Monday 16 August 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
15:08.2021 ஞாயிற்றுக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று*
♨️இன்று இந்திய ஆன்மீக குரு அரவிந்தர் பிறந்த தினம்-1872
♨️இன்று தமிழக மரபுவழி வேதாந்த ஆசிரியர் சுவாமி தயானந்த சரசுவதி பிறந்த தினம்-1930.
♨️இன்று வங்காள தேசத்தின் அரசுத்தலைவர் சேக் முஜிபுர் ரகுமான்
நினைவு தினம்-1975.
♨️நமது இந்திய நாட்டின் விடுதலை நாள் இன்று.
1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை
குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறை நாளாகும். இந்த நாளில் நாடு முழுவதும்
தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும்
அங்கேயே சுதந்திர தின விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.
🎂 *அனைவர்க்கும் சுதந்திர நாள்
வாழ்த்துகள்
!*
〰️〰️〰️💪🏻✌️👍🏻〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎼அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
*படம்: ஆயிரத்தில் ஒருவன்*
குரல்: டி.எம்.எஸ் & குழுவினர்
இயக்கம்:
பி. ஆர். பந்துலு
கதை: ஆர். கே. சண்முகம்
திரைக்கதை:கே. ஜே. மகாதேவன்
இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி
நடிப்பு: எம். ஜி. இராமச்சந்திரன்
ஜெ. ஜெயலலிதா
எம். என். நம்பியார்
ஆர். எஸ். மனோகர்
ஒளிப்பதிவு: வி. ராமமூர்த்தி
படத்தொகுப்பு: ஆர். தேவராஜன்
கலையகம்: பத்மினி
பிக்சர்ஸ்: விநியோகம் பத்மினி பிக்சர்ஸ்:
வெளியீடு:
09.07. 1965
படத்தின் ஓட்டம்: 174 நிமிடங்கள்.
〰️〰️〰️〰️〰️〰️〰️〰
😷 *கரொனா...*
வணக்கம் சொல்ல கரம் கூப்பி தொழுதிடு!
கரொனாவை தடுக்க கரங்களை அடிக்கடி கழுவிடு!
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment