Saturday 21 August 2021

விடா முயற்சி

 விடா முயற்சி.

டார்பின் மாமா
ஊருக்குவந்து ஒரு பழைய ரைஸ் மில் வாங்கி ஓட்டினார் . ஒரு நாள் அந்த மாவு மில்லிற்கு ஒரு சிறிய பெண் வந்தாள்.
டார்பியும் அப்பொழுது அங்கு தான் இருந்தார் .மாமாவிற்கு
ஒத்தாசையாக .
அந்தச் சிறுமி அவர் வயலில் வேலை செய்யும் விவசாயின்
மகள் .அந்தச் சிறுமியைப் பார்த்து டார்பின் மாமா
" என்ன வேண்டும்" என்று கத்தினார் .
(கேட்கவில்லை ,கத்தினார் )
எங்க அம்மா உங்ககிட்ட ஐம்பது ரூபாய் பணம் வாங்கி
வரச் சொல்லி என்னை அனுப்பினார்கள் .அமைதியாக அந்தச்
சிறுமி அவரைப் பார்த்து சொன்னாள்.
அதெல்லாம் கிடையாது வீட்டுக்கு போ என்று சொன்னதும்
அந்த சிறுமி “ சரிங்க சார் “என்று சொல்லிவிட்டு அந்த
இடத்தை விட்டுநகராமல் அங்கேயே நின்றாள்.
டார்பி மாமா அந்தச் சிறுமியை போகச்சொல்லி விட்டு
வேலையில் மூழ்கினார் .
சிறிது நேரம் கழித்து அந்தச் சிறுமி அதே இடத்தில்
நிற்பதைப் பார்த்து
“உன்னைய வீட்டுக்கு போகச்சொன்னேன்ல “என்று
மீண்டும் கத்தினார்
அதற்கு அந்த பெண் " சரிங்.. சார் "என்றாள் அதே இடத்தில்
நின்று கொண்டு .
மூட்டையை எடுத்து அரவை இயந்திரத்தில் கொட்ட போன
அவர் அந்தச்சிறுமி அதே இடத்தில் நிற்பதைப் பார்த்து கோபம்
கொண்டு ஒரு பெரிய தடியை எடுத்துகொண்டு அந்த
சிறுமியை நெருங்கினார் .
டார்பின் .தன் கண் முன்னே அந்தச் சிறுமி அடிவாங்கப்
போவதை எண்ணி பயந்து போய் பார்த்தார்.
டார்பின் மாமா அந்தச் சிறுமியை நெருங்கியதும் ......
டார்பின் மாமா அந்தச் சிறுமியை நெருங்கிய உடன் அந்த
சிறுமி சிறிதும் பயப்படாமல் ஒரு அடி முன்னே எடுத்து
வைத்து அவரின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு
அவரை விட அதிக சத்தமாக
"நீங்கள் காசு குடுத்தாதான் இங்கிருந்து போவேன் "
என்று சொல்ல அவருக்கு சிறிது
நேரம் ஒன்றுமே புரிய வில்லை .தடுமாறிப் போனார்.
அவர் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் குடுத்தார் .
பணம் வாங்கியதும் அந்தச் சிறுமி அவரது கண்களின்
பார்வையிலிருந்து தன் பார்வையை மாற்றாமல்
அப்பிடியே பின்னாடியே நடந்து வாசல் கதவை
தாண்டிச் சென்றாள்’.
அந்தச் சிறுமி போனவுடன் அந்த இடத்திலேயே சிறிது
நேரம் உட்கார்ந்து விட்டார் .
டார்பினுக்கு ஆச்சிரியம் அந்த பெண் அடிவாங்கி கொண்டு
அழுது கொண்டே ஓடிப்போகும் என்று எதிர் பார்த்ததற்கு
நேர்மாறாக நடந்த நிகழ்வைப் பார்த்துஆச்சிரியப் பட்டார் .
எது அந்த பெண்ணிற்குத் தைரியம் கொடுத்தது .எதனைக்
கண்டு இவர் தடுமாறிப் போனார் .
"மைன்ட் பவர்" .மனதை ஒருமுகப் படுத்தி உறுதியாக
தன்னால் முடியும் என்ற எண்ணத்தோடு செய்கின்ற
காரியம் நூறு சதவீதம் வெற்றி பெறும் .
சிலருக்கு இயற்கையிலேயே இந்தப் பவர் இருக்கும்,
அது அந்தச் சிறுமிக்கு இருந்து இருக்கிறது .
தன்னால் அவரிடமிருந்து பணம் வாங்க முடியும்
என்றுஅந்த சிறுமிக்குத் தோன்றி இருக்கு .
அவருக்கு தடுமாற்றம் உள்ள (பதட்டம் நிறைந்த)
மனது . உறுதியான மனமும் ,விடா முயற்சியும் கொண்ட
அப்பெண் அதற்கான சமயம் (தருணம் )எதிர் பார்த்தாள்.
அந்தச் சிறுமி .அவர் தள்ளியிருக்கும் பொழுது அந்தச் சிறுமி
அந்த வார்த்தையைக் கேட்க வில்லை
ஏனென்றால் அந்த வார்த்தை சிதறிப் போய் இருக்கும்
அவர் அருகில் வந்ததும் ஒரு அடி முன்னே எடுத்து
வைத்து அவரின் முகம் நோக்கி அழுத்தம் திருத்தமாக
சொன்னதால் அவளுக்கு வெற்றி .
இதை *ஆல்ஃபா மைன்ட் பவர்* *Alpha Mind Power* என்று சொல்வார்கள். இங்கே
அந்தப் பெண்ணின் விடா முயற்சி தான் நமக்கு முக்கியம் .
நாமும் இதைக் கடைப் பிடித்தால் வெற்றி பெறலாம்

No comments:

Post a Comment