Friday 13 August 2021

கவியரசு புலனம்

 🌏‍✒️ *கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
12:08.2021 வியாழக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று*
♨️இன்று தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்
AVM ஸ்டுடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்பன் நினைவு தினம்-1979.
♨️கிமு 30ஆண்டில் இன்று எகிப்திய அரசி
ஏழாம் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்ட தினம்.
♨️இன்று உலக யானைகள் நாள்
♨️இன்று அனைத்துலக இளையோர் நாள்
இளையோருக்காகக் கொண்டாடப் படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண செய்வதாகும்.
〰️〰️〰️〰️〰️〰️
இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும்
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎼தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..
அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்..
அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..
யாரும் தீமை செய்தாலும்
நீங்கள் நன்மை செய்யுங்கள்..
யாரும் பொய்யைச் சொன்னாலும்
நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்..
நேர்மையாய் வாழ்வதில்
தோல்வியே இல்லையே
தங்கங்களே நாளை தலைவர்களே..
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையைத் தள்ளுங்கள்..
என்றும் ஒன்றே செய்யுங்கள்..
ஒன்றை நன்றே செய்யுங்கள்..
நன்றும் இன்றே செய்யுங்கள்..
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்..
வீரனின் வாழ்விலே
வெற்றி மேல் வெற்றியே..
தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்.
*படம் : என்னை போல் ஒருவன்*
வெளியீடு:18.03.1978
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு :
நடிகர் திலகம் உஷாநந்தினி
இயக்கம் :
பி.மாதவன், டி.ஆர்.ராமண்ணா
தயாரிப்பு : ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰
😷 *கரொனா...*
முக கவசம் நமக்கு உயிர்க் கவசம்.
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment