Friday 27 August 2021

இயல்பாய் இருக்க வேண்டும்.

 இயல்பாய் இருக்க வேண்டும்.

பெற்றோர்களை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களைக் கண்டுகொள்வது இல்லை.
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.
இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி...அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்கமுடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" எனக் கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன் கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை...
ஒரு பழமொழி உண்டு ..'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?
நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும் வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.
*செவன் சாமுராய்....*
அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.
ஒரு விவசாய கிராமம்...அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களைக் காப்பாற்றுகிறார்கள். அந்தப் போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.
போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்...விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொண்டு வயலுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் சென்றுவிடுகிறார்கள்.
தம் தேவை அவர்களுக்கு முடிந்தது எனத் தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்.
இதுதான் உலகம்.
நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்பப் பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டுப் போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.
இதனை உணந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் என்பது இருக்காது.

No comments:

Post a Comment