Tuesday 31 August 2021

பைத்தியக்காரர்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள்...

 பைத்தியக்காரர்கள் கையில் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள்...

ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் தாலிபன்களிடம் ஒவ்வொரு நகரமாக சரணடைந்த பிறகு, தாலிபன்கள் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்த கைப்பற்றலால், தாலிபன் குழு மட்டுமே உலகில் வான்படை கொண்ட ஒரே பயங்கரவாத குழுவாக இருக்கிறது.
தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன?
ஜூன் 2021 நிலவரப்படி ஆஃப்கன் விமானப் படையிடம் 167 விமானங்கள் இருந்தன. இதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் இருந்தன என்று அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
ஆனால் அதில் எத்தனை விமானங்களை தாலிபன்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த ஜூலை 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் 9 பிளாக் ஹாக், இரு எம்.ஐ- 17, நிரந்தரமாக இறக்கைகள் பொருத்தப்பட்ட ஐந்து விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களைப் பார்க்க முடிகிறது.
மீதமுள்ள விமானங்கள் நாட்டை விட்டு வெளியே பறந்துவிட்டன அல்லது மற்ற விமான தளங்களுக்குச் சென்று இருக்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.
வேறு எதையெல்லாம் கைப்பற்றியுள்ளனர்?
2003 - 2016 காலகட்டத்தில் அமெரிக்கா ஏகப்பட்ட ராணுவ சாதனங்களை ஆப்கானிஸ்தான் படையில் கொண்டு வந்தது. பல நிறுவனத்தின் 3,58,530 ரைஃபிள்கள் 64,000 இயந்திரத் துப்பாக்கிகள், 25,327 க்ரெனைட் லாஞ்சர்கள், 22,174 ஹம்வீ (அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் வாகனம்) வாகனங்களை ஆஃப்கனில் கொண்டு வந்ததாக அமெரிக்கா அரசின் அறிக்கை கூறுகிறது.
2014ஆம் ஆண்டு நேட்டோ படைகள் தங்கள் போரை நிறுத்திய பிறகு, நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஆஃப்கன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்டது. அந்நாட்டு ராணுவம் தாலிபன்களை எதிர்கொள்ள திணறியதால், அமெரிக்கா பல நவீன ரக ராணுவ தளவாடங்களை வழங்கியது.
கிட்டத்தட்ட 20,000 எம்-16 ரைஃபிள்களை 2017ஆம் ஆண்டில் மட்டும் விநியோகித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,598 எம் 4 ரைஃபிள்கள், 3,012 ஹம்வீ வாகனங்களுடன் இன்னும் பல ராணுவ தளவாடங்களையும் ஆஃப்கான் ராணுவத்துக்கு வழங்கியது என அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
புதிய ஆயுதங்களைக் கொண்டு தாலிபன்களால் என்ன செய்ய முடியும்?
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்
தாலிபன் போன்ற ஒரு குழுவினர் கையில் நவீன ஆயுதங்கள் கிடைப்பது "மிகப்பெரிய தோல்வி" என வாஷிங்டன்னில் உள்ள வில்சன் மையத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
இதன் விளைவுகள் ஆப்கானிஸ்தானில் மட்டும் இருக்காது. கறுப்புச் சந்தையில் சிறிய ஆயுதங்கள் வரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள மற்ற கிளர்ச்சியாளர்களுக்கு இது சாதகமாக அமையலாம். வரவிருக்கும் மாதங்களில் ஆயுதங்கள் தொடர்பான ஒரு விநியோகச் சங்கிலி தோன்றக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உள்ளது எனவும்,தாலிபன் கூட்டணியிலிருந்து, அதன் கூட்டணி குழுக்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வெளியேறவும் வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள்.
குறிப்பு; இவர்கள் கைக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்திருப்பது பைத்தியக்காரன் கையில் கிடைத்த ஆயுதத்துக்கு சமம்..என்ன ஆகுமோ..?
தொகுப்பாளருக்குப் பின்னால் தலிபான்கள் நின்றுகொண்டு ஆப்கன் மக்கள் பயம் கொள்ள வேண்டாம் என்று கூற வைக்கிறார்கள். கீழே பதிவு செய்துள்ள புகைப்படமே அதற்கான சான்றாகும்.

No comments:

Post a Comment