Monday 16 August 2021

குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்த *பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை*.( *கையில் வாளுடன் சொக்கநாதப்பெருமான்*)

 குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்த *பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை*.( *கையில் வாளுடன் சொக்கநாதப்பெருமான்*)

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணித்திருவிழா 2021 6ம் நாள் இன்று 16.08.21 காலை.
*திரு விளையாடல் புராணம்*
குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயதான வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணம் கொண்டவன். அவன் வாள்வித்தை பயிற்சி முடித்து விட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தான். அப்போது அவன் ஆசிரியரின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தான். இது குறித்து ஆசிரியரின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார்.
எனவே இறைவன் ஆசிரியர் வேடத்தில் சென்று, சித்தனை வாள் போருக்கு அழைத்தார். போரில் ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் என ஒவ்வொரு அங்கமாக வெட்டினார், சிவ பெருமான். இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார். இறைவனே ஆசிரியர் வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளை யாடலை அறிந்த குலோத்துங்க பாண்டியன், வயதான ஆசிரியர் பாணனுக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார் .
🌙சொக்கே நின் தாளே துணை

No comments:

Post a Comment