Tuesday 10 August 2021

இலக்கை அடைய பொறுமை.

 இலக்கை அடைய பொறுமை.

மனிதன் ஒவ்வொரு விநாடிகளும் நிதானம் தவறாமல், பதறாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். வேகத்தினாலும், பதற்றத்தினாலும் எதையும் முறையாகக் கற்றுக் கொள்ள இயலாது.எதையும் ஆர்வத்துடன் நிதானமாக, பொறுமையாக நோக்கினால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும். இது அனைத்திற்கும் பொருந்தும். அதனால் தான் பதறிய செயல் சிதறும் என்று சொல்வார்கள்...
தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவர் தற்காப்புக் கலையின் ஆசிரியரை அணுகி “இக்கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை...?” எனக் கேட்டார்...
அதற்கு ஆசிரியர் “பத்து ஆண்டுகள்” என பதிலளித்தார்.
ஆசிரியரின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து மனநிறைவு அற்றவனானான்...
மீண்டும் அவரிடம் “பத்து ஆண்டுகளை விட விரைவாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். தேவைப்பட்டால், பயிற்சிகளை பத்து மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக நேரம் அதற்காக எடுத்துக் கொள்வேன். ஆகவே!, இதன்படி கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை...?” என்றார்...
ஆசிரியர் பதிலாக., “இருபது ஆண்டுகள்” என்றார்...
ஆம் நண்பர்களே
பொதுவாக நமக்கு சிக்கல்கள் அதிகரிக்கும் போது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு நிதானம் தான். எதையும் வேகத்தினால் கற்றுக் கொள்ள முடியாது.
இலக்கு மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி என்பவற்றுடன் சேர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு விநாடிகளும் இந்த உலகத்தை நம்மால் வெல்ல முடியும். முதல் விநாடி மட்டும் நிதானமாக ஆலோசித்தால் உறுதியாக அதற்குரிய பலனும் கிட்டும்.
ஆம்!, எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதம்.

No comments:

Post a Comment