Thursday 19 August 2021

தலிபான்களுக்கு இந்தியாவில் உள்ளவர்களுடன் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது;கார்த்தி சிதம்பரம்.

 தலிபான்களுக்கு இந்தியாவில் உள்ளவர்களுடன் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது;கார்த்தி சிதம்பரம்.

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய விவகாரத்தில் இந்தியாவுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
21-ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே தலிபான்களுடைய எண்ணம். கொடூரமான அவர்களை ஐஎஸ்ஐதான் உருவாக்கியது. அமெரிக்கா அவர்களுக்கு தீனி போட்டு வளர்த்தது. தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது போல பாகிஸ்தானையும் கைப்பற்றலாம்.
இதனால் இந்தியாவில் உள்ளவர்களுடன் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதை அபாயகரமான விஷயமாக பார்க்க வேண்டும். சீனாவுக்கும் தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை அங்கு செயல்படும் சீன தூதரகத்தின் மூலமே தெரிந்துகொள்ள முடியும்.
ஆதலால் ஆப்கானிஸ்தான் விஷயத்தை இந்தியா சாதுரியமாக கையாள வேண்டும்"என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் கார்த்தி சிதம்பரமும், கேரளாவில் சசி தரூரும் சில நேரங்களில் சில கருத்துக்களை,அது சரியோ,தவரோ துணிச்சலாக வெளிப்படுத்துவதில் முன்னணியில் உள்ளனர்.
இன்று சசிதரூரும் கேரளாவை சேர்ந்தவர்களில் தலிபான்கள் உள்ளனர் என பதிவு செய்திருந்தார்.அது அங்கு சிலரால் விமர்சிக்கப்படு வருகிறது.



No comments:

Post a Comment