Friday 24 September 2021

திருச்சிற்றம்பலம்

 திருச்சிற்றம்பலம்

இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள்.
எது சரியானது?
இரண்டுமே சரியானது தான். ஒரு விரலால் கன்னத்தில் தட்டிக் கொண்டும், ஆள்காட்டி விரலை மடக்கி வாயில் வைத்து "ச்' கொட்டியும் வணங்கும் இன்றைய நாகரிகத்தில், கைகளைக் கூப்பி வணங்குபவர்களை முதலில் நாம் வணங்கலாம்.
கரம் குவித்தல், சிரம் குவித்தல் என இரண்டையுமே மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார்.
தாங்கள் முதலாவதாகக் கூறியது சிரம் குவித்தலையும், இரண்டாவதாகக் கூறியது கரம்குவித்தலையும் சாரும்.
கரம் குவித்து வணங்கினால் சுவாமி சந்தோஷப்பட்டு கேட்டதைத் தருகிறார்.
சிரம் குவித்து வழிபட்டால் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி விடுவார்.
சிவபுராணத்தில்,
"கரங்குவிப்பார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க; சிரங்குவிப்பார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க'' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
சிவ சிவ
விஜியலஷ்மி


No comments:

Post a Comment