Monday 20 September 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
19:09.2021 ஞாயிற்றுக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
📎1893ல் இன்று சுவாமி விவேகானந்தர்சிக்காகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
📎1991ஆம் ஆண்டில் பனிமனிதன்
இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
📎 தமிழிசை, நாடக& திரைப்பட கலைஞர்
கே. பி. சுந்தராம்பாள் மறைந்த தினம்-1980.
கே.பி. சுந்தராம்பாள்
தமிழிசை,
நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம்
எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர்.
இவர்
பக்த நந்தனார் படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள்.
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து
ஔவையார்
என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார்.
〰️〰️〰️🎙️🎼👌〰️〰️〰️
*கவியரசர் எழுதி, கே.பி்.சுந்தராம்பாள் பாடிய பாடல் ஒன்று*
🎶 பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
*பாடல் இடம் பெற்ற திரைப் படத்தின் விவரங்கள்:*
படம்: காரைக்கால் அம்மையார்
இயக்கம்& கதை: ஏ.பி. நாகராஜன்.
தயாரிப்பு: இந்திரா ராஜன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்பு: லட்சுமி
கே. பி. சுந்தராம்பாள் முத்துராமன்
சிவகுமார்
ஸ்ரீவித்யா
மனோரமா
வி. எஸ். ராகவன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
சுருளிராஜன்
ஒளிப்பதிவு: ஆர். சுப்பா ராவ்
படத்தொகுப்பு: டி.விஜயரங்கம்
கலையகம்: ஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்
விநியோகம்: ஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்
வெளியீடு:
25.10.1973
ஓட்டம்:
150நிமிடங்கள்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment