Monday 23 August 2021

குற்றப்படுத்துகிற உணர்வு.

 குற்றப்படுத்துகிற உணர்வு.

அது சரியில்லன்னு என் மனசுக்குத் தெரியும், அல்லது “நீங்க சொல்றதை என்னால் செய்ய முடியாது.
அத தப்புன்னு ஏதோவொன்னு எனக்குள் சொல்லிக்கிட்டே இருக்குது” என்று நீங்கள் எப்போதாவது கூறியிருக்கிறீர்களா?
அதுதான் உங்கள் மனசாட்சியின் “குரல்;” இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கிற அல்லது உங்களை குற்றப்படுத்துகிற ஓர் உணர்வு.
ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது.
கடவுளிடமிருந்து விலகிவிட்ட நிலையிலும்கூட, எது சரி எது தவறு என்பதைப் பகுத்துணரும் பொதுவான திறமை இன்னும் மனிதனுக்கு இருக்கிறது.
ஏனென்றால் மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான், அதனால் ஞானம், நீதி போன்ற தெய்வீக பண்புகளை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறான்.
மனசாட்சி என்பது நடுநிலை வடிக்குமா??
நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம்
இதற்கு நமது ராமாயணம் மகா பாரதம் போன்ற இதிகாசங்களில் நிறைய சான்றுகள் உள்ளன..
பாரதப்போரில் கண்ணன் நடுநிலை வகித்ததாக சிலர் நினைக்கின்றனர்..
உண்மையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தின் பக்கம் நின்றார்.. ஆனால் பிதாமகர் பீஷ்மர் ஆச்சார்யார் துரோணர் ஆகியோர் உண்மை உணர்ந்தும் நடுநிலை என்ற பெயரில் போரிட்டு தோற்று
இறந்தனர்..
இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன..
எனவேதான்...
“நல்ல மனசாட்சியோடு இருங்கள்”
திசைமானி ஏன் மிக அவசியம், மனசாட்சி எந்த விதத்தில் திசைமானியைப் போல் இருக்கிறது?
பொங்கியெழும் கடலில் கப்பலைச் செலுத்துகிறார் ஒரு மாலுமி.
ஆள் நடமாட்டமில்லாத பாலைவனத்தைக் கடந்து செல்கிறார் ஒரு பயணி.
மேகக்கூட்டங்களுக்கு மேலே விமானத்தை ஓட்டிச் செல்கிறார் ஒரு விமானி. இந்த மூன்று பேருக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது என்ன?
ஆம், இவர்களிடம் திசைமானி இருக்கிறது. திசைகாட்டும் வேறெந்த நவீனக் கருவிகளும் இல்லாத பட்சத்தில் திசைமானியாவது இருக்க வேண்டும், இல்லையென்றால் இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான்.
திசைமானி என்பது வட திசையையே காட்டும் காந்த முள்ளை உடைய ஒரு கருவி.
சரியாகத் திசைகாட்டும் திசைமானியை தெளிவான வரைபடத்துடன் பயன்படுத்தும்போது அது நம் உயிரையே காக்கும்.
நமக்குக் கொடுத்திருக்கிற அற்புதப் பரிசாகிய மனசாட்சியும் சில விதங்களில் திசைமானியைப் போல்தான் இருக்கிறது.
மனசாட்சி இல்லையென்றால், நாம் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருப்போம்.
நாம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால், வாழ்க்கையில் சரியான பாதையைக் கண்டுபிடித்து அதில் பயணம் செய்வோம்.

No comments:

Post a Comment