Monday 30 August 2021

சிக்கனம் சிறப்பானது.

 சிக்கனம் சிறப்பானது.

வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவனை ஒருபோதும் மதியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரவுக்கேற்பச் செலவு செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ் நூல்கள் தெரிவித்துள்ளன.
*சற்றே எண்ணிப் பாருங்கள்! வரவுக்கு மேல் எப்படி யாரால் செலவு செய்ய முடியும்? கடன் தானே ஒரே வழி!
மளிகைக்கடை, பால்காரர், வீட்டுவாடகை என்று பாக்கி வைக்கலாம். அல்லது வீடு, நகை என அடமானம் வைத்தோ, வேறு வழியிலோ கடன் வாங்கலாம்.
அது வட்டிச் செலவை மேலும் கூட்டும்.பின்னால் வரப்போகிற வருமானத்தை நம்பி செலவழிப்பது மேற்கத்திய கலாச்சாரம்! ஆபத்தானது!! சரிப்படாது!!!*
தனது வருவாய் அளவறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை வளமாக இருப்பது போலத் தோன்றி பின்னால் அதுவும் இல்லாமல் கெட்டுவிடும் என்று சொல்கிறார் மெய்ஞானி வள்ளுவர்.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள். 479
''ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை''
போகாறு அகலாக் கடை (478)..என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது.
வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் தவறு இல்லை என்பது இதன் பொருள்.
வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்;
வருமானம் குறைவாக இருப்பவர்கள் தன் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ வேண்டும் .
எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி, செலவுகளை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
சிலருக்கு வருமானம் அதிகமாகவே வரும்.
அதற்காக கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்தால் கேடுதான் விளையும்.

No comments:

Post a Comment