Friday 24 September 2021

நிம்மதி நிலைத்திட.

 நிம்மதி நிலைத்திட.

தன்னிறைவு என்ற வார்த்தையில் உள்ள அர்த்தத்தை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும், பட்டுக்கோட்டையில் ஒரு நிலமும்,சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் ஒரு பலமாடி கட்டிடமும் இருந்தால்தான் தன்னிறைவு என்று எண்ணக் கூடாது,ஒருவர் உயிர்வாழ என்ன அடிப்படைத் தேவைகள் அது எந்த சிரமும் இல்லாமல் பூர்த்தி ஆகுதோ அதனைதான் தன்னிறைவு என்று கொள்ளவேண்டும்.
அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது.
ஒரு ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு சிறிய வீட்டைக்கட்டி அமைதியாக வாழ்ந்துவந்தார், நிம்மதியான தூக்கமும் இருந்தது, திடீரென அவருக்கு ஒரு பணக்காரர் வந்து , இறைவன் என் கனவில் வந்து இந்த வைரக்கல்லை உங்களிடம் கொடுக்கச் சொன்னார், அதை ஒப்படைப்பது என் கடமை எனவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள், மனிதனுக்குத் தலை,கால் புரியவில்லை சந்தோசமாக பெற்றுக்கொண்டார் ஆனால் அதனை பெற்றுக்கொண்ட நாள் முதல் அதனை எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலயே அவர் தூக்கம் மறந்து நிம்மதி இழந்து பேயாக மாறிப்போனார்..
இவ்வாறுதான் நாம் வாழ்க்கையும் கொடுத்ததை கொண்டு நிறைவடையாமல், மேலும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது, நிம்மதியை அணைக்கின்றது,ஆகையால்
தன்னிறைவு தன்னம்பிக்கை தரும், வாழ்க்கையைச் செழிப்பாக்கும்.

No comments:

Post a Comment