத்தத்திலே கருவுற்று அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.*
*ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் “எதை நுகர வேண்டும்...?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.*
திருச்சிற்றம்பலம்
🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி

No comments:

Post a Comment