Monday 20 September 2021

உண்மையான நம்பிக்கை.

 உண்மையான நம்பிக்கை.

நமது வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடிய தன்னம்பிக்கை நம்மிடம்தான் இருக்கிறது தெரியுமா?
இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் தான் வாழ முடியும். யாராவது நம் வாழ்வை வாழமுடியுமா இல்லை நாம்தான் பிறருடைய வாழ்வை வாழ முடியுமா?
நிச்சயமாக யாரும் யார் வாழ்க்கையையும் வாழமுடியாது.
நமது வாழ்க்கையை அழகானதாக மாற்ற வேண்டுமெனில் முதலில் நாம் நம் எண்ணங்களை மாற்ற வேண்டும். நமது லட்சியங்களையும் கனவுகளையும் சிறப்பானதாக மாற்ற வேண்டும்.
நமது சூழ்நிலைகளைச் சுற்றி உள்ள காரணிகளை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கை நம்மை நாம்முழுமையாக உணர்ந்து நம்பிக்கையோடு நம்மை நாம் நேசிக்க வேண்டும்.
நம் மீது நாம் முதலில் அன்பு செலுத்த வேண்டும்.
நாம் பிறரை எப்படி நினைக்கின்றோமோ எப்படி நடத்துகின்றோமோ அப்படித்தான் மற்றவர்களும் நம்மை நடத்துவார்கள். நீங்கள் பிறர் மீது உண்மையான அன்பும் நம்பிக்கையும் கொண்டால் உங்கள் மீதும் மற்றவர்கள் அதே அன்பை விதைப்பார்கள்.
இதில் எந்த மாற்றமும் இல்லை. நிச்சயமாக நல்ல சிந்தனைகள் நல்ல செயல்களுக்குப் படிக்கட்டுகள் என்பதனை மறக்க வேண்டாம்.
நம்முடைய அகமென்னும் மனதின் மூலமாக நமது வாழ்க்கையை அழகானதாகவும் நேர்மறை சக்திகள் கொண்டதாகவும் மாற்றி அமைத்தால் மிகப்பெரிய அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் நம் வாழ்க்கை மாற்றம் பெற்று நாம் உறுதியாக வெற்றி பெறுவோம்.
வாழ்க வளமுடன்..
*வெற்றிகரமான வாழ்க்கை வாழ தன்னம்பிக்கை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

No comments:

Post a Comment