Monday 16 August 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
16:08.2021 திங்கட்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று*
♨️1930ல் இன்று உலகின் முதலாவது வண்ணக் கேலித் சித்திரத்
திரைப்படம் வெளியிடப்
பட்டது.
♨️இன்று இந்திய ஞானி இராமகிருஷ்ணர் மறைந்த தினம்-1886.
♨️இன்று கொக்கக் கோலாவைக்
கண்டு பிடித்த அமெரிக்க மருந்தியலாளர்
ஜான் ஸ்டைத் பெம்பர்டென் நினைவு தினம்-1888.
♨️இன்று 10வது இந்தியப் பிரதமர்
அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்த தினம்-2018.
♨️இன்று தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி மறைந்த தினம்-2004.
ஜிக்கி என்று பரவலாக அறியப்பட்ட கிருஷ்ண வேணி புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை.
தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப் படங்களிலும் பாடியுள்ளார்.
1943இல் பின்னணிப் பாடகியாக கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார்.
〰️〰️〰️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎼ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
உள்ளமெங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
கைகொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு
எங்கே நின்றதோ
இன்று கண்கலங்க
நின்றிருந்தேன் சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில்
விடிவெள்ளி முளைத்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
காண வந்த மாளிகையின்
கதவு திறந்தது
பெரும் கருணையோடு
அருள் விளங்கும் கண் திறந்தது
ஆற்று வெள்ளம் போல
நெஞ்சின் மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல
வாழ்வில் ஒளி பிறந்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே
வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
இல்லை மறைக என்று வரம்
கொடுத்தால் மறைய சம்மதம்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
*படம்: தேன் நிலவு*
பின்னனி: ஜிக்கி
கதை, தயாரிப்பு, இயக்கம்: ஸ்ரீதர்
இசை: ஏ. எம். ராஜா
நடிப்பு: ஜெமினி கணேசன்,
வைஜெயந்திமாலா
வெளியீடு: 30.09.1961
படச்சுருள் நீளம்:
15125 அடி
〰️〰️〰️〰️〰️〰️〰️〰
😷 *கரொனா...*
வாழ்வில் வளம் சேர்த்திடு!
வரும் முன்னர் காத்திடு..
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment