Monday 23 August 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள். 23:08.2021 திங்கட்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
23:08.2021 திங்கட்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று*
♨️இன்று தமிழ்த் திரைப்பட நடிகர் டி. எஸ். பாலையா பிறந்த தினம்-1914.
♨️1948ல் இன்று ஏ. கே. செட்டியார்
தயாரித்த
காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
♨️இன்று தென்னிந்தியத் திரைப்பட நடிகர் மோகன் பிறந்த தினம்-1956.
♨️இன்று தென்னிந்திய இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் பிறந்த தினம்-1964.
♨️இன்று பன்னாட்டு அடிமை வணிகம் ஒழிப்பு தினம்
♨️இன்று ஜப்பானியத் தமிழறிஞர்
சுசுமு ஓனோ பிறந்த தினம்-1919.
தமிழறிஞர் சுசுமு ஓனோ என்பவர்
டோக்கியோவில் பிறந்த
மொழியியல் ஆராய்ச்சி நிபுணர்.
இவர் கவனம்
திராவிட மொழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார். திராவிட மொழிகளின் தாக்கம் ஜப்பான் மொழியில் நிறைந்து கிடப்பதை அறிந்தார்.
குறிப்பாக கிமு 500 - கிபி 300 களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றினால் இப்படியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவரது வாதம்.
〰️〰️〰️📜📕✒️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎼 செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
செந்தமிழா எழுந்து வாராயோ
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
*படம்: மதுரை வீரன்*
இயக்கம்: யோகானந்த்
நடிப்பு:
எம். ஜி. இராமச்சந்திரன்,
பத்மினி
பானுமதி ராமகிருஷ்ணா,
என். எஸ். கிருஷ்ணன்,
டி. ஏ. மதுரம்.
வெளியீடு: 1956
படத்தின் ஓட்டம்:
199 நிமிடங்கள்.
〰️〰️〰️〰️〰️〰️〰️〰
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment